சரஸ்வதி தேவி
![]() |
சரசுவதி இந்து சமயத்தினர் வணங்கும் முக்கியமான பெண் கடவுளரில் ஒருவர். படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் கொள்ளப்படுகிறார்.
சரஸ் என்றால் பொய்கை என்று அர்த்தம் வதி என்றால் வசிப்பவள். மனம் என்னும் பொய்கையில் வசிப்பவள். சரஸ்வதி என்பதற்கு பேச்சை தருபவள் என்றும் பொருள் உண்டு.
இந்துக்கள், சரசுவதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். அறிவு, ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரசுவதியை வெண்மை நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள்.சரசுவதியை வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளாகவும், சமய நூல்கள் வர்ணிக்கின்றன.
சரஸ்வதி ஞான வடிவானவள். ஞானம் எங்கிருக்கிறதோ அங்கே அடக்கம் இருக்கும். பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன. அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அருள்பாலித்தாள். அதன் பின்னரே பிரம்மனின் படைப்புகள் பேசும் திறமையை பெற்றன.
சரஸ்வதி அணிந்துள்ள ஆடையின் நிறம் வெள்ளை. வானவில்லின் 7 வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர். தூய வெள்ளை ஆடை அணிபவர்களுக்கு தனிமரியாதை உண்டு. கற்றவர், மரியாதைக்குரியவர் என்பதை எடுத்துகாட்டவே, கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளைஆடை அணிந்திருக்கிறாள். வெள்ளை என்பது மாசற்றது. இது ஒருவன் கற்ற கல்வி மாசற்றதாக இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது.
அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள் என்கிறது கந்தபுராணம்.ஆபுத்திரன் என்பவன் கலை மகளிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற செய்தி பௌத்த புராணமான மணிமேகலையில் உள்ளது.
பௌத்தர்கள் சரஸ்வதியை 05 பெயர்களில் வணங்கப்படுகின்றனர்.கலைமகளின் கையிலிருக்கும் செபமாலைக்கு அட்சமாலை என்று பெயர். இம்மாலை சமஸ்கிருதத்தின் எழுத்துகளின் எண்ணிக்கைக்கு சமமாக 51 மணிகளை உடையதாக கூறப்படுகிறது.
கலைமகளின் வாகனமாக அன்னப் பறவை உள்ளது.
ஒருநாள் கம்பரின் பாடலைக் கேட்டு சரஸ்வதி தேவியே வயதான மூதாட்டியாக வந்து அருள்பாலித்திருக்கிறார். கம்பரின் மகனான அம்பிகாபதிக்கும் சோழ மன்னனின் மகளான அமராவதிக்கும் காதல் ஏற்படுகிறது. இது ஒருவிதமாக ஒட்டக்கூத்தருக்கு தெரியவருகிறது. எனவே இருவரையும் சிக்க வைப்பதற்காக அரண்மனையில் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். சோழ மன்னன் நடத்திய விருந்தில் அறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்றனர். கம்பர் அவரது மகன் அம்பிகாபதி, ஒட்டக்கூத்தர் ஆகியோர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அம்பிகாபதிக்கு மன்னன் மகள் அமராவதி மீது ஏற்பட்டுள்ள காதல் கம்பருக்கு லேசாக தெரியும். விருந்தில் பரிமாற அமராவதி உணவு எடுத்துக்கொண்டு வந்தாள். அப்போது அம்பிகாபதி சுமையுடன் வருவதால் மென்மையான உன் பாதம் தரையில் பட்டதும் நோகிறது. மேலும் நடந்தால் கொப்பளம் வருமே என்று கூறினான். இதனை கேட்ட ஒட்டக்கூத்தர் சோழ மன்னனை பார்க்க... சோழ மன்னனுக்கு கோபம் வந்தது. உடனே கம்பர் சரஸ்வதி தேவியை தியானித்து வீதியில் வயோதிப பெண் ஒருத்தி வெயிலின் உஷ்ணத்தால் இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க கிழங்கு விற்றுக் கொண்டு வீதி வழியாக வருகின்றாள் என்று கூறினார். இதனைக் கேட்ட அரசன் உடனே காவலாளியை அழைத்து தெருவில் போய் உண்மை நிலையை அறிந்து வர கூறினார். அப்போது சரஸ்வதி தேவியே வயதான மூதாட்டியாக வந்து கிழங்கு விற்று வருகிறாள். அந்த வயோதிகப் பெண்ணை அழைத்து வந்து அரசன் முன் நிறுத்தினர். இதனால் ஒட்டக்கூத்தரின் கனவு வைத்ததோடு கம்பரின் மகனான அம்பிகாபதியும் சரஸ்வதியின் அருளால் காப்பாற்றப்படுகிறான். கம்பரின் வார்த்தையை காப்பாற்றவே சரஸ்வதி தேவி வயதான பெண்மணி போல வந்தாள்.
இதன்மூலம் சரஸ்வதி தேவி கல்வியறிவு உடையவர்களின் தூய்மைக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் ஏதும் நிகழ்ந்தால் காப்பாற்ற ஏதேனும் ஒரு வடிவில் வந்து அருள்புரிவாள் என்பதை அறியலாம்.
நன்றி
0 Comments