சமூக நல்லுறவு
மனிதன் தனித்து வாழமுடியாதவன். அவன் ஏனைய மக்களோடும், சமூகத்தோடும் இணைந்து வாழவேண்டியுள்ளது. சமூகத்தின் நோக்கம். மனிதனை வழிநடாத்துதலும் அவனுக்குச் சமூகத்தில் இணக்கமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதுமாகும். நல்லிணக்கமான வாழ்வுக்கு மனிதனைத் தயார்ப்படுத்தல் ஊடாக ஒரு சமூகத்தில் நல்லுறவைக் கட்டியெழுப்ப முடியும், அந்த வகையில் இன்றைய சமூகத்தில் சமூக நல்லுறவு என்பது இன்றியமையாத தேவையாக உள்ளது.
இன்றைய உலகில் முரண்பாடு என்பது இல்லாத ஒரு இடமே இல்லை என்று கூறுமளவிற்கு முரண்பாடுகளும் வன்முறைகளும் மக்களின் வாழ்வில் அன்றாட விடயமாகிவிட்டது. கிராம மட்டத்திலிருந்து சர்வதேசம் வரை முரண்பாடுகளும் மோதல்களும் இடம்பெற்றவண்ணமே உள்ளன. இதற்குப் பல காரணிகள் அடிப்படையாக அமைகின்றன. இதில் மிகப் பிரதானமானது மக்கள் மத்தியில் புரிந்துணர்வின்மையும், விட்டுக் கொடுப்பற்ற தன்மையும் சமூகநல்லுறவின்பால் ஆர்வமற்ற தன்மையும் காரணமாக அமைகின்றன. இவ்வாறான நிலையிலிருந்து நீங்க மக்கள் மத்தியில் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்பி சமூக நல்லுறவைத் தோற்றுவிக்க வேண்டியது மிக அவசியமாகும். இந்த வகையில் சமூகநல்லுறவு அல்லது சமூக நல்லிணக்கம் என்றால் என்ன? என்று நோக்குவதும் சமகாலத்தில் சமூகநல்லுறவின் அவசியத்தை உணர வேண்டியதும் மிக அவசியமானதாகும்.
நல்லுறவு என்பதன் ஆங்கிலப்பதம் “ஹாமொனி" என்ற சொல்லாற் சுட்டப்படுகின்றது. இது கிரேக்கமொழிச் சொல்லான "ஹாமொனியா" என்பதிலிருந்து தோற்றம் பெற்றது. இச்சொல்லின் பொருள். ஒத்திசைவு, உடன்பாடு எனக் குறிப்பிடப்படுகின்றது.
இந்த வகையில் சமூக நல்லுறவு என்பதற்குச் சமூக நல்லிணக்கம், சமூக ஒருங்கிணைவு. சமூக ஒருமைப்பாடு, சமூக ஒற்றுமை, சமூக ஒத்திசைவு, சமூக உடன்பாடு எனப் பல அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
சமூக நல்லுறவு என்பதற்கு அறிஞர்கள் பல்வேறு வரைபிலக்கணங்களை வழங்கியிருக்கின்றனர். நன்கு இசைவுபட்டனவான மக்கள் நடவடிக்கைகள் ஓரிடத்தில் காணப்படுகின்றபோது, அந்தச் சமூகம் நல்லுறவுடன் வாழ்கின்றது எனக் கருதப்படுகின்றதாகப் பிரட் போல்ட்வரி என்பவர் கூறியுள்ளார். அத்துடன் சமூக நல்லுறவு என்பது கலாசாரத்தை மேவிச் செல்லும் ஓர் ஒழுக்க நியதி என்பதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
லுக் ரெயிச்லர் மற்றும் தினியா பப்பென்ஹோல்ஸ் என்போர் குறிப்பிடுகையில் "சமூக நல்லுறவு என்பது முரண்பட்டு நிற்பவர்களிடையே காணப்படும் வன்மம், மனக்கசப்பு, விரோதம், என்பவற்றிற்குப் பதிலாக நட்புறவு, தோழமை என்பவற்றை ஏற்படுத்துவதாகும் என்றனர். ஜோன் போல் லேட்றச் என்பவர் "மக்கள் மனதில் ஏற்படும் சமயம் சார்ந்த இரக்கம் நல்லிணக்கமாகும்” என்றார்.
சமூக நல்லுறவென்பது இனம், மத, மொழி, சாதி, பால், வர்க்க, கலாசார வேறுபாடுகள் அனைத்திற்கும் அப்பால் உயர்வான விழுமியங்களாகக் கருதப்படுகின்ற ஐக்கியம், புரிந்துணர்வு, சகோதரத்துவம், விட்டுக்கொடுப்பு, மற்றும் சகிப்புத்தன்மை போன்றன. ஒரு சமூகத்தில் மேலோங்கிக் காணப்படுமாயின் அதனைச் சமூக நல்லுறவு எனக் கூறலாம்.
சமூக நல்லுறவானது சமூகத்தில் வேறுபட்டிருக்கும் குழுக்களுக்கிடையில் அமைதியான இடைத்தொடர்பை ஏற்படுத்தும் ஒரு ஊடகமாகக் காணப்படுகிறது. சீன இனத் தலைவரான Hujinato.A. என்பவர், "சமூக நல்லுறவானது மத்தியதர சமூகத்தைக் குறித்து நிற்கின்றது என்றார்”. இவரது காலத்தில் சீனாவில் சமூகமானது அநீதியாகவும் ஏற்றத்தாழ்வுடனும் காணப்பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு 2006 இல் Harmony என்ற பதமானது தூரநோக்கத்தைக் குறிக்கின்றது என்று அடையாளப்படுத்திக் காட்டினார். இச்சொற்றொடரானது கன்பூசியஸ் காலத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் இதமான இசையைப் போன்று சமூகத்தை நல்லுறவுக்கும் சமநிலைக்கும் இட்டுச் சென்றுள்ளார்.
சமூக நல்லுறவு எனப்படுவது "முற்றிலும் வேறுபட்ட தேசிய, சமய, சாதி கோட்பாடுகளுக்கு உட்பட்டுள்ள மக்கள் ஒன்றிணைந்து சகவாழ்வு வாழ்தல் சமூகநல்லுறவு எனப்படுகின்றது. பொதுவாக சமாதானமான சகவாழ்வு எனப்படுவது, ஒன்று சேர்ந்து வாழக்கற்றல். ஒன்று சேர்ந்திருத்தல், வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளல் என்பன சமாதானமான சகவாழ்வு எனப்படுகின்றது. சமாதானமான சகவாழ்வானது ஏனையவர்களுடன் வேற்றுமைகளை ஏற்றுக் கொண்டும். உறுதியான உறவினைக் கொண்டும் ஒருமித்து வாழ வைக்கின்றது. இச்சகவாழ்வானது உறவுகளை உறுதி செய்வதோடு பெருந்தன்மை, உரிமை, சுதந்திரம் என்பவற்றை சமமாக கருதுவதனையும் அதிகப்படுத்துகின்றது. இந்தவகையில் வேறுபாடுகளுக்கு மத்தியில் சமாதானமான சகவாழ்வு வாழ்தல் என்பதும் கூட சமூக நல்லுறவு எனப்படுகின்றது.
சமூகத்தில் சமூக நல்லுறவின் செயற்பாடுகளாக, வலு அல்லது பெறுமானம் காணல், உணர்ச்சிகளை வெளிப்படுத்தல். அன்பை அதிகரித்தல், சமாதானம், மதிப்பு, நம்பிக்கை. மற்றும் சமத்துவம் என்பவற்றை ஏற்படுத்துவதாக அமைகின்றது. மற்றும் சமூகத்தில் இனம்,மதம்,மொழி, பால், வர்க்கம், கலாசார பாரம்பரியங்கள், தரம், வயது, திருமண அந்தஸ்து. போன்ற அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் சமத்துவத்தை வழங்குதல் என்பதே சமூக நல்லுறவின் குறிக்கோளாகும்.
குறிப்பாக மதங்கள் அனைத்துமே சகோதரத்துவத்தினையும் சமூக நல்லுறவினையுமே நோக்கமாகக் கொண்டுள்ளன. மதங்கள் குறிப்பிடும் நற்கருத்துக்களையும், சமூக நல்லுறவுச் செயற்பாடுகளையும் அனைவரும் விளங்கக்கூடிய வகையில் மதங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறான நற்கருத்துக்களின் ஊடாக மதங்களை ஊடகமாகக் கொண்டு சமூக நல்லுறவினை ஏற்படுத்த முடியும். உதாரணமாக ஜோன் டோசன் என்பவரால் “South Central Los - Angeles" இல் 20வருட ஆன்மீகப் பணியின் வழியில் வெள்ளையருக்கும் கறுப்பர்களுக்குமிடையே நல்லிணக்கச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டமையைக் குறிப்பிடலாம்.
ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியானது சமூக நல்லுறவு என்பது. ஒருவர் மற்றொருவருடன் நம்பிக்கைக்கு ஏற்றவகையிலான செயற்பாடுகளினை மேற்கொள்ளல் எனக் குறிப்பிடுகின்றது. இதே போன்று கேம்பிறிட்ஜ் ஆங்கில அகராதியானது நல்லிணக்கம் தொடர்பாகக் கூறுமிடத்து, “குறித்த சந்தர்ப்பம் ஒன்றின் போது, இரு நபர்கள் அல்லது குழுக்களுக்கிடையே ஏற்பட்டத் தகராற்றின் பின்னரான நட்புநிலை. இருவேறுபட்ட தன்மையுடையவர்கள் ஒரு செயற்பாட்டினை மேற்கொள்வதற்கான நம்பிக்கைகள், வழிகாட்டல்கள் என்பவற்றை ஏற்றுக்கொள்கின்ற தன்மை” எனக் குறிப்பிடுகின்றது.
சமூக நல்லுறவு முறையாகக் கட்டியெழுப்ப வேண்டுமாயின். அனைத்துச் சமூகங்கள் மத்தியிலும் மனிதம் என்ற சிந்தனை விதைக்கப்பட வேண்டும். நல்லுறவு எனப்படுவது இனம், மதம், மொழி, கலாசாரம், என்ற சமூக வேறுபாடுகளைக் கடந்தும், அரசியல் பொருளாதார வேற்பாடுகளினைக் கடந்தும் ஒரு குறித்த வரையறைக்குட்பட்ட எல்லைக்குள் வாழ்கின்ற அனைத்து மக்களும் விட்டுக்கொடுப்பு, பரஸ்பரம், நம்பிக்கை. ஒற்றுமை. சமத்துவம். சகிப்புத்தன்மை என்பவற்றை வளர்த்துக் கொண்டு ஐக்கியமக வாழ்தலைக் குறிக்கின்றது. இவை அனைத்துமே சமூகம் என்ற கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படுகின்றது.
