சிவன் - SIVAN

 

சிவன்



சிவன் - SIVAN

சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டும் மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும் இவரே காணப்படுகின்றார். இவர் பிறப்பும் , இறப்பும்  அற்ற பரம்பொருள்  என்பதால் பரமசிவன்  என்று அழைக்கப்படுகிறார் . சிவபெருமான் தனது ஒரு பகுதியிலிருந்து ஆதிசக்தியை உருவாக்கினார் என்றும், பின் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவம் ஆடி அண்ட  சராசரங்களை உருவாக்கினார்கள் என்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் 5 பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது. பின் ஆதிசக்தி படைப்பதற்காக பிரம்ம தேவரையும்படைத்தவற்றை காப்பதற்காக விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது

 

கடவுள்களில் அழிவுக் காலத்தில்   அதாவது  ஊழிக்காலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பார் என்பதால் சதாசிவன் என்றும் அழைக்கப்படுகின்றார் . சிவபெருமானின்  இடப்பக்கத்தில் இருந்து விஷ்ணுவும் , வலப்பக்கத்திலிருந்து பிரம்மரும் உருவானார்கள் என்று திருமாலின் அவதாரங்களில் ஒருவரான வியாசர் கூறுகின்றார்.

 

பிரம்மதேவர் தன்னால் படைக்கப்பெற்ற உயிர்களை அழிக்க சிவனிடம் வேண்டிநிற்க பிரம்மரின் மகனாகஉருத்திரன் அழிக்கும் கடவுளாக உதித்தார். என்று வாயு புராணம் கூறுகின்றது.

 

சிவன் என்றால், தமிழ் மொழியில் சிவந்தவன் என்றும் வடமொழியில் முழுமையானது, மங்கலகரமானது என்றும் பல பொருள் உண்டு. சங்கரன் எந்த நேரமும் யோகநிலையில்  இருப்பதால் யோகி என்றும், சுடுகாட்டில் மனம் பேதலித்துப் பேய்களுடன் ஆடுவதால் பித்தன் எனவும் அழைக்கப்படுகிறார்.

 

சைவ சமயத்தில் சிவம் , சக்தி ஆகிய இரண்டும் ஒருபெருமுழுமையின், ஒன்றிலொன்று இன்றியமையாத இரு அம்சங்கள். அவற்றைப் பரசிவம் , ஆதிசக்தி என்கின்றனர் . இந்த இரு பேராற்றல்களின் திருவிளையாடல்களாகவே புராணக்கதைகள் அனைத்தையும் நோக்குகின்றனர்

 

தக்சனின் தவத்தால் அவனுக்கு மகளாகப் பிறக்கும், ஆதிசக்தி , சதிதேவி என்று அறியப்படுகிறாள். தக்சனின் அனுமதி இல்லாமல் சதி சிவனை திருமணம் செய்ததால்  கோபம் கொண்ட தக்சன் , அவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் யாகம் செய்கின்றான். யாகம் செய்யும் இடத்திற்கு அழைப்பின்றி வந்த சதிதேவியிடம், தக்சன் ஈசனை இழித்துப்பேசுவதால், சதி வேள்வித்தீயில் வீழ்ந்து மறைய, ஆங்காரமுற்ற ஈசனின் திருமுடியிலிருந்து வீரபத்திரர் தோன்றி , யாகத்தை அழிக்கிறார். சதியின் உடல் யாககுண்டத்தில் கிடந்ததாகவும், அதை ஈசன் தூக்கிச்சென்றபோது, அவற்றை திருமால் ஆழியால் சிதைக்க, அவை வீழ்ந்த இடங்களே சக்தி பீடங்களானதாகவும், இக்கதை தொடர்கிறது . பின் , பர்வதராஜன் , மைனாவதி தம்பதியினரின் தவத்தினால்  மனமிரங்கிய , ஆதிசக்தி மீண்டும் பார்வதியாக அவதரிக்கிறாள். கடுந்தவமிருந்து சிவனைக் கணவனாக அடையும் ஆதிசக்தி , பின் பல வடிவம் எடுத்து அசுரர்களை அழித்து, தேவர்களின் துயர் தீர்த்தும், பிள்ளையார், முருகன் ஆகியோரைப் படைத்தும், ஈசனின் தேவியாக வீற்றிருக்கிறாள்.

