இலங்கையின் குடியேற்றங்கள்
எந்தவொரு சமூதாயத்திலும் எழுத்துத் தோன்றுவதற்கு முன்னுள்ள காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் எனக் குறிப்பிடப்படும். மனிதனின் அன்றாடத் தேவைக்கு அவசியமான உபகரணங்களைத் தயாரித்துக் கொள்வதற்கு கற்களைப் பாவித்தமையால் அக்காலம் கற்காலம் எனப்படுகிறது. மனித பரிணாமத்தில் இருந்து நவீன காலம் வரை மனித வரலாற்றின் காலகட்டத்தைப் பிரதானமாக இரண்டாக வகுக்கலாம். பல்வேறுப்பட்ட காலகட்டங்களில் மனிதர்கள் பாவித்த கல்லாயுதங்கள் தொழினுட்பம் வளர்ச்சி அடைந்த விதத்தை வைத்து இக்காலகட்டம் பிரித்துக் காண்பிக்கப்பட்டுள்ளது. அதன் புராதன காலத்தில் பெரிய கல்லாயுதங்கள் பாவிக்கப்பட்டதோடு அது புராதன கற்காலம் எனப்படுகின்றது.
மத்திய, சிறிய அளவிலான கல்லுபரணங்கள் பாவிக்கப்பட்ட இரண்டாவது காலகட்டம் மத்திய கற்காலம் எனப்படும். இந்நாட்டில் வாழ்ந்த வரலாற்றுக்கு முற்பட்ட மனிதன் ஹோமோ சேபியன் எனும் பெயரால் அழைக்கப்படுகிறான். இற்றைக்கு ஒருலட்சத்து இருபத்தையாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆசியாக் கண்டத்தை ஊடறுத்து அல்லது இந்து சமுத்திரத்தைக் கடந்து முதலாவது மனிதக் கூட்டம் இந்நாட்டிற்கு வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய, இந்நாட்டில் வாழ்ந்த வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மனிதன் வேட்டையாடியும் இடத்திற்கிடம் அலைந்து திரிந்து உணவைச் சேகரித்துக் கொண்டும் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் பின் முன்வரலாற்றுக் காலத்தினுள் பிரவேசித்தான். கல்லாயுதங்களின் பாவனையைக் குறைத்துக் கொண்டு உலோகத்தைப் பயன்படுத்தியதோடு, விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு அலைந்துதிரியும் வாழ்க்கையிலிருந்து மீண்டு நிரந்தரமான குடியிருப்புக்களை அமைத்துக் கொள்வதற்கு முயற்சித்தமையும் இக்காலகட்டத்தில் காணப்படும் பிரதான இலட்சணமாகும். இறந்தவர்களுக்கு மயானங்களை அமைத்தல் கலாசாரத்தின் விசேடத்துவ அம்சமாகும். கி.பி. 6ம் றூற்றாண்டளவில் இருந்து இந்தியாவிலிருந்து முதலாவது மக்கள் கூட்டம் வருகை தந்து இந்நாட்டின் நதிகளை அண்டிக் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டது வரலாற்றுக் காலத்தின் ஆரம்பமமாகக் கருதப்படுகிறது.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலமும் குடியேற்றங்கள் தோற்றம் பெற்றமையும் இவ்விரு காலகட்டங்களாகும்.
