கல்விக்கான பரந்துபட்ட
வரைவிலக்கணங்கள்
காந்திஜி - மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே, உண்மையான கல்வி.
ஜோசப் அடிசன் - பளிங்கு கல் அழகிய சிற்பமாவது போல் கல்வியினால் ஆன்மா சிறப்படைகின்றது.
மூர் - நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும், நமக்குத் தெரிந்தவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
லிண்டன் பெய்ன்ஸ் ஜான்சன் - கல்வி என்பது ஒரு செலவு அல்ல. அது ஒரு முதலீடு என்று நாங்கள் நம்புகிறோம்.
ஜி. எம். ட்ரெவெலியன் - கல்வியானது படிக்கத்தெரிந்த, ஆனால் படிக்கத் தகுந்தவற்றை வேறுபடுத்திப் பார்க்க முடியாத ஒரு பரந்த மக்களை உருவாக்கியுள்ளது.
எடிஸன் - கல்வியில்லாத ஆன்மா பணி செய்யாத சலவைக் கல்.
மனித ஆளுமையின் சிக்கலான தன்மை
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வெவ்வேறு விதமான ஆளுமைகள் காணப்படுகின்றன. எனவே தத்தமது ஆளுமையை முக்கியத்துவப்படுத்தியே ஒவ்வொருவரும் கல்வி தொடர்பான பல்வேறு சிந்தனைகளை வெளியிடுவர்.
உதாரணம் - ஆன்மீக வாதிகள் : "தன்னை உணர்தலே கல்வி", ஒழுக்கவியலாளர்கள் "பண்பு விருத்திக்கு வழி செய்வதே கல்வி"
மனித சூழலின் சிக்கலான தன்மை
சூழல் என்பது இடத்திற்கு இடம், காலத்திற்குக் காலம் மாற்றமடையும் தன்மை கொண்டது. ஒரு இடத்திற்குப் பொருந்தும் விடயம் வேறொரு இடத்திற்குப் பொருந்தாது. ஆரம்ப காலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில விடயங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. "ஒரு மனிதன் சூழலிற்கேற்ப இசைவாக்கம் அடைவதற்கான செயன்முறையே கல்வி” என்பதன் மூலம் சூழலின் சிக்கலான தன்மைகள் புரியப்படுகின்றது.
உதாரணம் - ஆரம்ப காலச் சூழலில் ஒழுக்கங்கள் கல்வியாகப் போதிக்கப்பட்டன, தற்போதய சூழலில் தொழிலை மையமாகக் கொண்டு கல்வி கற்பிக்கப்படுகின்றது.
பல்வேறு விதமான வாழ்க்கைத் தத்துவங்கள்
தத்தமது வாழ்க்கை அனுபவத்தினை மையமாகக் கொண்டு தத்துவ ஞானிகள் பலரும் கல்விக்கு வெவ்வேறு விதங்களில் வரைவிலக்கணப்படுத்துகின்றனர்.
உதாரணம் - வேதாகமம் "அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு", திருக்குறள் "கற்றாங்கு ஒழுகுதலே கல்வி"
கல்விக் கோட்பாடுகளும் அவற்றின் பிரயோகங்களும்
அரசியல், சமூக சூழ்நிலைகள் காரணமாக காலத்திற்குக் காலம் மாறும் கல்விக் கோட்பாடுகள் யாவும் கல்வி தொடர்பான வரைவிலக்கணங்களை மாற்றியமைக்கலாம்.
உதாரணம் - "மனப்பாடம் செய்வித்தலே கல்வி", ஆசிரியர் மையக்கல்வி "தண்டனையே கல்விக்கு ஒரே வழி", "தேடிக்கற்றலே சிறப்பானது" மாணவர் மையக்கல்வி, தொழிநுட்பக்கல்வி
உதாரணம் - இருக்கு வேதம் "மனிதனை சுயமானவனாகவும், சுயநலமற்றவனாகவும் ஆக்க உதவுவதாகக் கல்வி அமைய வேண்டும்", ரூசோ எனும் இயற்கைவாதி "கல்வியானது தனியாளின் இயற்கைத் தன்மைக்கு இயைந்ததாக அமைய வேண்டும்"
விவேகானந்தர், பெஸ்டலோசி, மகாத்மா காந்தி, தொம்சன் போன்ற அறிஞர்கள் கல்வியில் தனியாள் நோக்கத்தினை ஆதரிக்கின்றனர்.
கல்வியில் தனியாள் நோக்கம் பற்றி விமர்சனமும் காணப்படுகின்றது.
உதாரணம் - "தனியாளை ஒரு போதும் சமூகத்தில் இருந்து பிரிக்க முடியாது" றேமன்ட் எனும் அறிஞரின் கருத்து.
கல்வியில் சமூக நோக்கம்
இன்றைய நிலையில் ஒரு தனியாள் தனித்தியங்க முடியாது. அவன் சமூகப்பிராணியாகவே காணப்படுகின்றான். எப்படியும் தன் தேவைகளைப் பூர்த்தியாக்க அவன் பிறரை நாடவேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட தனியாள் யதார்த்தமாக இருக்க முடியாது என்கிறார் றேமன்ட் எனும் அறிஞர். ஒரு கல்வியில் சமூக நோக்கமானது குறுகிய, பரந்த நோக்கம் என இரு வகையாாகக் காணப்படுகின்றது.
உதாரணம் - மன்னர் ஆட்சியில் காணப்பட்ட கல்வி முறை குறுகிய நோக்கமாகும் அதேவேளை இன்றைய நிலையில் கல்வி அனைவருக்குமானதே, கல்வி குடிமக்களுக்கானதே, கல்வி சமூக விளை திறனுக்கானதே போன்ற வாசகங்கள் கல்வியின் பரந்த நோக்கத்தினை தெளிவு படுத்துகின்றது.
கல்வியில் அறிவு நோக்கம்
ஆரம்ப கால கல்வி நோக்கங்களில் அறிவு நோக்கமானது மிகவும் பிரபல்லியம் அடைந்ததொன்றாகக் காணப்படுகின்றது. அதாவது கல்வியில் மனனம் செய்வது மாணவனின் அறிவை நிரப்பி நிலைநாட்டவல்லது எனப்பட்டது.
ஆனால் பேக்கன், கொமினியஸ் போன்ற அறிஞர்கள் "எல்லா வகையான அறிவும் எல்லோருக்கும் இருக்க வேண்டும்" எனக்குறிப்பிடுகின்றனர். "பரீட்சையில் மனனம் செய்யும் விடைகளைத்தவிர வேறுவகையில் எதிர்பார்க்கப்ட்ட மேலதிக கருத்துக்களைக் கொடுப்பதன் மூலமே ஒருவனுக்கு ஆளுமை விருத்தியடைகிறது" என்கிறார் ஹேபர்ட் எனும் அறிஞர். இவை கல்வியில் அறிவு நோக்கத்தினை விமர்சனத்துக்குள்ளாக்கியது.
பண்டையகால கல்வி மரபில் மிகவும் பிரபல்லியமடைந்த நோக்கங்களுள் ஒழுக்க நோக்கமும் ஒன்றாகும். இது இன்று வரை கல்வி நோக்கங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. தனிமனித ஆளுமையில் ஒழுக்கமானது தனக்கென ஒரு நிலையான இடத்தினைக் கொண்டுள்ளது. எனவே கல்வியானது மாணவர்களின் ஒழுக்கத்தினை விருத்தியாக்குவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஒருவனுக்கு எவ்வளவுதான் கல்வியறிவு இருந்தாலும் சீரான ஒழுக்கம் இல்லையேல் உலகம் அவனை உதறித் தள்ளிவிடும்.
உதாரணம் - "மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்"
ஆசிரியரின் இறுதி நோக்கம் மாணவரிடையே பிரிவின்மையையும், ஒழுக்கத்தினையும் கட்டியெழுப்புவதாகும். றேமன்ட் என்பவரின் கருத்து.
கல்வியில் சமய நோக்கம்
கல்வியில் தொழில் நோக்கம்
வெளி நாட்டவரின் ஆட்சியின் மூலம கிடைக்கப்பெற்றதே தொழில் எனும் எண்ணக்கருவாகும். இத்தொழிலைப் பெறுவதற்குக் கல்வி தேவைப்பட்டது. பின்னர் கற்றவருக்குத்தான் தொழில் என்றாகிவிட்டது. ஒரு தனி மனிதனை சமூக வினைதிறன் கொண்ட மனிதனாக மாற்றுவதற்கு கல்வியில் தொழில் நோக்கம் அவசியமானதே.
உதாரணம் - "உண்மையான கல்வி எதிர்காலக் வாழ்க்கைக்கு ஒரு காப்புறுதியாக அமைய வேண்டும்" என்பது மகாத்தமா காந்தியின் கருத்தாகும்.
கல்வியில் சர்வாதிகார நோக்கம்
சர்வாதிகாரிகள் பலர் ஆரம்ப காலங்களில் இருந்தனர். உ-ம் ஹிட்லர் இன்றும் அவ்வாறானவர்கள் அரசியல்வாதிகள் எனும் போர்வையில் காணப்படுகின்றனர். ஆரம்ப காலம் தொடக்கமே ஆட்சி மாற்றங்கள் வர வர கல்விக்கான நோக்கங்களும் மாறுபட்டு வருகின்றன.
உதாரணம் - மனனம் செய்யும் கல்வி, ஆசிரியர் மையக்கல்வி, மாணவர் மையக்கல்வி, தொழிநுட்பக் கல்வி, நாளை … ?
கல்வியில் தத்துவத்தின் செல்வாக்கு
மனித அனுபவத்தில் வரக்கூடிய அனைத்தையும் வழங்குவதற்கு தத்துவம் முயற்சிக்கின்றது. யதார்த்தத்தின் இயல்பு. உண்மைத் தன்மை என்பன தத்துவத்தினை வலுவூட்டுகின்றது. சமயப் பாரம்பரியங்கள் பலவும் பல்வேறு வகையான தத்துவங்களினை எமக்குப் போதிக்கின்றன. இவ்வாறான சமயங்கள் ஒவ்வொன்றும் பல்வேறுவகையான கல்வி, கற்றல் தொடர்பான தத்துவக் கருத்துக்களினை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளன.
தத்துவம் எனும் சொல் "ஞானத்தின் மீதான காதல்" எனப் பொருள்படும். அதாவது தத்துவங்கள் ஒவ்வொன்றும் மனிதனுக்கு தாம் வாழுகின்ற உலகம் தொடர்பான உண்மைகளைத் தெளியவைக்கின்றன. இந்த வகையில் கல்வியியல் தத்துவங்கள் என்பது அனைவராலும் பின்பற்றக்கூடிய ஒன்றாகக் காணப்படுகின்றது. புராதன காலத்தில் இருந்து இன்று வரை கல்வியில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு பல்வேறு வகையான தத்துவ ஞானிகளின் கோட்பாடுகளும், சிந்தனைகளுமே அடிப்படையாக அமைந்து காணப்பட்டன.
உதாரணம் - ரூசோவின் கல்வித் தத்துவங்கள்
பிளாட்டோவின் கல்வித் தத்துவங்கள்
ஜோன் டியூவியின் கல்வித் தத்துவங்கள்
"கல்வி என்பது அறிவால் மனத்தினை நிரப்புதல்"
சிறு குழந்தைகளின் மனம் அறியாமை நிறைந்தனவாகக் காணப்படுகின்றது. எனவே அவ் அறியாமையை அகற்றி முறையான ஞானத்தின் மூலம் மனத்தினை நிரப்ப வேண்டும். எனவே அறிவை நிரப்புபவர் மிகுந்த ஞானம் கொண்டவராகக் காணப்பட வேண்டும். ஆனால் அறிவினைத் திணிக்கக் கூடாது. அறிவினைக் கொடுப்பவர் வெறுமனே ஆசிரியர்கள் மட்டுமல்ல. மாணவர்கள் தமக்குப் பொருத்தமான, தகுதியான அறிவுகளை தமது வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.
"கல்வி என்பது வாழ்க்கைக்கான பொருத்தப்பாடு"
மனிதன் சூழலுடன் தன்னை இசைவாக்கிக் கொள்ளும் இயல்புடையவன். எனவே தாம் பெறுகின்ற கல்வியை அவன் சூழலோடு பொருத்திப் பார்ப்பதற்கு அவன் எத்தணிக்கின்றான். எனவே கல்வி முறைகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றபோது மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். கல்வி வேறு வாழ்க்கை வேறல்ல. கல்வியே வாழ்க்கை.
"கல்வி என்பது சுய செயற்பாடு"
கல்வி அனைவருக்கும் பொதுவானதாக வழங்கப்பட்டாலும் அதை ஒவ்வொரு தனியனும் பெற்றுக்கொள்ளும் விதம் வேறுபடலாம். எனவே நடத்தை மாற்றங்கள் கல்வி மூலம் தூண்டப்பட்டாலும் அவனவனின் சுய செயற்பாடுகள் மூலமே அறிவு விருத்தியடைகிறது.
