கங்கா தேவி - GANGA DEVI


கங்கா தேவி

 

கங்கா தேவி - GANGA DEVI

கங்கா தேவி பர்வதராஜன் - மைனாகுமாரி தம்பதியரின் மகளும், சிவபெருமானின் மனைவியான பார்வதியின் சகோதரியும் ஆகும்.பார்வதிதேவி சிவபெருமானை திருமணம் செய்தபின் பகீரதனின் வேண்டுகோளுக்கிணங்க  தேவலோகத்தில் இருந்த கங்காதேவி பூமியை வந்தடைய சம்மதித்தார் ஆனால் அவர் வரும் வேகத்தை எவராலும் தாங்க இயலாத காரணத்தினால் சிவபெருமான் தனது ஜடாமுடியில் தாங்கி பூமி தாங்கும் அளவில் நீரை வெளியேற்றினார். இதனால் கங்கா தேவி சிவபெருமானின் மனைவியாகவும் கருதப் படுகின்றார் ஆனால் இது உண்மைக்கு புறம்பானது.கங்கா தேவி சிவனின் மனைவியருள் ஒருவராக கருதப்பட மாட்டார்.  

 

இந்துக்களின் கடவுளாக போற்றப்படும் கங்கையில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும்  என்பது இழந்த சாம்பலை கரை அவர் சொற் அடைய என்பது  இந்துக்களின்  நம்பிக்கையாகும். 

 

தேவலோகத்தில் கங்காதேவி மந்தாகினி ஆகவே அறியப்படுகின்றார்.பகீரதனின் தவத்திற்கிணங்கி பூலோகத்திற்கு வந்தமையால் கங்காதேவி பாகீரதி என்றும் அழைக்கப்படுகின்றார். இவ்வாறு கங்கை பூலோகத்திற்கு  வந்தது 5ம் மாதத்தின் வளர்பிறை 10ம் நாளாகும். இந்நாளை கங்கா தசரா என்ற பெயரில் விழாவாகக் கொண்டாடுகிறார்கள் 

 

கங்காதேவியின் மறு பெயர்கள்

கங்கையம்மன்

ஜானவி

பூலோக கங்கை

பாதாள கங்கை

திரிபதாகை

தேவிநதி

மந்தாகினி

வரநதி

உமைசுர நதி

தசமுகை நதி

சிர நதி

தெய்வ நதி

விமலை

பாலகங்கா

நீளகங்கா

காளிகங்கா

பாணகங்கை

போகவதி

 

கங்கை அம்மன் தலையில் பிறைசூடி , நெற்றிக்கண்ணுடன் காட்சி அளிப்பதோடு வெண்ணிற ஆடை உடுத்தி , வெண் தாமரையில் வீற்றிருக்கும் இவர் 4 கைகளையும் கொண்டு தன்னுடைய வாகனமான முதலில் வீற்றிருக்கின்றாள்.  


சிவனின் பாதியிலிருந்து உருவாக்கிய ஆதிசக்தி  தாட்சாயிணி யாக அவதரித்து  தட்சன் தக்ஷனின் யாக விழுந்து  இறந்தார்.  தாட்சாயிணியின் எரிந்த  உடலை  எடுத்து திரிந்த சிவனை சாந்தப்படுத்த நினைத்த திருமால்  தனது சக்ராயுதத்தினால் அவ்வுடலை சிதைத்தார். சிதைக்கப்பட்ட தாட்சாயிணியின் உடல்  பல பாகங்களாக பூமியில் விழுந்தது.  அதில் ஒன்று பர்வதராஜனின் எல்லையில் விழுந்திருந்தது. அதை அரக்கர்களிடமிருந்து பாதுகாக்க எண்ணிய பர்வதராஜனுக்கு அவருடைய மகனான கங்கையும் உதவி  செய்தால் செய்தாள். இதனால் சிவபெருமான் கங்கைக்கு நீ நதியாக மாறும் பொழுது புண்ணியம் மிகுந்த நதியாக இருப்பாய் என்று வரமளித்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு கங்கைக்குச் சிவபெருமான் மீது காதல் வந்தது. அதைச் சிவபெருமானிடம் கூறிய பொழுது தாட்சாயிணியைப் பிரிந்த சோகத்தில்  இருந்த சிவன்  மறுப்பு தெரிவித்துவிட்டார். பின் பர்வதராஜனின் மகளாக ஆதிசக்தி பிறந்து சிவபெருமானை அடைவதற்காக தவமிருந்து சிவபெருமானை திருமணம் செய்தாள். இவள் பார்வதி என்று அனைவராலும் அறியப்படுகின்றார். 

