பொன்னியின் செல்வன்
கல்கி அவர்கள் எழுதிய தமிழ் எழுத்துலகின் தலைசிறந்த நாவலான பொன்னியின் செல்வனுடைய முழு கதையையும் இந்த பகுதியில் பார்க்கலாம்.
கதைக்குள் செல்வதற்கு முன் சோழர் சாம்ராஜ்ஜியத்தின் பழைய வரலாறு பற்றி பார்க்கலாம்.
பல்லவ மன்னனான கம்பவர்மனிடம் இருந்து சோழ சாம்ராஜ்யத்தை மீட்டெடுத்த விஜயாலய சோழனுக்கு பிறகு ஆதித்த சோழனும், பராந்தக சோழனும் 48 வருடங்களாக ஆட்சி செய்து வந்தனர். இவர்களின் ஆட்சியில் இராஜ்ஜிய எல்லைகள் பரந்து விரிந்து காணப்பட்டது. பராந்தகசோழனுக்கு இராஜாதித்தர், கண்டராதித்தர், அரிஞ்சய சோழன் என்று 3 குழந்தைகள் பிறந்தது.
பராந்தக சோழனுக்குப் பிறகு அவருடைய மகன் கண்டராதித்தன் ஆட்சிக்கு வந்தான். கண்டராதித்தர் செம்பியன்மாதேவி எனும் பெண்ணை திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் மிகுந்த பக்திமானாக காணப்பட்டதால் இவர்களது காலத்தில் போர் நிகழாமல் ஆன்மிகம் தழைத்தது.
ஆனால் இராஜ்ஜிய எல்லை குறைந்து கொண்டே சென்றது.
இவர்களுக்கு பிள்ளைகள் இல்லாத காரணத்தால் மதுராந்தகன் எனும் குழந்தையை வளர்த்து வந்தார்கள். மதுராந்தகன் வளர்ந்து வரும் சமயத்தில் கண்டராதித்தர் தனது மனைவியிடம் மதுராந்தகன் சோழ பரம்பரையைச் சேர்ந்தவன் அல்ல இதனால் இவனுக்கு அரியணை அமரும் உரிமை இல்லை. அதற்கு உரிமையானவர்கள் எனது தம்பியான அரிஞ்சய சோழனின் வாரிசுகள்தான் எனவே இவனை மிகுந்த பக்திமானாக வளர்த்தெடுப்பாயாக என்று கூறி இறந்தும் விட்டார்.
கண்டராதித்தர் இறந்த பிறகு சிறிது காலமாக அரிஞ்சய சோழனின் ஆட்சி நடந்தது. இவருக்கு சுந்தரச் சோழன் எனும் ஒரே ஒரு வாரிசும் இருந்தது. சுந்தரசோழன் ஒரு தடவை போருக்கு சென்று திரும்பும்போது கப்பல் புயலில் சிக்கி இலங்கையில் கரை ஒதுங்கியது. அங்கு வாய்பேச முடியாத, காது கேட்காத மந்தாகினி எனும் வலைஞர் மகளின் மீது காதல் கொள்கிறார். அந்த சமயத்தில் துரதிஷ்டவசமாக அரிஞ்சய சோழனும் இறந்துவிடுகிறார். இதனால் சில சோழ அதிகாரிகள் இலங்கைக்கு வந்து சுந்தர சோழனை தஞ்சைக்கு அரியணை அமர்த்தும் விதமாக அழைத்துச் சென்றனர்.
காதலர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர்.
சுந்தரச் சோழன் தஞ்சையில் அரியணையில் ஏறிய பின்னர் திருக்கோவிலூர் மலையமானின் மகளான வானவன்மாதேவியை திருமணம் செய்கிறார் இவர்களுக்கு ஆதித்த கரிகாலன், குந்தவை , ராஜராஜ சோழன் என்று 3 குழந்தைகள் பிறந்தது. சுந்தர சோழனுடைய ஆட்சியில் அவருக்கும் பாண்டியரான வீரபாண்டியனுக்கும் மிகப்பெரிய போர் ஒன்று நடந்தது. அப்போரின் போது வீர பாண்டியனுக்கு இலங்கை மன்னனான மகிந்தன் உதவியாக இருந்தான். ஆனாலும் வீரபாண்டியன் தோல்வியுற்று ஒரு குகையினுள் மறைந்து வாழ்ந்தான்.
