விஷ்ணு - VISHNU

 

விஷ்ணு


விஷ்ணு - VISHNU

விஷ்ணு வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக இந்து சமயத்தின் முக்கிய கடவுள்களில் ஒருவராகவும் காணப்படுகின்றார். மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு 3 உலகையும் காப்பவராக இருக்கிறார். விஷ்ணு பிறப்பும்,இறப்பும் இல்லாத பரம்பொருளாக இருப்பதால் பரப்பிரம்மன்,பரமாத்மா என்றும்  அழைக்கப்படுகிறார்.

விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்று பொருள். வைணவ சமயம், பரமாத்மாவான விஷ்ணு, உலகில்  எப்போதெல்லாம் அதர்மம் ஓங்குகிரதோ அப்போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட பல்வேறு அவதாரங்கள் எடுப்பார் என்று கூறப்படுகிறது.           

நாராயணன் , வாசுதேவன் , ஜகன்நாதர், விதோபர் , ஹரி , திருமால் என்று பல பெயர்களால் விஷ்ணு அழைக்கப்படுகிறார். இவர் நீல நிற தோலுடன் கீழ் வலது கையில் கௌமேதகியும் , கீழ் இடது கையில் பத்மாவும் , மேல் வலது கையில் சுதர்சன சக்கரமும் , மேல் இடது கையில் பாஞ்சஜன்யமும் தாங்கிய தோற்றத்துடன் காணப்படுகிறார். மேலும் இவர் பாற்கடலில் லட்சுமி தேவியுடன் ஆதிசேஷன் என்ற நாக படுக்கையில் படுத்திருப்பதாக இந்து சமயத்தவரால்  நம்பப்படுகிறது

விஷ்ணு சிவ பூஜை செய்து சுதர்சன சக்கிரத்தைப்  பெற முயன்றபோது தனது கண்ணையே பூவாக அர்சித்து இறுதியில் சுதர்சன சக்கரம் பெற்றார் என வியாசர் கூறுகிறார். விஷ்ணுவின் வாகனமாக கருடன் காணப்படுகின்றார் . விஷ்ணு பகவானின் அருவ வடிவமாகக் சாளக்கிராமமும் கருதப்படுகிறது.

இந்துக்கோவில்களில் படுக்கைக் கோலத்தில் அதாவது  சயன நிலையில்  மூலவராக இருக்கும் ஒரே  ஒரு இறைவன் விஷ்ணு  ஆவார்.இதிகாசங்களான மகாபாரதம் ,  இராமாயணம் முறையே இவருடைய கிருஷ்ண ,  இராம அவதாரத்தினை விளக்குகிறது.  

விஷ்ணுவின் 4 குணங்கள்

வாத்சல்யம் - தாய்ப்பசுவின்  கன்று கொள்கின்ற அன்பு.

சுவாமித்துவம் - கடவுள்களுக்கெல்லாம் தலைமையேற்கும் சிறப்பு.

சௌசீல்யம் - ஏற்றத்தாழ்வின்றிய நட்பு 

சௌலப்யம் - கடவுளின் எளிமை

மேற்கூறப்பட்ட 4 குணங்களும் விஷ்ணுவுடைய கிருஷ்ண அவதாரத்தில் வெளிப்பட்டதாக கூறப்படுகின்றது.         

வாத்சல்யம் - அர்ஜூனனின் தவறை நோக்காது, பாரத போரினை நிகழ்த்தியமை.                                                

சுவாமித்துவம் - அர்ஜூனனுக்கு தன்னுடைய பரத்துவத்தை விளக்கியமை.  

சௌசீல்யம் - குசேலனிடம் நட்பு பாராட்டியமை.              

சௌலப்யம் - இறைவனாகிய விஷ்ணு மனிதனாககவும், அவதரித்தது.

உலகில் எப்போதெல்லாம் அதர்மம் ஓங்குகிரதோ அப்போதெல்லாம் விஷ்ணு உலகில்  அவதரித்து உலகைக் காப்பதாக வைணவ மக்கள்  நம்புகின்றனர். இதற்காக விஷ்ணு எடுத்த அவதாரங்களை தசாவதாரம் என்கின்றனர்.               பாகவத புராணத்தில் விஷ்ணு 25 அவதாரங்களை எடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

விஷ்ணுவின் அவதாரங்கள் 3 ஆக பிரிக்கின்றனர்.          

அவதாரம் - முழு சக்தியை கொண்டது.

ஆவேசம் - தேவையின் போது மட்டும் சக்தி கொண்டவனாகுதல்.

அம்சம் - விஷ்ணு சக்தியின் ஒரு பகுதி உருவங்கொள்ளல்.                 

அசுரகுருவான சுக்கிராச்சாரியாரின் மனைவியை விஷ்ணு கொன்றதால்,சுக்கிராச்சாரியார்  அவரை 7 முறை மனிதனாக பூமியில் பிறக்கும் படி சபித்தார். இதனால் விஷ்ணு  சப்த அவதாரங்களை எடுத்ததாக வாயு புராணம் கூறப்படுகிறது.  