சமூகம் என்னும்போது அது மனிதன் வாழ்கின்ற சூழலை குறித்து நிற்கின்றது. இம்மனித சூழலை பல்வேறுபட்ட காரணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனுள் இன, மத, மொழி, பால், வர்க்கம், அரசியல், பொருளாதாரம், கலாசாரம், பண்பாடு போன்ற இன்னோரன்ன காரணிகள் உள்ளடக்கப்படுகின்றன. இக்காரணிகள் மூலம் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துதலே சமூக நல்லுறவின் நோக்கமாகும்.
சமூகம் என்ப மனிதர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட அமைப்பு ஆகும். இந்த அமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு ஒரேயொரு நிபந்தனையே உண்டு. மனித இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. மனித இனம் இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களுள்ளும் வளர்ச்சியால் மேம்பட்டது.. அறிவால் உயர்ந்தது. நாகரிகம், பண்பாடு, கலாசாரம் எனும் முதுசொத்துக்களையுடையது.
முரண்பாடு, யுத்தம், பலாத்காரம் என்பன இருக்குமாயின் மனித தேவைகள் பலவற்றை இழக்க வேண்டி ஏற்படும். ஆதலால் தேவைகள் பல பூர்த்தி செய்யப்படுவதற்கு சமூகநல்லுறவு முக்கியமானதாகும். இது நமது நோக்கங்களால் பூர்த்தி செய்யக் கூடியது. மனித குலம் அனைத்தினதும் முக்கியமான தேவை மகிழ்ச்சியாகும். சமூகநல்லுறவானது மகிழ்ச்சிக்குத்தடையான விடயங்களை நீக்கி எல்லோருக்கும் மகிழ்வு தரக்கூடியதாகும். அதேபோல் எல்லோரும் விரும்பியபடி வாழ்வதற்கான சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற நோக்கமும் எல்லோருக்கும் பொதுவானதாகும். விரும்பியமொழி பேசுவதற்கும். விரும்பிய கலாசாரத்தைப் பின்பற்றுவதற்கும். விரும்பிய இடத்தில் வாழ்வதற்கும். விரும்பிய சமயத்தை பின்பற்றவும் பூரண சுதந்திரம் அவசியமாகும். முரண்பாடு. யுத்தம் என்பன சுதந்திரத்தை இல்லாமல் செய்யும். சமூகங்களுக்கிடையே சமூகநல்லுறவு நிலவுமேயானால் சுதந்திரம் இயல்பாகவே கிடைக்கும்.
சமூக நல்லுறவின்மை பல்வேறு பாதிப்பினை ஏற்படுத்தும். அவை மனிதன். குடும்பம். சமூகம் என்ற அனைத்தையும் பாதிக்கும் சம்பவங்களாகக் காணப்படும். சித்த சுவாதீனமுற்றுப்போதல், தற்கொலை செய்தல், பலாத்காரம் புரிதல் போன்றன சிலவாகும். பலாத்காரமென்பது தனிமனித பலாத்காரம். குடும்ப ரீதியான பலாத்காரம், தேர்தல் பலாத்கரம். இனரீதியான பலாத்காரம் எனப் பலவகையாகக் காணப்படுகின்றது. இதைவிட உளரீதியான பாதிப்புக்களும் உண்டு. அவற்றில் சகிப்புத்தன்மையின்மை, வீண்பேச்சுக்கள். பொருத்தமற்ற தொடர்பாடல்கள் போன்றன சிலவாகும். சகிப்புத்தன்மை என்பதில் மற்றவரிடையே காணப்படும் வேறுபாட்டுத்தன்மையினை ஏற்றுக்கொள்ள முடியாதிருத்தல், மற்றவரது நம்பிக்கை, விழுமியம், கலாசார ரீதியான நடத்தை என்பவற்றை சகிக்க முடியாதிருத்தல் என்பன சிலவாகும். வன்மையான முறைகளைப் பாவித்தல், கெட்டவார்த்தைகளை உபயோகித்தல் என்பனவும் உளரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும். இதேபோன்றே மற்றவர்கள் முன்வைக்கின்ற கருத்துக்களை கலந்தலோசித்து முடிவெடுக்காமல் நேரடியாக நிராகரித்தல் போன்றவையும் சமூகநல்லுறவின்மையின் விளைவே. இதேபோன்றே வீட்டிலும், வேலைத்தளங்களிலும், வீட்டுக்கு வெளியேயும் பயத்துடன் இருத்தல் மற்றும் அவநம்பிக்கைகள் என்பனவும் சமூகநல்லுறவின்மையின் விளைவே. இதுபோன்றே தலைமைத்துவத்தின் தவறான நடவடிக்கையும் கூட சமூகநல்லுறவின்மையினால் ஏற்படுவதாகும். ஒரு வீட்டின் தலைவரோ குறைபாட்டு ஒழுக்க வழிகளைப் பின்பற்றல், துஷ்பிரயோகங்களை செய்தல், பாகுபாடு, புறக்கணிப்பு போன்றவையெல்லாம் சமூகநல்லுறவின்மையினால் ஏற்படுவதாகும். இவ்வாறான தவறான விளைவுகள் தோன்றாதிருக்க சமூகநல்லுறவானது தனிமனிதன் முதல் சர்வதேசம் வரை இருக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
மனிதர்கள் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் பிறப்பினால் அனைவரும் சமத்துவமுடையவர்கள். மனித உரிமைகளில் சமமான உரித்துடையவர்கள். ஆண், பெண் என இருபாலராக இருப்பினும் இந்து, முஸ்லிம், பௌத்த, கிறிஸ்தவராக இருப்பினும், தமிழ், சிங்கள, முஸ்லிமாக இருப்பினும் மனித இனத்தால் ஒன்றுபட்டவர்கள். அவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இல்லை. சமத்துவமே உண்டு. உதாரணமாக "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்று சொல்லப்பட்டு வருவதிலிருந்து பெண்ணையும், ஆணையும் சமூக மட்டத்திலிருந்து தெய்வீக நிலை வரை உயர்த்தி சமத்துவம் உள்ளவர்களாக மதிக்கப்படும் தன்மை தெளிவாகின்றது, உரிமைகளைக் கோருவதிலும், அனுபவித்தலிலும் சமத்துவம். சமசந்தர்ப்பம், சம வாய்ப்பு என்பன சமூக உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்ட கட்மைகள், பொறுப்புக்கள். பணிகள் ஆகியவற்றை சரிவர நிறைவேற்றுவதனாலேயே சமூகத்தின் கட்டுக்கோப்பு, உறுதி, ஒருமைப்பாடு என்பன பேணப்படுகின்றது. சமூகத்தின் பலமும் பலவீனமும். வளர்ச்சியும் - தேய்வும், பாதுகாப்பும் - பாதுகாப்பின்மையும் நல்லுறவும் நல்லுறவின்மையும் போன்றன சமூக உறுப்பினர்கள் எந்தளவிற்கு தத்தம் பொறுப்புக்களை நிறைவேற்றுகின்றார்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.
ஒரு நாட்டிலோ அல்லது பிரதேசத்திலோ வாழுகின்ற மக்கள் அல்லது சமூகம் மிகவும் ஆரோக்கியமுள்ளதாக இருக்க வேண்டுமாயின் சமூகநல்லுறவு இன்றியமையாததாகும். சமூகநல்லுறவு மக்கள் மத்தியில் உறவுப் பாலத்தினை ஏற்படுத்துகின்றது. வித்தியாசங்கள் மத்தியில் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வதற்கு சமூகநல்லுறவு மிகவும் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. மனிதன் சமூகத்தினால் ஒன்றிணைக்கப்பட்ட உறவுகள் நிறைந்த இப்பிரபஞ்சத்தினுள் அவதரிக்கின்றான். அன்று முதல் அவன் இறக்கும் வரை மனிதனுடைய வாழ்வு சமூகத்துடன் இணைந்ததாக அமைகின்றது. இதனால்தான் மனிதன் சமூகப் பிராணி என அழைக்கப்படுகின்றான். அவனது ஒவ்வொரு அசைவுகளும் சமூகத்தைச் சார்ந்ததாகவும் இருப்பதனால் ஏனைய மனிதனுடைய உதவி அவனுக்கு அவசியம் தேவைப்படுகின்றது. இத்தகையச் சூழலானது மனிதர்களிடையே நல்லுறவை ஏற்படுத்த ஏதுவாக அமைகின்றது எனலாம்.
உலக நாடுகளில் ஏற்பட்டுவரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள், போர்கள், புரட்சிகள் என்பன தோன்றுவதற்கு நிலையான சமாதானம் இன்மையே காரணமாகும். யுத்தம் நிறுத்தப்பட்ட போதும். சமூகத்தில் நிலவும் அநீதிகள், சமத்துவமின்மை, ஏற்றத்தாழ்வுகள், ஏகாபத்தியம் போன்ற நிகழ்வுகளால் சமூகம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. நிலையான சமாதானத்தின் தேவை எல்லா மக்களினதும் எதிர்பார்ப்பாகும். இது எமக்குள்ளும் சமூகத்திற்குள்ளும் நல்லுறவை உருவாக்கும் போதே அது சாத்தியமாகின்றது. நல்லுறவு என்பது சகல மக்களினதும் ஒன்றிணைந்த செயற்பாட்டின் வெளிப்பாடாகும். அதனை ஏற்படுத்துவது மக்களின் பொறுப்புமாகும். இதன் மூலம் நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும்.
சமூகநல்லுறவானது சமூகத்தில் பிரச்சினைகள் இன்றி உறவுகளுக்கிடையே இறுக்கமான உறவை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் உள்ள பேதங்களை இல்லாமல் செய்கின்றது. வேற்றுமைகளுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒன்றாக சமூக நல்லுறவு காணப்படுகின்றது. எனவே சமூகநல்லுறவானது ஒரு சமுதாயத்தின் இன்றியமையாத தேவையாக உள்ளதனைக் காணலாம்.