என்னதான் போரில் வெற்றிபெற்றாலும் இந்த பாண்டியர்கள் அடிக்கடி போர் என்று நம்மை எதிர்ப்பதற்கு இலங்கை மன்னர்களின் உதவி தான் காரணம் என கருதிய சுந்தரசோழன் தனக்கு மிகவும் விசுவாசமான கொடும்பாளுர் வம்சத்தின் இளையவரான தளபதி பராந்தகன் சிறிய வேளாண் தலைமையில் ஒரு பெரிய படையை இலங்கைக்கு அனுப்பினார். ஆனால் துரதிஷ்டவசமாக சோழர்களின் ஒட்டுமொத்த படைகளும் இலங்கைக்கு ஒரே தடவையில் போய் சேரவில்லை. இந்த இடைவெளியை பயன்படுத்திய இலங்கை மன்னனின் படை பராந்தகன் சிறிய வேளணை கொன்றது.
இந்த செய்தி குகையிலுள் மறைந்து வாழ்ந்த வீரபாண்டியனுக்கு தெரிய வந்ததும் அவர் சோழர்களை எதிர்த்து போருக்கு வந்தார். அப்போது சோழர் படைக்குத் தலைமை தாங்கிய வந்தது ஆதித்த கரிகாலன். இந்த தடவையும் வீரபாண்டியன் தோல்வியுற்று ஒரு குடிசையினுள் மறைந்து விட்டான். ஆனாலும் சோழப்படை அந்த குடிசையை சுற்றி வளைத்தது. குடிசையினுள் நுழைந்த ஆதித்த கரிகாலன் அங்கிருந்த நந்தினியை பார்த்து திகைக்கபடி நின்றார்.
யார் இந்த நந்தினி.....?
ஆதித்த கரிகாலன் ஏன் நந்தினி பார்த்து திகைத்தபடி நின்றார்.....?
ஆழ்வார்க்கடியானினுடைய அப்பா மிகப்பெரிய சிவபக்தன் அவர் ஒரு தடவை ஆற்றங்கரையோரம் அனாதையாக கிடந்த ஒரு பெண் குழந்தையை எடுத்து நந்தினி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார்.
நந்தினியும் செம்பியன் மாதேவியும் மிகவும் அறிமுகமானவர்கள். இதனால் செம்பியன் மாதேவியின் 3 பிள்ளைகளுடனும் நந்தினி சிறுவயதில் இருந்தே அரண்மனையில் விளையாடுவாள். இந்த நட்பு பருவ காலத்தில் ஆதித்தனார் கரிகாலனுடன் காதலாக மாறியது. இதை அறிந்த செம்பியன்மாதேவி நந்தினியை பாண்டிய நாட்டுக்கு அனுப்பி விட்டாள். ஆதித்த கரிகாலனும் போர் விவகாரங்களில் தீவிரமாக இருந்ததால் நந்தினியை தேடவில்லை.
அப்படி இருக்கையில் குடிசையினுள் நந்தினியை வீரபாண்டியனின் மகள் ஸ்தானத்தில் கண்ட ஆதித்த கரிகாலனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதுவும் நந்தினி தன் அப்பாவின் உயிர் கருதி ஆதித்த கரிகாலனை வேண்டி நிற்கிறாள். கோபத்தின் உச்சிக்கு சென்ற ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனின் தலையை வெட்டிவிடுகிறார்.
இப்போது சுந்தரசோழன் தனக்கு விசுவாசமான தளபதி பராந்தக வேளாணை கொன்றதற்கு பழி தீர்க்க தனது இளைய மகனான ராஜராஜ சோழன் தலைமையில் ஒருபெரிய படையை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். இவர்களுக்கு பாதுகாப்பாக கொடும்பாளூர் சிறிய வேளாணின் சகோதரரான பூதி விக்கிரம கேசரியும் சென்றார்.
தனது தந்தையான வீரபாண்டியனின் மரணத்திற்கு பழி தீர்க்கும் விதமாக நந்தினி சோழ குலத்திற்கு முதுகெலும்பாக, அரசருக்கு அடுத்த நிலையில் இருந்த 60 வயதுக்கும் மேலான பழுவூர் பெரிய பழுவேட்டரையரை தன் அழகால் மயங்கி அவருடைய ஆசை நாயகியாக மாறினாள். அவரும் அவருடைய அனைத்து பேச்சையும் கேட்டு அதன்படியே நடப்பார்.