ஆரம்பகாலம்
01. தாழ் ஆரம்ப கற்காலம்
(பெறப்பட்டுள்ள ஆதாரங்கள் நிச்சயமானதாயில்லை)
02. இடை ஆரம்ப கற்காலம்
(இன்றிலிருந்து 1,25,000 வருடங்கள் வரையில்)
03.உயர் ஆரம்ப கற்காலம்
(ஆதாரங்கள் கிடைக்கவில்லை)
மத்திய கற்காலம்
இன்றிலிருந்து 40,000 வருடங்களுக்கு முன்பு வரை
வரலாற்றுக்கு முற்பட்ட காலமும் குடியேற்றமும்
இன்றிலிருந்து 1,25,000 தொடக்கம் 75,000 வருடங்களுக்கிடைப்பட்ட காலத்திற்கான வரலாற்றுக்கு முற்பட்ட குடியேற்றங்கள்பற்றி ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை இடை ஆரம்பக்காலத்தை சார்ந்தவை. இக்குடியேற்றங்கள் அனைத்தும் கண்டறியப்பட்டுள்ளது. பூந்தல, பதிராஜவெல, வெல்லே கங்கொட, மினிஹா கல்கந்த எனும் அரைகுறை வறள் வலய கடற்கரையோரத்தில் திறந்த குடியேற்றங்களாகும்,
இரணைமடு படிவுகள் எனும் பெயரால் அறியப்பட்டுள்ள மணலும் சரளை மண்ணும் கலந்த செம்மண் படிவு வலயத்தில் இலங்கையின் புராதன குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. புராதன கற்கால யுகத்தில் குடியிருப்புகளில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது, அக்கால மனிதனால் பாவிக்கப்பட்ட கல்லுபகரணங்கள் மட்டுமேயாகும். தாழ்நாட்டு ஈரவலயத்திற்குரிய இரத்தினபுரியைச் சூழவுள்ள பிரதேசம் இந்நாட்டின் வரலாற்றுக்கு முற்பட்ட புராதன கற்காலத்திற்குரிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்ற இன்னொரு பிரதேசமாகும்.
மணல், வண்டல் மண், களிமண், உடனான இரத்தினபுரி படிவு இதற்கு இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியுள்ளது. இந்நாட்டின் ஆரம்பகால மனிதன் பாவித்த செப்பனிடப்படாத கல்லுபகரணங்களும் இந்நாட்டில் வாழ்ந்து அழிந்து போன பிராணிகளின் ஏராளமான எலும்புகளும் இரத்தினப்புரிப் படிவுகளிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன.
இரத்தினபுரிக் கல்லுபகரணங்கள். "இரத்தினபுரி கற்கால தொழில் நுட்பம்” என்றும் உயிரினங்களின் எலும்புகள் "இரத்தினபுரி உயிர்த்தொகுதி" என்றும் தொல்பொருளியலாளர்களால் பெயரிடப்பட்டுள்ளன. தாழ் ஆரம்ப கால கற்காலம் எனப்படும் இந்நாட்டின் ஆரம்ப வரலாற்றுக்கு முற்பட்ட கால வரலாற்றுக் குடியிருப்புகள் பரந்துபட்டுக் காணப்பட்ட பிரதான சுற்றாடல் வலயங்கள் இரண்டாகும்.
01.அரைகுறை வறள் வலய கடற்கரையோரப் பிரதேசம் (இரணைமடுப் படிவு வலயம்)
02.தாழ்நாட்டு ஈரவலயத்தைச் சேர்ந்த இரத்தினபுரியை அண்டிய வடிநிலப் பிரதேசம்.
மத்திய கற்காலக் குடியிருப்புகள்.
இலங்கையின் மத்திய கற்காலம் இன்றிலிருந்து 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமாதல், மத்திய கற்காலமாகும் போது நாட்டின் சகல காலநிலை வலயங்களிலும் வரலாற்றுக்கு முற்பட்ட கால குடியேற்றங்கள் பரந்து காணப்பட்டதாக அறியப்பட்டுள்ளது. மத்திய கற்காலத்தில் வாழ்ந்தவன் பொதுவாக "பலாங்கொடை மனிதன்” எனப்படுகின்றான். ஆரம்ப பண்புகளுக்கு அமைய வரலாற்றுக்கு முற்பட்ட குடியேற்ற வகைகள் இரண்டாகும்.
01. இயற்கையான கற்குகைகள்
02. திறந்த வெளிகள்
குடியேற்றங்களைத் தெரிவு செய்வதில் பிரதான காரணிகள் இரண்டு பற்றிக் கவனம் செலுத்தியுள்ளனர். மத்திய கற்காலம் ஆகும் போது வரலாற்றுக்கு முற்பட்ட குடியேற்றங்கள் பல்வேறு காலநிலை வலயங்களிலும் பரவிக் காணப்பட்டுள்ளது தெரியவருகிறது.
