தேவலோக நதிகள்
தேவலோகத்தில் காணப்படும் நதிகள் தேவலோக நதிகள் என்று அழைக்கப்படுகின்றது.
தேவலோகம் என்பது 14 உலகங்களில் ஒன்றாகும். இது தேவர்கள் வாழ்கின்ற உலகம் என்பதால் தேவலோகம் என்று அழைக்கப்பெறுகிறது. இந்த உலகத்தை இந்திரன் ஆள்வதால் இந்திரலோகம் அல்லது இந்திரபுரி என்றும் அழைக்கப்படுகின்றது. மேலும் தேவலோகத்திற்கு சொர்க்கலோகம் என்றும் சொர்க்கபுரி என்றும் பல பெயர்கள் உண்டு.
பூமியில் இறைவழிபாடு , பிற உயிர்களுக்கு உதவுதல் போன்ற நற்செயல்களால் மனிதர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.
தேவ உலகை ஆளுகின்ற இந்திரப் பதவி யானது மிகவும் பெருமைக்குரிய பதவி என்பதால் அப்பதவியை கைப்பற்றும் நோக்கில் அரக்கர்கள் பல செயற்பாடுகளில் ஈடுபட்ட போதும் சிவபெருமான், திருமால் போன்ற கடவுள்கள் அரக்கர்களை அழித்து தேவலோகத்தினை மீண்டும் தேவர்களுக்கே மீட்டு கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இந்த தேவலோகத்தில் தேவர்களும், நவகிரகங்களின் அதிபதிகளும், பஞ்சபூதங்களில் அதிபதிகளும், தேவ கன்னிகளும், தேவலோக நதிகளும், காமதேனு, கற்பக விருட்சம் என்ற கேட்டதைத் தருகின்ற தேவ உயிரினங்களும், இருப்பதாக நம்பப்படுகிறது.
இவற்றுள் தேவலோக நதிகளைப் பற்றி பேசும்போது,
பொதுவாக நதிகள் என்றாலே அவை பெண்களாகவே காணப்படும். இந்த நதிகளே ஏனைய நதிகளின் தாயகமாக காணப்படுகின்றது. நதியானது பொதுவாக புனிதமான தன்மையை கொண்டது.அத்தோடு நதிகளில் நீராடுபவர்களின் பாவங்களும் நீங்குகின்றன. இதனாலேயே கோயில்களின் அருகில் தீர்த்த காணப்படுவதோடு அதில் நீராடும் வழக்கமும் காணப்படுகின்றது. பொதுவாக கோயில்களில் தீர்த்தம் காணப்படும் கோயில்களிலேயே மிகவும் பிரசித்தமான கோயில்களாக கருதப்படுகின்றன.
இங்கே தேவலோக நதிகளாக கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 03 நதிகளும் காணப்படுகின்றன.
கங்கை நதியமுனை நதி
0 Comments