சப்த அவதாரங்கள்                                                                    

தத்தாத்ரேயர்                                                                                             

பரசுராமர்                                                                                                           

இராமர்                                                                                                                    

வியாசர்                                                                                                       

கிருஷ்ணன்                                                                                                   

உபேந்திரன்                                                                                                        

கல்கி          

விஷ்ணுவும் , இலட்சுமியும் பாற்கடலில் தனித்திருக்கும் போது சில முனிவர்கள் விஷ்ணுவைக் காண வந்தார்கள். அவர்களை ஜெயன், விஜயன் என்ற 2 வாயிற்காவலர்களும் தடுத்தனர். இறைவனின் தரிசனத்திற்கு வந்த எங்களைத் உள்ளே செல்லவிடாமல் தடுத்தமையால் கோபம் கொண்ட முனிவர்கள்   அவர்களை  அசுரர்களாகப் பிறக்கும்படி சாபமிட்டனர். இதையறிந்த விஷ்ணு தன்னுடைய வாயிற்காவலர்கள் அரக்கர்களாகப் பிறக்கும் போது, அவர்களை ஆட்கொள்ள தசாவதாரம் எடுத்ததாகக் காரணம் என அக்னி புராணம்  கூறுகிறது.

விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்  

மச்ச அவதாரம்

கூர்ம அவதாரம்

வராக அவதாரம்

நரசிம்ம அவதாரம்

வாமண அவதாரம்

பரசுராம அவதாரம்

இராம அவதாரம்

பலராம அவதாரம்

கிருஷ்ண அவதாரம்

கல்கி அவதாரம்

பௌத்த மதத்தினை தோற்றுவித்த புத்தரும் விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒருவராகவே கருதப்படுகிறார். இவ்வாறு திருபாற்கடலை கடையும் போது பெற்ற அமுதத்தை  அசுரர்களுக்கு கிடைக்காது  செய்வதற்கு மோகினி எனும் பெண் வடிவம் எடுத்ததும் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது . இது பற்றி புராணங்களிலும் செய்திகள் உள்ளது. 

ஸ்ரீ மத் பாகவதத்தில் விஷ்ணு 25 அவதாரங்கள் எடுத்ததாக கூறப்படுகிறது.

சனகாதி முனிவர்கள்

ஆதிபுருஷ அவதாரம்

வராக அவதாரம்

நாரத அவதாரம்

நரநாரயண அவதாரம்

கபில அவதாரம்

யக்ஞ அவதாரம்

ரிஷபதேவ அவதாரம்

பிருது அவதாரம்

ஹயக்கிரீவ அவதாரம்

அம்ச அவதாரம்

வியாச அவதாரம்

மச்ச அவதாரம்

கூர்ம அவதாரம்

தன்வந்திரி அவதாரம்

மோகினி அவதாரம்

நரசிம்ம அவதாரம்

வாமன அவதாரம்

பரசுராம அவதாரம்

ராம அவதாரம்

தத்தாத்ரேய அவதாரம்

பலராம கிருஷ்ண அவதாரம்

புத்த அவதாரம்

கல்கி அவதாரம்

சிவனின் மனைவியான பார்வதியின் சகோதரனாக விஷ்ணு கூறப்படுகிறார். விஷ்ணுவின் கண்ணீரில் இருந்து தோன்றிய வள்ளி , தெய்வானையை சிவன் - பார்வதியின் புத்திரனான முருகன் மணந்து  கொண்டதால் விஷ்ணுவின் மருமகனாக  முருகன்  கருதப்படுகின்றான். 

தாருகாவனத்தில் வாழும் ரிஷிகளின் ஆணவத்தினை அடக்க சிவபெருமான் அழகான பலிதேர் பிரான் வடிவெடுத்து சென்று ரிஷிபத்தினிகளை கவர்ந்ததைப் போல,  விஷ்ணு மோகினி வடிவெடுத்து சிவனுடன் சென்று ரிஷிகளை வசப்படுத்தியதாக இந்து புராண கதைகள் கூறுகின்றன.

தேவர்களும், அசுரர்களும் இணைந்து  பாற்கடலைக் கடைந்து அமுதத்தை  பெற்றனர் , அசுரர்களும் அவ் அமுதத்தினை  அருந்தினால்  சாகாவரத்தை பெற்றுவிடுவார்கள் எனப் பயந்த தேவர்கள், விஷ்ணுவிடம் வேண்டினர்  அதனால்.                                        விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு மட்டும் அமுதத்தைக் கிடைக்கச் செய்த கதையும் உண்டு.                                                                                       

இந்நிகழ்வின் பொழுது மோகினி அவதாரத்தினைக் காண இயலாத சிவபெருமான் ஓர் சூட்சுமமான காரணத்தோடு  விஷ்ணுவை மீண்டும் மோகினி அவதாரம் எடுக்க வேண்டினார் அதாவது மகிசாசூரனின் தங்கையான மகிஷி நான்  சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த குழந்தையால் மாத்திரமே இறக்க வேண்டும்  என்ற   வரத்தைப் பெற்றிருந்தாள் அதனால் சிவன் விஷ்ணுவை மீண்டும் மோகினி அவதாரம் எடுக்க வேண்டி  சாஸ்தா என்றழைக்கப்படும் ஐயனாராரை  படைத்தார்.

திருமாலின் வேறுபட்ட பெயர்களின் தொகுப்பாக விஷ்ணு நாமாவளி காணப்படுகின்றது. இவற்றுள் சஹஸ்ரநாமம் என்ற தொகுப்பாக விசாயர் அருளியுள்ளார். மகாபாரதத்தில் பீஷ்மர் தர்மருக்கு போர்க்களத்தில் விஷ்ணுவின் பெயர்களைக் கூறுவதாக   ஓர் பகுதி அமைந்துள்ளது. 

நன்றி


Post a Comment

0 Comments