சமூக நல்லுறவினைச் சீர்குலைக்கும் காரணிகள்
பிரித்தானிய பிரதமர் வின்சன்ட் சேர்ச்சில்
ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்டாலின்
ஆகிய உலக வல்லரசுகள் மூன்றின் தலைவர்கள் இது குறித்து மென்மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக உலக அமைப்பொன்றை அமைக்க வேண்டும் என்ற யோசனையை மேற்குறித்த தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன்படி ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கும் கொள்கையாக ஐக்கிய நாடுகளின் கொள்கைப் பிரகடனத்தை வடிவமைப்பதற்காக 1945 ஜூன் மாதத்தில் ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்காக 50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றினர். மகாநாட்டில் பங்குபற்றாத போலந்தும் பின்னர் பிரகடனத்தில் கைச்சாத்திட்டது. இதன்படி ஆரம்ப அங்கத்தவர் தொகை 51 ஆகும். 1945 ஒக்டோபர் 24 ஆந் திகதி பிரகடனம் உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஐக்கிய நாடுகள் சபை உத்தியோக பூர்வமாக உதயமாகியது. அதனால் ஒக்டோபர் 24 ஆந் திகதி ஐக்கிய நாடுகளின் தினம் எனக் கருதப்படுகின்றது.
ஐ.நா சபையானது இருமுறை மனித சமுதாயத்திற்கு சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்திய யுத்தம் எனும் பேரின்னலிலிருந்து எதிர்காலப் பரம்பரையைக் காப்பாற்றல், அடிப்படை உரிமைகள் மீதும் மானிடத்தின் கெளரவத்தின் மீதும், மதிப்பின் மீதும், பெரிய சிறிய அரசுகளினதும், ஆண் பெண் இருபாலினதும் சம உரிமைகள் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக தோற்றம் பெற்றதாகும்.
ஐக்கிய நாடுகள் சபை அமைக்கப்பட்டதன் நோக்கங்கள்
ஒவ்வொருவரினதும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து சமாதானமாக நல்ல அயலவராக, நட்புறவுடன் வாழவும் சர்வதேச சமாதானத்தையும், பாதுகாப்பையும் நிலைநாட்ட மக்களின் சக்தியை ஒன்றிணைத்தல்.
இச்சங்கத்தின் நாடுகளுக்கிடையே மக்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான வழிகளை இலகுவாகப் பெற்றுக் கொடுத்தல்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அடிப்படைகளை தீர்ப்பதற்கு தலையிடல்.
பொது நன்மைக்காக அல்லாது வேறு எக்காரணத்திற்காகவும் ஆயுத பலத்தை உபயோகிப்பதில்லை எனும் கொள்கையுடன் சகல மக்களின் பொருளாதார அபிவிருத்தியுைம் சமூக முன்னேற்றத்தையும் ஏற்படுத்தல்.
இன, மத, மொழி, பால் வேறுபாடு கருதாது மனித உரிமைகளைப் பாதுகாத்தல்,
நாடுகளின் உரிமைகளையும் பாதுகாத்தல், நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல்.
மனித உரிமைகளைப் பாதுகாக்க ஐ.நா.சபை பெரும் பங்காற்றி வருகின்றது. தனியொரு நிறுவனமாக இருந்து செயற்பட்டு உலக நாடுகளின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க முடியாது. அதனால் ஐ.நா.சபை தனக்கு கீழே தனது கட்டுப்பாட்டினுள்பல கிளை நிறுவனங்களை அமைத்துள்ளது. பல தனியார் நிறுவனங்களும் ஐ.நா.சபையில் தம்மை இணைத்துக் கொண்டு அங்கீகாரம் பெற்று மனித உரிமைகளைப் பாதுகாத்து வருகின்றது.
ஐ.நா.சபை தனது பிரதான குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக 1948 டிசம்பர் 10 இல் வெளியிட்ட மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனம் முக்கிய இடம்பெறுகின்றது. இதன் மூலம் சகல மக்களும் சுயகௌரவத்துடன் சமமானவர்களாக வாழும் உரிமையை உறுதிப்படுத்தி அங்கத்துவ நாடுகளுடன் ஒப்பந்தம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இது மனித உரிமைகள் பற்றிய முதன் முதல் வெளியீடாகும். இதில் காணப்படும் 30 உரிமைகளைக் கூறி அதை யாவரும் கடைப்பிடிக்கும்படி வலியுறுத்துகின்றது.
மானிட வர்க்கத்தினருக்கு கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம், நம்பிக்கை. வழிபாடுகளை செயற்படுத்தும் சுதந்திரம், அச்சம் மற்றும் வறுமையை அகற்றும் சுதந்திரம் ஆகியவற்றுடன் சமூக வாழ்க்கையை மிகச் சிறப்பாக அனுபவிப்பதும் பொதுமக்களின் மேன்மையான ஒரே எதிர்பார்ப்பாகும்.
மனித உரிமைகள் பற்றிய பல்வேறு விடயங்களிலும் ஐ.நா.சபை கவனம் செலுத்தியது.
அடிமைநிலை, அடிமைத்தனம்
பலாத்காரமாக வேலை செய்வித்தல் போன்ற நடத்தைகளையும், நிறுவனங்களையும் ஒழித்தல்.
இனப்படுகொலையாகிய குற்றம் செய்வதைத் தடுத்தல் அல்லது அதற்குத் தண்டனை விதித்தல்.
மதப் பொறுமையின்மையை அகற்றுதல்.
இன ஒதுக்கலை முற்றாக அழித்தல்.
பிடித்த ஆள் புலங்களிலும் படைக்கருவி தாங்கிய சண்டைகளின் போதும் கவனிக்க வேண்டிய மனித உரிமைகள்
முன்னர் குடியேற்ற நாட்டு ஆதிக்கத்திலிருந்த பல நாடுகள் ஸ்தாபனம் நிகழ்த்தியுள்ள குறிப்பிடத்தக்க விருத்தியாகும். ஆளப்பட்டு வந்த மக்களின் அவாவுக்கு ஊக்கமளித்து அவை சுதந்திரமாவதை விரைவுபடுத்தும் பொருட்டு இலக்குகளையும் தரங்களையும் ஐ.நா ஏற்படுத்தியது.
ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு
ஐக்கிய நாடுகள் சபை பிரதான ஆறு நிறுவகங்களைக் கொண்டதாகும்.
2. பாதுகாப்புச் சபை
3.சமூகப் பொருளாதார சபை
4. நம்பிக்கை பொறுப்புச் சபை
5.சர்வதேச நீதிமன்றம்
6. செயலகம்
பொதுச் சபை
ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத் தும் அமைப்பே பொதுச் சபையாகும். இதன் அங்கத்துவ நாடுகளின் தொகை 193 ஆகும். ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதத்தில் இந்தச் சபை கூடும். பொதுச் சபையில் அனைத்து நாடுகளும் சம அந்தஸ்து உடையவை யாகும். ஒவ்வொரு அங்கத்துவ நாட்டிற் கும் ஒரு வாக்கு உரித்துடையது. பொதுச் சபையின் பிரதான செயற்பாடுகளும் அதிகாரங்களும்,
சர்வதேச சமூகத்தின் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் தேவையான எந்த வொரு பிரச்சினை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவதோடு அது பற்றிய சிபாரிசு அறிக்கையை முன்வைத்தல். மற்றும் அங்கத்துவ நாடுகளின் பொருளாதார, சுகாதார, மனித உரிமைகள் போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்கான ஆலோச னைகளை முன்வைத்தல்.
ஐக்கிய நாடுகளின் வரவு செலவுத் திட்டத்தை ஆராய்ந்து அனுமதி வழங்குவதோடு வழங்க வேண்டிய உதவி நிதியை அங்கத்தவரிடையே பகிர்ந்து ஒதுக் குதல்.
பாதுகாப்புச் சபையின் சிபாரிசின்படி செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்தல்.
சர்வதேச நீதிமன்றத்திற்குரிய நீதிபதிகளை நியமித்தல் மற்றும் புதிய அங்கத்துவ நாடுகளைச் சேர்த்துக் கொள்ளுதல்.
பாதுகாப்புச் சபை
இந்தச் சபையில் 15 நாடுகள் அங்கத்துவம் பெறுகின்றன. ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர உறுப்புரிமை நாடுகளாகும். ஏனைய 10 நாடுகளின் உறுப்புரிமை இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமை நாடுகள் ஐந்திற்கும் வீற்றோ எனப்படும் இரத்துச் செய்யும் அதிகாரம் உண்டு. இரத்துச் செய்யும் அதிகாரம் என்பது நிரந்தர உறுப்புரிமை நாடுகளில் ஒரு நாடு விரும்பாவிட்டாலும் எதிர்த்து வாக்களித்து அத்தீர்மானத்தை இரத்துச் செய்யும் உரிமையாகும். பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை ஏற்றுக் கொண்டு செயற்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து அங்கத்தவர்களும் பொறுப்புடையவர்களாவர்.
சர்வதேச சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் மோதல்கள் குறித்து ஆராய்ந்து பார்த்து அவற்றை சமாதானமாகத் தீர்ப்பதற்கு சிபாரிசுகளை முன் வைப்பது பாதுகாப்புச் சபையின் பிரதான கடமையாகும். ஏதாவதொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிப்பதும் தேவையேற்பட்டால் போர்ப்பலத்தை உபயோகிப்பது போன்ற செயற்பாடுகள் இச்சபையின் முக்கிய கடமைகளாகும்.
சமூக பொருளாதார சபை
இச்சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 54 ஆகும். அங்கத்துவக் காலம் மூன்று வருடங் களாகும். சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் உலக மக்களின் பொருளாதார, சமூக, கலாசார, கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்தியை மேற்கொள்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இச்சபையானது தனது பணியை நிறைவேற்றிக் கொள்வதற்கு இணை நிறுவனங்கள் பலவற்றின் உதவியினைப் பெற்றுக் கொள்கின்றது.
உணவு விவசாயத் தாபனம் (FAO)
ஐக்கிய நாடுகளின் கல்வி
விஞ்ஞான மற்றும் கலாசார தாபனம் (UNESCO)
சர்வதேச நாணய நிதியம் (IMF)
உலக சுகாதார தாபனம் (WHO)
ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் நிதியம் (UNICEF)
என்பன அவற்றில் முக்கியமானவையாகும்.
நம்பிக்கை பொறுப்புச் சபை
இச்சபையின் பிரதான கடமை ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நம்பிக்கை பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்ட பிரதேசங்களை நிருவகித்தலாகும். ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நம்பிக்கை பொறுப்பின் கீழ் 11 நாடுகள் இருந்தன. 1994 ஆம் ஆண்டளவில் சகல நம்பிக்கை பொறுப்புப் பிரதேசங்களும் தமது சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொண்டன. அன்று முதல் இச்சபை செயலற்றுக் காணப்படுகின்றது. செயலாளர் நாயகத்தின் சிபாரிசின்படி நம்பிக்கைப் பொறுப்புச் சபையை அகற்றுவதற்கு 2005 இல் உலகத் தலைவர்களின் மகாநாடு தீர்மானித்துள்ளது.