விவேகாணந்தரின் கல்விச் சிந்தனைகள்
மனிதனுள் அடங்கியுள்ள தெய்வீகப் பூரணத்துவத்தினை வெளிக்கொண்டு வருவதே கல்வி என்கிறார். மனிதனைப் பாதுகாப்பதும் விடுதலை அளிப்பதுமே கல்வி என்கின்றார்.
கல்வி ஒருவனுக்கு சீரணமாகி வாழ்க்கையில் பயன்படுமாறு அமைய வேண்டும். ஒருவனுடைய மூளையில் பல்வேறு விதமான விடயங்களைத் திணிப்பதாக கல்வி அமையக் கூடாது. ஏனெனில் திணிக்கப்படும் விடயங்கள் சீரணமாகாது.
கல்வியானது வாழ்வில் ஒழுக்கத்தினைத் தர வேண்டும். ஒழுக்கம் தராத கல்வி வாழ்வில் பயனளியாது. மக்கள் மனோதிடம் பெற்று தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கு ஒழுக்கக்கல்வி அவசியமானது.
ஏழை மக்களின் உழைப்பினை மையமாகக் கொண்டு கல்வி கற்று முன்னுக்கு வந்த ஒருவன் பின்னர் ஏழை மக்களின் உயர்வுக்கு யாதொன்றும் செய்யாது இருப்பானாயின் அவன் துரோகி என்கிறார்.
மனித இனத்தின் சாதிப்பாகுபாட்டை தூய கல்வியால் நீக்க வேண்டும் எனவும் கற்றவனுக்கு சாதியில்லை எனவும் கூறுகின்றார்.
கல்வி புகட்டப்படும் மொழியாக தாய்மொழி இருக்க வேண்டும். தொழிற் கல்வியை மையமாகக் கொண்டு கல்வி திட்டமிடப்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார்.
எது எமக்கு பலவீனத்தினைக் கொடுக்கிறதோ அதனை எம் வாழ்விலிருந்து நீக்கிவிட்டு பலத்தைக் கொடுக்கும் காரியங்களை மட்டும் பிடித்துக் கொள்ள வேண்டும் எனவும் விரும்புகிறார்.
மகாத்மா காந்தியின் கல்வி தொடர்பான கருத்துக்கள்
20ம் நூற்றாண்டில் அறிவினை மட்டும் மையமாகக் கொண்ட கல்விச் சிந்தனைகள் மாற்றமடைந்து குழந்தையை மையமாகக் கொண்ட வாழ்கை மையக் கல்விமுறை எழுந்தது. வாழ்கை மையக் கல்விக்கு மிகவும் பெரும் பணியாற்றியவர் காந்தியாவார். வாழ்கையை நெறிப்படுத்தக் கூடியதான ஆதாரக் கூறுகளை கல்வி கொண்டிருத்தல் வேண்டும் என்பது இவருடைய கருத்து.
கல்வி என்பது அறிவை வளர்ப்பது, ஆற்றல்களை வளர்ப்பது, உணர்வுகளை பண்படுத்துவது மக்களை வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்வது, மனிதனின் நடத்தையை சமூகத்துக்கேற்ப மாற்றியமைப்பது எனக் குறிப்பிட்டிருந்தார். மனிதனுள் காணப்படும் ஆளுமைப் பண்புகளை படிப்படியாகவும், முழுமையாகவும் வெளிப்படுத்துவது கல்வி என்று கூறினார். (கல்வி மனிதனின் உரிமை என்பதும் இவரின் கருத்தாகும்).
ஆரம்பக் கல்வி பற்றி இவர் குறிப்பிடுகையில் (ஆதாரக்கல்வி)
எல்லாக் கல்விக்கும் முதலுணர்வு ஏற்படுத்தும் கல்வியாகும்.
இதன் மூலம் கல்வியின் உயர்ந்த படிகளை அடையலாம்.
"குழந்தைகள் பிற் காலப் பெரியார்கள்" என்பது ஆரம்பக் கல்வியின் நோக்கமாகும்.
1897 இல் தென்னாபிரிக்காவில் உள்ள (டால்ஸ் டாய்) பண்ணையில் இருந்தே காந்திக்கு இத் திட்டத்துக்கான கருத்துக்கள் உதித்தன. ரஷ்சிய நாட்டிலுள்ள டால்ஸ்டாய் எனும் தத்துவ ஞானியின் கருத்துக்கள் விவசாய அடிப்படையில் கல்வி, சமரச அடிப்படையில் கல்வி, உலக நெறியை வளர்க்கும் கல்வி என்பவற்றினை மையப்படுத்தியது. இவரின் இக்கருத்துக்களில் கவர்ந்த காந்தி அவற்றினை ஆரம்பக் கல்வியின் மூலம் மாணவர்களுக்கு வளர்த்தெடுக்க அதிகம் முக்கியத்துவம் கொடுத்தார்.
ஒரு ஆசிரியன் தன்னால் ஆற்றமுடியாத கருமத்தினை மாணவன் ஆற்றவேண்டும் என போதித்தல் கூடாது. ஆசிரியர் மாணவர் தொடர்பு அன்பாகக் காணப்பட வேண்டும். இத்தொடர்பு கல்விக்கு நிறைவு தரும் எனவும் குறிப்பிட்டார்.
கல்வியின் சிறப்பு ஒரு மாணவன் தன் ஆசிரியரிடத்திற்கொள்ளும் ஈடுபாட்டிலும், அவன் மீது வைத்திருக்கும் மதிப்பிலும் தங்கியுள்ளது என்றார். எனவே தான் இவருக்கு குருகுலக் கல்வி முறை மிகவும் கவர்ந்ததாகும்.
உதாரணம் - செயற்பாட்டு அனுபவங்களால் ஆன கல்வி
"வெறும் ஏட்டுக்கல்வி மட்டும் கல்வியாகாது" எனவும் அதனோடு தொழிற் பயிற்சியும் கொடுக்க வேண்டும் எனவும் கூறிய இவர் உடல் உழைப்பை கல்வியோடு இணைத்தார்.
உதாரணம் - 1937 யூலை 31 இல் ஹர்ஜன் பத்திரிகையில் அவர் குறிப்பிட்டதன் படி கல்வி பயனுள்ள உற்பத்தித் தொழிலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதிலிருந்து புலனாகிறது.
உடல், உளம், ஆன்மா என்பனவற்றில் சமமான உலகியல் அறிவினைப் பெறுதல், உடலினைப் பேணுதல் போன்ற வளர்ச்சிக்குக் கல்வி பொருத்தமுடையதாய் இருத்தல் வேண்டும் என்கிறார். ஜோன் ரஸ்கின் "கடையனுக்குக் கடைத்தேற்றம்"என்கின்ற நூலானது காந்திக்கு சர்வோதயம் தொடர்பான கருத்தினை ஏற்படுத்தியது.
இவரின் சர்வோதய இயக்கம் பின்வரும் துறைகளில் தனது குறிக்கோளினைக் கொண்டது.
ஆதாரக்கல்வி
முதியோர் கல்வி
கைத்தொழில் வளர்ச்சி
தாய் மொழி வளர்ச்சி
மாணவனின் முன்னேற்றம்
உழவர் நிலை உயர்தல்
தாழ்த்தப்பட்டமக்கள் நிலை உயர்தல்
பூர்வீகக் குடிமக்கள் நிலை உயர்தல்
சன்மார்க்க நெறி
உடற் சுகாதாரம்
மாதர் முன்னேற்றம்
கிராமச் சுகாதாரம்.
உடல் உழைப்பு மூலம் பொருளைச் சம்பாதித்து உயர்வடைய எல்லோருக்கும் சந்தர்ப்பம் உண்டு ஆகையால் "ஒரு வழக்கறிஞருக்குக் நாவிதனுக்கும் கொடுக்க வேண்டும்" என்கிறார். கொடுக்கும் அதே மதிப்பினை ஒரு
இவருடைய தத்துவக் கருத்துக்கள்
இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும். காந்தியின் கலைத் திட்டத்தின் படி கல்வி மொழி தாய்மொழி. அன்னிய மொழியில் கல்வி கற்பிக்கும் போது தாய் மொழி. தேசப்பற்று என்பன குறைவடையும்.
செய்து கற்றல் மூலம் மாணவனின் கற்றலின் நாட்டமும், விடயமும் அதிகரிக்கின்றது.
பிறர் உனக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறாயோ அதையே நீ பிறருக்கும் செய்.
பல்கலைக்கழகங்கள் பல்வேறு வகையான கலைகளையும் ஒருங்கிணைக்கும் நிலையமாகத் திகழ்ந்து சமுதாய நலனுக்காக உழைக்க வேண்டும்.
ரூசோவின் கல்வி தொடர்பான கருத்துக்கள்
இயற்கையே அனைத்தும் என்பது இயற்கை வாதத்தின் அடிப்படையாகும். எந்தவகையான நியமமும் இயற்கைக்கு உட்பட்டதே. இங்கு மனித வாழ்க்கை என்பது இயற்கைத் திட்டத்தின் ஒரு அம்சமாகவே கருதப்படுகின்றது.
இயற்கை வாதத்தின்படி கல்வியானது குழந்தையின் இயற்கையான இயல்புகளுக்கு ஏற்பவே அமைய வேண்டும். இயற்கைக்கு அப்பால் அமையக் கூடாது. செயற்கையாக வழங்கப்படும் கல்விக்கு இயற்கை வாதம் எதிர்மறையாகத் தொழிற்படுகின்றது. ஒரு குழந்தையின் உள்ளே காணப்படும் எல்லா வகையான இயற்கையான இயல்புகளையும் இயற்கை வாதம் வெளிக்கொண்டு வரவேண்டும் எனக் கூறுகின்றது.
ரூசோ இயற்கை வாதத்தின் முன்னோடியாகக் காணப்படுகின்றார். இவருடைய கருத்தின்படி ஒழுக்கக் கல்வியை போதனையாக மட்டுமன்றி அனுபவமாக்கவும் வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார். ஒழுக்கக் கல்வி இயற்கையான செயற்பாடுகளாக இருக்குமானால் அதுவே மாணவர்களுக்கு இலகுவில் ஒழுக்க அனுபவமாக்கப்படும் என்கிறார்.
இயற்கை தான் குழந்தையின் முதல் ஆசிரியர். இயற்கை தான் குழந்தைக்கு முதலில் கற்றலை ஏற்படுத்துகின்றது. இயற்கைக்குப் பிறகுதான் தாய், தந்தை, குரு எல்லாம். எனவே இவ்வாதத்தின் படி ஒவ்வொரு குழந்தையும் இயற்கையின் படி வளர அனுமதிக்கப்பட வேண்டும் என இயற்கை வாதம் ஆசிரியர்களுக்கு வலியுறுத்துகின்றது.
எனவே இவ்வாதத்தின் படி பிள்ளைக்கு தேவைக்கு அதிகமாகவோ அல்லது முரணாகவோ மேலதிக கல்வியைத் திணிக்கக் கூடாது என இயற்கைவாதியான ரூசோ குறிப்பிடுகின்றார். அத்தோடு பிள்ளைகள் இயற்கையோடு இணைந்து அதனை அவதானித்துக் கற்க வேண்டும் எனவும், குழந்தைகளின் தேவைகளுக்கேற்பவே கற்றல் இடம்பெற வேண்டும் எனவும் கூறுகின்றது. "குழந்தை பிறப்பின்போதே மாணவனாகி விடுகின்றது இயற்கையால்" என்பது ரூசோவின் கருத்தாகும்.
ரூசோவின் நவீன கல்வி
குழந்தையை சமூகத்திற்காகப் பலியிடக் கூடாது.
தனியாளின் விருப்பங்கள் பிரதான அம்சத்தினை விட மேலானதாகக் கருதப்பட வேண்டும்.
கல்வி பிள்ளையின் தேவைக்கேற்ப இயைபாக்கம் பெறவேண்டும்
சகல கல்விச் செயன்முறைக்கும் பிள்ளையே மையம்.
கல்வி நுட்பங்கள் பிள்ளையின் இயற்கைக்கும், வளர்ச்சிக்குமேற்ப தீர்மானிக்கப்பட வேண்டும்.
கல்வி என்பது இயற்கை விதியைக் கண்டறிதல்.
ஒழுக்கத்தினைப் போதிப்பதனை விட அதை அனுபவமாக்க வேண்டும்.
நூல்களில் அதிகம் தங்கியிருப்பது அறிவு விருத்திக்குத் தடையாகும்.
மனிதனை எல்லாவகையான செயற்கையிலிருந்தும் இயற்கைக்குத் திருப்ப வேண்டும்.
ஒவ்வொரு பிள்ளையும் தனது உள்ளத்தை விருத்தியாக்க அனுமதிக்கப்படல் வேண்டும்.
ஆசிரியர் தொடர்பாக ரூசோ முன்வைக்கும் கருத்துக்கள்.
ஆசிரியர்கள் ஞானவிளக்குகள்' என்ற சோக்கிரடீசின் கருத்தினைத் தழுவியே இவருடைய கருத்துக்களும் காணப்படுகின்றன.
ஆசிரியர்கள் போதனையிலும், சாதனையிலும் மற்றவருக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.