பூந்தள, வில்பத்து பல்லேமலல ஆகிய கரையோரங்களில் திறந்த குடியிருப்புகள் பாஹியன்கல, பட்டதொம்பலென, பெலிலென, அலவல்லென் ஆகிய தாழ்நாட்டு ஈரவலய இயற்கையான கற்குகைகளினுள் அமைந்த குடியிருப்புகள்.பொத்தான, அலிகல, போன்ற உலர்வலய திறந்த குடியிருப்புகள் பண்டாரவளை, வெலிமடை, நாவலபிட்டிய போன்ற மத்திய மலைநாட்டை அண்டிய பிரதேசங்களில் திறந்த வெட்டை வெளிகள். ஹோர்டன் சமவெளி, நக்கில்ஸ் போன்ற உயர்மலைநாட்டுப் புல்வெளிகள்.
மத்திய கற்காலத்தில் பிரதானமான வரலாற்றுக்கு முற்பட்ட வாழ்விடங்களின் கால அளவு.
பாஹியங்கல இன்றிலிருந்து 41000 வருடங்கள்.
குருவிட்ட பட்டதொம்பலென 36000 வருடங்கள்.
கித்துல்கல பெலிலென 31000 வருடங்கள்.
கம்பஹா அலவல்லென் 14000 வருடங்கள்.
பெல்லன் பெந்திபெலஸ்ஸ 12000 வருடங்கள்.
சீகிரிய பொத்தான 5800 வருடங்கள்.
மாதொட்ட 3800 வருடங்கள்.
வரலாற்றுக்கு முற்பட்டகால தொழினுட்பம்.
வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் தொழினுட்பம் முற்றுமுழுதாக கல்லுபகரணங்களாலேயே ஆக்கப்பட்டுள்ளது. புராதன கற்காலத்திற்குரிய பெருந்தொகையான செப்பனிடப்படாத கல்லுபகரணங்கள் இரத்தினபுரி, மாணிக்கச் சுரங்களிலிருந்தும் இரணைமடுப் படிவுகளிலிருந்தும் கண்டறியப்பட்டுள்ளன.
மத்திய கற்காலத்தில் நுண் கல்லாயுதங்கள் பற்றிய ஆதாரங்கள் 40,000 வருடங்களுக்கு முன்னையவை கிடைக்கப்பெற்றுள்ளன. அவை மிகவும் சிறியதாகவும் நுணுக்கமாகவும், நிர்மாணிக்கப்பட்டுள்ளமையால் நுண்கல்லாயுதங்கள் என்று குறிப்பிடப்டுகின்றன.
திரிகோண வட்டவடிவ பல்வேறு கேத்திர கணித உருவங்களில் உருவாக்கப்பட்டுள்ள நுண்கல்லாயுதங்கள் தொழினுட்பத்திறனை வெளிக்காட்டும் வகையிலான ஆக்கங்களாக காணப்படுகின்றன.
உபகரணங்களை உற்பத்தி செய்து கொள்வதற்காக கூடிய வெண்குச்சான் வில் கல் மூலப் பொருளாகக் கையாளப்பட்டுள்ளதோடு, ஓரளவிற்கு மஞ்சள் நிறத்திலான திரிவாணாக்கல்லும் பாவிக்கப்பட்டுள்ளன. மிருகங்களை வேட்டையாடுதல் தொடக்கம் வெட்டுவதற்கும் சீவுவதற்கும் தட்டுவதற்கும் வளைப்பதற்கும் நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான விதத்தில் கல்லுபரகரணங்கள் செய்யப்பட்டுள்ளன.
வாழ்க்கை முறை
வாழ்வதற்காக வேட்டையாடுவதே வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் வாழ்க்கை முறையின் பண்பாய் இருந்தது. வேட்டைக்கு மேலதிகமாக உணவாகக் கொள்ளக்கூடிய தாவர உணவுகளையும் சேர்த்துக் கொண்டு அலைந்து திரியும் வாழ்க்கை முறையைக் கையாண்டுள்ளான். அவர்கள் மழைக்காலங்களில் பாதுகாப்பு கருதி இயற்கையாய் அமைந்த கற்குகைகளினுள் ஒன்று கூடினர்.
வேட்டையாடுவது பெருமளவிற்கு மேற்கொள்ளப்பட்டிருப்பது ஆண்களாலாகும். அவர்கள் தனித்தனியாகவோ குழுக்களாகவோ அந்நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்திருக்கலாம்.