சர்வதேச நீதிமன்றம்
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நீதிமன்றம் சர்வதேச நீதிமன்றமாகும். நெதர்லாந்தின் ஹேக் நகரில் அது அமைந் துள்ளது. அங்கத்துவ நாடுகளின் நீதி மன்றங்களில் உயர் பதவி வகித்தோர் சர்வதேச சட்டம், தொடர்பான சிறப்புத் தேர்ச்சி பெற்றோர் ஆகியோரிலிருந்து நீதிபதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு நிறுவனங்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்கல் சர்வதேச நீதிமன்றத்தின் பிரதான செயற்பாடாகும். அவ்வாறே அங்கத்துவ நாடுகளிடையே எழும் சிக்கல்கள் தொடர்பாக சட்டரீதியான தீர்வினைப் பெற்றுக் கொள்ளுவதற்கும் இந்த நீதிமன்றத்தின் உதவியை நாடலாம்.
செயலகம்
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நிருவாக அலுவலகம் செயலகம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் இது அமைந்துள்ளது. பாதுகாப்புச் சபையின் சிபாரிசிற்கு அமைய பொதுச்சபையால் 5 வருட காலம் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்படும். செயலாளரே இதன் பிரதான நிருவாகி ஆவார். சர்வதேச சமாதானத்திற்கு அச்சுறுத் தலாக அமையக்கூடிய எந்தவொரு பிரச்சினைகளையும் பாதுகாப்புச் சபைக்கு முன்வைப்பதற்கு செயலாளருக்கு அதிகாரம் உண்டு. இச்செயலகத்திற்குரிய பல செயலகங்கள் உலகெங்கும் இயங்கி வருகின்றன. அவற்றின் அங்கத்தவர் தொகை ஒன்பதாயிரம் ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபை உலக சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக எடுத்த முயற்சிகள்
எதிர்காலச் சந்ததியினரைப் பேரழிவுமிக்க யுத்த அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் நோக்குடன் அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை அணுவாயுத ஆணைக் குழுவை அமைத்து தனது பணியை ஆரம்பித்தது. இரண்டாம் உலக யுத்தத்தின்போது அணுகுண் டினால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக அணுசக்தியைக் கட்டுப்படுத்தும் தேவையை உலகிற்கு உணர்த்த ஆரம்பத்திலேயே இத்தகைய செயலில் இறங்கி இருக்க வேண்டும்.
இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின் ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் தமது தலைமையில் உருவாக்கிய இரு முகாம்களைத் தத்தமது வெற்றிக்காக தந்திரோபாயங்களை கடைபிடித்து நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முனைந்தன. ஆயுதப் பாவனையைத் தவிர்த்து இவர்கள் மேற்கொண்ட இச்செயற்பாடானது பனிப் போர் அல்லது கெடுபிடி யுத்தம் என அழைக்கப்பட்டது. இந்நிலையின் கீழ் மோதல் ஏற்படவிருந்த பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய நாடுகள் சபை அவற்றில் தலையிட்டு மோதலில்லாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டது. அத்தகைய சம்பவங்களுக்கு சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சுயஸ் கால்வாய் நெருக்கடி
எகிப்திய மிசிர் ஜனாதிபதி அப்துல் கமால் நாசர் சமவுடைமைப் பொருளாதார முறையைப் பின்பற்றி சுயஸ் கால்வாயை மக்கள் மயப்படுத்தினார். இதனால் பிரான்சிய நிறுவனம் நெருக்கடியைச் சந்தித்தமையால் இஸ்ரேல், பிரித்தானியா மற்றும் பிரான்சியப் படைகள் சுயஸ் கால்வாய் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபை இதில் தலையிட்டுப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைத்தது.
வளைகுடா நெருக்கடி
இந்த நெருக்கடிக்கு ஈராக் மற்றும் குவைட் என்பவற்றின் எல்லையில் அமைந்திருந்த எண்ணெய் படிவுகளே காரணமாக அமைந்தது. இதனால் ஈராக்கினால் குவைட் ஆக்கிரமிக்கப்பட்டது. உலக யுத்தத்திற்கு அடுத்த மிகப் பெரிய யுத்தம் என்பதால் பேரழிவுகள் ஏற்பட்டன. பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டால் இந்த நெருக்கடியை சுமுகமாகத் தீர்க்க முடிந்தது.
கியூபாவின் ஏவுகணை நெருக்கடி
கியூபாவில் புரட்சி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அந்நாட்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு தப்பிச் சென்ற குழுவினர் ஐக்கிய அமெரிக்காவில் யுத்தப் பயிற்சி பெற்று பிடெல் கெஸ்ரோவின் சமவுடைமை அரசுக்கு எதிராக ஆயுதம் தரித்து வருகை தந்தனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா உதவி வழங்கியதாகக் கூறி அந்நாட்டை தாக்கக் கூடிய ஏவுகணைகள் ரஷ்யாவால் கியுபாவில் பொருத்தப்பட்டன. இதனால் அமெரிக்காவால் கியூபா சுற்றி வளைக்கப்பட்டு ரஷ்யாவை இலக்கு வைத்து துருக் கியில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டன. இந்தப் பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் தலையீட்டினால் தீர்க்கப்பட்டது.
உலக சமாதானத்திற்குப் பாதகம் விளையும் சந்தர்ப்பங்களில் அங்கு தலையிட்டு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் ஐ.நா. சபைக்கு உண்டு. எனினும், 1ம் தசாப்தங்களில் கெடுபிடிப் போர் நிலவிய போது அதனை தடுக்க பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுத்தன.
பிணக்குகளின் போது நேரடித் தலையீடு : 1950 - 1953 கொரியப் பிணக்கு, 1960 - 1964 கொங்கோப் பிணக்கு.
எனைய பல பிணக்குகளின்போது முரண்பாடுகளைத் தீர்க்கவும் மீண்டும் அவ் அணியினரிடையே முரண்பாடுகளைத் தவிர்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டமை.
ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டோ அல்லது மூன்றாம் நபரின் உதவியுடன் கலந்தாலோசித்தோ முரண்பாடுகளைத் தீர்த்தமை.
தடைகள் விதிப்பதன் மூலம் அழுத்தங்கள் கொடுத்தமை (தென்னாபிரிக்கா, ரொடீசியா)
பிணக்குகளில் ஈடுபட தேச எல்லையில் சமாதானப் படைகளை நிறுத்தியமை.
போரில் இடம்பெயர்ந்தோருக்கு புகலிடம் வழங்கியமை.
காஷ்மீர் பிரச்சினை (1947-1948), பாலஸ்தீன் பிரச்சினை (1947), சைப்பிரிஸ் பிணக்கு (1964), லெபனான் பிணக்கு (1978). போன்றனவற்றின் போது இரு அணிகளுக்குமிடையே போர் ஏற்படாது தடுக்க சமாதானப் [1651 6501 அனுப்பியமை.
இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுக்க தனது பங்களிப்பை வழங்கியமை.
தற்கால உலகில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நாடுகளிடையே ஏற்பட்ட பல மோதல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டினால் தீர்த்து வைக்கப்பட்ட விதத்தை மேலே அவதானித்தோம். நாடுகளிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்து வைத்து உலக சமாதானத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகள் பல உள்ளன. உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடிய சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் தலையீட்டினால் சிக்கல்களைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்கு முயற்சி கள் மேற்கொள்ளப்படுகின்றன. சர்வதேசரீதியில் சமாதானம், பாதுகாப்பு என்பன நிலவுவதற்கான முக்கிய பொறுப்பு பாதுகாப்புச் சபையிடம் இருப்பது அதற்கான காரணமாகும்.
பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின்படி உலக சமாதானத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் பல கீழே தரப்படுகின்றன.
பொருளாதாரத் தடை விதித்தல்
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு எதிராகச் செயற்படும் நாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதிப்பதன் மூலம் அந்தத் தீர்மானத்தை செயற்படுத்த சம்பந்தப் பட்ட நாடுகளை இணக்கத்திற்கு உட்படுத்த முடியும்.
அணு ஆயுதங்களைக் குறைக்கவும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தல்.
குறிப்பிட்ட நாடுகளில் புதிதாக அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாகத் தகவல் கிடைத்ததும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைக்குழுவை அனுப்பி நிலைமையைப் பரிசீலிக்கின்றது. வட கொரியா, ஈரான் ஆகிய நாடுகள் அணு ஆயுதங்கள் தயாரித்த போது இவ்வாறான ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.
சமாதானப் படையை ஈடுபடுத்தல்
இரு பிரிவினரிடையே கடும் போர் ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் படை ஈடுபடுத்தப் படுகின்றது.
தென்னாசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு / சார்க் அமைப்பு
அங்கத்துவ நாடுகள் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், பாக்கிஸ்த்தான். இலங்கை 2007ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அங்கத்துவம் பெற்றது.
சார்க் பிராந்தியம் 7 முக்கிய நாடுகளை உள்ளடக்கியுள்ளது. புவியியல், பொருளாதார, சமயம், கலாசாரம் என்ற பல்வேறு காரணிகளையும், வரலாற்று ரீதியான வளர்ச்சிகளையும் தாக்கங்களையும் வைத்து நோக்கும் இடத்து தென்னாசிய பிராந்தியத்தில் பல ஒருமைப்பாடுகளையும் காண முடியும். இது சர்வதேச நோக்குக்கும் கூடிய பங்களிப்பு செய்யும் வழிமுறைகளாகும். இவ் அடிப்படை சிந்தனையின் வழிகாட்டலின் கீழ் வேற்றுமையில் ஒற்றுமை எனும் தத்துவமே சார்க் அமைப்பின் அடிப்படைத் தத்துவமாகும்.
வலய மட்டத்தில் அங்கத்துவ நாடுகளின் சுயாதீனத்திற்கும் தன்னாதிக்கத்திறற்கும் நிலத் தொடர்புக்கும் மதிப்பளித்தல். ஒருவர் மீது ஒருவர் தலையிடாமை, தகராறுகளை சமாதானமாகத் தீர்த்தல், சமத்துவம் ஆகிய கொள்கைகளில் நின்று கருமமாற்ற அங்கத்துவ நாடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
சார்க் அமைப்பின் குறிக்கோள்
தெற்காசிய நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை விருத்தி செய்தல். அன்றாட வாழ்க்கை வசதிகளை முன்னேற்றுதல்.
பொருளாதார துரித வளர்ச்சி காணல், சமூக முன்னேற்றத்தில் தனது பிராந்திய கலாசாரத்தை பாதுகாத்தல்.