 

பகிரதனின் முன்னோர்கள் சாபம் பெற்றதால் சாம்பலாக இருந்தார்கள். அவர்களுக்கு முக்தி கிடைப்பதற்கு பார்வதியின்  சகோதரியான கங்கை, பூமியில் நதியாகப் பாய்ந்தால் மட்டுமே இயலும் என்பதை அறிந்த பகிரதன் கங்கையை நோக்கித் தவமிருந்தார். தேவலோகத்திலிருந்து பூமிக்கு வரும் பொழுது எழும் பிரவாகத்தினை கட்டுப்படுத்த சிவபெருமானால் மட்டுமே இயலும் என்று கங்கை கூறியதால், அதனால் பகிரதன் சிவபெருமானை நோக்கித் தவமியற்றியதால் கங்கையை சடாமுடியில் தாங்கிப் பூமி தாங்கும் அளவில் மட்டும் வெளிவிட்டதனால் சிவபெருமான் கங்காதரன் என்றும் பெயர்பெற்றார்

 

சிவபெருமானது ஐந்து குமாரர்கள்

 

பைரவர் 

கணபதி 

முருகன்

வீரபத்திரர்

ஐயனார் 

 

பாற்கடலைக் கடைந்தபோது, திருமால் மோகினி அவதாரம் எடுத்துச் சிவபெருமானுடன் கூடிப் பெற்ற மகனே ஐயனார் . இவர் ஐயப்பன் என்று அனைவராலும் அறியப்படுகிறார்.

 

கயிலையில் பார்வதி தேவி மானசீகமாக ஒரு குழந்தையைத் தோற்றுவித்தாகவும் ,அக்குழந்தை சிவபெருமானை அறியாததால்  அவருடன் சண்டையிட்டு தலையிழந்தாகவும் , பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்ற சிவன் அக்குழந்தைக்கு யானைமுகம் பொருத்தி மீள்வித்தாகவும் இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன


சூரன் என்ற அரக்கனை அழிக்க சிவபெருமான் தனது 6 முகங்களிலுள்ள நெற்றிக் கண்களிலிருந்து நெருப்பு பொறியை உருவாக்கியதாகவும், அந்த 6 நெருப்பு பொறிகளையும் வாயு பகவான் சரவணப்பொய்கை எனும் ஆற்றில் விட்டதாகவும். அந்த 6 நெருப்பு பொறிகள் 6 பிள்ளைகளாக மாறி, அவற்றைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்து வந்ததாகவும் இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன. 6 குழந்தைகளையும் அன்னையாகிய பார்வதி அரவணைத்த பொழுது 6 முகங்களைக் கொண்ட அக்குழந்தை பிற்காலத்தில் முருகன்  என்றாயிற்று,

 

தருகா வன முனிவர்களின் ஆணவத்தினை அடக்க  ஒரு நாள் சிவபெருமான் திகம்பர மூர்த்தியாகச் சென்றார். முனிவர்களின் மனைவிகள் சிவனின்  அழகைக் கண்டு மயங்க, கோபம் கொண்ட முனிவர்கள் தங்களுடைய யாகவலிமையால் புலியை உருவாக்கி அனுப்பினர், சிவபெருமான் அதன் தோலை உரித்து உடுத்திக் கொண்டார். அடுத்து யானையை அனுப்ப, அதன் தோலினை சிவன் போர்த்தார். கோடாரியை எரிந்தனர், அதனைத் தன்னுடைய ஆயுதங்களில் ஒன்றாக ஈசன் இணைத்துக் கொண்டார். பின்னர், அவர் தாருகா வன இருடிகளைத் தோற்கடித்ததாக , அக்கதை  காணப்படுகிறது .