மத்திய கற்காலத்தில் சனத்தொகை அடர்த்தி பத்து சதுர கிலோ மீற்றருக்கு ஒரு நபராகவோ, 50 சதுர கிலோ மீற்றருக்கு ஒரு குடும்பமாகவோ இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
இயற்கையான கற்குகைகளில் வாழ்ந்த ஜனத்தொகை மிகவும் குறைந்தளவைக் கொண்ட சிறிய குடும்பங்களாக வாழ்ந்திருக்கலாம். உலர் வலயத்தில் வெட்ட வெளிகளில் தற்காலிகமாக அமைத்துக்கொள்ளப்பட்ட முகாம்களில் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமது இறந்த உறவினர்களின் சடலங்களை குகையினுள்ளே புதைத்துள்ளனர்.
உணவுப்பழக்க வழக்கம்.
வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் உணவின் தன்மை அவர்கள் வாழ்ந்த சுற்றாடலில் மாமிச உணவுகளில் வேட்டையாடிப் பெறப்பட்ட பன்றி, முள்ளம் பன்றி, மான், இருந்து பெற்றுக்கொள்ளகூடிய வளங்களின் தன்மைக்கு ஏற்பத் தீர்மானமாகியுள்ளது. மரை, உடும்பு, குரங்கு, காட்டுக்கோழி என்பவற்றின் மாமிசங்கள் பிரதானமானவை. மாமிசங்களையும் உணவாகக் கொண்டுள்ளனர்.
இதற்கு மேலாக நன்னீர் மீன்கள், நண்டுகள்,ஆமைகள், பல்வேறு பறவைகளின் சிப்பிகளும், நத்தைகளும் இக்காலத்தில் மக்கள் விரும்பியுண்ணும் உணவு வகைகளாச இருந்து வந்துள்ளன. களப்புகளை அண்டிக் காணப்பட்ட சிப்பிகள். நாட்டின் உட்ட 93 / 411 16. செல்லப்பட்டிருப்பது உப்புத்தேவையை நிறைவு செய்து கொள்வதற்காயிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
தாவர உணவுகளாக காட்டு ஈரப்பலாக்காய், காட்டு வாழை, கெக்குண விதை,முட்கிழங்கு, வேறு கிழங்கு வகைகளுடன் தேனையும் பாவித்துள்ளனர். இற்றைக்கு 13,000 ஆண்டுகளுக்கு முன்னர் மலைநாட்டில் வாழ்ந்த மனிதன் பார்லியைப் பயிரிட்டு உணவாகக் கொண்டுள்ளமைக்கான ஆதாரம் ஹோட்டன் சமவெளிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. பலாங்கொடை மனிதன் நெருப்பின் பாவனையைத் தெரிந்து வைத்திருந்தபடியால் மாமிசத்தைச் சுட்டுச் சாப்பிட்டிருப்பான் எனக்கருத முடியும்.
பண்பாட்டு முறை
பண்பாட்டு முறைபற்றித் துலக்கமான ஆதாரம் கிடைக்கப்பெற்றிருப்பது இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறையிலாகும். ஒருவர் மரணித்ததன் பின்னர் உடல் உக்கிப்போகும்வரை காட்டில் கிடத்திவிட்டு,எலும்புக்கூட்டை குகைகளினுள் அடக்கம் செய்துள்ளனர்.
எலும்புகளை அடக்கம் செய்வதற்கு முன்னர் மண்டை ஓட்டிலும் எலும்பின் வெளிப்புறங்களிலும் சேற்றுக்கல்லால் தோய்க்கப்பட்டுள்ளது சமயத்தேவை ஒன்றுக்காக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
சேற்றுக்கல் பூசப்பட்டிருந்தமைக்கான ஆதாரம் பாஹியன்கல. இராவண எல்ல குகைகளில் கண்டறியப்பட்டுள்ளன, கம்பினாலோ கொம்பினாலோ வடிவிலான சிறிய குழி ஒன்றைத் தோண்டி அதனுள் எலும்புகளை வைத்து சருகுகளினாலோ மண்ணினாலோ மூடியுள்ளனர். கித்துள்கல பெலிலெனையில் அவ்வாறு புகைக்கப்பட்ட மனிதர்கள் 12 பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள எல்லா எலும்புக்கூடுகளும் புதைக்கப்பட்டிருப்பது மூட்டுகளிலிருந்து மடித்து ஒடுங்கச் செய்யப்பட்டாகும்.