நிறைந்த ஞானமுள்ளவராகக் காணப்பட வேண்டும்.
சமூக ஊழல்களை அகற்றும் ஆற்றல் கொண்டவராகக் காணப்பட வேண்டும்.
கடமைகளை உணர்ந்து குழந்தைகள் செய்யும் தவறகளை தாமே பொறுப்பேற்கும் தன்மை இருக்க வேண்டும்.
மன்னுயிர்த் துன்பங்களை தன்னுயிர் துன்பங்களாக மதிப்பவராகவும், கருணையுள்ளம் கொண்டவர்களாகவும், துன்பம் துடைக்கும் தூய உள்ளம் கொண்டவர்களாகவும் இருந்து குழந்தையிடம் நற்பண்புகளை வளர்க்க வேண்டும்.
அடக்குமுறையாலன்றி அன்பால் குழந்தைகளை ஆட்கொள்ள வேண்டும்.
ரூசோவின் பெண்கல்வி பற்றிய இன்றைய நிலைப்பாடு
ஆணுக்குப் பணிவிடை செய்து அன்பு செலுத்தும் குடும்பத்தலைவியே அவள்(பெண்) ஆண்களுக்குரிய கல்வியோ, உயர் கல்வியோ பெண்ணுக்குத் தேவையில்லை.
நன்மைகளைப் பெற்றெடுக்கக் கூடிய உடல் நலம் தரும் உடற்பயிற்சியும், கலையறிவுமே அவளுக்குத்தேவை.
ஆணின் உள்ளத்தைப் புரிந்து வாழ்பவளாக விளங்க உதவும் அறிவு மட்டும் போதுமானது.
என்பது தொடர்பாகக் கூறினாலும் பெண்களிடம் அறனும், அறிவும் வளர்க்கப்பட வேண்டும், உயரிய பண்புகளை அவர்கள் அடைய வேண்டும், அவர்களது கருத்துக்கள் மதிக்கப்பட வேண்டும், அவர்கள் பெறும் கல்வியானது இறுதி நாள் வரை பயனளிக்கப்படுவதாக இருக்க வேண்டும் எனவும் கருத்துரைத்திருந்தார்.
எவ்வாறாகக் காணப்பட்டாலும் பெண்கள் ஆண்களுக்காகவே படைக்கப்பட்டனர் என்பதும் அவர்களுக்கு உயர்கல்வி தேவையில்லை என்பதும் இன்றைய பெண் விடுதலை விரும்பிகளினால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமையவில்லை.
ஆனால் ரூசோ இவ்வாறு கருத்துரைப்பதற்குக் காரணம் குழந்தைகளின் நல்ல சிறப்பான வளர்ச்சிக்கும், அன்பால் கணவளுக்குப் பணிவிடை செய்ய விரும்பும் துணைவியின் முக்கியம் பற்றிய நல்ல நோக்கத்தினாலேயே ஆகும்.
ரூசோவும் சமயக்கல்வியும்
மதபீடங்களின் மமதயைக் கண்டித்தார். ரூசோ மதம் எனும் போர்வையில் ஏற்படும் மாசுக்களைக் கண்டித்தாரே தவிர சமயம் தேவையில்லை எனக்கூறவில்லை.
ரூசோவும் கலைத்திட்டமும்
முதலாம் நிலை 1 - 5 வயது - உடலாலும், உள்ளத்தாலும் மென்மையான குழந்தைக்கு இயற்கையான வீட்டுச் சூழலே கல்விக்குரிய சூழலாகும். குழந்தைகளின் விருப்புக்களுக்கிணங்கவும் எதிர்காலக் கல்வியின் முன்னாயத்த செயற்பாடாக இருக்க வேண்டும்.
இரண்டாம் நிலை 5 - 12 வயது - புலன்களின் வளர்ச்சி அவசியம். புத்தகக் கல்வி தேவையில்லை. உணர்வுகளை விருத்தியாக்க வேண்டும். உ-ம் தீர்வு ஒன்றினைக் காணச் செய்தல். எல்லாக் கற்றலும் விளையாட்டுடன் தொடர்புடையதாகக் காணப்படுவது சிறப்பானது. மனனம் செய்யும் முறைகள் பயன்படுத்துவது நீக்கப்பட வேண்டும்.
மூன்றாம் நிலை 12 - 15 வயது - ஆராயும் மனப்பான்மை கொண்ட பருவம் என்பதனால் பிரச்சினைகளைக் கொடுத்து அவற்றினைத் தீர்ப்பதற்கான ஆற்றலினை வளர்க்க வேண்டும். கிறந்த நூல்களின் வாசிப்பு, கணிதம், கைப்பணி, நுண்கலை ஆகிவற்றினைக் கற்பிக்கலாம். அறிவுக்கான ஆர்வமே இங்கு தூண்டப்பட வேண்டும்.
நான்காம் நிலை 15 - 20 வயது - கட்டிளமைப் பருவம் என்பதால் சமூகத்தோடு இணைந்து உறவாடக்கூடிய, சமூகத்தினை விளங்கிக் கொள்ளக் கூடிய பாடங்கள் புகட்டப்பட வேண்டும். உதாரணம் - சமூகவியல், பொருளியல், வரலாறு, சமயம்
ஐந்தாம் நிலை 20 வயதுக்கு மேல் - சமூக உறுப்பினனாக மாறி உயர்வடையும் பருவம் என்பதனால் சமுதாயத்தினை உருவாக்கும் தொழில் சார் பாடங்கள் புகட்டப்பட வேண்டும்.
பயன்பாட்டு வாதம் (federalism)
நடைமுறைச் சூழலில் தற்காலப் பயன்பாட்டினை அடிப்படையாகக் கொண்டதே பயன்பாட்டு வாதத்தின் மூலக் கருத்தாகும். இவ்வாதமானது ஜோன் டியூவி, C.S பியர்ஸ், வில்லியம் ஜேம்ஸ், சில்லர் போன்றவர்களின் கருத்து வெளிப்பாட்டினால் உருவாக்கம் பெற்றதாகும்.
பயன்பாட்டு வாதத்தின் பிரதான கருத்தின்படி "மாற்றமடைகின்ற அநித்தியமான உலகத்திலே நித்தியமான மாற்றமடையாத நோக்கங்கள் என எதுவும் இருக்க முடியாது"
பயன்பாட்டு வாதத்தின்படி தற்போது மனிதனின் தேவையை எது நிறைவு செய்கின்றதோ அதுவே உண்மையானதாகும். நடைமுறைச் சூழலில் பயன்படும் கருத்தே உண்மையானது.
முழுமையான கருத்துக்கள் என எதுவும் கிடையாது. ஒவ்வொரு கருத்துக்களும் இடத்திற்கிடம் மாறுபடும் தன்மை கொண்டது. மனிதன் ஆற்றல் வாய்ந்தவன் என்பதனால் அவன் தனக்கென நல்ல சூழலை அமைத்துக் கொள்ள முடியும் என்கின்றது பயன்பாட்டு வாதம்.
பயன்பாட்டு வாதத்தின்படி மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றது. எனவே மனிதன் நிகழ்காலத் தேவைகளிைன் அடிப்படையில் காலத்தைப் பயன்படுத்தி வாழவேண்டும். பிள்ளையை நவீன சமூகத்தின் அங்கத்தவனாக வளர இடமளிக்க வேண்டும்.
எனவே பயன்பாட்டு வாத ஆசிரியர் ஒருவர் பிள்ளையின் வெற்றிக்கு வினைதிறன் கொண்ட பாடங்களைக் கற்பித்து அவனை வாழ்க்கையில் பயன்படுத்த உதவ வேண்டும்.
பயன்பாட்டு வாதத்தின்படி எவையும் நிரந்தரமானவையல்ல. காலமாற்றங்களுக்கேற்ப புதியவைகள் தோன்றிக் கொண்டே இருக்கும். கடந்த காலம் கடந்த காலமே, எதிர்காலம் கூட நிச்சயமற்றதே. நிகழ்காலத்தில் உள்வையே உண்மையானவை. எனவே நிகழ்காலப் பயன்பாட்டின் அடிப்படையில் மனிதன் வாழவேண்டும்.
அமேரிக்க நாட்டினைச் சேர்ந்த இவர் கல்வி முறை, கல்வித்தத்துவம், கல்வி உளவியல் இம் மூன்றையும் இணைத்து கல்விச் செயன்முறையாக்கினார்.
மனிதன் பெற்ற சக்தி சிந்தனைதான் எனவும், சிந்தனைச் சக்தியை விருத்தியாக்கிக் கொண்டு சாதனைகள் ஆக்கிப் பயன்படும் விலங்கே மனிதனானவன் எனவும் விளக்கியுள்ளார்.
மனிதன் அறிவைப் பெறுகின்ற வழியானது செயல் ரீதியான அனுபவம் எனவும் கல்வி என்பது அனுபவம் மூலம் கிடைக்கப்பெற வேண்டும். ஒரு பாடசாலை உருவாக்குகின்ற மனிதன் சமூகத் தேவைகளோடு பின்னிப்பிணைந்தவனாகக் காணப்படுகின்றான்.
பிரச்சினைகளோடு திண்டாடி தனிப்பட்ட முறையில் பெறும் அனுபவங்களே உண்மையான கல்வியாகும். ஏதிர்கால அனுபவங்களைப் பெறுவதில் நிகழ்காலத்தினை விழிப்புடன் பயன்படுத்தும் போதுதான் கல்வி அபிவிருத்தி பேணப்படும்.
தற்கால அனுபவத்தில் பெறப்படாத அறிவு ஏட்டுச்சுரக்காய் போலத் தென்படும். இவருடைய கருத்துப்படி பாடசாலைக் கல்வி மூலம் பெறும் அனுபவமும், பிள்ளை வாழும் சமூகத்தில் இருந்து பெறும் அனுபவமும் ஒற்றுமையாகக் காணப்பட வேண்டும் இல்லையேல் கல்வியின் உயிரோட்டம் நலிவுறும். எனவே பாடசாலைக் கற்றல் அனுபவங்கள் வாழ்க்கைக் கற்றல் அனுபவங்களோடு தொடர்புபட்டுக் காணப்பட வேண்டும் என்கிறார்.
காலம் மாறுகின்றபோது நிரந்தரமான கல்வி நோக்கங்கள் என எதுவும் இருக்க முடியாது. கல்வி என்பது வாழ்வதற்குத் தயாராகுதல் அல்ல வாழ்வதே கல்வி.
கல்வி என்பது அனுபவங்களை மீண்டும் மீண்டும் பழுதுபார்ப்பதாகும். கல்வித்துறையோடு தொடர்புடைய ஒவ்வொருவரும் பிரச்சினைகளைத் எனவே தீர்க்கும் ஆற்றறல்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கல்விக் குறிக்கோள்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும். கல்வியின் நோக்கங்களை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. அவை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
முயன்று தவறுதல் மூலம் பயன்பாட்டுவாதி கற்றல் முறையை விருத்தியடையச் செய்கின்றான். எனவே கல்விச் சிந்தனைகள் உருவாக்கப்படும்போது பிள்ளைகளையும், தற்காலச் சமூக அறிவியலையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும். இவ்வாறான கல்வி மூலமே சமூகம் சீர்திருத்தப்படுகின்றது.
'பரிசோதனை ரீதியான விஞ்ஞான முறைகள் அறிவு பெறுவதற்கான ஊடகம்' எனக் குறிப்பிட்ட இவர் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளை மறுதலித்தார்.
ஜோன் டியூவியின் ஆசிரியர் தொடர்பான கருத்துக்கள்
குழந்தையை விளங்கிக்கொண்டு அவனின் விருத்திக்கும், முதிர்ச்சிக்குமேற்ப பொருத்தமான அனுபவங்களை வழங்குவதே ஆசிரியரது கருமமாக இருத்தல் வேண்டும்.
ஆசிரியர் வெறுமனே அறிவைக் கொடுப்பவராக அல்லாமல் அறிவைத் தோற்றுவிப்பதற்கான வழிகாட்டியாகவே அமைய வேண்டும்.
புதிய அனுபவங்களை மாணவர்கள் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை நுண்ணாய்வு செய்பவராக இருந்து மாணவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கு வழிசெய்பவர்.
முன்கூட்டிய குறிப்பிட்ட அனுபவங்களை மட்டும் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ஆசிரியர், மாணவர்களின் உள்ளார்ந்த நலன்கள் வெளிவருவது தடைப்படுகின்றது என்றும் கூறினார்.
இலட்சிய வாதம் (Idealism)
மனிதன் எப்படியும் வாழலாம் என்பதன்றி இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழும்போது தான் வாழ்வாங்கு வாழுதல் அமையும். எனவே வாழ்வாங்கு வாழ இலட்சியம் அவசியம்.
பிளாட்டோ, கொமினியஸ், பெஸ்டலோசி, விக்டர் கசின், பெனிற்றோ, போல் ஜகிப் போன்றவர்களினால் இவ் வாதம் உருவாக்கப்பட்டது.