தெற்காசிய நாடுகளில் ஏற்படும் பிரச்சினைகளைப் பகிர்ந்து ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் விளங்கி முடிவு காணல்.
விஞ்ஞானம், தொழில்நுட்பம். கலை. கலாசாரம், தொழில், பொருளாதாரம் என்பவற்றினைக் கூட்டாக இணைந்து ஒருவருக்கொருவர் உதவி அபிவிருத்தியடைதல்.
மற்றைய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுடன் ஒத்துழைத்து தமது இயற்கை வளங்களைப் பகிர்ந்து அபிவிருத்தியடைய முயற்சித்தல்.
சர்வதேச பொது நியாயத் தீர்வுகளில் கூட்டாக முடிவெடுத்து அதற்கு ஆதரவு அளித்தல்.
சர்வதேச பொது நியாயத் தீரவுகளில் கூட்டாக முடிவெடுத்து அதற்கு ஆதரவு அளித்தல்.
சர்வதேச பொதுத் தாபனங்களிலும் பிராந்திய தாபனங்களிலும் ஒன்றுபட்ட கருத்தை வெளிப்படுத்தல்.
சார்க் அமைப்பானது பல்வேறு ஒருங்கிணைப்பு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
பயங்கரவாதத்தை தடை செய்தல்.
போதைப் பொருள் பாவனைக் கடத்தல்களை தடை செய்தல்.
இயற்கைஅழிவு, விவசாய தகவல்களைப் பற்றி பரிமாறல்.
அவசரத் தேவைக்கான உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை செயற்படுத்தல்.
சுகாதாரம், சனத்தொகை பற்றிய திட்டங்கள்.
ஆராய்ச்சி நிறுவனங்கள்.
பல செயற்பாடுகளை வலய நாடுகளுக்குள் நல்லுறவை பேணும் நோக்குடன் முன்னெடுத்தது. சார்க் அமைப்பாது தென்னாசிய வலயத்தில் வறுமையை ஒழிப்பதற்கு பல செயற்திட்டங்களை முன்னெடுத்தது.
விவசாய அபிவிருத்தி.
கல்வி கலாசார விளையாட்டு அபிவிருத்தி.
குழந்தை நலம் பேணல்.
சுற்றாடல் அபிவிருத்தி.
அங்கத்துவ நாடுகள் இடருறும் வேளையில் உணவு அளிப்பதற்கான அமைப்பு
தொழில்நுட்ப அறிவை பரிமாறக் கொள்ளல்
அனர்த்த நேரங்களில் ஒத்துழைப்புடன் கருமமாற்றல்
இவ்வமைப்பானது வலய நாடுகளுடன் இணைந்து அவற்றின் ஒத்துழைப்புடன் பல்வேறு பணிகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல் பிற அமைப்புக்களுடனும் இணைந்து வலய ஒத்துழைப்புக்காகவும் சர்வதேச ஒத்துழைப்புக்காகவும் பல பணிகளை மேற்கொண்டன.
அகில உலக செஞ்சிலுவைச் சங்கம்
ஒரு பன்னாட்டு மனிதாபிமான அமைப்பு இவ் இயக்கத்தில் நாடு, இனம், மதம், வகுப்பு, அரசியல் கருத்து என்பவற்றின் அடிப்படையில் வேறுபாடு காட்டாமல் மனித உயிர்களையும் உடல் நலத்தையும் பாதுகாத்தல், மனிதர்களுக்கு மதிப்பு அளித்தலை உறுதிப்படுத்தல், மனிதர்களின் துன்பங்களை தடுத்தலும் அவற்றை நீக்குதலையும் கொள்கையாகக் கொண்டுள்ளது இவ் அமைப்பு.
இவ் அமைப்பானது 2ம் உலக மகாயுத்தத்தின் பின்னர் Henry Dunant என்பவரால் உருவாக்கப்பட்டது.
இவர் 1859 Jun - வட இத்தாலியில் சோல்பரி எனும் இடத்தில் ஒஸ்ரியா சல்பீரியா ஆகிய நாடுகளுக்குள் இடம்பெற்ற சண்டையில் 40,000 பேருக்கு மேல் இறந்ததுடன், போர் வீரர்கள் பலர் துன்புறுத்தப்பட்டனர். இதன் மூலம் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்குடன் 4பேர் இணைந்து இவ் அமைப்பு உருவாக்கினார்கள்.
1964 இல் ஜெனிவா சம்மேளத்துடன் இது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ICRC யின் பணிகள்
யுத்தங்களுக்கும் வரையறைகள் உண்டு. இதற்காகவே யுத்தம் புரிபவர்கள் மனித நேயக் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியது.
போர் வீரர்களுக்கான விதிகள் கூறப்பட்டுள்ளது.
ஒழுக்கக் கட்டுப்பாடுள்ள போர் வீரராக இருங்கள்.
எதிரிப் போராளிகளுடன் மட்டும் சண்டையிடுங்கள்.
உங்கள் நோக்கத்துக்கு அவசியமில்லாத எதையும் அழிக்காதீர்கள்.
போரிலிருந்து விலகியிருப்பவர்களுடன் சண்டையிட வேண்டாம்.
காயமடைந்தவர் அல்லது சுகவீனமுற்றவர் யாராக இருந்தாலும் தூக்கிச் சென்று பராமரியுங்கள்.
உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள குடி மக்களையும் எதிரிகளையும் கன்னியமாக நடத்துங்கள்.
யுத்தக் கைதிகள், மனிதாபிமானமாக நடாத்தப்பட வேண்டும். எவரையும் பணயம் வைக்காதீர்.
செஞ்சிலுவைச் சின்னம் அல்லது வேறு பாதுகாப்புச் சின்னங்களை தாங்கியுள்ள ஆட்களுக்கும் பொருட்களுக்கும் மதிப்பளியுங்கள்.
மற்றவர்களின் சொத்துக்கு மதிப்பளியுங்கள்.
இந்த விதிகள் மீறப்படுவதைத் தடுங்கள்.
ICRC யின் பங்காக இயக்கத்தின் சட்டங்களுக்கு அமைய ஆயுத மோதல்களில் மதிப்பளிக்க வேண்டிய சர்வதேச மனிதநேயச் சட்டங்களை விளக்கவும் அதன் அறிவை பிரசித்தப்படுத்தலின் மூலம் சட்ட அபிவிருத்தியை விரிவாக்கவும் அதனை உத்தரவாதப்படுத்தும் பணியையும் மேற்கொள்கின்றது.
ICRC மனிதநேயச் சட்டங்களின் ஊக்குவிப்பாளராக அதற்கு தேவையான சகல சட்ட விரிவுரைகளையும் அனுபவ ரீதியான திறமைகளையும் நாடுகளுக்கு வழங்குகிறது.
ஆயுத மோதல்களுக்கு எதிராக பல சட்டங்களுக்கும் ஒத்தாசை வழங்கியுள்ளது.
1995 - குருடாக்கும் லேசர் ஆயுதங்களின் பாவிப்பை தடுக்கும் அடிப்படைச் சட்டம்.
1997 - மிதிவெடிகளின் பாவிப்புக்கு எதிரான ஒப்பந்தம்.
1998 - சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டக்கோவை.
ICRC நாடுகளுக்கிடையில் சர்வதேச மனிதநேயச் சட்டங்களை செயற்படுத்துவதில் தேவையான அறிவுரைகளை வழங்குகின்றது.
மனிதநேயச் சட்டங்களை பிரசித்தப்படுத்துவதில் ICRC யின் செயற்பாடு 3 வகைப்பட்டது.
நாட்டிற்கு அதன் பொறுப்பை நினைவூட்டுதல் மூலமாகவும் சட்டம் சம்பந்தமான விழிப்புணர்வுச்சியை ஊக்குவிப்பதிலும்,
நாட்டிற்கு சட்டரீதியான நியமங்களை எவ்வாறு சீரான நடத்தைக்குரிய சட்டங்களாக மாற்றுவது என்பதில் அறிவுரை வழங்குவதிலும் கற்பிக்கும் உதவிகளை உருவாக்குதல்.
சட்டத்தை வளர்க்கவும் நாடுகளுக்கேற்ப போதனைகளை உள்ளடக்கவும்,
நாடுகள் மனிதாபிமான பிரச்சினைகளையும் சட்டங்களையும் உணரச் செய்வதற்காக ICRC மனிதாபிமான அரசியல் தந்திரத்தை உபயோகிக்கின்றது.
கவலை தரும் விவகாரங்களை சமூகத்தோடு பகிர்ந்து கொள்கின்றது. ஐ.நா.சபை உட்பட சர்வதேச மன்றங்களில் தட்டிக்கழிக்க முடியாத மனிதாபிமானத் தேவைகள், கோட்பாடுகள் பறறிய அறிவை உயர்த்துவதற்கும் அது பாடுபடுகின்றது.
சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் பற்றிய அறிவையும் அதன் நடைமுறையையும் மேம்படுத்துகின்றது. தேசிய சட்டங்களுடன் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் தன்மைகளும் கலந்திட உந்துதலளிக்கின்றது.
உரிமைகளையும் அடிப்படை சுதந்திரத்தையும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் பாதுகாக்கும் நோக்குடையது.
யுத்தத்தினால் ஏற்படும் துன்பகரமான விளைவுகளை தடுப்பதும் குறைப்பதுவுமே ICRC யின் முக்கிய குறிக்கோளாகும்.
ஆயுத மோதல்கள் இடம்பெறும் காலத்தில் திடீரெனக் காணாமல் போகும் ஆட்களைத் தேடிக் கண்டுபிடித்தல், ICRC ஆற்றும் மனிதநேயப் பணிகளுள் முக்கியமான ஒன்றாகும். குடும்பங்களுக்கும் யுத்தத்தில ஈடுபடும் தரப்பினருக்கும் அது நடுநிலை மத்தியஸ்தராகச் செயல்படுகின்றது.
அடிப்படை மனிதாபிமான கோட்பாடுகள் பற்றியும் யுத்த நடவடிக்கைகளில் அனுசரிக்கப்பட வேண்டிய விதிகள் பற்றியும் முக்கியமாகப் போதிக்கின்றது.
தரையில் காயமடையும் சுகவீனமடையும் படைவீரர்களை பாதுகாக்கின்றது.
கடலில் காயமடையும் சுகவீனமடையும் அல்லது கப்பல் மூழ்கியதால் தத்தளிக்கும் படைவீரர்களைப் பாதுகாக்கின்றது.
யுத்த கைதிகளைப் பாதுகாக்கின்றது.
பொதுமக்களைப் பாதுகாக்கின்றது.