அவ்வாறு மடித்துப் புதைக்கப்பட்டிருப்பது ஏதாவது நம்பிக்கை அடிப்படையிலோ அல்லது குகைகளினுள் காணப்படும் பற்றாக்குறையினாலோ இருக்கலாம். நத்தை, சிப்பி ஓடுகளினாலும் மனித எலும்புத் துண்டுகளாலும் செய்யப்பட்டவற்றை ஆபரணங்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.
வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் உடலமைப்பு
இதுவரைக்கும் அகழ்வுகளின் மூலம் பெறப்பட்டுள்ள : பலாங்கொடை மனிதர்களின் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 75 மட்டிலிருக்கும்.
அவை அனைத்தும் இன்றிலிருந்து 38,000 5,500 வருடகால இடைவெளியில் - வாழ்ந்த மனிதர்களது என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
மண்டை ஓட்டின் அளவு, ஆண்களினது 1600 சென்றிமீட்டர், பெண்களது 920 கன சென்றிமீட்டர் அளவுடையதாகக் காணப்பட்டது.
ஆண்களினது உயரம் குறைந்தபட்சம் 174, பெண்களினது உயரம் உயர்ந்தபட்சம் 166 சென்றிமீட்டர்களாக இருந்துள்ளன. வளர்ந்த மனிதர் ஒருவரது மண்டை ஓடு மிகவும் தடிப்பானது அதன் நாடிப்பகுதி முன்னோக்கித் தள்ளிக் கொண்டுள்ளது. மூக்குச் சப்பையானது, தாடையும் பற்களும் பெரியவை, கழுத்துக் குட்டையானது. முழு மொத்தத்தில் பலாங்கொடை மனிதன் குட்டையான தடித்த உருவத்துடனானவன் ஆவான்.
பலாங்கொடை மனிதனின் உயர்ந்த ஆயுள் காலம் 35-40 வயதாக இருந்திருக்கலாம்.
முன் வரலாற்றுக் காலகட்டம்
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்கும் வரலாற்றுக் காலத்திற்கும் இடைப்பட்ட
காலமே முன் வரலாற்றுக் காலகட்டம் எனக் குறிப்பிடப்படுகிறது.
இக் காலக்கட்டத்திலேயே வரலாற்று யுகத்திற்கான வாழ்வு முறைக்கு மனிதன் தயார்ப்படுத்தப்படல் ஆரம்பமானது.
கி.மு 5000 ஆண்டுகள் கால எல்லைக்குப் பின்னரே மனிதனின் இக் காலகட்டப் பிரவேசம் ஆரம்பமானதாகக் கருதப்படுகிறது. கி.மு. 1800 இலிருந்து மட்பாத்திரங்களின் பாவனையும் விவசாயச் செய்கையும் நுகர்வும் பற்றிய ஆதாரங்கள் தொரவக்க. பொத்தான, அலிகல ஆகிய இடங்களிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன.
நிரந்தரமான குடியிருப்புக்களை உருவாக்கிக் கொள்ளல், இரும்பின் உபயோகம்,மட்பாத்திரங்களை உற்பத்தி செய்தல், மாடு, குதிரைகளின் வளர்ப்பு, நெற் பயிர்ச்செய்கை என்பன இக் காலக்கட்டத்தில் துலாம்பரமாகத் தெரியும் வளர்ச்சிகளாகும்.
முன் வரலாற்றுக் காலக் குடியிருப்புகள்
முன் வரலாற்றுக் காலத்தில் அலைந்து திரிந்து, வேட்டையாடிய வாழ்க்கை யிலிருந்து மீண்டும், இக்காலத்தில் விவசாய நடவடிக்கைகளுக்காக நிரந்தரமான வசிப்பிடங்களை அமைத்துக்கொள்ள ஆரம்பித்தனர்.
அதிகமான குடியிருப்புகள் உலர் வலயத்தில் நதிக்கரைகளை அண்டியும் மலைநாட்டை அண்டியும் பரவிக் காணப்பட்டதற்கான ஆதாரங்களுள்ளன. கி.மு 900 இல் அநுராதபுரத்தில் இருந்த முன்வரலாற்றுக் காலக் குடியிருப்புகள் 10 ஹெக்டயர் பிரதேசத்தில் பரந்து காணப்பட்டதுடன் கி மு.700 - 600 வரையான காலத்தில் 50 ஹெக்டயர் வரை விருத்தியுற்றுச் சென்றது.