மனமும், ஆன்மாவும் தூய்மையாக அமையும் போதுதான் இலட்சிய வாழ்வு ஏற்படும் என இலட்சிய வாதம் கூறுகின்றது. இலட்சியக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டதே இலட்சிய வாதமாகும். உலகம் இலட்சிய சிந்தனைகளாலே தோற்றுவிக்கப்பட்டதாக இவ் வாதம் கருதுகின்றது.
இலட்சிய வாதத்தின்படி மனமே பிரதான அம்சம். ஏனெனில் மனிதனுடைய மனமே இலட்சியத்தினைத் தோற்றுவிக்கின்றது. அத்தோடு மனிதனை சுதந்திர ஆளுமை உள்ளவனாகவும் கருதத்தூண்டுகின்றது.
இலட்சிய வாதத்தின் படி மனித ஆற்றலுக்கு எல்லையில்லை. எனவே அவன் தனது இலட்சியத்தினை அடையும் வரை ஒரே இலக்கோடு காணப்பட வேண்டும் என இவ் வாதம் உணர்த்துகின்றது.
இலட்சிய வாதத்தின்படி கல்வியின் நோக்கம் மாணவன் தனது சொந்த வாழ்வில் உண்மை, நன்மை, அழகு என்பனவற்றினை உணர்தலாகும்.
எனவே ஒரு இலட்சியவாத ஆசிரியர் மாணவனின் உள்ளார்ந்த இலட்சியத்தினைக் கண்டறிந்து அவனுக்கேற்ப கல்வி புகட்ட வேண்டும். தன்னை உணர்ந்து கற்கும்படி மாணவனை ஆசிரியர் வலியுறுத்த வேண்டும்.
இலட்சிய வாதம் தொடர்பான புரோபலின் "குழந்தைப் பூங்கா"
இதில் இலட்சிய வாத ஆசிரியர் ஒருவரின் செயற்பாட்டினைக் காணலாம். புரோபல் பாடசாலையை பூந்தோட்டமாகவும், ஆசிரியரைத் தோட்டக்காரராகவும் காட்டுகின்றார்.
தோட்டக்காரர் சிறிய செடிகளை பெரிய மரங்களாக வளர்த்தெடுக்க அனைத்தையும் கவனமாகச் செய்கின்றார். அதுபோலவே ஒவ்வொரு ஆசிரியரும் குழந்தைகள் முழு வளர்ச்சியும் பெறுவதற்கு அவர்களை ஒழுங்காக இலட்சியத்தோடு வழிநடத்த வேண்டும்.
பிளாட்டோ
இலட்சியங்களைக் கொண்ட கருத்துலகமே முந்தியதும், முதன்மை வாய்ந்ததுமென பிளாட்டோ தெரிவிக்கின்றார்.
ஏதென்ஸ் நாட்டின் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த பிளாட்டோ, சோக்ரடீசின் இலட்சிய வாதம் தொடர்பான சிந்தனைகளுக்கும், அறிவுத் தேடல்களுக்கும் உட்பட்டு ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் எழுதிய 'குடியரசு', 'சட்டங்கள்' தொடர்பான நூல்களில் கல்வி தொடர்பான கருத்துக்கள் பரவலாக இடம்பெற்றுள்ளன.
கற்றல் என்பது மகிழ்ச்சியான செயற்பாடாக இருக்க வேண்டும்.
கல்வி வாழ்நாள் நீடித்ததாக இருத்தல் வேண்டும்.
கல்வி அபிவிருத்தியை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
ஆண், பெண் கூட்டுக்கற்றலை வலியுறுத்திய இவர் உள்ளம் தூய்மையானது எனவும், அதனைத் தவறான வளர்ப்பு முறைகளினால் மாசுபடுத்திவிடக் கூடாது என்கிறார். 7 - 20 வயது வரை பிள்ளைகள் கட்டாயக்கல்வி பெறவேண்டும் என வலியுறுத்தினார்.
பாடசாலைகள் உளத்தினை வளர்க்கும் உடற்கலை அரங்காகவும், நுண்மதியை வளர்க்கும் விளையாட்டுக் களமாகவும் இருத்தல் வேண்டும் என்கிறார்.
மனிதன் வெவ்வேறு பணிகளைச் செய்ய வேண்டி இருப்பதனால் வெவ்வேறு வகையான கல்வி வழங்கப்பட வேண்டும் என்கிறார். கல்வி நிலைகளை மூன்றாகப் பிரித்து வகைப்படுத்தினார்.
உதாரணம் -
வெள்ளி நிலை - இராணுவம்,வர்த்தகர்க்குரிய கல்வி
இரும்பு நிலை - தொழிலாளர்க்குரிய கல்வி
உயர் குடிமக்களில் கல்வி தொடர்பாகக் கூடிய கவனம் (தொழிலாளாருக்கு சிறிதளவு கல்வி போதும்)
தொழில் சார் கல்வி பற்றிக் குறிப்பிடாமை.
ஆசிரியரை மையப்படுத்தும் கல்வி முறைக்கு அதிகளவான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வியின் சிறப்புத் தேர்ச்சிக்கு அதிக முக்கியம் கொடுக்கவில்லை.
ஆசிரியர் வாண்மையும், வகிபங்கும்
பின்னணி
ஆசிரியர்கள் தனி மனிதனையும், சமூகத்தையும் ஏன் முழு உலகினையும் கூட உருவாக்குபவர்கள். ஆசிரியர்களின்றி கல்விச்செயல் முறை இடம்பெற இயலாது. கல்வியின் நோக்கங்கள் எவ்வளவு சிறந்தனவாக இருப்பினும் கல்வி நிர்வாகம் எவ்வளவு ஆற்றல் வாய்ந்ததாக இருப்பினும், கல்வி கற்பிப்பதற்கான உபகரணங்கள் எவ்வளவு ஏராளமானதாகவும் காலத்துக்கு ஏற்றனவாயும் இருப்பினும் அவற்றால் மாணவர்கள் அடையும் பயன் ஆசிரியர்களைப் பொறுத்ததேயாகும். மாணவர்களது அறிவு மட்ட வளர்ச்சி ஆசிரியர்களது அறிவுமட்ட வளர்ச்சி என்பனவற்றுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்ற கோட்பாடும் உண்டு.
பாரம்பரிய சமுதாயத்தில் ஆசிரியர்களின் சேவை இறை தொண்டாகக் கருதப்பட்டது. குருகுலக் கல்வி முறையும் குரு. சிட மரபும் ஆசியர்க்கிருந்த அந்தஸ்த்தை உயர்த்திக் காட்டின. அரசு கல்விப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் ஆசிரியர் அந்தஸ்த்து, கல்வி, சம்பளம், நலங்கள்
அத்தனை அம்சங்களிலும் அரசின் வழிகாட்டலும் கட்டுப்பாடும் ஏற்படத் தொடங்கின. அதன் எதிர்விளைவாக காலப்போக்கில் ஆசிரியர்களது சேவை தன்மதிப்பை இழக்கத்தொடங்கியது. அரசுகள் ஆசிரியர்களின் நலன்களில் போதிய அக்கறை எடுக்காமையும் அவர்களது சுய கௌரவம், கடமை என்பவற்றை மதிக்கத் தவறியமையுமே ஆசிரியர்களின் இந்நிலைக்குக்
காரணங்களாக இருந்தன. 1966 இல் பரீசில் யுனெஸ்கோவில் நடைபெற்ற ஆசிரிய அந்தஸ்துப் பற்றிய சர்வதேச மாநாடு இவற்றைக் கருத்திற் கொண்டு விதப்புரைகளை தயாரித்தது. இந்த விதப்புரைகள் ஆசிரியர் அந்தஸ்த்தினை உயர்த்தும் ஒரு சாசனமாக அமைந்தது யுனெஸக்கோவின் தீர்மானத்தின்படி முதலாவது உலக ஆசிரியர் தினம் 1991 அக்டோபர் 6 ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது. ஆசிரியர் தம் நிலையை உணரவும்
சமூகத்திற்கு ஆசிரியரின் மதிப்பை உணர்த்தவும் இத்தினம் நினைவு கூறப்படுகின்றது.
உயர் தொழிற் பண்புகள்
கற்பித்தல் தொழில் அல்லது ஆசிரியர் தொழில் என்பது ஓர் உயர் தொழிலாகும். இதனை வாண்மை எனவும் குறிப்பிடுவர். வாண்மை என்பதை அல்லது உயர் தொழில் என்பதை (profession) எனும் ஆங்கிலப் பதத்தால் குறிப்பிடலாம். கற்பித்தல் ஓர் அர்ப்பணிப்பு (Teaching is Devotion) என்போரும் உள்ளனர். இவ்வுயர் தொழிலுக்கெனச் சில பண்புகள்
உள்ளன.
ஓர் உயர் தொழில் ஓர் அத்தியாவசிய சேவையை வழங்குவது. தனிப்பட்ட குழந்தையைப் பொறுத்தமட்டில் அதற்கு கல்வி வழங்குவது ஓர் அவசிய தேவை. பிறந்த உடனேயே கற்கத் தொடங்கும் குழந்தைக்கு பாடசாலைக் கல்விக்கு முன்பிருந்தே ஆசிரியரது பங்களிப்பு அதன் நீண்ட கால நடத்தை உருவாக்கத்திற்குப் பங்களிக்கின்றது. பாலர் முன்பள்ளியில் இருந்து ஆரம்பக் கல்வி வளர்சிக்கு ஆசிரியரின் பங்களிப்பு ஆரம்பமாகிறது. குழந்தையானது தனது குடும்பத்திற்கு வெளியே பரிவும், அன்பும் கொள்ளும் முதலாளாக ஆசிரியரே காணப்படுகிறார். எனவே குழந்தைக்கான ஓர் அவசியமான சேவையை வழங்கும் நபராக ஆசிரியர் விளங்குகின்றார்.
உயர் தொழில் ஒன்றின் இன்னுமொரு பண்பு என்னவெனில் அது அறிவுத் தளமொன்றைக் கொண்டிருப்பதாகும். (Body Of Knowledge) ஒரு வைத்தியன் தனக்குரிய அறிவுத் தளத்தைக் குறிப்பிட்ட ஒரு நீண்ட காலப்பகுதிக்குக் கற்க வேண்டி இருக்கிறது. அது போன்று ஆசிரியனும் குறிப்பிட்ட காலப் பகுதிக்கு கல்வியையும், பயிற்சியையும் பெற வேண்டி உள்ளது. அத்துடன் அல்லாமல் திறன்களையும் அத்தொழிலுக்கு பொருத்தமான உளப்பாங்கினையும் அவன் வளர்த்துக்கொள்ள வேண்டியவன் ஆகிறான்.
ஓர் உயர் தொழிலாளன் பெற்றிருக்க வேண்டிய திறன்களும் உயர் திறன் வகையைச் சார்ந்தவை. அத்திறன்கள் அறிவை அடிப்படையாகக் கொண்டவை. சாதாரணத் தொழில் நுட்ப திறன்களாக அவை இருக்காது போதிய அறிவாற்றலைக் கொண்ட அல்லது அறிவாற்றல் தேவைப்படும் திறன்களாக அவை உள்ளன. ஆசிரியர் தொழில் அல்லது கற்பித்தல் தொழில், விடய அல்லது பாட அறிவை மட்டுமன்றி கல்விக் கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டது. கல்விக் கோட்பாட்டு அறிவின்றி ஓர் ஆசிரியன் ஆசிரியன்" என்ற கணிப்புக்குரியவன் ஆகமாட்டான்.
ஓர் உயர் தொழில் அதற்கான தொழில் சுதந்திரத்தைக் கொண்டதாகும். (Profesinal Freedam) தேசிய கல்விக் கொள்கை, செயல்முறை என்பவற்றுக்குட்பட்டு ஓர் ஆசிரியன் தனது தொழிலை ஆற்றும் போதும் அவ்வெல்லைக்குட்பட்ட தொழில் சுதந்திரம் அவனுக்குண்டு. அதன் காரணமாக அவன் புதியனவற்றை உருவாக்கவும், அதனைக் கற்பித்தலில் பிரயோகிக்கவும் அவனுக்கு சுதந்திரமுண்டு. தனது தொழில் எவ் வகையில் ஆற்றப்பட வேண்டும் என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கும் சுதந்திரம் உடையவனாக அவன் உள்ளான். தனது மாணவன் தொடர்பாக அவனது கல்வி வளர்ச்சி தொடர்பாக வழிகாட்டவும். தீர்மானத்தை மேற்கொள்ளவும் அவனுக்கு தொழில் சுதந்திரமுண்டு.
உயர் தொழிலானது தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் பாங்கினது. இவ்வுயர் தொழிலானது அறிவுத்தொகுதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதாலும், தொடர்ந்து மாற்றமுறும் தன்மை கொண்ட திறன்களை கொண்டிருப்பதாலும் அது தொழில் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லுதல் வேண்டும். கல்விச் செயல் முறைகள், பாட அறிவு என்பன வளர்ச்சியும், மாற்றமும் பெற்றுச் செல்வதால் ஆசிரியன் அவற்றை தொடர்ந்து கற்று, சேவைக்காலத்தில் பயிற்சிகளைப் பெற்றுத் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த கடமைப்பட்டுள்ளான்.
