வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் - VARALARRAIK KARPATARKANA MULATHARAṄKAḶ GRADE - 10 UNIT - 01

 

வரலாற்றைக் கற்பதற்கான 

மூலாதாரங்கள்


வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் - VARALARRAIK KARPATARKANA MULATHARAṄKAḶ GRADE - 10 UNIT - 01

மூலாதாரங்கள் 

மூலாதாரங்கள் என்பது, முற்கால மனிதர்களின் செயற்பாடுகளை (வரலாற்றை) அறிய உதவும் எழுத்தாவணங்களும், ஆக்கங்களும் ஆகும். மூலாதாரங்களைக் கொண்டே ஒரு நாட்டின் வரலாறு கட்டியெழுப்பப்படுகிறது. 

மூலாதாரங்கள் 02 வகைப்படும். 
இலக்கிய மூலாதாரங்கள் 
தொல்பொருள் மூலாதாரங்கள்


இலக்கிய மூலாதாரங்கள் 

இலக்கிய மூலாதாரங்கள் என்பது, இறந்த காலத்தில் வாழ்ந்த மனிதன் பல்வேறு காலகட்டங்களிலும் எழுதி வைத்த நூல்களும், அறிக்கைகளும் ஆகும். 

இது 02 வகைப்படும். 

உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் 
வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள் 


உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் 

உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் என்பது, இலங்கையர்கள் காலத்திற்கு காலம் எழுதி வைத்த கவிதைகளும், உரைநடைகளும் ஆகும். 


உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் 

மகாசேனனின் ஆட்சிக்கால முடிவு வரை :
தீப வம்சம் (கி.பி. 4)
மகாவம்சம் (கி.பி. 5/ 6)

இராசரட்டை கால வரலாறு :
போதி வம்சம் - உபதீசதேரர்
தூப வம்சம் 
தாது வம்சம் 
பூஜாவலிய - புத்தபுத்திர தேரர்
சூளவம்சம் 
சத்தர்ம லங்கார 

கம்பளை - கோட்டை :
நிகாய சங்கிரகய - தேவரக்சிதர்
ராஜாவலிய 

சமய நோக்கம் :
இராசரட்டை கால வரலாறு கூறும் நூல்கள் 
கம்பளை - கோட்டை கால வரலாறு கூறும் நூல்கள் 

கோட்டை - கண்டி :
தூது காவியம் 
புகழ் காவியம் 
போர்க் காவியம் 

சமந்த பாசதிக - புத்தகோச தேரர்


தீப வம்சம் - கைபர் பண்டிதர் 

இலங்கையில் எழுதப்பட்ட முதல் பாளின் நூலாகும். 

உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்களுள் மிகவும் பழமையான நூல்.
 
இது கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. 

கைபர் பண்டிதரால் எழுதப்பட்டது. 

22 அத்தியாயங்களைக் கொண்டது. 

புத்தரின் இலங்கை வருகை முதல் மகாசேனன் மன்னன் வரையுள்ள வரலாற்றை கூறுகிறது.

மகாவம்சத்தை விட இது சிறிய நூலாக இருப்பினும் இந்நூலில் குறிப்பிடும் சில விடயங்கள் மகாவம்சத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பது இந் நூலின் சிறப்பாகும்.

மகாவம்சமானது துட்டகைமுனுவின் வரலாற்றை மிகைப்படுத்தி கூறுகிறது. ஆனால், தீபவம்சம் அவ்வாறு எந்த ஒரு மன்னனையும் மிகைப்படுத்தி கூறவில்லை என்பது இந்நூலின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துகிறது. 

இந்நாட்டின் அரசியல் மற்றும் பௌத்த சமயம் தொடர்பான தகவல்கள் கூறப்படினும் அவை சுருக்கமாகவே குறிப்பிடப்பட்டுள்ளமை இந் நூலின் குறைபாடாகும். 

மேலும், மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடையங்கள் பல இதில் கூறப்படாமையும் இந்நூலின் குறைபாடாகும். 

இந்நூலின் குறைபாடுகளே மகாவம்சம் உருவாக காரணம். 


மகாவம்சம் - மகாநாம தேரர் 

புத்தரின் இலங்கை வருகை முதல் மகாசேனன் மன்னன் வரையுள்ள வரலாற்றை கூறுகிறது.