உடரஞ்சாமடம பிரதேசத்தில் கண்டறியப்பட்ட குடியிருப்பு மண் வீடுகளால் ஆனது. கம்பினால் சுவர் கட்டப்பட்டு, கூரை புற்களினால் வேயப்பட்டு, களிமண் வைக்கப்பட்டு முறையாகக் கட்டப்பட்டிருந்ததற்கான ஆதாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
அநுராதபுர உள்நகரில் கண்டறியப்பட்ட வீடு அரை வட்டவடிவிலும் சதுர வடிவிலும் காணப்படுகின்றது.
தொழினுட்பம்
கல்லாயுத தொழினுட்பத்திலிருந்து மீண்டு இரும்புத் தொழினுட்பத்தினை நோக்கிச் செல்வது துலக்கமாய் தெரிகிறது. விவசாயத்திற்குத் தேவையான மண்வெட்டி, கலப்பை, கத்தி ஆகிய உபகரணங்களை இரும்பினால் உற்பத்திச் செய்து கொண்டுள்ளனர்.
வனைதல் சில்லைக் கண்டறிந்ததனால் உயர் தொழினுட்பத்துடன் விசித்திரமான மண்பாண்டங்களை உற்பத்தி செய்துள்ளனர்.
மண்பாண்டங்களை உணவைச் சமைப்பதற்கும், இறந்தவர்களின் அஸ்தியைப் பாதுகாத்து வைப்பதற்கும் பயன்படுத்தியுள்ளனர். செப்பு உலோகத்தைப் பயன்படுத்தி வளையல் போன்ற ஆபரணங்களை உற்பத்தி செய்துள்ளனர்.
இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கருஞ்சிவப்பு மட்பாண்டங்கள், இந்தியாவின் கருஞ்சிவப்பு மட்பாண்டங்களுக்குச் சமமானவையாகும்.
கலாசாரம்
பெரிய கற்களைப் பயன்படுத்தி, இறந்தவர்களுக்குக் கல்லறை கட்டுதல் முன்வரலாற்றுக் கால கலாசாரத்தின் முக்கிய இலட்சணமாகும்.
இன்று முன்வரலாற்றுக் காலத்துக்குரிய மயானங்கள் ஐம்பதிற்கு மேல் கண்டறியப்பட்டுள்ளன.
அஸ்தியை அவர்கள் பாவித்த உபகரணங்கள், உணவு வகைகள் சிறிய அல்லது பெரிய மட்பாண்டங்களில் வைக்கப்பட்டு பெரிய கற்பாறைகளினால் பாதுகாப்பது பிரதான சடங்கு முறைகளில் ஒன்றாக விளங்கியதற்கு ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறைகள் பல்வேறுபட்டிருந்தன.
01. கல்லறைகளினால் ஆனவை
02. அஸ்தி கலசத்தால் ஆனவை
03. களிமண் ஓடத்தால் ஆனவை
04. கருங்கல் முக்கோண வடிவிலானவை
05. குழிகளால் ஆனவை
06. விரிவாக்கக் கூடிய வகையிலானவை
கண்டறியப்பட்ட புதைகுழிகள் பலவும் கல்லறை மயானங்கள் களிமண் ஓடமயானங்கள், அஸ்திக் கலச மயானங்கள் என்பவையாகும்.
கல்லறை மயானம் எனப்படுவது, கற்பாறைகள் நான்கை நாற்புறமும் வைத்து, அதனுள் அஸ்தி கலசங்கள் வைக்கப்பட்ட மேற்பகுதி தட்டையான கல்லொன்றினால் மூடப்பட்டதாகும். இவ்வாறான மயானங்கள் இப்பன் கட்டுவையிலும், ரம்பேவையிலும் யான் ஓயாப் பள்ளத்தாக்கிலும் கண்டறியப்பட்டுள்ளன.
அஸ்திக் கலச மயானம் என்பது பெரியதொரு மட்பாண்டத்தினுள் சிறிய மட்பாண்டங்களில் அஸ்தி வைக்கப்பட்டு கல்லாலான மூடியால் மூடப்பட்டவை. இவ்வாறான கல்லறைகள் பொம்பரிப்பில் கண்டறியப்பட்டுள்ளன.