உயர்தொழிலானது தனக்கென உரிய ஓர் ஒழுக்கக்கோவையொன்றினைக் கொண்டிருக்கும். ஓர் உயர் தொழிலாளனை மதிப்புக்கும். மரியாதைக்கும் உரியதாக்குவது இவ் ஒழுக்கக்கோவையாகும். வைத்தியர்கள், சட்ட அறிஞர்கள், பொறியலாளர்கள் ஆகியோருக்கு ஓர் ஒழுக்கக்கோவை இருப்பது போன்று ஆசிரியர்களுக்கும் அவ்வாறான ஒழுக்கக்கோவை கல்வியமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் ஓர் எல்லைக்குட்பட்டுச் செயற்படக் கூடியதான பொருத்தமான தொடர்பை விளக்குவதாகவும் இவ் ஒழுக்கக்கோவை விளங்குகின்றது.
உயர் தொழில் ஒன்றிற்கு இருக்கக் கூடிய மேலும் சில பண்புகளாகத் தொழிசற் சங்கம் ஒன்றைக் கொண்டிருத்தல், தனக்கே உரியதும், பொருத்தமான சம்பளத் திட்டமொன்றைக் கொண்டிருத்தல், பதவியுயர்வு முறையொன்றைக் கொண்டிருத்தல் போன்றனவற்றைக் குறிப்பிடலாம்.
இன்றைய நிலை
இலங்கையில் அண்மைக் காலத்தில் ஆசிரியர் தொழில் உயர் தொழிலுக்குரிய அந்தஸ்தைப் பெற்றுள்ளதுடன் ஆசிரியர் சேவையொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பதவி உயர்வுமுறையும், சம்பளவுயர்வும் வழங்கப்பட்டமை அவர்களது தொழில் அந்தஸ்த்தை உயர்த்தியுள்ளது. தேசிய, சர்வதேசியக் கல்விப் போக்குகளுக்கியைபாக புதிய கல்விச் சீர்திருத்தத்தை வெற்றிகரமாகக் கொண்டு செயற்பட வேண்டிய பொறுப்பு எமது ஆசிரியச் சமூகத்துக்குண்டு. புதிய மாற்றமும், புதிய திறன்களும் தேவைப்படும் இன்றைய நிலையில் ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை எந்த அளவுக்கு திருப்திகரமாக மேற்கொள்ளுகின்றனர் என்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
பல்கலைக்கழக அனுமதியில் போட்டி நிலவுகின்ற சூழலில் பிரத்தியேக போதனைகளை மாணவர் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக வந்துவிட்டதாயினும் அது ஆசிரியர்களது சுய கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் அமையக் கூடாது. மாதாந்த சம்பளப் பணத்தை விடுத்து தினசரி சந்தாப்பணம் பெறும் இன்றைய பிரத்தியேக கல்வி வழங்கும் ஆசிரியர்களது நிலை சமூகக் கண்ணோட்டத்தில் அவர்களது அந்தஸ்த்தை குறைத்துவிட்டதெனலாம். பாடசாலையில் திருப்தியான போதனை இல்லா நிலையும் அவதானிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் பாடசாலைகள் தம் முக்கியத்துவத்தை இழந்துள்ள நிலையும் அவதானிக்க முடிகின்றது. இன்றைய நிலையில் பிரத்தியேக போதனை இலவசக்
கல்வியை அர்த்தமற்றதாக்கிவிடும் நிலையையும் தோற்றுவித்துள்ளது.
பாடசாலைக்குச் சமூகமளித்தும் வகுப்பறைக்குச் செல்லாத ஆசிரியர்கள் அவ்வாறு செல்லாத ஒவ்வொரு LITL வீணடிக்கின்றார்கள் மணித்தியாலம்கள்) நேரத்திலும் ஏறக்குறைய 26 மாணவ என்பதைக் மணித்தியாலங்களை கருத்திற் கொள்ள வேண்டும். (40x40/60=26 தவணை பூராகவும் வகுப்பறைக்குச் செல்லாத ஆசிரியர்களும் சில பாடசாலைகளில் இருக்கவே செய்கின்றனர். இந்நிலையிலுள்ள ஆசிரியர்கள் சமூகத்தில் தமது அந்தஸ்த்தை தாழ்த்திக்கொள்கின்றனர். வகுப்பறைக்குச் செல்லாத ஆசிரியர்கள் தனக்காக மாணவர்கள் வகுப்பில் காத்திருக்கிறார்கள் என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.
பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தும் சில பாடசாலை ஆசிரியர்கள் ரீயூசன் வகுப்புக்களில் தொடர்ச்சியாக புகைத்துக் கொண்டு கற்பிப்பவர்களும் உளர். விழுமியப் பண்புகளையும், சீரிய ஒழுக்கங்களையும் மாணவர்களிடம் வளர்ப்பதற்கு புதிய கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கும் இந்நிலையில் இப்படிப்பட்ட ஆசிரியர்கள் எந்த அளவிற்கு உயர் தொழிலாளர்களாகக் கருதப்படலாம் என்பதைக் கவனிக்க வேண்டும். பரீட்சையில் சித்தி பெறுவதொன்றே கல்வியின் நோக்கமாகாது. சமூகத்துக்கு பயன் படுகின்ற மாணவ சமூகத்தை உருவாக்குவது தமது கடமை என்பதை இத்தகைய ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
தமது பணியை விருத்தி செய்யும் பயிற்சி வகுப்புக்களுக்கு செல்லாதிருத்தல் என்பதும் இன்றைய நிலைப்பாட்டில் கவலைக்குரிய விடயமாகும்.
ஆசிரியரின் தொழில் விருத்திக்கு எல்லைபோட முடியாது. மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்கும் ஓர் உயர் தொழிலாளன் தனது தொழிலில் வளர்ச்சியடைய முடியாது. ஆசிரியன் நடுநிலையாளனாக இருந்து மாணவர்களிடையே ஏற்படும் முரண்பாடுகளை தீர்த்து மாணவ சமூகத்துக்கு ஓர் முன்மாதிரியாக விளங்க வேண்டும். உளவியல் நுட்பம் தெரிந்தவராகவும் ஓர் ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் விளங்கும் அவர் மரபு ரீதியான பாடவரையறைக்கு அப்பாற்சென்று மேலதிக அறிவைக் கொடுப்பவராகவும் இருக்க வேண்டும். மாணவர்களுக்கான உயர் கற்றல் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதோடு சிறந்த ஊக்கமளிப்பவராகவும் காணப்பட வேண்டும்.
21ம் நூற்றாண்டுக்கான மாணவ சமுதாயத்தை உருவாக்கும் சிறப்பான ஆசிரியர்கள் தமது தொழில் உயர்தொழில் என்பதைக் கருத்திற்கொண்டு செயலாற்றக் கடமைப்பட்டுள்ளவராவார்.
கல்வி என்பது மாணவனிடம் இருந்து வெளிக்கொண்டுவர வேண்டும் மாணவனின் இதயத்தை தொடுவதன் மூலமே அவனிடமிருந்து சிறந்தனவற்றினை இனம்கானலாம் - காந்தி
பாடசாலை ஒழுங்கமைப்பு (school types in srilanka)
பாடசாலை ஒழுங்கமைப்பு என்பது பாடசாலைகளின் தரத்தினை அல்லது வகையினை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதாகும். 1999 இற்குப் பிற்பாடு இலங்கையில் உள்ள பாடசாலைகள் 4 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை கற்கும் தரம், மாணவர்களின் எண்ணிக்கை என்பவற்றினைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன. காலத்திற்குக் காலம் இவை தரம் உயர்த்தப்படுவதும் உண்டு.
பாடசாலை வகைகள்
2. I C பாடசாலைகள்
3. வகை - II
4. வகை - III
I AB பாடசாலைகள்
க.பொ.த உயர்தரத்தில் சகல துறைகளையும் உள்ளடக்கியதாகக் காணப்படும். பல I - AB பாடசாலைகள் விடுதி வசதிகளைக்கொண்டு காணப்படும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கேற்ப மேலும் தரம் உயர்த்தப்படும். Note : Super I AB - Including technology
(1 - 13) அல்லது (6 - 13) வகுப்புக்கள் நடைபெறுகின்றன. 1000 பாடசாலை அபிவிருத்திக்கு உட்பட்ட I AB பாடசாலைகளில் மட்டும் ஆரம்பப் பிரிவு நீக்கப்படவுள்ளது. இத்தகு பாடசாலைகளில் இலங்கை அதிபர் சேவை தரம் 1 அல்லது கல்வி நிர்வாக சேவை வகுப்பு I அல்லது கல்வி நிர்வாக சேவை வகுப்பு II ஆகிய தரம் கொண்ட அதிபர்கள் கடமையாற்ற முடியும்.
I C பாடசாலைகள்
க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவு தவிர்ந்த சகல துறைகளையும் உள்ளடக்கியதாகக் காணப்படும். கலை, வர்த்தகம் அல்லது கலைப்பிரிவு மட்டும் கொண்ட பாடசாலைகளும் இதனுள் அடங்கும். (1 - 13) அல்லது (6 - 13) வகுப்புக்கள் நடைபெறுகின்றன. I AB பாடசாலைகள் போன்றே இவைக்கும் அதிபர் நியமனங்கள் வழங்கப்படும்.
வகை - II பாடசாலைகள்
தரம் (1 - 11) வரையான வகுப்புக்கள் இங்கு நடைபெறுகின்றன. இலங்கை அதிபர் சேவை தரம் II அதிபர்கள் இப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவர்.
வகை - III பாடசாலைகள்
தரம் (01 - 05) வரையான வகுப்புக்கள் இங்கு நடைபெறுகின்றன. இது ஆரம்பப் பிரிவு பாடசாலையாகக் கொள்ளப்படுகின்றது. இலங்கை அதிபர் சேவை தரம் III அதிபர்கள் இப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவர். விசேட தேவை அல்லது விசேட அனுமதியின் பெயரில் தரம் 08 வரை வகுப்புக்கள் இடம்பெறலாம்.
தேசிய பாடசாலைகள் (National school)
பன்முகப்படுத்தலின் பின் கல்வி முறைமையின் கட்டமைப்பு (Present Education System)
1987 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி இலங்கையின் அரசியல் அமைப்பில் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தமானது மாகாண சபையின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. மாகாண சபை தொடர்பான சட்ட அம்சங்கள் இலங்கை அரசியல் யாப்பின் 154 A தொடக்கம் 154 T வரை அமைந்த சரத்துக்களாக இடம்பெற்றன.
இச்சரத்துக்களின் அடிப்படையில் கல்வி நிருவாக அமைப்பில் புதிய மாற்றங்கள் அமைந்தன. இந்த மாற்றங்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் மாகாண சபைகள் அமைந்த பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் புதிய முழுமையான கல்வியமைப்பின் பிரதான பிரிவுகள் பின்வரும் மட்டங்களைக் கொண்டுள்ளன.
1. தேசிய நிலை மத்திய அமைச்சுக்கள், தேசிய கல்வி நிறுவகம், தேசிய கல்வி ஆணைக்குழு, பரீட்சைத் திணைக்களம், கல்வி வெளீட்டுத் திணைக்களம் ஏனையன.
2. மாகாணநிலை மாகாணக் கல்வி அமைச்சு, மாகாணக் கல்வித் திணைக்களம்
3. வலய நிலை முன்னையப் பிரதேச கல்வித் திணைக்களத்தின் பிரதியீடாகவும், மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஒரு அங்கமாகவும் இது அமைகின்றது.
4. புதிய பிரதேசநிலை புதிய பிரதேச சபைகளுக்கு இயைபுபடுத்தியதான ஒரு பிரதேச அமைப்பு. அதாவது கோட்டக் கல்விக் காரியாலயம்.
5. பாடசாலை கல்வி அமைச்சின் இறுதி நிறுவனம் அல்லது முதல் நிரை முகாமை நிலையம்.
மாகாண நிலைகளில் உள்ள கல்விசார் அமைப்புக்களையும் தேசிய ரீதியிலான கல்விசார் இணைப்புக்களையும் இங்கு நோக்குவோம்.
மாகாண கல்வி முறையின் அமைப்பு
மாகாண கல்வி அமைச்சு (POE)
மாகாணக் கல்வி அமைச்சானது மாகாணக் கல்வி செயலாளரினால் தலைமை வகிக்கப்படும். அவர் பெரும்பாலும் மத்திய நிர்வாக சேவை 1 ஆம் வகுப்பைச் சார்ந்தவராக அல்லது கல்வி நிர்வாக சேவையின் 1 ஆம் வகுப்பைச் சார்ந்தவராக இருப்பார். அவர் மாகாணக் கல்வி அமைச்சருக்கு நேரடியாக பொறுப்புடையராக இருப்பார். அவருடைய செயற்பாடுகள் மத்திய கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட கொள்கை வழிகாட்டுதலுக்கும் மாகாண சபையின் மாகாணக் கொள்கை வழிகாட்டலுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு மாகாணக் கல்விச் செயலாளர் தேசியக் கொள்கை, மாகாணக் கொள்கை பற்றிய விளக்கங்களை அளிப்பார்.