 

சிவபெருமானின் வரத்தினால் புண்ணியம் மிகுந்த நதியாக இருந்த கங்கையை, அரக்கர்களால் களங்கப்படுத்தப்பட்ட தேவலோகத்தை  புனித படுத்துவதற்காக பிரம்மாவும் ,இது இந்திரனும் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். தேவலோகத்திலே இருந்தாலும் சிவபெருமானின் மீது கொண்ட காதலால் கங்கை வருத்தத்துடன் இருந்தாள். 


சூரிய குலத்தில் பிறந்த திலீபன் என்பவனின் மகன் பகீரதன்  இவன் தனது முன்னோர்கள் சாபத்தால் இறந்த செய்தியை முனிவர் வாசிப்பின் மூலம் தெரிந்து கொண்டான்.பின் பகிரதன் தனது முன்னோர்களின் சாப விமோசனத்திற்காக 10000 ஆண்டுகள் பிரம்மனை நோக்கி தவம் இருந்தான். பிரம்மன்  நீ கங்கையை நோக்கி தவம் செய்து அவர்களின் சாம்பலை கங்கையில் நனைத்தால் அவர்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்று  கூறிச்சென்றார்.பகீரதனும் அவ்வாறே செய்தான். கங்கையும்  பகீரதனின்  முன் தோன்றி நான் பூமிக்கு வரும் வேகத்தை  பூமி தாங்காது என்று கூற   பகீரதன் பிரம்மாவிடம் சென்று முறையிட்டான்.  அதற்கு பிரம்மா  வேகத்தை சிவபெருமானால்  மட்டுமே   தாங்க   முடியும்  எனவே  நீ  சிவபெருமானை  நோக்கி  தவம் செய்  என்று கூறினார். பகீரதனும் அவ்வாறே செய்தான். சிவபெருமானும் சம்மதம் தெரிவித்து விட்டார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த கங்கை தேவலோகத்திலிருந்து மிகுந்த வேகத்துடன்  வந்து சிவபெருமானையும் அழைத்துக் கொண்டு பாதாள லோகம் செல்ல தீ்ர்மானித்தாள். அதனை உணர்ந்த சிவபெருமான் கங்கை சடாமுடியில் பிடித்து வைத்து அவளின் ஆணவம் தீரும் வரை பூலோகத்தில்  விட  மறுத்துவிட்டார். கங்கையோ, சிவபெருமானின் சடாமுடியில் மோகம் கொண்டு அங்கேயே சுற்றி வந்தாள். அதனால் கவலையுற்ற பகிரதன் மீண்டும் சிவனை நோக்கி தவம்  செய்தான். சிவபெருமானும் கங்கையை பிந்துசரஸ் மலையில் பாய செய்தார்.  பின்னர்   பகீரதனின்  முன்னோர்களின் சாபமும் நீங்கியது. இவ்வாறு சிவன் கங்கையைத் தனது சடாமுடியில் முடிந்து கொண்டதாலே கங்கையை சிவனின் மனைவியாக கருதுவர். 