களி மண் ஓட மயான முறையில், களிமண்ணால் உருவாக்கப்பட்ட ஓடம் போன்ற வடிவிலான நிர்மாணத்தினுள் சடலத்தை இட்டு எரியூட்டியுள்ளனர். இவ்வாறான மயானங்கள் ரஞ்சாமடம, நிகவலமுல்ல, ஹல்துமுல்ல எனும் பிரதேசங்களில் கண்டறியப்பட்டுள்ளன.
இலங்கையின் முன்வரலாற்றுக் கால மயான முறையும் களி மட்பாண்ட உற்பத்தி முறையும் இந்திய நாகரிகத்திற்குச் சமனானவை எனப்படுகிறது.
வாழ்க்கை முறை
வேட்டையாடுதலை முற்றாகக் கைவிடாவிட்டாலும் அதிலிருந்து மீண்டு உணவு உற்பத்திக்கான விவசாய வாழ்க்கை முறைக்கு வந்தனர்.
சேனைப் பயிர்ச் செய்கையும் நெற் செய்கை யும் ஆரம்பிக்கப்பட்டுப் பரவலடைந்தன. உணவுப் பொருட்களின் உற்பத்தியுடன் நிலையான குடியிருப்புக்களை உருவாக்கிக் கொள்வ துடன் சிறிய கிராமங்கள் உருவாகத் தொடங்கின.
விவசாயம், போக்குவரத்து, உணவுத் தேவைக்காக மாடு, குதிரை, ஆடு போன்ற பிராணிகளை வளர்க்கத் தொடங்கினர்.
வரலாற்றுக் காலம்
கி.மு.600 500 க்கு இடைப்பட்ட காலகட்டம் வரலாற்று யுகத்தின் ஆரம்பகாலகட்டம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் இந்நாட்டிற்கு இடம்பெயர்ந்தமை இக்காலத்தில் துலாம்பரமாகத் தெரியும் ஓர் அம்சமாகும்.
அவர்கள் இந்நாட்டிற்கு வருகை தரும்போது முறையான அமைப்புடன் கூடிய சமூகம் ஒன்று இந்நாட்டில் இருந்து வந்தது. மகாவம்சத்திலும் ஏனைய முக்கியமான வம்சக்கதைகளிலும் கூறப்படும் விதத்தில் இயக்கர், நாகர், தேவர் எனும் மக்கள் இனத்தவர்கள் இங்கு வாழ்ந்துள்ளனர். இவர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இங்கு வாழ்ந்து வந்துள்ளமை தெரிய வருகின்றது.
வியாபாரத்திற்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் பொருத்தமான சூழல் நிலவியமையால் இந்திய இனக்குழுக்கள் வருகை தந்தமையும் பரவலடைந்தமையும் பற்றி இலக்கிய மூலாதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்நாட்டு மூலாதாரங்கள் மகாவம்சம், போதிவம்சம் போன்றவை
வெளிநாட்டு மூலாதாரங்கள் : குவான் சுவானின் அறிக்கை, யாஹியனின் அறிக்கை, இராமாணயம், மகாபாரதம், திவ்வியபிரபந்தம்
இந்திய இனக் குழுக்கள் இந்நாட்டிற்கு வருகை தந்த காலகட்டத்தில் இந்நாட்டில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட உலோக தொழினுட்பத்தை அறிந்திருந்த முன்னேற்றமான சமூகம் ஒன்று இருந்துள்ளதாக இலக்கிய, தொல்பொருள், ஆதாரங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஜயன் உட்பட்ட குழுவினர் இந்நாட்டிற்கு வருகை தந்த வேளையில் அநுராதபுரத்தில் 50 ஹெக்டேயருக்கு மேற்பட்ட பிரதேசத்தில் குடியேற்றம் விரிவடைந்திருந்ததுடன் அது நகரமொன்றாக வளர்ச்சி பெற்றுக்கொண்டிருந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன.
இந்திய மக்கள் குழுக்கள் வருகை தந்த வரிசை
விஜயன் உட்பட்ட கூட்டத்தினர்
மதுராபுரி இளவரசி உட்பட்ட குழுவினர்
பண்டுவாசுதேவ உட்பட்ட குழுவினர்
பத்தக்கச்சாயனா உட்பட்ட குழுவினர்
மஹிந்த தேரர் உட்பட்ட குழுவினர்
சங்கமித்தை பிக்குணியுடன் வருகைதந்த குழுவினர்
இந்தியக் குடியேறிகள், நதிக்கரைகளை அண்டிய பிரதேசங்களில் ஆரம்பக் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டனர்.