சர்வதேச மோதல்களில் பாதிக்கப்படுவோருக்கு மேலதிகப் பாதுகாப்பு
போன்ற நடவடிக்கைகளை ICRC மேற்கொள்கின்றது.
அகில உலக மன்னிப்புச் சபை
ஐ.நா.சபையின் மனித உரிமைகள் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டவாறு அதுபோன்ற பிற சாசனங்களில் வெளிப்படுத்தப்பட்டதைப் போன்று மனித உரிமைகளை உலகெங்கும் வலியுறுத்தவும் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பே அகில உலக மன்னிப்புச் சபை ஆகும். இவ் அமைப்பு ஐக்கிய இராச்சியத்தில் 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சர்வதேச மன்னிப்புச்சபை உலக ரீதியில் நடைமுறையில் இருக்கும் மனித உரிமைகளையும் உலகில் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளையும் ஒப்பிட்டு அவ்வாறு மனித உரிமைகள் மதிக்கப்படாத இடங்களில் அதை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கும்.
மனித உரிமைகளை மீறுபவர்களுக்கு மக்களுடாக இக்கருத்துக்களை முன்னெடுத்துச் சென்று அழுத்தம் கொடுக்கப்படும். இந்த நிறுவனம் பொதுவாக கைதிகளின் பிரச்சினைகள் பற்றியும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் களைவதற்குரிய வழிகளைப் பற்றியும் தேவையற்று முறையின்றி விசாரணை செய்யாமல் சிறையிலடைக்கும் கைதிகளை விடுவிக்கச் செய்யும் அமைப்பாகத் தொழிற்படுகின்றது.
இந்நிறுவனம் அளிக்கும் ஆலோசனைகளை பொதுச்சபை ஏற்று உரிய நடவடிக்கை மூலம் மனித உரிமைகளை நிலைநாட்டப் பாடுபடுகின்றது. கைதிகள் சிறையில் இருக்கும்போது இறக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்கின்றது. சிறையிலிருக்கும் பொழுதோ, கைது செய்யப்பட்டவுடனேயோ காணாமல் போனாலும் இறந்தாலும் உரிய விளக்கம் கேட்கும் உரிமை பெற்றுள்ளது.
சிறைச்சாலைகளில் கைதிகளைச் சித்திரவதை செய்வதை தடைசெய்கிறது. பெண் கைதிகளைக் கொடுமைப்படுத்துவதையும், இரவு நேரங்களில் காவல் நிலையங்களுக்கு அழைத்து வந்து விசாரணை செய்வதையும் கண்டிக்கின்றது. சில குறிப்பிட்ட காலத்தில் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு அளித்தல், அவர்களை திருத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை இந்நிறுவனம் செய்து வருகின்றது. உரிமைகள் மீறப்படும் பட்சத்தில் அதை பெற்றுக் கொடுப்பதற்காக வாதாடுகிறது. 1977 ஆம் ஆண்டு நோபல்பரிசு பெற்றது. 1978 இல் ஐ.நா. பரிசும் பெற்றுக் கொண்டது.
பத்திரிகைகளில் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தல் மனித உரிமை மீறலுக்கு நேரடியாக மக்கள் கருத்தைப் பெற்று வாதாடல், ஆய்வு செய்தல் போன்ற பல பணிகளை மேற்கொள்கின்றது. இருளை சபித்தலை விட சிறு மெழுகுவர்த்தியைக் கொழுத்துதல் மேலானது என்பது இதன் விருது வாக்காகும்.
மனித உரிமைக் காப்பகம்
1978 ஆம் ஆண்டு ஹெல்சிங் என்ற இடத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பு என்ற நிறுவனம் அமைக்கப்பட்டது. பின்னர் அமெரிக்கா, ஆபிரிக்கா, மத்திய கிழக்குப் பகுதி ஆகிய இடங்களிலும் 5 பிரிவுகள் செயற்பட்டு வருகின்றது.
இது ஒரு அரசுசாராத் தனி நிறுவனமாக இருந்தபோதிலும் பொதுமக்களின் நிதி உதவியையும் பெற்றுச் செயற்படுகின்றது. மேலும் 80 மேற்பட்ட ஜனநாயக முற்போக்கு கொள்கைகள் கொண்ட நாடுகளிலும் மனித உரிமைகள் மீறப்படுவதை இந்த நிறுவனம் கண்டறிந்து அதனைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
பெண்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் அப்பாவி மக்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகள், அப்பாவி மக்கள் மீது நடத்தும் அராஜகச் செயல்கள், முறையற்ற வகையில் கைதிகளை கொடுமைப்படுத்துவது. வன்முறை புரிந்து இனக்கலவரங்கள் மூலம் மனித உரிமைகளை மீறுவது போன்றவற்றை இந்நிறுவனம் கண்டிக்கின்றது.
இந்நிறுவனம் மனித உரிமை மீறும் நாடுகளை நகரங்களைப் பெயர் சொல்லி பகீரங்கப்படுத்துவது அந்நாடுகளுக்கிடையே கொள்கை மாற்றங்களை உருவாக்குவதும் இதன் பணியாகும்.
மரண தண்டனையை தடை செய்தல், சிறுவர்களை போருக்குப் பயன்படுத்தல், நீதி பரிபாலனத்தின் துஷ்பிரயோகம் போன்றவற்றை கண்டிக்கிறது. குற்றவாளிக்கும் வாழ உரிமையுண்டு என வலியுறுத்துகின்றது.
சமய உரிமைக்காக கருத்துக்களைப் பரிமாறவும் மக்களுக்கு உரிமையுண்டு. கருக்கலைப்பு சட்டரீதியாக்க வேண்டும்.
1998 இல் சர்வதேச மாநாடு எந்த ஒரு யுத்தத்தில் பிள்ளைகளை போர் வீரராக மாற்ற இயலாது. மனிதர்களை கொலை செய்கிற மிதிவெடிகளை தடைசெய்யப்பட்டவையாக மாற்ற முன்னின்று முடிவெடித்தன.
ஆயுதங்களை கடத்தலுக்கு எதிராக பெண்கள் உரிமைக்காக எயிட்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்டவரின் உரிமைக்காக, பொதுமக்களுக்காக, சிறுவர்களை தொழிலில் அமர்த்துவதற்கு எதிராக இனஅழிப்புக்கு எதிராக, இந்நிறுவனம் செயற்படுகின்றது.
ஆரம்பத்தில் ஹெல்சிங்கியுல் கண்காணிப்பு
நாடுகளை அச்சுறுத்தவும் ஆயுத முனையில் பிறநாட்டை அடக்கவும் கூடாது.
நாடுகளின் எல்லைகளை மாற்றியமைக்கக் கூடாது.
நாடுகளுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டால் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்தல்.
ஒரு நாட்டின் பேச்சுவார்த்தையில் பிறநாடுகள் தலையிடக் கூடாது.
பிரச்சினைக்கு சமாதான முறையில் தீர்வு காணல்,
அடிப்படை உரிமைகளை மதித்தல் : சமய ரீதியில், சிந்தனை ரீதியில்
எல்லா மனிதருக்கும் சமஉரிமை உண்டு. மனித சமுதாயம் தங்கள் பிற்காலத்தை தாங்கள் தாங்கள் முடிவெடுக்க உரிமையுண்டு.
நாடுகளும் நாடுகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்தல்.
அகில ரீதியில் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கு அனைவரும் பொறுப்புடையவராக வேண்டும்.
இவ் அமைப்பில் 150க்கு மேற்பட்ட திறன்கள் கடமையாற்றுகின்றனர். நம்பிக்கை வாய்ந்த அறிக்கைகள் தயாரிப்பதே இவ் அமைப்பின் முக்கிய பணியாகும். இவ் அமைப்பின் அறிக்கைகளுக்கு சர்வதேச மதிப்புண்டு.
வட அத்திலாண்டிக் ஒப்பந்த அமைப்பு
வட அந்தலாந்திக் ஒப்பந்த அமைப்பு 1949 ஆம் ஆண்டு அமெரிக்க தலைமையின் கீழ் இராணுவக் கூட்டாக செயற்படத் தொடங்கியது. இது ஒரு இராணுவ கூட்டணியாகும். வெளியார் தாக்குதல்களுக்கு எதிராக பரஸ்பரபாதுகாப்பு உதவி வழங்குவதற்கு இதிலுள்ள உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் இணங்கியதன் மூலம் இவ் அமைப்பு ஒரு கூட்டுப் பாதுகாப்பு முறையைக் கொண்டது.
நிறுவன ரீதியாக சமூகநல்லுறவை ஏற்படுத்துவது. நாடுகளை மொழிகளை இணைப்பது, வேறுபாடுகள் வித்தியாசங்களின் மத்தியில் ஒன்றுசேர முடியும் என்பதே இவ் அமைப்பின் நோக்கமாகும்.
பன்மைத்துவத்தின் மத்தியில் ஒருமைப்பாடு காணல், மனப்பாண்மைகளில் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளல் போன்ற பணிகளை இவ் அமைப்பு மேற்கொள்கின்றது.
"அமெரிக்க - ஐரோப்பிய அங்கத்துவ நாடுகளில் ஏதாவது ஒன்றின் மீது எதிரி நாடொன்று தாக்குதல் நடத்துமாயின் அதனை அனைத்து அங்கத்துவ நாடுகளின் மீதும் நடத்தப்பட்டதாகக் கருதி செயற்படுவோம். நேட்டோ ஒப்பந்தத்தின் 5வது சாசனம்
ஐக்கிய அமெரிக்கா உட்பட முதலாளித்துவ அணியின் பலத்தைப் பாதுகாத்துக் கொள்வதே இவ் அமைப்பின் நோக்கமாகும். தமது வரவு செலவு திட்டத்தில் 20% க்கு மேற்பட்ட தொகையைப் பாதுகாப்பு நடவடிக்கைக்கு செலவிடுகின்றன.
நேட்டோ நாடுகளின் பிரதான நோக்கம் அங்கத்துவ நாடொன்றிற்கு வெளிநாடு ஒன்றிலிருந்து ஆபத்து ஏற்படும் பட்சத்தில் இவ்வமைப்பு அந்நாடுகளுக்கு இராணுவ ரீதியாகப் பாதுகாப்பை வழங்குகின்றது.
மேலும் இராணுவ ஒத்துழைப்பு கல்வி. பரிசோதனை. போர்த்தளபாட கருவிகளை வழங்கல் என்பவற்றுடன் பாதுகாப்பு, பொருளாதார விடயங்களிலும் பரஸ்பர ஒத்துழைப்பை வழங்குதல்.
