யமுனை நதி - YAMUNA RIVER


யமுனை நதி


யமுனை நதி - YAMUNA RIVER


யமுனை  தேவலோக நதிகளில் ஒன்றாகும் இந்தியாவின் முக்கிய நதிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

யமுனை நதியின் மூலமானது இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்திரி என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகி டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. 

இந்து மதத்தில் சரஸ்வதி , கங்கையைப் போலவே யமுனை நதியும் போற்றி வணங்கப்படுகிறது. இந்து புராணக் கதைகளின் படி யமுனை நதி சூரியன் மற்றும் சத்தியா தம்பதியினரின் மகளாகவும், மரணத்தை அளிக்கும் கடவுளான யமனின் தங்கையாகவும் கருதப்படுகிறது. மேலும் யமுனைக்கு வைவஸ்வத மனு எனும் சகோதரனும் உண்டு. இவனின் வழித்தோன்றல்களே ராமாயணத்தின்  கதாபாத்திரங்கள் ஆகும். 

புராதன கதைகளின் படி ஜமுனா எமதர்மனின் மனைவியாகவும் கருதப்படுகிறாள்.இதனால் யமுனை நதியில் நீராடினால் ஒருவர் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.மேலும் யமுனை விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனின் மனைவியாகவும் கருதப்படுகிறாள். கிருஷ்ணன் மூலம் யமுனைக்கு சுருதன் என்ற மகனும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

யமுனை நதி கடவுளாகக் கருதப்படுவதால் யமுனைக்கு அர்ப்பணிப்பதற்காக யமுனோத்ரி கோயில் கட்டப்பட்டது. இந்து மதத்தில் யமுனோத்ரி கோயில், புனிதத் தளமாக கருதப்படுகிறது. இக்கோயிலை ஒட்டி 13 KM தூரத்திற்கு நடைபாதை உள்ளதாகவும்  இப்பாதை ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள மார்க்கண்டேய தீர்த்தத்துக்கு  செல்வதாகவும் அமைகின்றது.  இந்த தீர்த்தத்தில்தான் முனிவர் மார்க்கண்டேயர் மார்க்கண்டேய புராணத்தை  எழுதியதாக கூறப்படுகிறது.

நன்றி



Post a Comment

0 Comments