விவசாயத்திற்குப் பொருத்தமாயிருத்தல், நீரைப்பெற்றுக் கொள்ளகூடிய வசதி, அதிக காடுகள் காணப்பட்டமை என்பன குடியிருப்புகளின் பரவலில் மானசீகமாகப் பங்களிப்புச் செய்திருக்கலாம்.
ஆரம்பக்கால குடியேற்றங்கள் இடம்பெற்ற நதிப்பள்ளத்தாக்குகளாவன: மல்வத்து ஓயா
தெதுறு ஓயா
களனி கங்கை
மகாவலி கங்கை
கல் ஓயா
மாணிக்க கங்கை
வளவ கங்கை
களனி கங்கை குடியிருப்புகள் :
அநுராதகாம
உருவெலகாம
உபதிஸ்ஸ காம
விஜித்த காம
ராமகோண
தீக காம
காசரகாம
கல்யாணிகாம
ஆரம்ப வரலாற்றுக்காலம்.
வரலாற்றுக் காலத்தின் ஆரம்ப காலம் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. • ஆரம்பக்குடியிருப்புகள் நீர்வள நாகரீகமாக வளர்ச்சியடையத் தொடங்கியது ஆரம்ப வரலாற்றுக் காலத்திலாகும். (கி.மு.4 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை.)
நதிக்கரைகளை அண்மித்த குடியிருப்புகள் நாட்டின் உட்பகுதிகளுக்குப் பரவலடைந்து சிறிய குளக் கிராமமாக வளர்ச்சி பெற்றது. அதிகமான குடியிருப்புகள் உலர் வலயத்தில் பரவியமைக்கக்காரணம், அங்கு காணப்பட்ட செம்மண் விவசாயத்திற்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்திருந்த மையினாலாகும்.
குடித்தொகைப்பெருக்கத்துடன் மழைநீர் போதியதாயின்மையால் சிறிய குளங்களை அமைத்து நீரைச் சேமித்து வைத்துக் கொண்டனர்.
குடியிருப்புகளின் தன்மை.
ஒரு சிறிய குளத்தை மையமாகக் கொண்டு ஒரு கிராமம் உருவானது. இவை வாபி காம (குளக்கிராமம்) எனும் பெயரால் அறியப்பட்டது. குளம், வயல், சேனை, காடு, வீடு, என்பவை குளக்கிராமத்தின் பிரதான அங்கங்களாகும்.
ஒரு கிராமத்தில் 5-25 க்கு இடைப்பட்ட குடும்பங்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. கிராமத்தின் தலைவர் கமி எனப்பட்டார். ஆரம்பகால குளக்கிராமம் சுதந்திரமாகச் செயற்பட்டதோடு பிற்காலத்தில் கிராமங்கள் ஒன்றிணைந்து நகரங்களாக விருத்தியடைந்தன.
குடித்தொகைப் பெருக்கத்துடன் சிறிய குளங்களின் நீர் போதியதாக இன்மையால் கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து பெருங் குளங்களை நிர்மாணித்தனர். கி.பி.3ஆம் நூற்றாண்டாகும் போது மத்திய மயப்படுத்தப்பட்ட தலைநகரமாக அநுராதபுரம் மிகவும் அபிவிருத்தியுற்றிருந்தது.
வாழ்க்கை முறை
ஆரம்ப காலத்தில் விவசாயம் அடிப்படையாக அமைந்தாலும் பிற்காலத்தில் தொழில்களுக்கேற்ப கிராமங்கள் பிரிந்து சென்றதை அவதானிக்கக் கூடியதாய் உள்ளது.
நெற்செய்கை, சேனைப் பயிர்ச்செய்கையின் மூலம் உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டமை விவசாய கிராமங்கள் எனப்பட்டன. தொழிலுக்கியை வியாபார கிராமம், மீன்பிடிக்கிராமம், குயவர்களின் கிராமம் என்றவாறு பிரிந்து சென்றன.
நன்றி
0 Comments