பிரம்மா
மும்மூர்த்திகளுள் ஒருவரான பிரம்மா படைக்கும் தொழில் செய்பவராவார். பிரம்மா சரஸ்வதியுடன் சத்ய லோகத்தில் வசிப்பவர். இவர் படைப்புத் தொழிலுக்காக தனது மனதிலிருந்து சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர், என்ற 4 மகன்களை முதன்முதலில் தோற்றுவித்தார் . ஆனால் இவர்கள் இல்லற தர்மத்தை கடைப்பிடிக்காது சிவனை வழிபட்டு துறவறத்தில் ஈடுபட்டு ஞானிகளாக மாறிவிட்டனர். இவர் 4 தலையுடனும், 4 கைகளையும் கொண்டுள்ளார். இவருடைய வாகனமாக அன்னப்பறவை காணப்படுகின்றது.
4 முகங்களை உடையவர் என்பதால் நான்முகன் என்றும், பிரம்மத்திலிருந்து தோன்றிய விஷ்ணுவின் தொப்புளிலிருந்து தோன்றியதால் பிரம்மா என்றும் அழைக்கப்படுகிறார்.
பிரம்மா, தான் முதலில் படைத்த 4 பிள்ளைகளும் துறவறத்தில் ஈடுபட்டதால் படைப்புத் தொழிலை செய்வதற்காக இல்லற தர்மத்தின் படி நடக்கும் 10 பிரஜாபதி படைத்தார்.
நாரதர்
பிருகு
கிரது
கிரேத யுகம் - 1728000 ஆண்டுகள்
திரேதா யுகம் - 1296000 ஆண்டுகள்
துவாபர யுகம் - 864000 ஆண்டுகள்
கலி யுகம் - 432000 ஆண்டுகள்
4 யுகங்களின் மொத்தம் எண்ணிக்கை - 4320000 ஆண்டுகள்
பிரம்மாவின் பேராயுள் - 864000000 ஆண்டுகள்
பிரம்மான் ஆயுள் - 86400000000 ஆண்டுகள்
திருப்பாற்கடலை கடையும் போது அதிலிருந்து வெளி வந்த சரசுவதி தேவியை மணந்து கொண்டார்.
விஷ்ணுவுக்கும், பிரம்மாவிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற கருத்து வேறுபாட்டை தீர்க்க, இருவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவனும் இலிங்கோற்பவர் என்ற வடிவத்தில் எழுந்தருளி, இருவரில் ஒருவர் தமது அடியையும், ஒருவர் தமது முடியையும் கண்டு வருமாறு பணித்தார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து லிங்கோத்பவரின் அடியை காண பூமியை குடைந்து சென்று பார்த்தார், ,சிவனின் அடியை காண இயலாத விஷ்ணு, சிவனிடமே திரும்பி வந்து சிவனின் அடியை காணமுடியாத தனது இயலாமையை ஒத்துக்கொண்டார்.
ஆனால் பிரம்ம தேவரோ, அன்னப் பறவை வடிவம் எடுத்து சிவனின் முடியைக் காண சென்றார். வழியிலேயே சிவபெருமானின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவானது அதன் பயணத்தினை கூறியதைக் கேட்டவர், சிவனிடம் வந்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவை மூலவராக வைத்து கோவில்கள் உருவாகாது என சிவபெருமான் சாபமிட்டதாக சொல்லப்படுகிறது.மேலும், பிரம்மாவுடன் சேர்ந்து பொய்யுரைத்த தாழம்பூவினை சிவனுக்கான பூசையில் அனுமதிப்பதில்லை.
சில கதைகளில் சிவபெருமான் தனது முடியை கண்டதாக பொய்யுரை பிரம்மாவின் 5 தலைகளுள் ஒன்றினை கிள்ளி எறிந்ததாகவும், அதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோசம் பிடித்ததால் , சிவபெருமான் பிட்சாடனார் என்று பெயர்பெற்று அனைவராலும் வணங்கப்படுகிறார்.