ஆசிரியர் - மகாநாம தேரர் (திக்சந்த செனவியா பிரிவெனாவில் வசித்த மகாவிகாரை - தேரவாத பிக்கு)

எழுதப்பட்ட ஆண்டு - கி.பி. 5 / 6 ஆம் நூற்றாண்டு 

மொழி - பாளி 

விளக்க உரை - மகாவம்ச டீகாவ / வம்சத்துப்பகாசினி 

மூலநூல் - சிகல அட்டகதா,  உத்தர விகார அட்டகதா, வினய அட்டகதா 

37 அத்தியாயங்களைக் கொண்டது.


சூளவம்சம் - தர்ம கீர்த்தி தேரர் 

மொழி - பாளி 

அத்தியாயம் - 42 

காவிய நாயகன் - 1 ஆம் பராக்கிரம பாகு 

மகாசேனன் மன்னன் முதல் 1 ஆம் பராக்கிரமபாகு வரையான வரலாற்றை கூறுகிறது.


தூது காவியம் 

மயூர சந்தேசய 
திசர சந்தேசய 
செலலிகினி  சந்தேசய 


போர்க்கவியம் 

சீதாவாக்க சட்டன 
இங்கிலிசு சட்டன 
கொன்ஸ்தந்தினு சட்டன 


புகழ் காவியம் 

பெரகும்பா சிரித்த 


வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள்

வெளிநாட்டு இலக்கிய மூலதாரங்கள் என்பது, இலங்கையர் அல்லாத, இலங்கை பற்றி அக்கறை செலுத்திய வெளிநாட்டவர்களால் எழுதப்பட்ட நூல்களும், இலங்கை பற்றிய தகவல்களை கொண்ட நூல்களும் ஆகும்.


வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள் 

இலங்கைக்கு வந்து நேரடி அனுபவங்களை பெற்று எழுதிய நூல்கள் : 

சீன பாகியன் தேரரின் தேச சஞ்சார அறிக்கை 
அரபு இபின் பர்தாவின் தேச சஞ்சார அறிக்கை 
போர்த்துக்கேய  ரிபைரோவின் இலங்கை பற்றிய நூல் 
ஒல்லாந்த பிலிப்ஸ் பல்டியஸின் இலங்கை பற்றிய நூல் 
பிரித்தானிய ரொபட் நொக்ஸின் அன்றைய இலங்கை 

இலங்கைக்கு வருகை தராது இலங்கைக்கு வருகை தந்தவர்களிடம் கேட்டறிந்து எழுதிய நூல்கள் : 

கிரேக்க மூலாதாரங்கள் - அரிஸ்டோட்டிலின் டிமுண்டோ, மெகஸ்தனிஸின் இண்டிகா, ஓனெசி கிரிட்டசின் அறிக்கை 

உரோம மூலாதாரங்கள் - பிளினியின் நெச்சுரலிஸ் ஹிஸ்டோரியா , தொலமியின் பூகோள சாஸ்திரப் பிரவேசம், தொலமியின் இலங்கை படம் 

சீன மூலாதாரங்கள் - கியூங்சாங் பிக்குவின் தேச சஞ்சார அறிக்கை 

போர்த்துக்கேய மூலதாரங்கள் - அருட்தந்தை பர்னாவோ டிகுவேரோஸ் அவர்களின் இலங்கை பற்றிய அறிக்கை 

இலங்கை பற்றிய தகவல்கள் அடங்கிய இந்திய தமிழ் நூல்கள் : 

மணிமேகலை 
சிலப்பதிகாரம் 
பத்துப்பாட்டு 


தொல்பொருள் மூலாதாரங்கள்

தொல்பொருள் மூலதாரம் என்பது, பண்டைய மக்களால் உருவாக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு, தற்போது அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்டவைகளாகும். 

தொல்பொருள் மூலாதாரங்கள் : 

சாசனங்கள் (எழுத்தாவணங்கள்)
நாணயங்கள் 
சிதைவுகள் 
சித்திரங்கள் 
சிற்பங்கள் 
சிலைகள் 
எலும்புக்கூடுகள் 
பாத்திரங்கள் 
களிமண் பொருட்கள் 


சாசனங்கள் 

சாசனங்கள் என்பது கருங்கல், களிமண் தட்டு, சுவர், செப்பு தகடு பொன் தகடு, மரப்பலகை என்பவற்றில் எழுதி வைக்கப்பட்டுள்ளனவாகும். 