சுந்தரசோழன் நோய்வாய்ப்பட்டு 3 வருஷமாக படுத்த படுக்கையாக இருக்கிறார். இந்த இடைவெளியை பயன்படுத்திய நந்தினி பெரியணை பழுவேட்டரையரிடம் சுந்தர சோழனுக்குப் பின் அரியணை ஏறும் தகுதி உங்களுக்கு மட்டுமே உள்ளது என்று கூறி அவரது மனதை மாற்றிவிடுகிறாள். அதுவும் நாம் நேரடியாக ஆட்சியில் கை வைக்காமல் மறைமுகமாக சில காய்களை நகர்த்துவதன் மூலம் ஆட்சியில் அமரலாம் என்று சில தந்திர யோசனைகளையும் கூறினாள். அதன்படி அரியணை மீது எந்த ஆசையும் இல்லாத மதுராந்தகனை அரியணை மீது ஆசை பட வைக்க பெரிய பழுவேட்டரையரின் தம்பியான சிறிய பழுவேட்டரையரின் மகள் மதுராந்தகருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
பின்வருமாறு பொன்னியின் செல்வன் கதை ஆரம்பமாகிறது.
காஞ்சியில் புதிதாக கட்டப்பட்ட மாளிகையில் ஆதித்த கரிகாலனும், தஞ்சை அரண்மனையில் நோய்வாய்ப்பட்ட நிலையில் அரசன் சுந்தர சோழனும், பழையாறையில் இளவரசி குந்தவையும், இலங்கையில் ராஜராஜசோழனும் இருக்கிறார்கள்.
கரிகாலனுடைய நெருங்கிய நண்பரான வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலனின் வேண்டுகோளுக்கிணங்க தஞ்சையில் இருக்கின்ற சுந்தர சோழனுக்கொரு ஓலையும் பழையாறையில் உள்ள குந்தவைக்கொரு ஓலையும் என்று 2 ஓலைகளை எடுத்துச் செல்கிறான்.
செல்லும் வழியில் வந்தியத்தேவன் சோழர்களுக்கு விசுவாசமான கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்குகிறான். வந்தியத்தேவரும் சம்புவரையரின் மகனான கந்தமாறனும் நெருங்கிய நண்பர்கள். அந்த இரவு வேளையில் மாளிகையில் பெரிய பழுவேட்டரையர் பெரிய பெரிய நிலக்கிழார்கள் மற்றும் ஜமீன்களுடன் மதுராந்தகனை அடுத்த அரசனாக்குவதற்குறிய ரகசிய கூட்டமொன்றை நடத்தினார். இந்த ரகசிய கூட்டத்தை வந்தியத்தேவன் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருக்கிறான். அவ்வாறே ஆழ்வார்க்கடியனும் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.
யார் இந்த ஆழ்வார்க்கடியன்.....?
இவன் ஒரு வீர வைரவர். சோழர் குலத்து முதல் மந்திரியான அனிருத்த பிரம்மராயருடைய ஒற்றன்.
ஆழ்வார்க்கடியன் ஒரு நபர் மீது சந்தேகப்பட்டு அவனைப் பின்தொடர்ந்தபடி காட்டிலுள் நுழைகிறார். அங்கு வீரபாண்டியனுடைய ஆபத்துதவிகள் ஓர் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது என்னவென்றால் நாம் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தஞ்சைக்கு ஒரு குழுவும் இலங்கைக்கு ஒரு குழுவும் என்ற சென்று ஒரே நேரத்தில் நம் எதிரிகள் மூவரையும் எமலோகம் அனுப்ப வேண்டும் என்பதாகும். இவற்றையெல்லாம் ஆழ்வார்க்கடியன் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.
வந்தியத்தேவன் இரவு நேரத்தில் தஞ்சைக்கு போக முடியாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆலயத்திற்கு பூக்கட்டிக் கொடுக்கும் சேந்தன் அமுதன் எனும் இளைஞர் வீட்டில் தங்கினார். அங்கு அவனது தாயான வாணியும் இருக்கிறாள். அவளது பெயர் வாணி. அடுத்ததாக வந்தியத்தேவன் தஞ்சைக்கு சென்று சுந்தர சோழனிடம் கொடுக்க வேண்டிய ஓலையை கொடுத்துவிட்டு பழையாறைக்கு செல்கிறான். சுந்தரச்சோழனுக்குறிய ஓலையில் நான் புதிதாக கட்டிய பொன் மாளிகைக்கு நீங்கள் வரவேண்டும் என்று எழுதி இருந்தது.
பின்னர் வந்தியத்தேவன் பழையாறையில் இருக்கும் குந்தவையிடமும் ஓலையைக் கொடுக்கிறான். குந்தவையும் பதிலுக்கு ஒரு ஓலையை கொடுத்து இதை நீ இலங்கையில் உள்ள ராஜராஜசோழனிடம் கொடுக்க வேண்டும் என்றாள். வந்தியத்தேவனும் பூங்குழலி எனும் ஓடக்கார பெண்ணின் உதவியுடன் கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு புறப்படுகிறான்.