ஆனால் , 18 மகாபுராணங்களில் ஒன்றான பிரம்ம புராணத்தில் பிரம்மாவின் தலையை சிவபெருமான் கொய்தமைக்கு வேறொரு கதை கூறப்பட்டுள்ளது. அதாவது பிரம்மாவுக்கு 5 தலைகளில் ஒரு தலை கழுதை வடிவில் இருந்தது. அத்தலை தேவர்கள் , அரக்கர்கள் போரில் அசுரர்களுக்கு உதவி செய்ததால், தேவர்கள் காக்கும் கடவுள் விஷ்ணுவிடம் சென்று முறையிட அதற்கு அவர், தலையானது எங்கு விழுந்தாலும் விபரீதம் நேர்ந்துவிடும் என்று எச்சரித்து அதை என்னால் செய்ய முடியாது என்று மறுப்பு தெரிவித்ததோடு சிவபெருமானிடம் கோரிக்கை வைக்கும்படி கூறினார். தேவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட அவர் பிரம்மாவின் கழுதை தலையை நீக்கி தன்னுடன் வைத்துக்கொண்டார்.
பிரம்மா சிவனிடம் தங்களைப்போலவே எனக்கு ஒரு மகன் வேண்டும் என்று வேண்டியதால் சிவபெருமானின் அம்சமாக ஒரு குழந்தை பிரம்மாவின் மடியில் தோன்றியது.பின்னர் அக்குழந்தை தனக்குப் பெயரிட வேண்டுமென அழுததாகவும், அதனால் பிரம்மா சிவனின் அம்சமாக இருந்த அக்குழந்தைக்கு உருத்திரன் என்று பெயரிட்டதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அக்குழந்தை தனக்கொரு பெயர் சூட்டிய பின்னும் அழுதது. இதனால் பிரம்மன் உருத்திரனுக்கு பாவன், சிவன், பசுபதி, ஈசன், பீமன், உக்கிரன், மகாதேவன் என்று மேலும் 7 பெயர்களை சூட்டினார் என்றும் குறிப்புகள் உள்ளன.
ஒரு சமயம் விஷ்ணு தனது கிருஷ்ண அவதாரத்தில் தனது நண்பர்களுடன் யமுனை நதிக்கரையில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தார்
பிரம்மா பாலகன் கிருஷ்ணனுடைய சக்தியை சோதிப்பதற்காக கன்றுகள் அனைத்தையும் திருடி வேறு ஒரு இடத்தில் மறைத்து வைத்தார். கிருஷ்ணருடைய நண்பர்கள் கன்றுகளை தேடியும் அவை கிடைக்கவில்லை இதனால் கிருஷ்ணர் தாம் தேடிவருவதாக கூறி புறப்பட்டார். அந்த சமயத்தில் பிரம்மா கிருஷ்ணருடைய நண்பர்களையும் திருடி மறைத்துவைத்தார். இதை அறிந்த கிருஷ்ணர் தாமே கன்றுகளாகவும், தனது நண்பர்களாகவும் மாறி சிறிது காலம் கோகுலத்தில் வாழ்ந்து வந்தார். பின்னர் கிருஷ்ணருடைய சக்தியை அறிந்த பிரம்மா கிருஷ்ணரிடம் கன்றுகளையும் , அவனது நண்பர்களையும் திருப்பிக் கொடுத்தார்.
சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக பிரம்மதேவர் கைலாயத்திற்கு வந்தபொழுது அவர் முருகனை வணங்க தவறிவிட்டார். இதனால் முருகன் இவரை அழைத்து தாங்கள் யார் பெற்று வின அதற்கு பிரம்மன், தான் பிரணவ மந்திரத்தினை சொல்லி படைக்கும் தொழிலை செய்பவன் என்று கூறினார்.அதனைக் கேட்ட முருகன் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்க காலத்தின் விளையாட்டால் பதில் தெரியாது நின்ற பிரம்மாவை முருகன் சிறை செய்ததோடு படைக்கும் தொழிலையும் தானே எடுத்துக் கொண்டார். சிறையிலிருந்த பிரம்மா தனது 8 கண்களால் சிவபெருமானை வணங்கி நின்றார். அதனால் முருகனிடமிருந்து பிரம்மாவிற்கு மீண்டும் படைக்கும் தொழில் கிடைத்ததாக பிரம்மபுர தல வரலாறு கூறுகிறது.