சாசனங்கள் : 

கல்வெட்டு - நிஸ்ஸங்கமல்லனின் கல்பொத்த கல்வெட்டு 

சுவர் - சிகிரியா கிறுக்கல் கவிதைகள் 

செப்பு தகடு -  1 ஆம் விஜயபாகுவின் பனாகடுவ செப்பு சாசனம் 

பொன் தகடு - வசபனின் வல்லிபுர பொற்சாசனம் 

மரப்பலகை - எம்பக்கே தேவாலய மரத்ததூண்களில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் 

களிமண் பொருட்கள் - செங்கல், ஓடு என்பவற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள் பாத்திரங்கள் - மட்பாண்டம் மற்றும் பாத்திரங்களில் எழுதப்பட்ட எழுத்துக்கள்


கல்வெட்டுகள் 

கருங்கல்லில் எழுதி வைக்கப்பட்டுள்ள ஆவணம் கல்வெட்டு எனப்படும். 

சான்று :

நிஸ்ஸங்கமல்லனின் கல்பொத்த கல்வெட்டு 
(கலிங்க வம்சத்தின் சிறப்புகள்)

வெஸ்ஸகிரி கல்வெட்டு 
(நீர்விநியோகம், தானியங்கள்) 

தோணிகல கல்வெட்டு 
(வணிக சங்கம், பயிற்சிசெய்கையின் 3 போகங்கள்)

கல்வெட்டுகளின் வகைகள் :

குகைக்கல்வெட்டு - கற்குகைகளின் பீலிகளின் அருகில் எழுதப்பட்டவை. பாறைக் கல்வெட்டு - கற்பாறைகளின் மேல் எழுதப்பட்டுள்ளவை.
தூண் கல்வெட்டு - செப்பனிடப்பட்ட கருங்கல் தூண்களில் எழுதப்பட்டவை. சுவர்க் கல்வெட்டு - செப்பனிடப்பட்ட கற்பலகையில் எழுதப்பட்டவை.
இருக்கைக் கல்வெட்டு - மலர் ஆசனங்கள் போன்ற அமைப்பில் எழுதப்பட்டவை. 

கி.மு. 2 ஆம் நூற்றாண்டு - கண்டி இராச்சிய காலம் வரை இலங்கையில் கல்வெட்டுக்கள் தொடர்ந்தும் எழுதப்பட்டுள்ளன. 

இலக்கிய மூலாதாரங்களில் கூறப்படாத எத்தனையோ விடயங்களை நாம் கல்வெட்டுக்களின் மூலம் அறியலாம் என்பது இதன் சிறப்பாகும்.


நாணயங்கள் 

அனுராதபுர காலம் முதல் இலங்கையில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ககபண / புராண / தரண (இலங்கையில் கிடைத்த மிகவும் பழமைய நாணயம்) 
ககபணு 
யானை மற்றும் சுபஸ்திக்கா உருவம் பதித்த நாணயம் 
இலட்சுமி உருவம் பதித்த நாணயம் அக (தங்க நாணயம்) 
தம்பமஸ்ஸ (பொலன்னறுவைக்கால செப்பு நாணயம்) 
உரோம, சீன, இந்திய நாணயங்கள் 

இலங்கைக்குரிய நாணயங்கள், அச்சுக்களை பயன்படுத்தி உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்பட்டிருப்பது என்பது அகழ்வுகளில் தெரிய வருகிறது.

நாணயங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், உலோகப் பாவனை என்பவற்றை அறியலாம். 


சிதைவுகள் 

பழைய கட்டிடங்கள், விகாரைகள், கற்றூண்கள், குளங்கள், பொய்கைகள் என்பவற்றின் இடிபாடுகள் சிதைவுகளாகும். 

சிதைவுகள் மூலம் புராதன மக்களின் கலையாற்றல், தொழில்நுட்ப அறிவு, கட்டிடக்கலை, சுற்றாடல் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம் என்பவற்றை அறியலாம்.

சிதைவுகள் :

சிகிரியா கோட்டை பராக்கிரமபாகுவின் மாளிகை 
சித்திரங்கள், சிற்பங்கள், சிலைகள் 

இவை இலங்கையின் கலாச்சார வளர்ச்சியின் வரலாற்றை காட்டும் ஆதாரங்களாகும். 

