மகாபாரதம் - MAHABHARATHAM


மகாபாரதம்


மகாபாரதம் - MAHABHARATHAM

மகாபாரதம் துவாபர யுகத்தில் இடம்பெற்றதாகவும். அதை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதியதாகவும் கூறப்படுகிறது. சமஸ்கிருதத்தில், 120000 ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார் ஆவார். இவர் வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார்.

குரு வம்சத்தின் பங்காளிகளான பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும்  இடையே நிலத்திற்காக நடைபெற்ற மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டே வியாசர் மகாபாரதம் எனும் மாபெரும் காப்பியத்தைப் படைத்துள்ளார். 

மகாபாரதத்தில் கிருஷ்ணன் கீதையைப் போதித்து வாழ்வின் உண்மை நிலையை  உணர்த்தியுள்ளதால் இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். இருக்கு, யசுர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்களால் கூட புரிந்து கொள்ளுவது கடினமாக இருக்கும் போது மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இருப்பதென்பது சிறப்புக்குரியதாகும். சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடிய இந்த வேதத்தைப் படிப்பவர்களால் பிறப்பற்ற நிலையை அடைய முடியும் என்பது ஐதீகம்.

மகாபாரதம் அனைத்து பகுதிகளும் ஒரே தளத்தில்,


நன்றி

Post a Comment

0 Comments