ஆங்கில வாக்கிய வகுப்பு - 01 - ENGLISH SENTENCE CLASS - 01


ஆங்கில வாக்கிய வகுப்பு - 01


ஆங்கில வாக்கிய வகுப்பு - 01 - ENGLISH SENTENCE CLASS - 01


Vyasa seeks a scribe.

Vyasa 

இது ஒரு proper noun ஆகும்.  

Chennai is a big city. 
இதில், 
Chennai - Proper noun
City - Common noun 

Draupadi is the daughter of Drupada.

இங்கு,
Draupadi, Drupada - Proper noun 
daughter - Common noun 

இங்கு, 

daughter என்ற சொல் பொதுவான ஒரு மகளை குறிக்காது முன்பு குறிப்பிட்ட Draupadi ஐ குறிப்பதனால் the daughter என்று the பயன்படுத்தப்பட்டுள்ளது. 

Proper noun க்கு முன்னால் a, an (indefinite articles) பயன்படுத்தக்கூடாது. ஆனால், the (definite article) சில சமயங்களில் பயன்படுத்தப்படும்.

Common noun க்கு முன்னால் a, an, the எனும் 3 Articles உம் வரும். 


Seeks


இது ஒரு third person singular verb. 

Vyasa - third person 
1st person - (Singular) I ➡️ (Plural) We
2nd person - (Singular) You ➡️ (Plural) You
3rd person - (Singular) She, He, It ➡️ (Plural) They 

So,

Vyasa - third person singular proper noun.

They seek a scribe. 

இங்கு, 
They - third person plural subject pronoun. 

Seek - third person plural verb. 

Subject pronoun என்பது ஒரு வாக்கியத்தின் செயலைச் செய்யும் நபரை/ பொருளை குறிக்கும். 
I - 1st person - Singer 

He - 3rd person - Singer
She - 3rd person - Singer

It - 3rd person - Singer
You - 2nd person - Singer, Plural

We - 1st person - Plural 
They - 3rd person - Plural


a scribe 

இது ஒரு singular common noun. 

இங்கு, 
Vyasa ஒரு எழுத்தாளரை தேடுகிறார். ஆனால், அந்த எழுத்தாளர் யார் என்பதை குறிப்பிடவில்லை. அதனால், இங்கு a பயன்படுத்தப்பட்டுள்ளது. யார் என்று குறிப்பிட்டிருந்தால் இங்கு a பயன்படுத்தக்கூடாது.
Vyasa seeks Genesha.

Article ஒரு பெயர்ச் சொல்லின் general/ specific வகையை காட்ட பயன்படும். 

ஓர் ஆங்கிலச் சொல்லை தமிழில் உச்சரிக்கும் போது முதல் எழுத்தாக உயிரெழுத்து வந்தால் அந்தச் சொல்லுக்கு முன்னால் an வரும். மெய்யெழுத்து வந்தால் a வரும்.

General வகையை காட்டுவதற்கு a, an பயன்படுத்தப்படும். Specific வகையை காட்டுவதற்கு the பயன்படுத்தப்படும். 

இங்கு, 
Scribes என்று பன்மையில் வந்தாலும் a பயன்படுத்தக்கூடாது.
Vyasa seeks scribes.


Vyasa seeks a scribe. 

Vyasa - வியாசர் 
Seeks - தேடுகிறார் 
Scribe - ஒரு எழுத்தாளர் 

➡️ வியாசர் ஒரு எழுத்தாளரை தேடுகிறார். 


ஒரு வாக்கியத்தின் காலத்தை அறிய verb உதவுகிறது. 
இங்கு, 
Seeks ➡️ V2

V2 இல் ஒரே ஒரு காலம் மட்டும் இருப்பதால் எமக்கு சிக்கல் இல்லை.  

இங்கே 12 காலங்களை தருகிறேன் :
V1 
Simple present tense 
Simple future tense
V2
Simple present tense
V3
Past continuous tense
Past perfect continuous tense
Present continuous tense
Present perfect continuous tense
Future continuous tense
Future perfect continuous tense
V4
Simple past tense
V5
Past perfect tense
Present perfect tense
Future perfect tense

எனவே,

Simple present tense. 

Simple present tense. 

Singular subject + V2
He - கிறான், கிறார் 
She - கிறாள்
It - கிறது 
You - கிறாய்
I - கிறேன் 

Plural subject + V1
We - கிறோம் 
They - கிறார்கள்
You - கிறீர்கள் 

விதிவிலக்கு : You, I singular ஆக இருந்தாலும் கூட அதற்கு V2 பயன்படுத்தாமல் V1 பயன்படுத்த வேண்டும். 


They seek a scribe. 

இங்கு, 
Seek - V1

V1   2 காலங்களுக்கு வரும். 
Simple present tense 
Simple future tense

Simple future tense என்றால் V1 க்கு முன்னால்  will வந்திருக்க வேண்டும்.  இங்கு அப்படி இல்லை.  எனவே இது,
Simple present tense

நன்றி

Post a Comment

0 Comments