மாகாணக் கல்வித் திணைக்களம் (PED)
மாகாணக் கல்வித் திணைக்களம் மாகாணக் கல்விப் பணிப்பாளரால் தலைமை வகிக்கப்படும். இவர் இலங்கைக் கல்வி நிர்வாக சேவையைச் சார்ந்த 1 ஆம் வகுப்பு சிரேஷ்ட உத்தியோகத்தராக இருப்பார். அவர் மாகாணத்தின் கல்வித் திட்டமிடல், அமுலாக்கம், நிர்வாகம், வழிப்படுத்தல், நெறிப்படுத்தல் போன்ற சகல கல்விச் செயற்பாடுகளிலும் பொறுப்பானவராக இருப்பார். தேசிய நிலை அமைப்புக்களினதும் , மாகாணக்கல்வி அமைச்சினதும் கல்விச் செயற்பாடுகளை அமுலாக்கம் செய்பவர் இவராகும். இவர் 2 அல்லது 2 இற்கு மேற்பட்ட கல்விப் பணிப்பாளர்களின் உதவியுடன் செயற்படுகின்றார். (இ.க.நி.சே.வகுப்பு 1)
வலயக் கல்வித் திணைக்களம் (ZED)
ஒரு மாகாணத்தினுள் பல கல்வி வலயங்கள் அமையலாம். ஒரு கல்வி வலயம் பல கோட்ட அமைப்புக்களின் தொகுதியாக அமையும். இதற்கென ஒரு வலயக் கல்விப் பணிப்பாளர் இருப்பார். இவர் இலங்கைக் கல்வி நிர்வக சேவையின் 1 ஆம் வகுப்பைச் சேர்ந்தவராக இருப்பாார். இவர் பாட நிபுணத்துவம் உடைய இரண்டாம் மூன்றாம் வகுப்பைச் சேர்ந்த இலங்கைக் கல்வி நிர்வாகச் சேவை அதிகாரிகள் அல்லது மாகாணக்கல்விப் பணிப்பாளர்னால் கூறப்படும் ஏனைய உத்தியோகத்தர்களின் உதவியைப் பெற்றுத் தனது செயற்பாடுகளை மேற்கொள்வார். வலயத்தின் கல்வி நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்தல், கண்காணித்தல், இயைபுபடுத்தல் முதலான அபிவிருத்தி நடவடிக்கைகள் வலயக் கல்வித் திணைக்களத்தின் பிரதான செயற்பாடுகளாகும். வலயக் கல்விப் பணிப்பாளர் மாகாணக் கல்விப் பணிப்பாளரும், கோட்டப் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலை அதிபர்கள் ஆகியோருடனும் நேரடியாகத்
தொடர்பு கொள்ளுவார். அவர் மாகாணக் கல்வி அமைச்சுடனும், மத்திய கல்வி அமைச்சுடனும், தேசிய கல்வி நிறுவகம் போன்ற தேசிய நிலை அமைப்புக்களுடனும் மாகாணக் கல்விப் பணிப்பாளரூடாகத் தொடர்பு கொள்ளுவார்.
கோட்டக் கல்வி அலுவலகம் (DEO)
கோட்டக் கல்வி அலுவலகம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (இ.க.நி.சேவை வகுப்பு 11) ஒருவரால் நிருவகிக்கப்படும். இவருக்கு உதவியாக இருக்கும் பிரதி உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் தொகை கோட்டத்தில் உள்ள பாடசாலையின் எண்ணிக்கையில் தங்கியுள்ளது. எவ்வாறாயினும் ஆகக்குறைந்த தொகையினர் இருவராகும். கோட்ட அலுவலகம் தனது பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளின் சகல கல்வி நிகழ்ச்சிகளினதும்இ அமுலாக்கத்திற்கும்இ பொது நிர்வாகத்திற்கும் பொறுப்புடையதாகும்.
இணைப்புக்கள்
பெரும்பாலான கல்விச் செயற்பாடுகள் மாகாணங்களுக்கு உரித்துடையனவாக ஆக்கப்பட்டுள்ளன. ஆனால் கலைத்திட்ட அபிவிருத்தி, ஆசிரியர் பயிற்சி, பொதுப் பரீட்சைகள், கல்விச் சேவை என்பன போன்ற பரந்துபட்ட செயற்பாடுகள் மத்திய அமைச்சின் பொறுப்பில் தேசிய ரீதியில் கையாளப்பட வேண்டியதாகவும் அமைந்து விளங்குகின்றன. எனவே இவ்வமைப்பின் வெவ்வேறு மட்டங்களுக்கிடையே வலுவான இணைப்புக்கள் அவசியம்.
கல்வியின் தேசி இலக்குகள் - 08
01. மனிதகௌரவத்தை கண்ணியப்படுத்தல் எனும் எண்ணக்கருவுக்குள் தேசியபிணைப்பு, தேசியமுழுமை,தேசிய ஒற்றுமை. இணக்கம், சமாதானம் என்பவற்றைமேம்படுத்தல் மூலமும் தேசத்தைக் கட்டிஎழுப்புதலும் இலங்கையர் எனும் அடையாளத்தை ஏற்படுத்தலும்.
02. மாற்றமுறும் உலகத்தின் சவால்களுக்குத் தக்கவாறு முகங்கொடுத்தலோடு தேசிய பாரம்பரியத்தியத்தின் அதிசிறந்த அம்சங்கள் அங்கீகரித்தலும் பேணுதலும்.
03. முனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், கடமைகள், கட்டுப்பாடுகள் பற்றியவிழிப்புணர்வு, ஒருவர் மீதுஒருவர் கொண்டுள்ள ஆழ்ந்த இடையறாத அக்கறையுணர்வு என்பவற்றை மேம்படுத்தும் சமூகநீதியும், ஜனநாயகவாழ்க்கை முறை நியமங்களும் உள்ளடக்கிய சுற்றாடலை உருவாக்குதலும் ஆதரித்தலும்.
04. ஒருவரது உடல், உள, நலனையும் மனிதவிழுமியங்களுக்கு மதிப்பளிப்பதை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறுடைய வாழ்க்கைக் கோலத்தையும் மேம்படுத்தல்.
05. நன்கு ஒன்றிணைக்கப்பட்ட சமநிலை ஆளுமைக்குரிய ஆக்கசிந்தனை,தற்றுணிவு, ஆராய்ந்துசிந்தித்தல், பொறுப்பு, வகைகூறல் மற்றும் உடன்பாடான அம்சங்களை விருத்திசெய்தல்.
06. தனிநபரதும், தேசத்தினதும் வாழ்க்கைத் தரத்தைப் போசிக்கக்கூடியதும், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிக்கக் கூடியதுமான ஆக்க பணிகளுக்கான கல்வி ஊட்டுவதன் மூலம் மனிதவளவிருத்தி.
07. தனிநபர்களின் மாற்றத்திற் குஏற்ப இணங்கி வாழவும், மாற்றத்தை முகாமை செய்யவும் தயார்படுத்தவும், விரைவாக மாறிவரும் உலகில் சிக்கலானதும், எதிர்பாராதது மானநிலைமைகளைச் சமாளிக்கும் தன்மையைவிருத்திசெய்தல்.
08. நீதி, சமத்துவம், பரஸ்பரமரியாதை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச சமுதாயத்தில் கௌரவமானதோர் இடத்தைப் பெறுவதற்குப் பங்களிக்கக்கூடிய மனப்பாங்குகளையும் திறன்களையும் வளர்த்தல்.
தேசிய கல்வி நிறுவகம்
இலங்கையின் கல்விக் கொள்கை வரலாற்றில் தேசிய கல்வி நிறுவகச் சட்டம் பிரதானமான தொன்றாகும். 1980ஆம் ஆண்டில் திரு. நீல் பெர்ணார்டோ அவர்களால் முன் மொழியப்பட்டு 1985ஆம் ஆண்டு 28ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் இது தாபிக்கப்பட்டது. இச்சட்டத்தில் பின்வரும் அம்சங்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் இலக்குகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கையின் கல்வி அபிவிருத்திக்கான திட்டங்கள்இ நிகழ்ச்சித் திட்டங்கள்இ செயற்பாடுகள் என்பன பற்றிக் கல்வி அமைச்சருக்கு ஆலோசனை வழங்குதல்.
கல்வியின் பல்வேறு சிறப்புத் துறைகளிலும் பட்டப்பின் கல்வியை அளித்தலும் அதனை முன்னேற்றுதலும்.
கல்வி நோக்கங்களுக்காகத் தொழிநுட்பத்தைப் பிரயோகித்தலும் கல்வி முறைமையில் புதிய செயற்பாடுகளை ஆரம்பித்தலும் அவற்றை வளர்த்தலும்.
கல்வி முறையில் கருமமாற்றும் பணியணியினரது தொழிற்றிறன் முகாமைத்துவத்திறன் என்பனவற்றை அபிவிருத்தி செய்தல்.
அரசாங்கத்திற்கும் அங்கீகரிக்கப்பட்ட வேறு தாபனங்களுக்கும் கல்வியில் நிபுணத்துவ சேவையை வழங்க வசதிகளையேற்படுத்தல்.
அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
இதே பாங்கான குறிக்கோள்களை உடைய பிற நிறுவனங்களுடன் தொடர்புகளைப் பேணி வளர்த்தல்.
தேசிய கல்வி நிறுவகம் பின்வரும் அதிகாரங்களையும் செயற்பாடுகளையும் கொண்டதாக இருக்கும்.
அசையும் அசையா ஆதனங்களை வைத்திருக்கவும் அவற்றை விற்பனை செய்யவும் குத்தகைக்கு விடவும் பரிமாற்றம் செய்யவும் முடியுமான அதிகாரம்.
வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தலும் பயன்படுத்தலும் அவற்றைப் பேணுதலும்.
இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் தனி நபர்களிடமிருந்தோ அல்லது தனி நபர்களைக் கொண்ட அமைப்புக்களிடமிருந்தோ மானியங்களையோ அன்பளிப்புக்களையோ பெறல்.
தமது அதிகாரங்களைப் பிரயோகிக்கவும் கடமைகளை நிறைவேற்றவும் அவசியமான ஒப்பந்தங்களைச் செய்தலும் அவற்றை நிறைவேற்றலும்.
உடனடியாக செலவு செய்யப்படாத பணத்தினை வேறு துறைகளில் முதலீடு செய்தல்.
கல்வி அபிவிருத்தி தொடர்பான ஆராச்சிகளைத் தொடங்குதல் நடாத்துதல் ஆராச்சிகளை ஊக்குவித்தல் அவற்றை இயைபாக்கம் செய்தல்.
கல்வி முறைமையில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கும் ஏனைய பணியாளர்களுக்கும் பயிற்சி நெறிகளையும்இ கற்பித்தல் நிகழ்ச்சித் திட்டங்களையும்இ கற்கை நெறிகளையும் நடாத்தி அவற்றை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தவர்களுக்கும் பரீட்சைகளிற் சித்தியடைந்தவர்களுக்கும் சான்றிதழ்கள் பட்டங்கள் திப்ளோமாக்கள் முதலியவற்றை வழங்குதல். கல்வி அபிவிருத்தி தொடர்பான செயற்றிட்டங்களிலோ அல்லது செயற்றிட்டத்தில் விசேட ஆய்வுகளைச் செய்வதிலோ ஈடுபடும் தனியாருக்கோ அல்லது குழுவினருக்கோ உதவி வழங்குதல்.
கல்விக்கும் பயிற்சிக்குமான நிலையங்களைத் தாபித்தல். அதற்கான வசதிகளை ஏற்படுத்தல் அவற்றைப் பராமரித்தல்.
கல்விக்கும் ஆராய்ச்சிக்குமான நூல்நிலையம் விஞ்ஞானகூடம் முதலிய வசதிகளையேற்படுத்தல்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கல்வி தொடர்பான நிறுவனங்களுடன் மாணவர்களையும் ஆளணியினரையும் மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளல்.
சேவைகளை வழங்கியமைக்கான கட்டணங்களை விதித்தல் அறவிடுதல்.
நிறுவகத்தினை நிருவகித்தலுக்கான ஒழுங்கு வசதிகளை உருவாக்குதலும் நிறுவகத்தின் குறிக்கோள்களை அடைவதற்குச் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் முதலியனவும்.
மேற்குறித்த இலக்குகளையும் குறிக்கோள்களையும் அடைவதற்காகத் தேசிய கல்வி நிறுவகமானது பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
தேசிய கல்வி ஆணைக்குழு
தேசிய கல்வி ஆணைக்குழுவானது 1991ஆம் ஆண்டு 19ஆம் இலக்க தேசிய கல்வி ஆணைக்குழுச் சட்டத்தின் படி 1991ஆம் ஆண்டு யூலை 15ஆம் திகதி நிறுவப்பட்டது. தேசிய கல்விக் கொள்கைகளை உருவாக்குவதும் மேன்மைதங்கிய ஜனாதிபதிக்குத் தேசிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனைகளையும் விதப்புரைகளையும் வழங்குவதுமே இதன் பிரதான நோக்கங்களாகும்.