நாரதர் ஒரு நாள் மும்மூர்த்திகளிடம் அத்திரி முனிவரின் மனைவியான அனுசுயாவின் கற்பினைப் பற்றி முப்பெரும்தேவியரைவிடவும் உயர்ந்தவள் என்று கூறினார். அதனால் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவரும் அவளை சோதிக்க துறவிகள் வேடத்தில் அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். அந்த துறவிகளின் படத்தில் வந்த மும்மூர்த்திகளை வரவேற்ற அனுசுயா, அவர்களுக்கு உணவினை கொடுத்தாள். அதனை ஏற்க மறுத்த அவர்கள் ஆடையில்லாமல் பெண்தருகின்ற உணவினையே ஏற்பதாக கூறினர்.
இதனைக் கேட்டு அனுசுயா திகைத்து நின்றாள். பின்னர் தன்னுடைய கற்புநெறியினால் வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதை அறிந்து அவர்களை குழந்தைகளாக்கி தான் தாயாக உணவமுதம் கொடுத்தாள். குழந்தைகளாக இருந்த மும்மூர்த்திகளை திருப்பித்தருமாறு முப்பெரும்தேவியர்களும் அனுசுயாவிடம் முறையிட மும்மூர்த்திகள் தங்களின் பழைய உருவத்திற்கு வந்தனர். பின்னர் அத்திரி முனிக்கும்,அனுசுயாக்கும் தாணுமாலயன் வடிவில் மூவரும் காட்சியளித்து அருள் புரிந்தனர்.
பிரம்ம புராணத்தின் படி பிரம்மா சுயம்புவாக தோன்றி சொர்க்கத்தையும் பூமியையும் படைத்தார் என்றும் தன்னுடைய மனதில் இருந்து சப்த ரிஷிகளையும் , பூமியின் முதல் ஆணான சுயம்பு மனுவையும் முதல் பெண்ணான சதரூபையையும் படைத்தார். இவர்களின் மகன் மனு என்று அறியப்படுகிறார். இந்த மனுவில் இருந்தே மனுவின் வம்சம் எனப்படும் மானுடர்கள் உருவாக்கினார் என்று கூறப்படுகிறது.
சப்தரிஷிகள்
மரீசி
அத்திரி
ஆங்கிரசர்
புலஸ்தியர்
புலஹர்
கிரது
வசிஷ்டர்
பிரம்மா மும்மூர்த்திகளுள் ஒருவர் என்ற காரணத்தினால் வரம் கொடுக்கும் தகுதியை பெற்றிருந்தார். பிரம்மர் தன்னிடம் வந்து வேண்டுபவர்களுக்கு வரம் கொடுப்பவராகவும் அவர்கள் தான் பெற்ற வரத்தினால் தீயவழியில் செல்லும் போது அவர்களின் அழிவுக்கு உறுதுணையாக இருப்பவராகவும் காணப்படுகின்றார். அந்த வகையில் தேவலோகத்தில் ஆயிரம் அழகிகள் இருந்தும், நிகும்பன் என்ற அரக்கனின் மகன்களான சுந்தன், உபசுந்தன் ஆகியோரைக் கொல்ல, திலோத்தமை என்ற இரத்தின கற்களாலான பேரழகியை பிரம்மா படைத்தார். அதனால் திலோத்தமையை அடைய முயன்று அவர்கள் இருவரும் இறந்தனர்.
மேலும் இராமாயணத்தில் , இராவணனின் தம்பியான கும்பகர்ணன், சாகா வரம் கேட்க நினைத்து, நித்திரை வரம் வாங்கிய கதை கூறப்படுகின்றது.
இந்து தொன்மவியலில் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக பிரம்மாஸ்திரம் கருதப்பெறுகிறது. அரக்கர்களும் , தேவர்களும் பிரம்மாவை நோக்கி தவமிருந்து அந்த சக்திவாய்ந்த ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை பெற்றுக் கொள்வதாகவும், அதனை மந்திரத்தினை உச்சரித்து எய்வதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
1 Comments
Super
ReplyDelete