யார் இந்த பூங்குழலி.....?
பூங்குழலி சேந்தன் அமுதன் உடைய மாமன் மகளாகும். அதாவது வாணியின் சகோதரனான தியாகவிடங்கரின் மகள் அவளுக்கு முருகய்யன் எனும் சகோதனும் இருக்கிறான்.
வந்தியத்தேவன் இலங்கையில் ராஜராஜ சோழனை தேடிச் செல்லும்போது ஆழ்வார்க்கடியாரும் அவர்களுடன் வந்து இணைகிறார். ஒரே நேரத்தில் நான்கு விதமான செய்திகள் ராஜராஜசோழனின் காதுக்கு வருகிறது. அதாவது குந்தவை கொடுத்த ஓலையில் ராஜராஜ சோழா நீ உடனே தஞ்சைக்கு வா என்றும் ஆழ்வார்க்கடியன் மூலம் அனிருத்த பிரம்மராயர் கொடுத்த ஓலையில் நீ இன்னும் கொஞ்ச நாள் இலங்கையிலேயே இரு என்றும் ஆதித்த கரிகாலன் தனது இன்னொரு நண்பரான பார்த்திபேந்திர பல்லவன் மூலம் கொடுத்த ஓலையில் நீ உடனே காஞ்சிக்கு வா என்றும் இருந்தது.
மேலும் நான்காவதாக இலங்கையில் சுதந்திர அரசை அமைக்க முயன்ற குற்றத்திற்காக சுந்தரசோழனின் ஆணையுடன் ராஜராஜ சோழனை கைது செய்து தஞ்சைக்கு கூட்டி வருமாரு பழுவேட்டரையரின் படைகள் கொடுத்த ஓலையில் இருந்தது. பெரிய வேளாண் முதற்கொண்டு அனைவரும் திகைத்துப் போய் நின்றனர். ராஜராஜசோழனும் பெரிய பழுவேட்டரையரின் கப்பலில் கைதியாக போக சம்மதிக்கிறார். அவருடன் வந்தியத்தேவனும் போகின்றான். இதில் இருக்கும் அனைத்து சதிகளும் நந்தினி உடையது.
சுந்தரச்சோழனுக்கு தனது கடைசி மகனான ராஜராஜ சோழனை பார்ப்பதற்கு ஆசை என்று சொன்னால் ராஜராஜசோழன் போர்க்களத்தை விட்டு வரமாட்டார். இதனால் இப்படி ஒரு பொய்க் குற்றம் சொல்லி அரசாணை உடன் போனால் கண்டிப்பாக வருவார் என்று சுந்தரச்சோழனிடம் சொல்லி அவரின் அனுமதியுடன் பெரிய பழுவேட்டரையர் இதைச் செய்தார்.
பெரிய பழுவேட்டரையரின் கப்பலில் ராஜராஜ சோழனை கொலை செய்வதற்கு வீரபாண்டியனின் ஆபத்துதவிகள் மறைந்திருந்தனர். இலங்கையிலிருந்து கப்பல் கோடிக்கரைக்குச் செல்லும் வழியில் புயலில் சிக்கி சின்னாபின்னமாகியது. இராஜராஜ சோழனையும், வந்தியத்தேவனையும் பூங்குழலி காப்பாற்றி கோடிக்கரைக்கு வந்து சேரும் போது இராஜராஜ சோழனுக்கு கடுமையான குளிர் காய்ச்சல் வந்துவிட்டது.
சேந்தன் அமுதன் மூலம் குந்தவையிடம் இருந்து ஒரு செய்தி வருகிறது. அதாவது நாகப்பட்டினத்தில் உள்ள புத்த விகாரையில் சென்று காய்ச்சலை குணப்படுத்துங்கள் என்பதே அந்த செய்தி. அவர்களும் அங்கு செல்கிறார்கள். இராஜராஜ சோழன் புயலில் சிக்கி இறந்துவிட்டார். என்ற செய்தி சோழ தேசமெங்கும் பரவுகிறது. மேலும் இதற்கு காரணம் பெரிய பழுவேட்டரையர்தான் என்று அவர் மீதும் மக்கள் கோபம் கொள்கின்றனர்.
நாகப்பட்டினம் வந்த குந்தவை வந்தியத்தேவனிடம் நீங்கள் உடனே காஞ்சிக்கு சென்று ஆதித்த கரிகாலனை கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் செல்வதை தடுக்க வேண்டும் அதையும் மீறி அவர் சென்றுவிட்டார் என்றால் நீங்கள் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்றாள்.