ஐரோப்பிய ஒன்றியம்
தற்போது 27 நாடுகளைக் கொண்ட நாடுதாண்டிய அரசிடை அமைப்பாகும். 1992 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை Maastricht treaty (மாசுடிரிச் ஒப்பந்தம்) என்றும் பரவலாக அறியப்படுகின்றது. அடுத்து 1993 இல் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருட்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நகர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றச் சந்தையை உருவாக்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையேயான இணக்கப்பாடு. அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறைகளைக் கைக்கொள்கின்றது.
2ம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிணைப்பு தொடர்பான நகர்வுகளை அக்கண்டத்தை பேரழிவுக்கு உள்ளாக்கிய தீவிர தேசியவாதப் போக்கிலிருந்து தப்பும் ஒரு வழியாகப் பலர் கருதினர்.
ஐரோப்பிய மகாநாடுகள் பின்வரும் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது
வாழ்வதற்கான உரிமை, சித்திரவதையிலிருந்து விடுபடும் உரிமை. அடிமைத்தனத்திலிருந்து விடுபடல், சுதந்திரம், பாதுகாப்பு சட்டத்தை அணுகுதல், தண்டனையைக் குறைக்க முறையீடு செய்தல், தனிப்பட்ட, குடும்ப வாழ்க்கைக்கான சுதந்திரம், சமய சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம், கருத்துப் பரிமாறும் சுதந்திரம் போன்றவற்றையும் பார பட்சத்திலிருந்து விடுபடல் உரிமைகளைச் சுதந்திரமாக அனுபவித்தல் போன்றன பற்றி குறிப்பிடப்படுகின்றது.
ஆசியான் நாடுகளின் கூட்டமைப்பு
ஆசியான் அமைப்பானது தாய்லாந்தில் பாங்கொங் நகரில் 1967 இல் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பில் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, போன்ற பல நாடுகள் அங்கம் வகிக்கின்றன. வலய சமாதானம் நிலைப்பாடு என்பவற்றைப் பேணுவது, இதன் பிரதான நோக்கத்துடன் பொருளாதார ஒத்துழைப்பை நோக்கி அவதானம் செலுத்தப்பட்டது. இது தென்கீழ் ஆசிய நாடுகளுக்கிடையே கூட்டுணர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இதில் 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
ஆரம்பத்தில் இவ் அமைப்பில் சம்பந்தப்பட்ட 5 நாடுகளும் நட்பு, ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டன. எல்லா நாடுகளினதும் சுதந்திரம், இறைமை ஆகியவற்றுக்கு மதிப்பளித்தல், பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை, சமாதானமான முறையிலே பிணக்குகளை தீர்த்து வைத்தல், இந்த நாடுகளுக்கிடையே பயனள்ள ஒத்துழைப்பை உண்டாக்குதல் ஆகியன அதில் இடம்பெற்றிருந்தன.
இதனைவிட நட்புப் பிரகடனம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. சமூக, பொருளாதார, கலாசார உறவுகள் சம்பந்தமாகக் கைக்கொள்ள வேண்டிய நடைமுறைகள், ஆலோசனை வழங்கல். வலயத்தில் சமாதானத்தைப் பேணுதல், அரசியல் சுதந்திரத்தினையும் உறுதிப்பாட்டினையும் பாதுகாத்தல், வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல், இயற்கை அழிவுகளின் போது ஒருவருக்கொருவர் உதவியளித்தல், பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கையில் ஒத்துழைத்தல் ஆகியன இடம்பெற்றிருந்தன.
ஆசியான் அமைப்பினூடாக அபிவிருத்தி அடைந்த நாடுகளினூடாக இவ்வமைப்பு நாடுகள் பல உதவிகளை பெற்றுக் கொண்டன. இவ்வுதவிகள் சர்வதேச ரீதியில் சமூகநல்லுறவை பேணுவதற்கு உதவுகின்றன.
உதாரணம் - இப்பிராந்திய நாடுகளுக்கான கடல்தொழில் மேம்பாட்டிற்கும் அறுபடைப் பாதுகாப்பிற்கும் கடனாக உதவி வழங்கியது.
ஆசியான் அமைப்பின் நோக்கம்
வலயத்தில் பொருளாதார அபிவிருத்தியைத் துரிதப்படுத்தல்.
பரஸ்பரம் புரிந்துணர்வுடனான பங்கேற்புடன் கூடிய ஆய்வுத்துறையை விருத்தி செய்தல்.
அங்கத்துவ நாடுகளுக்கிடையே வியாபார நடவடிக்கையை விருத்தி செய்தல், சர்வதேச வர்த்தக நடவடிக்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல்.
ஐக்கிய நாடுகள் சாசனத்தின் படி நீதி, சமாதானம் என்பவற்றை நிலைநாட்டுவதனூடானக வலயத்தில் சமாதானம் அதன் உறுதித்தன்மையை முன்னெடுத்துச் செல்லல்.
2008 ஆம் ஆண்டு ஆசியான் சமூகத்தை 3 பகுதிகளின் கீழ் பெயரிட்டு செயற்படுவதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆசியான பாதுகாப்பு சமூகம்
ஆசியான் பொருளாதார சமூகம்
ஆசியான் சமூக கலாசார சமூகம்
இந்த அடிப்படைப் பிரிவுகள் மூன்றின் கீழ் ஆசியான் அமைப்பிற்குள்ளான நாடுகளின் ஒத்துழைப்புடன் சவால்களை வெற்றிக் கொள்தல்.
தற்போது ஆசியான் அமைப்பானது புதிய மனித உரிமை அமைப்பை அமைத்துள்ளது. இவ் அமைப்பு பற்றி ஆசியான் தலைவர் "இந்த அமைப்பு ஆசிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களது உரிமையைப் பெருக்கவும் ஆசியானின் சமூக வளர்ச்சியில் அவர்களை ஈடுபடுத்தவும் உறுப்பு நாடுகளை கடப்பாடு கொள்ளச் செய்யும்" எனக் கூறியுள்ளார். இவ்வாறாக ஆசியான் அமைப்பு சமூகநல்லுறவுச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது.
சமூகநல்லுறவை மேம்படுத்துவதில் உலக பெரியார்களின் பங்கு
விவேகானந்தர்
இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களை அவருடைய சீடர் செயின்ட் பால் உலகம் முழுவதும் பரப்பியது போல இராமகிருஸ்ணரின் கொள்கைகளை உலகறியச் செய்து நூற்றுக்கணக்கான இயக்கங்களை உருவாக்கியவர் விவேகானந்தர்.
இவர் விஸ்வநாத தத்தருக்கும் புவேனேஸ்வரிக்கும் 1863.01.12 ஆம் திகதி பிறந்தார். இவரது இளமைப் பெயர் நரேந்திரன்.
1893 இல் அமெரிக்காவிலுள்ள சிக்காக்கோ நகரில் நடந்த பல்சமயப் பாராளுமன்றம் (Parliament of Religions) எனும் உலக சமயங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு சமயங்களின் சகோதரப்பான்மையை விளக்கினார்.
இவர் தன்னுடைய உரையை சகோதரர்களே! சகோதரிகளே! என ஆரம்பித்தார். இந்தத் தொடக்கமே அவையோரைக் கவர்ந்து விட்டது. மாநாடு நடைபெறும் மாளிகை அதிரும்படி கரகோஷம் எழுந்தது. மற்ற மதத்தலைவர்கள் அரிய கருத்துக்களை அழகாய் எடுத்துரைத்தார். ஆனால் ஆன்மநேய ஒருமைப்பாட்டை உயர்குலத்தின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வண்ணம் விவேகானந்தர் போல் யாரும் பேச்சைத் தொடங்கவில்லை.
அனைத்து மதங்களின் அன்னையின் பெயரால் நன்றி கூறுகின்றேன்” எனவும், பிறசமயக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுதல் போன்ற பண்புகளை உலகிற்கு புகட்டிய மதத்தை சார்ந்தவன் எனும் வகையில் பெருமையடைகிறேன் என வலியுறுத்தினார்.
மேலும் இவர்,
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
பின்பற்றும் தன்மையாலே
துக்கமிகு நெறி பலவாய் நேராயும்
விளைவாயும் தோன்றினாலும்
அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் வனை
அடைகின்ற ஆறேயன்றோ!
என சமயங்கள் யாவும் வேறுபட்டாலும் அவை இறுதியில் ஒரே நோக்கத்தையே அடைகின்றன எனும் ஒருமைப்பாட்டை வலியுறுத்தினார்.
பிரிவினைவாதம் அளவுக்கு மீறிய மதப்பற்று இவற்றால் உண்டான மதவெறி. இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப்பற்றியுள்ளன. அவை இந்தப் பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து நாகரீகத்தை அழித்து எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்திருக்கும் என வலியுறுத்தினார்.
நாங்கள் இந்து என்ற சிறு கிணற்றை முழு உலகம் என்றும், அவ்வாறே முகம்மதியர், கிறிஸ்தவர்கள், தங்களது மதமாகிய சிறு கிணற்றுக்குள் அமர்ந்து கொண்டு அதுதான் முழு உலகம் என நினைக்கின்றனர். இந்த சிறிய உலகின் எல்லைகளை தகர்த்தெறிய சிக்காகோ மாநாடு ஒரு முயற்சியாக அமைந்தது என வலியுறுத்தினார்.
ஒரே ஒளிதான் பல்வேறு வண்ணக் கண்ணாடிகளின் மூலம் பல நிறங்களில் வருகிறது. நம்மை மாற்றி அமைத்துக்கொள்ள இந்த வேறுபாடுகள் அவசியம். ஆனால் எல்லாவற்றின் மையத்திலும் அதே உண்மைதான் ஆட்சி புரிகின்றது. எனும் ஒருமைப்பாட்டை எடுத்துக் கூறினார்.
இந்துக்களுக்கு பிரம்மாவும். சொராஸ்ரியர்களுக்கு அஹீரா மஸ்தாவாகவும். பௌத்தர்களுக்கு புத்தராகவும். யூதர்களுக்கு ஜெஹோவாவாகவும், கிறிஸ்தவர்களுக்கு பரமண்டலத்தில் இருக்கும் பிதாவாகவும் இருக்கின்ற ஆண்டவன் உங்கள் உன்னதமான நோக்கம் நிறைவேற உங்களுக்கு வலிமை அளிப்பானாக! என சமய சமரசத்தை வலியுறுத்தினார்.
