மும்மூர்த்திகள்
மும்மூர்த்திகள் என்று பிரம்மா , விஷ்ணு , சிவன் ஆகியோர் அழைக்கப்படுகின்றனர். இந்த மும்மூர்த்திகளை திரிமூர்த்தி என்றும் குறிப்பிடுவர். சிவன் தனது வலப் புறத்தில் இருந்து பிரம்ம தேவரையும் , இடப் புறத்தில் இருந்து விஷ்ணுவையும் படைத்ததாக விஷ்ணுவின் அவதாரமான வியாசர் குறிப்பிடுகின்றார். ஒருமுறை பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற பூசல் ஏற்பட்டு அங்கு சிவன் இலிங்கேற்பவ மூர்த்தியாக தோன்றி பத்ம கற்ப காலத்தில் திருமாலின் உந்திக் கமலத்தில் இருந்து பிரம்மா பிறப்பார் என்று திருமாலுக்கு சிவன் அருளினார்.
மேலும், இந்து சமயத்தில் இந்த அண்டத்தையும் அதிலுள்ள உயிர்களையும் உருவாக்கும் படைத்தல் தொழில் செய்பவராக பிரம்மாவும் , பிரம்மா படைத்தவற்றை பாதுகாக்கும் காத்தல் தொழிலை செய்பவராக விஷ்ணுவும் , உலக சம நிலையைப் பேணுவதற்காக அழித்தல் தொழிலை செய்பவராக சிவனும் காணப்படுகின்றார்.
இவ்வாறு இந்து கடவுள்களில் மிகவும் முக்கியமான இவர்களை மும்மூர்த்திகள் என்று குறிப்பிடுவர். இந்த மும்மூர்த்திகளை ஒழுங்கு முறையாக பிரம்மா - விஷ்ணு - சிவன் என்பது வழக்கம் . இவர்களை உருவ வடிவத்தில் குறிப்பிடும் போது ஒரே கழுத்தில் மூன்று தலைகள் இருப்பது போலும் அமைக்கப்படும்.
மும்மூர்த்திகள்
0 Comments