இவைகள் மூலம் எமது முன்னோர்களின் ஆடை அணிகள், கலையாற்றல்கள், ஆபரணங்கள், சமய நம்பிக்கைகள் என்பவற்றை அறியலாம்.


இலக்கிய மூலாதாரங்களின் நன்மைகள்

ஒரு நாட்டின் வெளிநாட்டு உறவு பற்றி அறிந்து கொள்ள முடியும். 
வரலாற்றுக் காலத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் பலரும் பல்வேறுபட்ட தொடர்புகளை வெளிநாடுகளுடன் ஏற்படுத்தி உள்ளனர். இத்தகைய வெளிநாட்டு உறவுகள் பற்றி அறிந்து கொள்ள இலக்கிய மூலாதாரங்கள் பெரிதும் உதவுகின்றன. உதாரணம் : சிலப்பதிகாரம், இந்தியாவில் சேரன் மன்னன் மேற்கொண்ட பத்தினி தெய்வ வழிபாட்டிற்கு கஜபாகு மன்னன் சென்றதாக கூறுகிறது. 

ஒரு நாட்டின் வரலாற்றினை விரிவாகவும், தொடர்ச்சியாகவும் அறிந்து கொண்டு வரலாற்று ஒழுங்கு முறையை பேண முடியும்.
நாட்டின் வரலாற்றினை விரிவாகவும், தொடர்ச்சியாகவும் அறிந்து கொண்டு வரலாற்று ஒழுங்கு முறையை பேணுவதற்கு இலக்கிய மூலாதாரங்கள் துணை புரிகின்றது. காலத்தின் கண்ணாடி என்ற வகையில் குறித்த கால விடயங்களை தெளிவாகவும், விரிவாகவும் அறிந்து கொள்ள முடியும். 
மகா வம்சமானது இலங்கையின் வரலாற்றை தொடர்ச்சியாக நூலாக காணப்படுகிறது.

வெவ்வேறு காலகட்டங்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

ஒரு நூலில் கூறப்பட்ட தகவல்களை இன்னொரு நூலின் மூலம் உறுதி செய்ய முடியும்.

தர்க்கரீதியான சிந்தனைக்கு வழிவகுக்கும்.


தொல்பொருள்  மூலாதாரங்களின் நன்மைகள் 

தொல்பொருள் மூலாதாரங்கள் வரலாற்று நிகழ்வின் சமகாலத்தவையாக விளங்குகின்றமை. 

இலக்கிய மூலாதாரங்களின் குறைபாடுகளை திருத்திக் கொள்ள முடியும்.

பண்டைய மக்களின் திறமைகள், கலாச்சாரம், ஆற்றல்கள், தொழில்நுட்பம் என்பவற்றை அறியலாம். 

புராதன கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ளலாம்.
வெளிநாட்டு தொடர்புகள் பற்றி அறியலாம்.


தொல்பொருள் மூலாதாரங்களை பாதுகாத்தல் 

தொல்பொருள் மீது வரைதல், எழுதுதல் என்பவற்றை தவிர்த்தல்.

தொல்பொருட்கள் மீது வரைதல், எழுதல் என்பவற்றை தண்டனைக்குரிய குற்றம் என அனைவருக்கும் தெரியப்படுத்தல்.

தொல்பொருள்களை எமது முன்னோர்கள் பாதுகாத்தமையை புரிய வைத்தல்.

தொல்பொருள்கள் இருக்கும் இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லல். 

தொல்பொருள்கள் எமது நாட்டின் வரலாற்றை பிரதிபலிக்கின்ற தன்மையை உணர வைத்தல்.

தொல்பொருள் மூலதாரங்கள் அழிவதற்கான சந்தர்ப்பங்கள் : 
நாடு வேகமாக அபிவிருத்தி அடைதல்.
குடியேற்றங்களின் பரம்பல்.
சனத்தொகை அதிகரிப்பு.
கட்டிடங்கள் அமைக்கப்படுதல்.
விவசாய நடவடிக்கைகள்.
பெருவீதி அமைப்பு.


Miss. Sooriyan Niveththa, BA (Hons) (2021/2022)
Eastern University, Sri Lanka.

நன்றி

Post a Comment

0 Comments