இராமாயணம் - RAMAYANAM

 

இராமாயணம்


இராமாயணம் - RAMAYANAM

இராமாயணம் வால்மீகி எனும் முனிவரால் இயற்றப்பட்ட மிகப் பழமை வாய்ந்த சமஸ்கிருத மொழியிலான இதிகாசமாகும். இது கிமு 400க்கும் கிபி 200க்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்க கூடும் என கருதப்படுகிறது. இது இந்து சமய நூல்களுள் மிகவும் முக்கியமான நூலாக கருதப்படுகிறது. மூல நூலான வான்மீகி இராமாயணத்தை பின்பற்றி இந்திய மொழிகளிலும், பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. கம்பர் எனும் புலவர் இதனை தமிழில் எழுதினார். இதனை கம்பராமாயணம் என்றும் அழைப்பர். கோசல நாட்டின் தலைநகரமான அயோத்தியைச் சேர்ந்த ரகுவம்சத்தின் இளவரசரான ராமர், அவர் மனைவி சீதை ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இந்த இதிகாசம் உறவுகளுக்கு இடையே ஆன கடமைகளை எடுத்துக்காட்டுகிறது.

இக்கதையின் மூலம் சிறந்த வேலையால், சிறந்த தம்பி, சிறந்த மனைவி, சிறந்த அரசன் போன்றோர் எப்படி இருக்க வேண்டும் என்பது விளக்கப்படுகிறது. ராமாயணம் எனும் பெயர் ராமன் + அயணம் எனும் சொற்களின் கூட்டாகும். அயம் எனும் சொல் சமஸ்கிருதத்தில் பயணம் எனும் பொருளை தருகிறது. இதனால் ராமாயணம் என்பது ராமனின் பயணம் என்று பொருளை தருகிறது.

வான்மீகி ராமாயணம் 24000 பாடல்களை கொண்டது. இது 07 காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை ராமரின் பிறப்பிலிருந்து இறப்பு வரை விளக்குகின்றது. அவை,
பாலகாண்டம்
அயோத்தி காண்டம்
ஆரண்ய காண்டம்
கிஷ்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்த காண்டம்
உத்தர காண்டம்

இந்த ராமாயணத்தில் காணப்படும் முதல் காண்டமும், இறுதி காண்டமும் வான்மீகியால்தான் எழுதப்பட்டது என்பது தொடர்பில் ஐயப்பாடுகள் காணப்படுகின்றது. இவ்விரு பகுதிகளினதும் மொழிநடை ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபடுவதும், அவற்றின் உள்ளடக்கங்களில் முரண்பாடுகள் காணப்படுவதும் இத்தகைய ஐயப்பாடுகளுக்கு காரணமாகவும் அமைகின்றது. எனினும் இவ் 07 கண்டங்களும் வான்மீகியால்தான் எழுதப்பட்டது என்று ர் நம்புகின்றனர்.

கம்பராமாயணம் உத்தர காண்டம் தவிர்த்து ஏனைய 06 காண்டங்களையும், 113 படலங்களையும் உடையது. இதில் 10569 பாடல்கள் உள்ளன. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய உத்திர காண்டம் என்னும் பகுதியை கம்பரின் சம காலத்தவராகிய ஒட்டக்கூத்தர் இயற்றினார் என்பர்.

இராமாயணம் அனைத்து பகுதிகளும் ஒரே தளத்தில்,

பாலகாண்டம்

அயோத்தியா காண்டம்

ஆரண்ய காண்டம்

கிட்கிந்தா காண்டம்

சுந்தர காண்டம்

யுத்த காண்டம்

நன்றி

Post a Comment

0 Comments