இக் குழுவினை நிறுவுவதை முக்கியத்துவப்படுத்திய காரணிகள்
1. கல்வி தொடர்பான தேசிய கல்விக் கொள்கை ஒன்றினை தொடர்ச்சியானதும் நிலையானதும் விளங்கிக்கொள்ளக் கூடியதுமான தன்மையைப் பேணுதல்.
2. தற்காலிக நிலைமைகள் அல்லது பிரச்சனைகளுக்கு ஏற்ப கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படாதவாறு பாதுகாத்தல்.
3. ஆட்சி மாற்றத்தின் போதோ அமைச்சர்கள் மாறும் போதோ கல்விக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுவதைத் தடுத்தல்.
4. தேசியக் கல்விக் கொள்கையின் தனித்துவத்தினைப் பேணுதல்.
5. மாறும் சமுதாயத்திற்கு ஏற்புடையதான கல்வியமைப்பினை அமைத்தல் போன்றன.
கல்வியின் நோக்கங்கள் குறிக்கோள்களை அடைவதற்கான கல்வி முறையின் கட்டமைப்பு மிகப் பரந்துபட்டதாகும். அது பின்வரும் அம்சங்களை கொண்டமைந்துள்ளது.
ஆணைக்குழுவின் அமைப்பு
1. 1978ஆம் ஆண்டு 16ஆம் இலக்கப் பல்கலைக்கழகச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் தலைவர்.
2. 1990 ஆண்டு 20 இலக்க மூன்றாம் நிலையும் தொழிற் பயிற்சிக்கான கல்விச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர்.
3. கல்வி உயர்கல்வி அமைச்சரினால் சிபாரிசு செய்யப்பட்ட ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒருவர்.
4. நிதி அமைச்சரினால் சிபாரிசு செய்யப்பட்டு ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஒருவர்.
5. மாகாணசபை அமைச்சரினால் சிபாரிசு செய்யப்பட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஒருவர்.
6. கல்வி நிர்வாகம் முகாமைத்துவம் என்பவற்றில் திறமை உடையவர்கள் அல்லது தொழிலில் பெருமதிப்புப் பெற்றவர்கள் போன்றோரில் இருந்து 10 பேரை ஜனாதிபதி நியமிப்பார்.
தலைவரும் உதவித் தலைவர் கொள்கை உதவித் தலைவர் திட்டமிடல் ஆகியோர் ஆணைக்குழுவில் முழுநேர வேலை செய்வோராவர்.
தேசியகல்வி ஆணைக்குழுவின் தொழிற்பாடு
1) தெளிவான தேசிய கல்விக் கொள்கைக்கான சிபாரிசுக்களை வழங்குதல். கல்விக் கொள்கையின் தொடர்ச்சித் தன்மையைப் பேணவும் சமுதாயம் மாற்றங்களின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கக் கூடியதாக கல்வி முறையினை அமைப்பதற்கும் திட்டம் அல்லது திட்டங்களையும் கொள்கைகளையும் மீளாய்வு செய்வதற்கும் தேவையான சிபாரிசுகளை ஜனாதிபதிக்கு வழங்குதல்.
தேசிய கல்விக் கொள்கை திட்டம் திட்டங்களை காலத்திற்கு காலம் மீளாய்வு செய்து தேவையான இடத்து மாற்றங்களைச் செய்வதற்கு ஜனாதிபதிக்கு சிபாரிசுகளை வழங்குதல்.
ஜனாதிபதியால் குறித்தொதுக்கப்பட்ட கல்வி தொடர்பான எந்த விடயம் தொடர்பாகவும் அவருக்கு ஆலோசனை வழங்குதல்.
2) கல்வியானது வேலைவாய்ப்பு கைத்தொழில் சமூகத் தேவைகள் என்பவற்றுக்குப் பொருந்தக் கூடியதாக அமைய கல்வி நிறுவனங்கள் கற்பித்தல் முறைகள் பாடவிதானம் என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தல்.
கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் தேவையான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்குதல்.
சமூகத்திற்கும் கல்வி நிறுவனத்திற்குமிடையே பலமான இணைப்புக்களை ஏற்படுத்தல்.
சமூகத்தின் முழுமையான மனித அபிவிருத்திக்கான மூலவள நிலையங்களாகக் கல்வி நிறுவனங்களை அபிவிருத்தி செய்தல்.
பாடசாலைகளுக்கிடையே அமையும் பிரதேச வேறுபாடுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்தல்.
ஆசிரியர்களினதும் ஏனைய கல்விச் சேவை ஆளணியினரும் தொழில்சார் நிறுவனங்களைப் பேணுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் எடுத்தல்.
ஆரம்ப இடைநிலைக் கல்வியை விட்டு விலகும் குழந்தைகளின் திறமைகளைப் பூரணமாக அபிவிருத்தி செய்வதற்கு தேவையான மாற்று நிகழ்ச்சித் திட்டங்களை வழங்குதல்.
சகல சமூகத்தையும் சமயங்களையும் சார்ந்த குழந்தைகளுக்கு கலாச்சார சமய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக் கூடிய வகையில் பாடவிதானத்தில் மாற்றங்களைச் செய்தல்.
மேற்குறிப்பிட்ட சிபாரிசுகளைப் பயனள்ளதாக்கத் தேவையான சட்டவாக்க மாற்றங்களை ஏற்படுத்த ஆவன செய்தல்.
ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள்
1. மேற்குறிப்பிட்டுள்ள தொழிற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக
தேவையான ஆய்வுகளையும் புலனாய்வுகளையும் அளவீடுகளையும் செய்வதற்கும் , நிபுணர்கள் பாண்டித்தியம் உடையவர்களின் அல்லது பொதுமக்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாக அவர்களுடன் தொடர்புபடவும் , ஜனாதிபதியினால் கேட்கப்பட்டதற்கிணங்க கல்வித் திட்டங்களைத் தயாரிப்பதற்கும்.
2. ஆணைக்குழுவின் தொழிற்பாடுகளுக்கு ஒத்தான தொழிற்பாடுகளை உடைய இலங்கைக்கு வெளியேயுள்ள நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கும்.
3. எந்த வங்கி அல்லது வங்கிகளாவது நடைமுறைச் சேமிப்பு அல்லது நிலையான வைப்புக் கணக்குகளை ஆரம்பித்துப் பேணவும்.
4. தனது தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான ஒப்பந்த வேலைகள் அல்லது நிபந்தனைகளில் ஈடுபட்டுச் செயற்படவும்.
5.நிறுவனங்களோ தனியாரோ கல்வி ஆய்வுகளை மேற்கொள்ள ஒழுங்குகளைச் செய்யவும். இலங்கையிலோ வெளிநாட்டிலோ
6. கல்வியிலும் கல்வி தொடர்பான துறைகளிலும் தகவல் தரவ வங்கிகளை இலங்கைகளிலும் வெளிநாடுகளிலும் நிறுவவும் பேணவும் உரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டள்ளன.
மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் - கல்வி
இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தம் அட்டவணை I பின் இணைப்பு III
1. குறிப்பிடப்பட்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அரசாங்கப் பாடசாலைகள் எல்லாவற்றிக்கும் வசதிகளை ஏற்படுத்தல்.(குறிப்பிடபட்ட பாடசாலைகளாவன தேசிய பாடசாலைகள்இ பணியினருக்கான விசேட பாடசாலைகள்இ விசேட அபிவிருத்தித் திட்டங்களுக்கான பாடசாலைகள்)
2. பின்வரும் பாடசாலைகளது முகாமைத்துவமும்இ மேற்பார்வையும்
(அ) சகல முன் பாடசாலைகளும்
(ஆ) மேலே குறிப்பிடப்பட்ட பாடசாலைகள் தவிர்ந்த எல்லா அரசாங்கப் பாடசாலைகளும் (தரத்தினை உறு உறுதிப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சு பாடசாலைகளின் முகாமைத்துவத்தை மேற்பார்வை செய்யும் அதிகாரத்தையும்இ பரசீலனை செய்யும் அதிகாரத்தையும் கொண்டிருக்கும்)
3. கல்விப் பணியணியினர் அனைவரினதும் ஒழுக்கக் கட்டுப்பாடும் , இடமாற்றமும். உதாரணம் - ஆசிரியர்கள்இ அதிபர்கள்இ கல்வி அதிகாரிகள்இ தேசிய சேவைக்குரிய ஆனால் மாகாண அதிகார சபையில் தற்காலிகமாக பணியாற்றும் உத்தியோகத்தர்கள் பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு செய்யும் உரிமையுடையோராவர். மாகாண சேவைக்குரிய உத்தியோகத்தர்கள் பகிரங்க சேவை ஆணைக்குழுவிற்கு தமது உத்தியோக இழப்பு தொடர்பாக மனுச் செய்ய உரிமையுடையவராவர்.
4. பல்கலைக்கழகங்கள்இ கல்விக் கல்லூரிகள் போன்றவற்றிலிருந்து பட்டங்களையும்இ திப்ளோமாக்களையும் பெற்றவர்களை கற்பித்தல் சேவைக்கு நியமித்தல்.
5. இவ்வாறான வகுதியினர் போதியளவு கிடைக்கும் வரை கற்பித்தல் சேவைக்கு நியமனம் செய்யப்படுவது பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்படும் நியமனப் பரீட்சை முடிவுகளிலிருந்து மேற்கொள்ளப்படும். இப்பரீட்சை முடிவுகளின்படி மாகாண அதிகார சபையுடன் சேர்ந்து நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு தெரிவுகள் இடம்பெறும்.
6. தரம் 1 ஏ.பி , 1 சி பாடசாலைகளது அதிபர் நியமனங்கள். (கல்வி அமைச்சினால் தெரிவிற்கான அம்சங்கள் வரையறுக்கப்படும்.)
7. தரம் 1 ஏ.பி , 1 சி பாடசாலைகள் அதிபர் நியமனங்கள் கல்வி விடயத்திற்கு பொறுப்பான கல்வி அமைச்சரின் செயலாளரினால் அல்லது பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும்.
8. ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியணியினரை பயிற்றுவித்தல் தேசிய கல்வி நிறுவகத்தின் பொறுப்பாகும். மாகாண அதிகார சபைகள் தமது தேவைகளை தேசிய கல்வி நிறுவகத்திற்கு எழுதலாம்.
9. ஆலோசனை கூறும் செயற்பாட்டைக் கொண்ட மாகாணக் கல்விச் சபைகளது நியமனம் கல்வி அமைச்சரின் பொறுப்பாகும். எவ்வாறாயினும் மாகாண அதிகார சபையின் முதலமைச்சருடன் ஆலோசித்து இது மேற்கொள்ளப்படும்.
10. கல்வி அமைச்சினால் வழங்கப்படும் குறிப்புரைகளுக்கமைய மாகாண அதிகார சபைகள் பாடசாலை அதிகார சபையைப் பாதிக்கும்.
11. மாகாண அதிகார சபைகள் பாடசாலைச் சபைகளது தொழிற்பாட்டை மேற்பார்வை செய்யும்.
12. திட்டங்களின் தயாரிப்பு. (கல்வி அபிவிருத்தித் திட்டமும் வருடாந்த அமுலாக்கல் திட்டமும் மாகாண சபையின் பொறுப்பாகும்)
13. வருடாந்த கல்வி அபிவிருத்தித் திட்டத்தை அமுலாக்கல்.
14. அதிபர்கள் ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகளது செயற்பாடுகளை மதிப்பிடல்.
15. தேசிய கல்வி நிறுவனத்தின் அனுமதியுடன் சேவைக்காலப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.
16. பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் அனுமதியுடன் உள்;ர் பரீட்சையை நடாத்துதல்.
17. முறைசாராக் கல்வித் திட்டங்களை அமுலாக்கல்.
18. முன் பாடசாலைகளை பதிவு செய்தலும் மேற்பார்வை செய்தலும்.
19. ஆரம்பக் கலைத்திட்டத்தினதும் 2ஆம் இடைநிலைக் கலைத்திட்டத்தில் தெரிவு செய்த பாடங்களினதும் உள்;ர் வேறுபாடுகளுக்காக தேசிய கல்வி நிறுவகத்தின் அனுமதியைப் பெறுதல்.
20. கல்வி சார்ந்த கட்டிடங்களையும்இ நூல்நிலையங்களையும் இ விளையாட்டு மைதானங்களையும் அமைத்தலும்இ பராமரித்தலும்.
21. கற்பித்தல் உபகரணங்கள்இ கட்புல சாதனங்கள்இ தளபாடங்கள் மற்றும் உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளலும்இ உபயோகித்தலும்.
22. கல்வி அமைச்சினால் குறிப்பிடப்பட்ட விசேட பொருட்கள் தவிர்ந்த ஏனைய விஞ்ஞான உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளுதலும், விநியோகித்தலும்.
23. கல்வி அமைச்சின் அனுமதியைப் பெற்றுப் பாசாலைப் பாடநூல்களை உருவாக்குதலும்இ விநியோகித்தலும்.
24. தேசிய நூல் நிலைய சேவைகள் சபையின் வழிகாட்டல்களுக்கு ஒப்ப பாடசாலை நூல் நிலையங்களை அமைத்தலும்இ அபிவிருத்தி செய்தலும்.
