மகாபாரதம் பகுதி - 24
அந்தமாவீரனுடன் ஆனந்தமாக
அனுபவித்து போர்
செய்தான் துருபதன்.
ஆனால், எதிர்பாராதவிதமாக அர்ஜூனன்
விட்ட அம்பு துருபதன்
மீது பாய்ந்தது. அவன்
சாய்ந்து விழுந்தான்.
அவனைக் கைது செய்த
அர்ஜூனன், அவனைத்
தேர்க்காலில் சேர்த்துக்
கட்டினான். தேரை
அஸ்தினாபுரத்துக்கு விரட்டினான்.
துரோணாச்சாரியார் தன்
சிஷ்யப்பிள்ளைகள் பாய்ந்தோடி
வருவதைப் பார்த்தார்.
தேர்க்காலில் துருபதன் அவமானம் குன்ற கிடந்தான். தேர்ச்சக்கரங்கள் சுற்றியதில் அவன் களைத்துப் போயிருந்தான். துரோணர் அவனை நோக்கி ஏளனமாகச் சிரித்தார். ஏ துருபதா! நம்பிக்கை துரோகியே! நான் நினைத்தால் இப்போதே உன்னை கொன்று ஒழிக்க முடியும். என் பிள்ளைக்கு பசிக்கிறது என உன்னிடம் வந்து நின்ற போது, ஒரு அந்தணன் என்றும் பாராமல் என்னை விரட்டியடித்தாயே! இப்போது உன் நிலையைப் பார்த்தாயா? உனக்கு நான் சமஎதிரியல்ல! என் சிஷ்யர்களிடமே நீ சிக்கிக் கொண்டது அவமானமாக இருக்கிறதல்லவா! உன்னை வென்றதன் மூலம் பாஞ்சால தேசம் இன்றுமுதல் எனக்குச் சொந்தம். இருந்தாலும், நீ சொன்னபடி பாதி ராஜ்யத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். உனக்கு உயிர்பிச்சையும் தருகிறேன். இவனை விடுதலை செய்துவிடுங்கள். உயிர்ப்பிச்சை கொடுக்கிறேன், என்றார்.
துருபதனை அவிழ்த்து
விட்டான் அர்ஜூனன்.
அவன் தலைகுனிந்தபடியே அங்கிருந்து
பாஞ்சாலம் நோக்கி
நடந்தான். செல்லும்
வழியில் அவமானம்
அவனைப் பிடுங்கித்தின்றது. இந்த
துரோணனைக் கொன்றே
தீர வேண்டும். அவன்
உயிர்போகும் நாள்
தான் எனக்கு இனிய
நாள். ஐயோ! கடவுளே!
என் வாழுநாளுக்குள் அது
நிறைவேறாவிட்டால், என்
வம்சாவழியினராவது அவனைக்
கொல்ல வேண்டும். ஆனால்,
எனக்கு பிள்ளை வரம்
இதுவரை இல்லையே. என்ன
செய்வேன்? என
புலம்பினான்.
அத்துடன் அர்ஜூனனின்
வில்லாற்றல் பற்றிய
நினைவும் எழுந்தது.
மிகச்சிறந்த அந்த
இளைஞன் என்னை கலக்கி
எடுத்து விட்டானே!
வீரர்கள் போற்றுதற்குரியவர்கள். இப்படிப்பட்ட வீரன்
எனக்கு மருமகனாக இருந்தால்,
எப்படியிருக்கும்? ஆனால்,
எனக்கு பெண் குழந்தையும்
இல்லையே! இப்படி
பல சிந்தனைகளுடன் நடந்தவனின்
கால்கள் திசைமாறின.
நாட்டுக்கு போக
வேண்டிய அவன்
கங்கை கரைக்குச் சென்றான்.
அங்கே ஆஸ்ரமம் அமைத்து
தங்கியிருந்த ரிஷ்யசிருங்கர், உபயாஜர், யாஜர்
ஆகிய முனிவர்களைச் சந்தித்தான்.
இவர்களில் யாஜரிடமும்,
உபயாஜரிடமும் தனக்கு
குழந்தையில்லாத நிலையை
எடுத்துச் சொன்னான்.
அவன் மீது அவர்கள்
இரக்கம் கொண்டனர்.
மன்னா! நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய்.
யாகத்தை நாங்களே
வெற்றிகரமாக நடத்தித்
தருகிறோம். யாகத்தின்
ஹவிஸை உன் மனைவியிடம்
காடுப்போம். அதை
அவள் சாப்பிட வேண்டும்.
அப்படி சாப்பிட்டு விட்டால்,
உனக்கு பிள்ளை பாக்கியம்
உறுதி, என்றனர். துருபதன்
அவர்களிடம் ஆசிபெற்று
நாடு திரும்பினான். அந்த
தர்மனை நான் விரட்டி
விடுகிறேன், என
சவால் விட்டான். திருதராஷ்டிரன் கடகடவென சிரித்தான்.
தந்தையே! நீங்கள் சிரிப்பது எனக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. இது உங்களுக்கு சொந்தமான பூமி. இந்த பூமியை பாண்டவர்களின் வசம் ஒப்படைப்பதில் எந்த நியாயமும் இல்லை. தர்மன் முன்பு போல இப்போது இல்லை. அவனது தம்பிமார்கள் அகங்காரம் பிடித்து அலைகின்றனர்.
அவர்களால் எனக்கு இப்போது அரசாங்கத்தில் செல்வாக்கு இல்லை. பெருமை மிகவும் குறைந்து விட்டது. எனவே, இந்த ராஜ்யத்திற்கு என்னை யுவராஜா ஆக்குவதே முறையானது, என்றான் துரியோதனன். துரியோதனன் தன் நிலையை தானே குறைத்து சொன்னது திருதராஷ்டிரனுக்கு அவமானமாக இருந்தது. தம்பி புத்திரர்கள் பெருமையில் மேலோங்கி இருப்பதை தானே ஒப்புக்கொண்ட தன் மகனைப் பற்றி அவன் வருத்தப்பட்டான்.
தொடரும் .....
0 Comments