 

சிவபெருமானுக்கும் , கங்காதேவிக்கும் வீரபத்திரன் என்ற மகன் பிறந்தான் என்றும் கூறுவர்.ஆனால் வீரபத்திரன் தட்சாயினியின் இறப்பின்போது    தோற்றுவிக்கப்பட்டவன், இதற்குப் பின்பே  கங்கை சிவன் மீது காதல் கொண்ட நிகழ்வு  நடந்தது.  எனவே கங்கா தேவிக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த மகன் என்பது உண்மைக்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது. வீரபத்திரன்  சிவனின்  நெற்றிக்கண்ணிலிருந்து தோற்றம்  பெற்றவன்   என்பதை உண்மை எனலாம். 

 

வீரபத்திரனுக்கும் , இலங்கை மன்னன் இராமராசரின் மகளான கயல்மணி தேவிக்கும் திருமணம் நடந்து  அவர்களுக்கு சிவருத்திரன் என்ற ஆண்குழந்தையும் பிறந்தது. சில காலங்களுக்கு பின் வீரபத்திரன் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள  சிவருத்திரனும் அனது  அன்னை கயல் மணி தேவியும்  கோயிலில் பூக்கட்டும் வியாபாரத்தில் ஈடுபட்டனர்.சிவருத்திரன் பெரியவனாகியதும் சிவபெருமானிடம் வில்லும் வாளும் பெற்று நள்ளி மாநகருக்குள் திக்விஜயம் சென்றதில் இளவரசன் உக்கிர குமாரனின் நட்பும் கிடைத்தது. சிவருத்ரனும் , உக்கிரவடகுமாரனும்  காட்டிற்கு வேட்டையாடச் சென்ற பொழுது , ஒருவன் கண்டிகா தேவி, உமையாள்,தத்தை ஆகிய 3 கவர்ந்து சென்றான். சிவருத்ரன் அவனிடமிருந்து மூவரையும் காப்பாற்றியதில் அவர்கள் மூவரும் சிவருத்திரன் மேல் காதல் கொண்டு திருமணம் செய்துகொண்டனர். 

 

முதல் மனைவியான கண்டிகைதேவிக்குத் தருமக்கூத்தன், காந்திமதி என்ற இரு குழந்தைகளும், இரண்டாவது மனைவியான உமையம்மைக்கு தருமன், மந்திரை என்ற இரு குழந்தைகளும், மூன்றாவது மனைவியான தத்தைக்கு கலுழன், சுதை என்ற இரு குழந்தைகளும் பிறந்ததாக இக்கதை செல்கின்றது.

 

மகாபாரதத்தில் கங்காதேவி வருணனின் மனைவியாகவும், பீஷ்மரின் தாயாகவும் கருதப்படுகிறாள். தேவலோக நதியான கங்கையும், தேவர்களும் சத்திய லோகத்தில் இருக்கும் பிரம்மனைத் தரிசிக்கச் சென்றனர். அப்பொழுது வருண தேவன் தன்னுடைய சக்தியினால் மெல்லிய காற்றினை வீசச் செய்தான், அக்காற்றில் கங்கையின் மேலாடை விலகியது. அதனை/ கண்டு திகைத்த தேவர்கள் அதனைக் காணாமல் இருக்க  தலையை கீழ் நோக்கினர். வருணனின்  இந்த இழிந்த செயலை கண்டு கோபம் கொண்ட பிரம்மா வருணனைப் பூலோகத்தில் மனிதனாகப் பிறக்கும்படிச் சாபமிட்டார். அத்துடன் மேலாடையைச் சரி செய்யாத கங்கையையும் பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்கவும், மனிதனாகப் பிறக்கும் வருணனைத் திருமணம் செய்து கணவனுக்குப் பிடிக்காத செயல்களைச் செய்வாயெனவும் சாபமிட்டார்.