 

மேலும் , ஒரு முறை தட்சனின் சாபத்திலிருந்து சந்திரனைக் காக்க , அவனைத் தலையில் சூடிக்கொண்டார் என்றும் , காசிபர் கத்ரு தம்பதிகளின் குழந்தைகளான பாம்புகள், மாற்றந்தாயான வினதாவின் மகனான கருடனிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள சிவபெருமானை சரணடைந்த போது, அவற்றை அவர் ஆபரணங்களாகத் தரித்துக் கொண்டார் என்றும் , பாற்கடலைநல்லாக்கடையும் பொழுது வாசுகி பாம்பு கக்கிய ஆலகால விடத்தினை உண்டு அதன் மூலம் நீலகண்டர் ஆனார் என்றும் இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன.

 

சைவ சமயத்தின் முதன்மை நூலான சைவ சித்தாந்தம் , சிவனை சிவம் என்றும், சிவப்பரம்பொருள் என்றும்சிவன் 36 தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து , ஆன்மாக்களின் ஆணவம்,கன்மம்,மாயை ஆகிய 3 மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார் என்றும் , 8 குணங்களையும் சிவன் கொண்டுள்ளார் என்றும் , எல்லா இடத்திலும் நிறைந்தவர் , அனைத்தையும் அறிபவர்அனைத்திலும் வல்லவர் , தூயவர் , அழிவில்லாத இன்பம் உடையவர், பிறர்க்கு  ஆட்படாதவர் என்றெல்லாம் சிவனைப்பற்றி கூறுகிறது .

 

சைவசித்தாந்தம் கூறும் சிவனின் 8 குணங்கள் ,

 

தன்வயத்தனாதல்

தூய உடம்பினனாதல்

இயற்கையுணர்வினனாதல்

முற்றுமுணர்தல்

இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவர்

பேரருளுடைமை

வரம்பிலாற்றலுடைமை

வரம்பிலின்பமுடைமை 

 

சிவபெருமான் தனது 64  மூர்த்தங்களில் ஒன்றான நடராஜ உருவத்தில் அவர் ஐந்தொழில் ஆற்றுவது, குறியீட்டு ரீதியில் பின்வருமாறு விளக்கப்படுவதுண்டு,

 

படைத்தல் - ஒரு வலக்கையிலுள்ள உடுக்கை

அருளல்  - இன்னொரு வலக்கையின் உட்புறம்

அழித்தல் - ஒரு இடக்கையிலுள்ள நெருப்பு  

மறைத்தல் - இன்னொரு இடக்கை aa

காத்தல் - தூக்கிய , ஆணவத்தை மிதித்தாடும் பாதம்

 

சிவபெருமான்  அருவம் , உருவம், அருவுருவம்  என மூன்று வடிவங்களில் உள்ளார். அருவத்திருமேனியில் சத்தர் என்றும், அருவுருவத்திருமேனியில் பரம்பொருள் என்றும், உருவத்திருமேனியில் பிரவிருத்தர் என்றும் அழைக்கப்படுகிறது. அருவுருவமாக இலிங்கமும், உருவமாக மகேசுவரமூர்த்தங்களும், சிவஉருவத்திருமேனிகளும் வழிபடப்படுகின்றன.

 

தடத்தநிலையில் 64 சிவ வடிவங்கள் உள்ளன. அவற்றில் 25 மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

 

64 சிவ வடிவங்கள்

 