இதற்குப் பின்னால் உள்ள நந்தியின் சதி என்னவென்றால், பெரிய பழுவேட்டரையர் மூலம் இராஜ்ஜியத்தை மதுராந்தகருக்கு பாதி, ஆதித்த கரிகாலனுக்கு பாதி என்று இரண்டாகப் பிரித்து கொடுத்து விட்டு சம்புவரையரின் மகளான மணிமேகலையை ஆதித்த கரிகாலனுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும். அதுக்குத்தான் ஆதித்த கரிகாலனை கடம்பூர் மாளிகைக்கு வரச் சொல்லி நந்தினி அழைப்பு விடுத்தாள். இரவு வேளையில் பெரிய பழுவேட்டரையர் கபாலிக பூஜைக்கு சென்ற பின்னர் நந்தினி ரவிதாசன் தலைமையிலான பாண்டிய ஆபத்துதவிகளின் ரகசிய கூட்டத்திற்கு போனாள். அங்கு பாண்டிய இளவரசனான சிறுவன் ஒருவனை அரியணை மாதிரியான ஒரு மேடையில் அமர்த்தி வைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். நந்தினியை கண்ட அந்த சிறுவன் அம்மா என்று சொல்லி கட்டு அனைத்தபடி மீன் சின்னம் பொறித்த கத்தியை நந்தினி கையில் கொடுக்கிறான். எனவே ஆதித்த கரிகாலனை பாண்டிய சின்னம் பதித்த கத்தியால் கொள்ளும் பொறுப்பு நந்தினியினுடையது.
பாண்டிய ஆபத்துதவிகளும் தாங்கள் எப்படி இராஜராஜ சோழனையும், சுந்தர சோழனையும் ஒரே நேரத்தில் கொலை செய்யப் போகிறோம் என்பதற்காக சதித்திட்டத்தை சொல்கிறார்கள்.
நாகப்பட்டினத்தில் இருந்து குந்தவை மட்டும் தஞ்சைக்கு வாந்து சுந்தர சோழனிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர் தனது பழைய காதல் கதையை சொல்கிறார். அதாவது நான் அரியணை ஏறிய உடன் மந்தாகினி தேடி வருமாறு அனிருத்த பிரம்மராயர் மூலம் இலங்கைக்கு ஆட்களை அனுப்பினேன் ஆனால் அவர்கள் மந்தாகினி கோடிக்கரை கலங்கரை விளக்கத்தில் இருந்து கடலுக்குள் குதித்து இறந்து விட்டாள் என்று கூறினார்கள். அன்றிலிருந்து கண்ணை மூடினால் அவளது இறப்புத்தான் எனக்கு ஞாபகத்தில் வருகிறது என்று கூறி கண்ணீர்விட்டு கதறினார். குந்தவையும் இதைப்பற்றி அனிருத்த பிரம்மராயரிடம் கேட்க அதற்கு அவர் அந்தப் பெண் இறக்கவில்லை நான்தான் கருத்திருமன் எனும் ஓடக்காரன் மூலமாக இலங்கைக்கு அனுப்பி வைத்துவிட்டு சுந்தரசோழனிடம் அவள் இறந்ததாக பொய் சொன்னேன். ஆனால் இதை நான் அரச நன்மைக்காக சசய்தேன் இதனால் சுந்தர சோழன் இவ்வளவு கவலைப்படுவார் என்று நினைக்கவில்லை. இருக்கட்டும் நான் எப்படியாவது மந்தாகினியை கண்டுபிடித்துக் கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு ஆட்களை தேடும் பணியில் அமர்த்தினார்.
அப்படி இருக்க வந்தியத்தேவனால் ஆதித்த கரிகாலன் கடம்பூர் செல்வதை தடுக்க முடியவில்லை. கடம்பூர் மாளிகையில் இராஜ்ஜிய பிரிப்பு பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது. அப்போது ஆதித்த கரிகாலன் இங்கு மதுராந்தகனும் வரவேண்டும் என்று கூற மதுராந்தகனை அழைப்பதற்காக பெரிய பழுவேட்டரையர் தஞ்சைக்கு போகின்றார்.
இங்கு அனிருத்த பிரம்மராயரின் ஆட்கள் மந்தாகினியை கண்டுபிடித்து விட்டனர். அவளை ஒரு பல்லக்கில் வைத்து தஞ்சைக்கு கொண்டு வரும் போது பாண்டிய ஆபத்துதவிகள் அவர்களை பின் தொடர்ந்து தஞ்சையின் நிலவரைக்குள் நுழைந்துவிட்டனர்.