UNESCO இன் கல்வி நோக்கங்கள்.
1. சகலருக்கும் கல்வி
2. விஞ்ஞானக் கல்வியை வழங்குதல்
3. கற்றலுக்காகக் கற்றல்
4. ஆரம்பக் கல்வியிலிருந்து இடைநிலைக் கல்விக்குச் செல்ல வழிவகுத்தல்.
சிறுவர் உரிமைகளின் அடிப்படையில் மாணவர்களின் உரிமைகள்
1. தன்னை வெளிப்படுத்துவதர்க்கான உரிமை
2. பத்திரிகைச் சுதந்திரம் பாடசாலையொன்றின் ஒழுக்கத்தைப் பாதிக்கத்தக்கதும், ஏனையோரின் சுதந்திரத்தைப் பாதிக்கக் கூடியதும், வன்முறையைத் தூண்டக் கூடியதுமான பிரசுரங்களை வெளியிடமுடியாது
3. கழகங்கள் இருப்பதற்கான உரிமை : மாணவர்கள் விரும்புகின்ற கழகங்களில் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ அங்கத்தவராக இருக்கலாம். எனினும், சட்டரீதியற்ற விதத்தில் பாடசாலைக்கு சமூகம் தராமல், பாடசாலை நேரத்தில் பகிஸ்கரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது.
4. காரணம் தெரிவதற்கான உரிமை தண்டனை வழங்குவதற்குமுன் அதற்கான முழுக்காரணமும் மாணவர்களுக்குத் தெரிவதற்கான உரிமையுண்டு.
5. தான் விரும்பும்விதத்தில் தனது தோற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை, ஆனால், இது பாடசாலையின் வேலைகளுக்கு, ஏனைய மாணவர்களின் உரிமைகளுக்குக் குந்தகமாய் இருக்கக்கூடாது.
6. மாணவர்கள் தமக்கான இரகசியங்களைக் கொண்டிருப்பதற்கான உரிமையுண்டு.
7. திருமணம் புரியவும், கருத்தரிப்பதற்குமான உரிமை.
8. ஆசிரியர் மாணவர்களைத் துன்புறுத்தவோ, உடல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தவோ முடியாது.
9. மாணவர் தமது சொந்த சமயத்தை பாடசாலையில் பின்பற்றவும், அனுஸ்டிக்கவும் உரிமையுண்டு.
10. காயங்களிலிருந்தும், அபாயங்களிலிருந்தும் பாதிப்புப்பெறுவதற்கான உரிமை.
11. சிறுவர் துஸ்பிரயோகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை.
12. கல்வியில் சமவாய்ப்புப் பெறுவதற்கான உரிமை.
வளர்ந்தோர் கல்வி - Adult Education
வளர்ந்தவர்கள் தமது திறமை, அறிவு, தொழிநுட்ப, தொழில்சார் தகமைகளை வளர்த்துக்கொண்டு, தனிப்பட்ட விருத்தியை அடையவும், நாட்டின் பொருளாதார விருத்தியை அடையவும், நாட்டின் பொருளாதார, பண்பாட்டுவிருத்தியில் பங்குகொள்ளவும் தமது எண்ணத்திலும், நடவடிக்கைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தவும் தகுந்தமுறையில் அமைக்கப்பட்ட வழமையான அல்லுத அவ்வாறற்ற முழுமையுள்ள, ஒழுங்குசெய்யப்பட்ட கல்வி முறையின் தொடர்ச்சி.
வளர்ந்தோர் கல்வி நாட்டுக்கு நாடு வேறுபடும். மகாத்மா காந்தியவர்களின் vardha கல்வி முறையின் மூலம் நாட்டுக்குரிய கலாசாரத்தைப் பாதுகாக்க வளர்ந்தோருக்குக் கல்வி புகட்டினார்.
வளர்ந்தோர் கல்வி நோக்கங்கள்
01. புதிய அறிவைப் பெறுதல்.
02. பெறமுடியாமல் போனகல்வியை வழங்குதல்.
03. தொழில் உலகுடன் நவீனதொடர்பு.
04. தற்காலச் சமூகப் பிரச்சினைகளை விமர்சித்தல்.
05. பௌதீகச் சூழலுடன் பொருத்தமான தொடர்பை ஏற்படுத்தல்.
06. பல்வேறு சமூகங்களின் பண்பாடுகளை விளங்குதல்.
திறந்தகல்வி - Open Education
கல்வி பெறும் உரிமையை இழந்தவர்கள் கற்கவழி செய்தல், கற்பதற்கு ஏற்பட்ட தடைகளை நீக்கி கற்க உதவும் கல்வி.
கற்றலுக்கான தடைகள்
01. கல்விச் சாதனக் குறைபாடு
02. வறுமை
03. தொழிலில் ஈடுபடுதல்
04. வீட்டுவேலை
05. அண்மையில் பாடசாலை இல்லாமை
06. கல்வியின் மேல் அவநம்பிக்கை
திறந்தகல்வியின் அடிப்படைப் பண்புகள்
01. நெகிழ்ச்சித் தன்மை அதிகம்
02. கட்டுப்பாடுகள் இன்மை
திறந்தகல்வியின் சிறப்பியல்புகள்
01. தொடர்ச்சியாக பாடசாலை கற்கை நெறியை பகுப்பாய்வுசெய்தல்.
02. கற்பதர்க்கான தகைமைகளை இலகுவாக்குதல்.
03. T.V., Radio, சஞ்சிகைகளின் உயர் பயன்பாடு.
04. எதிர்பார்த்த நோக்கத்தை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்தல்.
கற்பவரும், கற்பிப்பவரும் நேருக்குநேர் தொடர்ச்சியாகச் சந்திக்கா வண்ணம் எழுத்துமூல, இலத்திரனியல் ஆவணங்களின் உதவியுடன் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறுதல்.
தொலைக் கல்வியின் சிறப்பியல்புகள்
01. ஆசிரியரும் மாணவரும் தொலைவில் காணப்படுதல்.
02. சுய கற்றலுக்குரியசந்தர்ப்பம் அதிகம்.
03 முன்னரேதிட்டமிட்டுதயார் செய்யப்பட்ட பாடநெறி நூல்களாகவும் ஒலிநாடா, ஒளிநாடா VCD, DVD மூலமும் வழங்கப்படுதல்
தொலைக் கல்வி நடைபெறும் விதம்
01. அச்சிட்டசாதனப் பரிமாற்றம்.
02. அச்சிட்டசாதனப் பரிமாற்றமும், குறுகியவகுப்பும்.
03. அச்சிட்டசாதனப் பரிமாற்றமும் வேறுபட்ட தொடர்பாடல் சாதனப் பரிமாற்றமும்.
04. அச்சிட்டசாதனப் பரிமாற்றமும் வேறுபட்ட தொடர்பாடல் சாதனப் பரிமாற்றமும் குறுகிய வகுப்பும்.
05. அச்சிட்டசாதனப் பரிமாற்றமும் வேறுபட்ட தொடர்பாடல் சாதனப் பரிமாற்றமும் குறுகிய வகுப்பும் வழிகாட்டல் சேவையும்.
தொலைக் கல்வியின் நன்மைகள்
01. தொழில் புரியும்போது கல்வியைப் பெறுதல்.
02. பௌதீகவளங்கள் தொடர்பான பிரச்சினைகள், தேவைகள் குறைதல்.
03.சேவை நிலையத்தில் நிலவும் மனிதர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் குறைதல்.
04. கல்விக்கான செலவுகுறைதல்.
05. அதிகமாணவர்கள் ஒரேநேரம் கற்றல்.
06. இடைவிலகல் குறைவு.
தொலைக் கல்வியை வழங்கும் இலங்கை நிறுவனங்கள்
01. திறந்தபல்கலைக் கழகம்
02. தேசியகல்விநிறுவகம்
கல்வியில் சமவாய்ப்பு பெறும் விதம் - Equally in Education
இனம், நிறம்,சமூகநிலைமை என்பவற்றை கவனத்தில் கொள்ளாது வயது, திறமை, நுண்ணறிவு என்பவற்றில் சமமானவர்களுக்கு சமவாய்ப்பான கல்வியைவழங்குதல்.
இலங்கையில் இதற்கான நடவடிக்கைகள்
01. இலவசக் கல்வி
02. இலவசச் சீருடை
03. இலவசப் பாடநூல்
04. இலவச மதிய உணவு
05. புலமைப் பரிசில்கள்
06. தேசியபாடசாலைகள்
07. மாகாணசபைகளினூடாக அதிகாரப் பரவலாக்கம்
விழுமியக் கல்வி - Value Education
கற்போரைப் பண்புள்ளவராக்குவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற கல்வி. வயதுடன் விழுமியங்கள் மாறுபடும்.
சான்றோரையும், சால்பு உள்ளோரையும் உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்படும் கல்வி. விழுமியவளர்ச்சிக்கு கலைத்திட்டத்தில் பாடம். ஒதுக்குவதுகடினம். ஆசிரியர்களின் நடத்தைகள் மூலமே இவற்றைமாணவர்களிடம் ஏற்படுத்தமுடியும்.
விழுமியக் கல்வி அவசியம் என்பதற்கானகாரணங்கள் :
01. பௌதீகப் பொருட்களின் மேல் மனிதனுக்குள்ள ஆசை மிகவும் அதிகரித்துள்ளது.
02. சமூகத்தில் எல்லாவற்றிற்கும் அதிகளவில் போட்டிநிலவுகின்றது.
03. மனிதனின் கருணையையும் கீழ்ப்படிவையும் குறைவாக மதிப்பிடும் மனநிலை அதிகரித்துள்ளது.
04. விழுமியங்களில் நம்பிக்கையும் ஆர்வமும் அற்றுப்போனமை.
05. தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்கள் தமதுவாழ்வை இயந்திரமயமாக்கிக் கொண்டமை.
வாழ்க்கைமுழுவதும் கல்வி / தொடரும் கல்வி - Life Long Education
பிறப்பு முதல் இறப்பு வரைகல்வி தொடர்ந்து நடைபெறும். உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. எனவே. அறிவும் மாற்றமடைந்து செல்கின்றது. அறிவு பெருகிக்கொண்டிருக்கிறது. இதனை முறைசார் கல்வி மூலம் மட்டும் வழங்கமுடியாது. வாழ்க்கை முழுவதும் தொடரக் கூடிய முறையில் கல்வி மூலம் இதனை அதிகளவில் பெறலாம்.
இனம், நிறம், மதம், தொழில் போன்ற எந்த ஒரு காரணத்தினாலும் கல்வி நிறுத்தப்படாமல் வாழ்க்கை முழுவதும் நடைபெறல் வேண்டும்.
அறிவுக்காகமட்டும் கற்காமல் திறன், மனப்பாங்கு, விழுமியம் என்பவற்றின் உயர்ச்சிக்காகவும் கற்றல் வேண்டும்.
பௌத்த தத்துவமான YavaNibban (பரிநிர்வாண நிலையை அடையும் வரையிலுள்ள காலம்) இல் வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.
மகாத்மாகாந்தியின் Nallthaleem கொள்கையும் வாழ்நாள் முழுவதும் கல்வி பெறவேண்டியதன் முக்கியத்துவத்தை கூறுகின்றது.
1970ல் Edgar Foretஇன் அறிக்கையிலும் வாழ்நாள் முழுவதும் கல்விதொடரவேண்டுமென கூறப்பட்டுள்ளது.
வாழ்நாள் முழுவதும் ஒவ்வொருநாளும் எல்லா இடங்களிலும் எல்லாமனிதர்களும் கல்வியைப் பெறல் வேண்டும்.
பேராசிரியர் Phillip Coombs அவர்களால் தனிமனிதனுக்குத் தேவையான கல்வியினூடாக வழங்க வேண்டியமிகக் குறைந்ததேவைப் பொதி (Minimum requirement packge) யில் பின்வரும் பண்புகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றைப்பெறவாழ்நாள் முழுவதும் கல்விஅவசியம்.
தொடரும் கல்வியின் நோக்கங்கள்
02. தொழில்களை வினைத்திறனுடன் செய்ய அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களைக் கற்றல்.
03. முறைசார் கல்வி மூலம் பெற்றுக் கொண்ட கல்வியை காலத்திற்கேற்ப மாற்றுதல்.
04. பரம்பரை இடைவெளிகளைக் குறைத்தல்.
05. சகலரும் உடல், உளம், சமூகமனவெழுச்சித் துறைகளில் முழு விருத்தியடைதல்.
06. தனிநபர் ஆக்கபூர்வமானவேலைகளில் ஈடுபடுதல்.
07. புதிய திறன்களைப் பெறுதல்.
08. ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக்குதல்.
09. சிறந்த பிரஜையாதல்.
10. ஒருவரின் உத்திகளையும், மனப்பாங்கையும் மீளவும் புதுப்பித்தல்.
தற்காலத்தில் நடைபெறும் அறிவு வெடிப்புக்கு (Knowledge explosion) தன்னை இசைவாக்கிக் கொள்ளுதல்.
ED 1212 - கல்வியும் மனிதவள அபிவிருத்தியும்.
0 Comments