இலிங்க மூர்த்தி

இலிங்கோத்பவ மூர்த்தி

முகலிங்க மூர்த்தி

சதாசிவ மூர்த்தி

மகா சதாசிவ மூர்த்தி

உமாமகேஸ்வர மூர்த்தி

சுகாசன மூர்த்தி

உமேச மூர்த்தி

சோமாஸ்கந்த மூர்த்தி

சந்திரசேகர மூர்த்தி

இடபாரூட மூர்த்தி

இடபாந்திக மூர்த்தி

புஜங்கலளித மூர்த்தி

புஜங்கத்ராச மூர்த்தி

சந்த்யான்ருத்த மூர்த்தி

சதாநிருத்த மூர்த்தி

சண்டதாண்டவ மூர்த்தி

கங்காதர மூர்த்தி

கங்காவிசர்ஜன மூர்த்தி

திரிபுராந்தக மூர்த்தி

கல்யாணசுந்தர மூர்த்தி

அர்த்தநாரீஸ்வர மூர்த்தி

கஜயுக்த மூர்த்தி

ஜ்வாரபக்ன மூர்த்தி

சார்த்தூலஹர மூர்த்தி

பாசுபத மூர்த்தி

கங்காள மூர்த்தி

கேசவார்த்த மூர்த்தி

பிச்சாடன மூர்த்தி

சரப மூர்த்தி

சடேச அனுக்ரஹ மூர்த்தி

தட்சிணாமூர்த்தி

யோக தட்சிணாமூர்த்தி

வீணா தட்சிணாமூர்த்தி

காலந்தக மூர்த்தி

காமதகன மூர்த்தி

இலகுளேஸ்வர மூர்த்தி

பைரவ மூர்த்தி

ஆபத்தோத்தரண மூர்த்தி

வடுக மூர்த்தி

சேத்திரபால மூர்த்தி

வீரபத்ர மூர்த்தி

அகோர மூர்த்தி

தட்சயஞ்யஷத மூர்த்தி

கிராத மூர்த்தி

குரு மூர்த்தி

அசுவாருட மூர்த்தி

கஜாந்திக மூர்த்தி

சலந்தரவத மூர்த்தி

ஏகபாதத்ரி மூர்த்தி

திரிபாதத்ரி மூர்த்தி

ஏகபாத மூர்த்தி

கௌரிவரப்ரத மூர்த்தி

சக்கரதான மூர்த்தி

கௌரிலீலாசமன்வித மூர்த்தி

விசாபகரண மூர்த்தி

கருடன் அருகிருந்த மூர்த்தி

பிரம்ம சிரச்சேத மூர்த்தி

கூர்ம சம்ஹார மூர்த்தி

மச்ச சம்ஹார மூர்த்தி

வராக சம்ஹார மூர்த்தி

பிரார்த்தனா மூர்த்தி

இரத்த பிட்சா பிரதான மூர்த்தி

சிஷ்ய பாவ மூர்த்தி

 

25 மகேசுவர மூர்த்தங்கள்

 

சோமாஸ்கந்தர் நடராஜர் ரிஷபாரூடர் கல்யாணசுந்தரர் சந்திரசேகரர் பிட்சாடனர் காமசம்ஹாரர் கால சம்ஹாரர் சலந்தராகரர் திரிபுராந்தகர் கஜசம்ஹாரர் வீரபத்திரர் தட்சிணாமூர்த்தி கிராதகர் கங்காளர் சக்ரதானர் கஜமுக அனுக்கிரக மூர்த்தி சண்டேச அனுக்கிரகர் ஏகபாதமூர்த்தி லிங்கோத்பவர் சுகாசனர் உமா மகேஸ்வரர் அரியர்த்த மூர்த்தி அர்த்தநாரீஸ்வரர் நீலகண்டர்

சிவனுக்கென சைவர்கள் 8 வகையான விரதங்களை நோர்ந்து வழிபாடு செய்கின்றனர். இவ்விரதங்கள் மூலம் சிவனின் பூரண அருளினை பெற இயலும் என்று சைவர்கள் நம்புகின்றார்கள்.


சோம வார விரதம் - திங்கள்கிழமைகளில் உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பெளர்ணமியில் திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் கல்யாண விரதம் - பங்குனி உத்திர தினத்தில் பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் அஷ்டமி விரதம் - வைகாசி மாத பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் கேதாரகௌரி விரதம் - ஐப்பசி அமாவாசையான தீபாவளி தினத்தில்


நன்றி

Post a Comment

0 Comments