இப்போதுதான் நந்தினியின் சாதியாட்டம் ஆரம்பிக்க போகிறது.
இராஜராஜசோழன் நாகப்பட்டினத்திலிருந்து யானையில் தஞ்சைக்கு வரும்போது பாண்டிய ஆபத்துதவிகளில் ஒருவன் யானைப்பாகன் வேடம் தரித்து யானையின் அருகில் வந்த போது யானை அவனை தூக்கி எரிந்து விட்டது. எல்லோரும் யானைக்கு மதம் பிடித்து விட்டது. எனக் கருதி ஓடிவிடுகிறார்கள். ஆனால் இராஜராஜசோழன் மட்டும் இதில் ஏதோ சதி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு யானை மீது ஏறி தஞ்சைக்கு வருகிறார்.
இங்கு மந்தாகினி சுந்தர சோழனை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறாள் இருவருக்கும் அளவற்ற சந்தோஷம். அந்த நேரத்தில் ராஜராஜசோழனும் அரண்மனைக்குள் வந்துவிட்டார்.
அப்போது நிலவறைக்குள் மறைந்திருந்த பாண்டிய ஆபத்துதவிகள் சுந்தரச்சோழனை நோக்கி ஒரு வேலை எறிந்தனர். அதை மந்தாகினி தன்மீது வாங்கிக்கொள்கிறாள். உடனே அவர்கள் அவ்விடத்தில் இருந்த விளக்குகளை அனைத்து விட்டு தப்பிச் செல்கிறார்கள்.
தஞ்சைக் கோட்டையின் காவல் அதிகாரியான சின்ன பழுவேட்டரையர் விளக்குகளை எடுத்து வாருங்கள் என்று கூச்சல் போட விளக்கும் அவ்விடத்தில் வருகிறது. ஆனால் அங்கு சுந்தரசோழன் படுத்திருந்த தலையணையில் ஒரு கத்தி குத்தியபடி இருந்தது. அருகில் சுந்தரசோழன் தன் மடியில் மந்தாகினியை தாங்கிய வண்ணம் இருந்தார். மந்தாகினியும் அவரது மடியிலே தனது உயிரை விடுகிறாள்.
அங்கு மதுராந்தகனை அழைத்து வரச்சென்ற பெரிய பழுவேட்டரையரின் படகு ஆற்று வெள்ளத்தில் கவிழ்கிறது. அப்போது அந்த இரவு வேளையில் நந்தினி எப்படி ஆதித்த கரிகாலனைக் கொலை செய்யப் போகிறாள் என்று பாண்டிய ஆபத்துதவிகள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு அவர்களைப் பிடிக்க முயற்சித்தும் அவர்கள் தப்பித்து விடுகிறார்கள்.
உடனே பெரிய பழுவேட்டரையர் ஆதித்த கரிகாலனை காப்பாற்றுவதற்காக அரண்மனைக்கு போகின்றார். அங்கு நந்தினி ஆதித்த கரிகாலனிடம் எனது தாய் மந்தாகினி எனது தந்தை வீரபாண்டியன் என்று சில உண்மைகளை கூறிவிட்டு அவரை கத்தியால் குத்த முயற்சித்தும் அவளால் முடியவில்லை. அப்போது இதை மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவனின் கழுத்தை பாண்டிய ஆபத்துதவிகள் பின்னாடி இருந்தபடியே நெரித்து மயக்கமடையச் செய்துவிட்டனர். அப்படியே ஆதித்த கரிகாலனையும் கொலை செய்துவிட்டு அந்த இடத்திலிருந்து சென்று விடுகிறார்கள்.
சிறிது நேரம் கழித்து வந்தியத்தேவன் கண் திறந்து பார்த்தால் ஆதித்ய கரிகாலன் இரத்த வெள்ளத்தில் கிடக்கின்றார். அதற்கான பழியும் வந்தியத்தேவனை சார்கிறது. வந்தியத்தேவன் சிறையில் அடைக்கப்படுகிறான்.
இந்த தருணத்தை பயன்படுத்திய மதுராந்தகன் செம்பியன்மாதேவியிடமும் அனிருத்த பிரம்மராயரிடமும் எனக்கு முடிசூட்ட வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கின்றான்.
