வரலாறு என்றால் என்ன ?

வரலாறு என்பது பற்றி பல்வேறு அறிஞர்களும் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றனர். இருப்பினும், வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு என்று பொதுவாக வரைவிலக்கணப்படுத்தலாம்.
வரலாறு என்பது கிரேக்க நாட்டில் தோற்றம் பெற்ற துறையாகும்.
வரலாற்றின் தந்தை - கரடோரஸ்.
வரலாறு பற்றி அறிஞர்களின் கருத்து :
கிரிட் கேட்ஸ் - மனிதனின் கடந்த காலத்தைப் பற்றி கற்பது.
அரிஸ்டோட்டில் - மறக்க முடியாத நிகழ்வுகளின் தொகுப்பு.
கெகல் - வெற்றி பெற்ற மனிதனின் குறிப்புகள்.
C.H. கார் - கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே இடம்பெறும் முடிவு பெறாத உரையாடல்.\
வரலாற்றை கற்பதன் பயன்கள் :
நாம் வாழும் சமூகம் மற்றும் உலகம் பற்றிய தெளிவான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
கடந்த கால மக்களின் வாழ்க்கை முறையினை அறிந்து கொள்ளலாம்.
எதிர்கால தலைவர்களுக்கு முன்மாதிரியாக அமையும்.
கடந்த கால படிப்பினைகளைக் கொண்டு எதிர்காலத்தை திருத்தி அமைக்கலாம்.
தர்க்க ரீதியாக சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள முடியும்.
தேசிய தனித்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
ஏனைய கலாச்சாரத்தை மதிக்கும் தன்மை ஏற்படும்.
நூல்களை வாசிக்கும் பழக்கம் இயல்பாகவே அதிகரிக்கும்.
சுற்றாடலை விளங்கிக் கொள்ளும் தன்மை உருவாகும்.
நன்றி
0 Comments