 

இதனால் வருந்திய கங்கை சாபவிமோசனம் கேட்டார். அதனால் மனமிறங்கிய பிரம்மா கணவனுக்கு பிடிக்காத செயல்களைச் செய்து வருபவளை எப்பொழுது மோகம் நீங்கிய மனிதன் அச்செயல்களுக்காக காரணம் கேட்கின்றானோ அப்பொழுது கங்கைக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார். பிரம்மாவின் சாபத்தின்படியே வருணன் சாந்தனு மகாராஜாவாக பிறந்தார். கங்கை கண்ட சந்தனு அவளின் மீது காதல் கொண்டார், அவளை திருணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்குக் கங்கை தன்னுடைய செயல்களை ஏன் என்று கேள்வி கேட்கக் கூடாதன்ற ஒரு நிபந்தனையுடன் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள். கங்கை மீதிருந்த காதலால் அந்நிபந்தனையைச் சந்தனு வடிவிலிருந்த வருணன் ஏற்றார்.


இருவருக்கும் திருமணம் நடந்து ஒரு குழந்தை பிறந்தது, அக்குழந்தையை கங்கா ஆற்றில் மூழ்கச் செய்தாள். சந்தனு கங்கையுடைய நிபந்தனையின் காரணமாக மௌனம் காத்தான். ஆனால் அடுத்தடுத்துப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கங்கை ஆற்றில் மூழ்கடித்தாள். கோபத்தின்  எல்லைக்குச் சென்ற சந்தனு ஏன் அவ்வாறு செய்கிறார் என்று கேட்டார். இதனால் கங்கையின் சாபமும்  நீங்கியது. 


சிவபெருமான் கங்கைக்கு அளித்த வரத்தினால் பூலோக மனிதர்கள் அனைவரும் , அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டுச் சொர்க்கத்தினை அடைவார்களே என்ற வருத்தம் கொண்டார் நாரத முனிவர். தன்னுடைய எண்ணத்தினைக் கைலையில் பார்வதி தேவியிடம் கூறினார். பார்வதி தேவிக்கும் அதே சந்தேகம் ஏற்பட்டது. அதனையறிந்த சிவபெருமான் ஒரு உபாயம் கூறினார். அதன்படி கங்கை நதிக்கரையில் வயதானவராக சிவபெருமானும்  பாமரப்பெண்ணாக பார்வதியும் சென்று கங்கையில் குளிக்கும் பொழுது வெள்ளம் வந்தது. நீச்சல் தெரிந்த அந்தப் பெண் கரையை அடைந்து , பாவம் செய்யாதவர் யராவது நீரில் மாட்டிக் கொண்ட தனது  கணவரை  காக்கும்படி வேண்டினாள். அனைவரும் சிலையாக நின்றனர். ஆனால் ஓர் இளைஞன் மட்டும் கங்கை நீரில் மூழ்கித் தன்னுடைய பாவங்களை  நீக்கி, அவளின் கணவனை காப்பாற்றினான். கங்கையில் மூழ்கி அனைவரும் தங்களின் பாவங்களை நீக்கலாம் என்ற பொழுதும், அதனை முழுமையாக நம்பிய அந்த இளைஞனை போலுள்ளவர்கள் மட்டுமே கங்கையில் குளித்து  தங்களின் பாவங்களை நீக்கி கொள்ள முடியும் என்பது ஓர் நம்பிக்கையாக இருக்கின்றது.


சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிபட்ட 6 நெருப்புப் பொறிகளை அசுரர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக சூரியதேவன் அதனை எடுத்துச்  சென்று   கங்கையிடம் ஒப்படைக்க கங்கை அந்த 6 நெருப்புப் பொறிகளை   சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்த்ததால்  முருகனைக் கங்கையின் மைந்தன் என்று முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் கௌமார சமயம் கூறுகிறது.


மேலும், திருமால் வாமன அவதாரம் எடுத்த பொழுது,வானை அளப்பதற்காகக் காலை மேலே தூக்கிய பொழுது  அக்கால் சத்திய லோகம் வரை  நீண்டது. அதைக் கண்ட பிரம்மா ஆகாய கங்கையால் விஷ்ணுவின் காலை அபிசேகம் செய்தார். இதனால் கங்கை திருமாலின் திருவடியில் பிறந்தவர் என்று வைணவ சமயத்தவர்கள் கருதுகின்றனர்.


நன்றி


Post a Comment

0 Comments