அப்போது செம்பியன்மாதேவியும் அனிருத்த பிரம்மராயரும் மதுராந்தகனிடம் ஒரு உண்மையைச் சொல்கிறார்கள். அதாவது எனக்கும் மந்தாகினிக்கும் ஒரே சமயத்தில் தான் குழந்தை பிறந்தது. எனக்கு சேந்தன் அமுதன் பிறந்தான் மந்தாகினிக்கு நீயும் நந்தினியும் பிறந்தீர்கள். அதுமட்டுமல்ல எனக்கு பிறந்த பிள்ளை இறந்து விட்டது எனக் கருதி நானும் அனிருத்த பிரம்மராயரும் அந்த குழந்தையை வாணியிடம் கொடுத்து புதைக்கச் சொன்னோம். ஆனால் அந்த குழந்தை உயிர்பிழைத்து விட்டது அது எனக்கு தெரியாததால் மாந்தாகினியின் மகனான உன்னை நான் வளர்த்தேன். இது கண்டராதித்தருக்கு சிறிது காலம் கழித்தே தெரிந்தது. அதனால் அவர் இறக்கும் தருணத்தில் நீ அரியணைக்கு உரிமையாவன் அல்ல என்று கூறிவிட்டு இறந்தார். எனவே இந்த அரியணை மீதான ஆசையை விட்டுவிடு இது சேந்தன் அமுதனுக்குறியது என்று கூறினார்.
இப்போதும் மதுராந்தகனுக்கு சேந்தன் அமுதன் மேல் கோபம் வந்தது. இதனால் அவனது வீட்டுக்கு முன்னால் சென்று கோபத்துடன் நிற்கின்றான்.
அங்கு சிறைக்குள் இருந்த வந்தியத்தேவன் கருத்திருமன் எனும் ஓடக்காரனை சந்திக்கிறான்.
யார் இந்த கருத்திருமன்.....?
அனிருத்த பிரம்மராயன் மந்தாகினியை இலங்கைக்கு கொண்டு விடு என்று அனுப்பி விட்டார் அல்லவா அவர்தான் இவர். இவர் எப்படி சிறையில் அடைக்கப்படுகிறார் என்றால் இவர் ஓடத்தை செலுத்தும்போது காயப்பட்டு கடலில் தத்தளித்து கிடந்த வீரபாண்டியனை காப்பாற்றி இரண்டு பேரையும் இலங்கையில் இறக்கி விடுகிறார். அப்படியே வீரபாண்டியன் ஒரு ஓலையைக் கொடுத்து அதை இலங்கை மன்னனிடம் கொடு என்று கொடுக்க அவரும் அதைச் செய்கிறார். வீரபாண்டியனை வரவேற்பதற்காக பரிவாரங்களுடன் இலங்கை மன்னனும் செல்கிறார்.
கருத்திருமன் மிகவும் களைப்புடன் இருந்தமையால் அன்றிரவு இலங்கை மன்னனின் மாளிகையிலேயே வந்து தங்கி விடுகிறார். வீரபாண்டியன் தன்னை காப்பாற்றிய காரணத்தினால் பல பரிசுப் பொருட்களை கொடுத்ததுமில்லாமல் பாண்டிய பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு குகையையும் காட்டிக்கொடுக்கிறார். மேலும் நீ மந்தாகினியை கவனமாக பார்த்துக் கொள் என்றும் கூறுகிறார். அவரும் மந்தாகினியை காணச் சென்றால் மந்தாகினியை அவளது தந்தை வலைஞர் கோடிக்கரைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். கருத்திருமனும் கோடிக்கரைக்கு செல்கிறார்.
கோடிக்கரையில் வைத்துதான் மந்தாகினி கர்ப்பமாக இருக்கின்றார் எனும் விஷயம் தெரிகிறது. மந்தாகினியின் தங்கைதான் வாணி இவளை கருத்திருமன் திருமணம் செய்து கொள்கிறான். கருத்திருமன் மந்தாகினி கர்ப்பமான விடயத்தை வீரபாண்டியனுக்கு தெரிவித்து விட்டு வரும்போதும் செம்பியன்மாதேவி மந்தாகினியையும், வாணியையும் அரண்மனைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். இந்த செய்தி கருத்திருமனுக்கு தெரிந்ததும் அவர் அரண்மனைக்கு போகின்றார்.
அப்போதுதான் வாணி சேந்தன் அமுதனை புதைக்க குழி தோண்டிக் கொண்டிருந்தாள். மேலும் சந்தனக் அமுதன் சாகவில்லை என்ற உண்மையும் தெரிய வருகிறது. இந்த உண்மையை கண்டராதித்தரிடமும் செம்பியன்மாதேவியிமும் சொல்ல முயன்ற போதுதான் சின்ன பழுவேட்டரையர் கருத்திருமனை சிறையில் அடைத்தார்.
அப்போது வந்தியத்தேவன் இப்போது உண்மையை அனைவரிடமும் சொல்லலாம் வா என்று கருத்திருமனை அழைக்க இருவரும் சிறையிலிருந்து தப்பிச் சென்று சேந்தன் அமுதன் வீட்டுக்குச் சென்றால் அங்கு கோபத்துடன் மதுராந்தகம் நிற்கிறான்.
அப்போது கருத்திருமன் மதுராந்தகனிடம் நீ வீர பாண்டியனின் மகன் உனது உடைமைகள் இலங்கையில் இருக்கிறது வா உன்னை நான் அழைத்து செல்கிறேன் என்று கூறி மதுராந்தகனை இலங்கைக்கு அழைத்துச் செல்கின்றார்.
இப்போது ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்ற சந்தேகம் திரும்பவும் எழுகிறது. மீண்டும் வந்தியத்தேவன் மீதுதான் பழி விழுகிறது. அப்போது பெரிய பழுவேட்டரையர் எழும்பி நின்று அனைத்துக் குழப்பங்களுக்கும் நான் நந்தினியின் கைப்பொம்மையாக இருந்ததுதான் காரணம் என்று நந்தினியின் அனைத்து விதமான சதிகளையும் சொல்லிவிடுகிறார். மேலும் நான் நந்தினியை கொள்வதற்காக கத்தியை வீசினேன் ஆனால் அது ஆதித்த கரிகாலன் மீது பட்டுவிட்டது எனவே நான்தான் ஆதித்த கரிகாலனை கொன்ற பாவி என்று கதறி அழுதபடி கத்தியால் தனது மார்பில் குத்தி விடுகிறார்.
இதைப்பார்த்த சுந்தரசோழன் அதிர்ச்சியில் மயங்கி விட்டார். அன்று இரவு பெரிய பழுவேட்டரையர் இறக்கும் தருவாயில் இருக்கும் போது ஆழ்வார்கடியரிடம் ஆதித்த கரிகாலனை நான் கொல்லவில்லை. நான் நந்தினியை நோக்கி கத்தியை வீசும் போதே அவர் கீழே விழுந்துவிட்டார். நான் பழியை ஏற்றதற்கு காரணம் குந்தவையும் வந்தியத்தேவனும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் நான் இவ்வாறு கூற வில்லை என்றால் பழி வந்தியத்தேவனை சேர்ந்திருக்கும் அல்லவா என்று கூறிவிட்டு இறந்து விடுகிறார்.
இப்போது செம்பியன்மாதேவி மூலம் தனது உண்மையான வாரிசு சேந்தன் அமுதன் எனும் உண்மை அனைவருக்கும் தெரிய வருகிறது. ஆனால் அடுத்த இளவரசன் இராஜராஜ சோழன் தான் எனும் செய்தியும் ஊர் முழுவதும் பரவி அதற்கான நாளும் குறிக்கப்பட்டு பட்டாபிஷேகம் நடக்கிறது. ஆனால் அந்த நிகழ்வின் போது இராஜராஜசோழன் தனக்கு கிடைக்கவிருக்கும் மகுடத்தை சேந்தன் அமுதனுக்கு கொடுக்கிறார்.
இந்த நிழ்வுடன் பொன்னியின் செல்வன் எனும் நாவல் முடிகிறது.
இப்போது இராஜராஜ சோழனுக்கு எப்படி பொன்னியின் செல்வன் எனும் பெயர் வந்தது என்று பார்க்கலாம். இராஜராஜசோழன் சிறுவயதில் காவிரி ஆறு அதாவது பொன்னி நதியில் படகில் போய்க்கொண்டு இருக்கும்போது ஆற்றுக்குள் விழுந்து விடுகிறார் எல்லாரும் அவரைத் தேடியும் கிடைக்கவில்லை சிறிது நேரம் கழித்து தலைவிரி கோளத்துடன் மந்தாகினி ராஜராஜ சோழனை காப்பாற்றி அவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார். இவ்வாறு பொன்னி நதியில் விழுந்து காப்பாற்றப்பட்டதால்தான் இராஜராஜ சோழனுக்கு பொன்னியின் செல்வன் எனும் பெயர் வந்தது. இதையேதான் கல்கி அவர்கள் தனது நாவலுக்கும் வைத்திருக்கிறார்.
இந்த பகுதியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment Box இல் பதிவிடவும்.
நன்றி
0 Comments