விதையானது தரையில் ஊன்றப்பட்டு மண்ணும் காற்றும் நீரும் சேர்ந்து அது மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ மாறிவிடுவதில்லை. அது தனது வளர்ச்சி விதிக்கேற்ப செடியாகின்றது. மண், காற்று, நீரை சத்துப்பொருளாகக் கொண்டு அது வளர்ச்சி அடைகிறது. அதேபோல தான் மதத்தின் நிலையும். கிறிஸ்தவர் இந்துவாகவோ அல்லது பௌத்தனாகவோ மாறவேண்டியதில்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களை தனதாக்கிக் கொண்டு தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு தன் வளர்ச்சி விதிப்படி வளர வேண்டும். தம் மதம் மட்டுந்தான் வாழும். மற்ற மதங்கள் அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்கள். ஆனால் அவர்களைக் குறித்து நான் என் இதய ஆழத்திலிருந்து பச்சதாபப்படுவதுடன், இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும் "உதவி செய்" சண்டைபோடாதே, ஒன்றுபடுத்து, அழிக்காதே, சமரசமும் சாந்தமும் வேண்டும். வேறுபாடு வேண்டாம் என்று எழுதப்படும் என்று அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனக்கூறினார்.
அவருடைய பேச்சு மிகவும் சுருக்கமாக அமைந்தது. மதங்கள் அனைத்தும் ஒரே உண்மையை அடிப்படையாகக் கொண்டவை. உலகத்து மக்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் மனித தருமத்தால் பிணைக்கப்பட்ட சகோதர சகோதரிகள் மதம் வேறு நாடு வேறு என்பதால் மனிதகுலம் வேற்றுமை அடையக் கூடாது என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.
உலகின் வன்முறைகளுக்கு இன்னுமொரு காரணியாக இருப்பது வறுமை ஆகும். இதனால் வறுமை ஒழிப்பதும் உலக சமாதான நல்லுறவுக்கு ஒருவழிமுறையாகும் என்றார். சுவாமி விவேகானந்தர் கூறுகின்றார்."எவன் ஒருவன் ஏழ்மையிலும், வலிமை குன்றியவர்களிலும், நோயுற்றவர்களிலும், படிப்பற்ற பாமர மக்களிலும் இறைவனைக் கண்டு சேவை செய்கின்றானோ அவனே உண்மையாக இறைவனை வழிபடுகின்றான்". ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இரண்டு நன்மைகள் ஏற்படுகின்றன. ஏழைக்கு உதவி செய்யும் ஒருவன் மனதில் அன்பும் இரக்க உணர்வும் தோன்றுகின்றது. அதனால் அவனது மனம் தூய்மையடைகின்றது. உதவி பெறும்மனிதனின் மனதிலும் ஒரு மாற்றம் ஏற்படுகின்றது. நமக்குப் பாதுகாப்பு தருவதற்கு மனிதர்கள் இருக்கிறார்கள். நானும் சமூகத்தில் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டேன். ஒதுக்கப்படவில்லை என்ற உணர்வு அவனுக்கு ஏற்படுகின்றது. வன்செயல்களை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் தடுக்கப்படுகின்றது என்றார்.
எனவே சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் உலக சமாதானத்திற்கு எல்லா சமயத்தைப் பின்பற்றுவோரும் ஒன்றுகூட வேண்டும் என்பதேயாகும்.
மகாத்மா காந்தி
மனித குலத்தின் மாணிக்கமாய் விளங்கிய மகாத்மா காந்தி அண்ணல் நடமாடிய மனிதம், தேசபக்தியின் செவ்விய வடிவம் தேடிக்கிடைக்காத சத்தியப் பிரேரணை, அதர்மத்தை அசைத்த அகிம்சையின் கோட்டை என்ற அனைத்துப் புகழுக்கும் உரித்துடையவர் ஆவார்.
காந்தி அண்ணல் 1869ம் ஆண்டு அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் குஜராத்தில் ஒரு திவானின் மகனாகப் பிறந்தார். சிறுவயதில் பார்த்த இரு நாடகங்கள் இவரது வாழ்க்கைப் போக்கிற்கு அடிக்கற்களை நட்டன. அவர் பார்த்த 'அரிச்சந்திர நாடகம்' என்ன நேரினும் சத்தியவந்தனாகவே வாழ வேண்டும் எனும் முடிவை எடுக்க வைத்தது. அவர் பார்த்த 'சிரவண குமாரன்' இராமாயணத்தின் கிளைக் கதையாகிய இதில் வரும் சிரவணனைப் போல் பெற்றோரிடம் பேரன்பு பூணல் வேண்டும் எனும் முடிவை எடுக்க இந்த நாடகம் அவருக்கு உதவியது.
இவரது சிந்தனை, செயல். சொல் மூன்றிலும் தூய்மை வேண்டுமென்ற தெளிவு இளமையிலேயே அவருக்கு கைவந்திருந்தது. தென்னாபிரிக்க வாழ்வு அவருடைய சேதனைக் காலம் எனலாம். ஏகும் திசை தெரியாமல் தவித்த தென்னாபிரிக்க மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் தோன்றிற்று. ஊமையராய் வாழ்ந்த தென்னாபிரிக்க இந்தியர்களுக்கு தங்களின் உள்ளங்களின் அவலத்தை ஒலமிட ஒரு வாய் கிடைத்தது. கூலிகளாய், புழுக்களாய், பூச்சிகளாய் வெள்ளையரின் அடிமைகளாய் எந்த உரிமையும் இன்றி வாழ்ந்து வந்த இந்தியர்களின் தலைவராய் அண்ணல் புரிந்த பணிகள் தனிசோக காவியமாய் விளங்குகிறது.
சாதாரண மக்களின் வாழ்க்கையுடன் தலைவனின் வாழ்க்கையும் வேறுபாடின்றி ஒன்றினால்தான் தலைவன் மீது மக்கள் உண்மையான நம்பிக்கை வைப்பார்கள். இரு சாராரிடையேயும் ஆன்மநேயம் மலரும் என்பது மகாத்மாவின் கொள்கை.
காந்தி அடிகளின் நான்காவது காலகட்டம் சாதனைக் காலம் ஆகும். தன் தாய் நாட்டில் அவர் மேற்கொண்ட பணிகளை இருவகையாகப் பிரிக்கலாம். முதலாவது ஒத்துழையாமை இயக்கம் (1920-1921), உப்புச்சத்தியகிரகம் (1930-1931) தனிநபர் சத்தியாகிரகம் (1940-1941) வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942) முதலிய அரசியற் போராட்ட பணிகள்.
இரண்டாவது புதிய பாரதத்தை உருவாக்க அவர் மேற்கொண்ட சுதேசிய இயக்கம். தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, ஆதாரக்கல்வி, கிராம கைத்தொழில் வளர்ச்சி முதலிய ஆக்கப்பணிகள்.
அண்ணலின் தமிழகச் சுற்றுப் பயணத்தில் மதுரை நகரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு ஆயிரக்கணக்கான உழவர்கள், மேலாடையின்றிக் கீழாடை ஒன்றோடு அமர்ந்திருந்தனர். உழவர்கள் வடிவத்தில் இந்த நாட்டு மக்களின் வறுமையைக் கண்டு கண்ணீர மல்கினார். "இந்திய மக்கள் அனைவருக்கும் மேலாடை அணியும் நிலை வரும் வரை நானும் மேலாடை (சட்டை) அணியமாட்டேன்” என்று சபதம் கொண்டு இறுதி மூச்சுவரை வாழ்ந்து காட்டினார். இதன் வாயிலாக அண்ணலின் சமத்துவ எண்ணம் வெளிக்காட்டப்படுகின்றது.
அரிசனங்கள் ஆலயங்களில் நுழைவதற்காக தம்பேருழைப்பால் இந்து மக்களின் இதயக் கதவுகளை முதலில் திறந்தார். பின்பு தேவாலயங்களின் கதவுகள் தாமே திறந்தன. "அடுப்பங்கரையே வைகுந்தம், சோறு பொங்கும் இடம் சொர்க்கம்" என்றிருந்த பாரதப் பெண்மணிகளை வீராங்கணைகளாக மாற்றி, விடுதலைப் போரில் பங்கு கொள்ளும் வீறுடையவர்களாக்கி கல்வி ஏணியின் உயர் படிகளை ஏற்றி, அவர்களை அமைச்சர்களாகவும், ஆளுநர்களாகவும் வீற்றிருக்கச் செய்தது அண்ணலின் சமநீதிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
தூய்மை, நேர்மை, வாய்மை, கொள்கைப் பற்று ஆகியன சத்தியாக்கிரக போரில் பயன்படத்தக்க வலிமைமிக்க ஆயுதங்கள் என்பதை கண்டு கொண்டு அவற்றை அகில இந்திய அரசியலில் பயன்படுத்தி வெற்றி காண விழைந்தார். தாய் நாட்டின் சேவைக்காக என் வாழ்வு அனைத்தையும் உரிமைப்படுத்தியுள்ளேன். இந்தச் சேவை இல்லாவிடின் என் வாழ்வே எனக்குத் தாங்கமுடியாத சுமையாகிவிடும் என்று கூறிய அடிகளார். உண்மையான
தூய்மையான மனிதனிடம் பிறருக்குத் தருவதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இருக்காது என்ற தியாக பண்புள்ள உணர்வை அரசியலில் கலந்தார்.
இவர் பொய்மையின் விளைவுகளான சமூக, அரசியல் தீமைகளை பொறுத்துக்கொள்ளல், தேசிய ஒற்றுமை ஆகிய தற்காப்பு ஆயுதங்களேந்திப் போராடி அவற்றிற்குத் தம்மையே பலியாக்கிப் பிறருக்கு வழிகாட்டினார். அகிம்சை என்பதை அடிப்படையாகக் கொண்டு வேறுபட்ட முறையில் தன்னுடைய போராட்ட முறையை நகர்த்திச் சென்று எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தார்.
30.1.1948 வெள்ளிக்கிழமை காந்தியடிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய சமூகம் பெரும் துயரை எதிர்கொண்டது. இதற்கு மவுண்டன் பேட்டன் பிரபு' அனுப்பிய செய்தியில் “உண்மையில் காந்தியின் மரணம் மனித சமூகத்திற்கு ஒரு பெரு நஷ்டம். அவர் எந்த லட்சியங்களுக்காக வாழ்ந்து மறைந்தாரோ அந்த லட்சியங்களின் மீது அன்பும் சகிப்புத்தன்மையும் கொண்டு பணியாற்றுவது அவசியமாகிறது. இத்தகைய ஆழ்ந்த துன்பத்தில் மூழ்கியிருக்கும் இந்தியா உலகிற்கு ஓர் ஒப்புயர்வற்ற தலைவரின் கீர்த்தியை அளித்ததற்காகவும் அதே சமயத்தில் அவருடைய ஆத்ம வளர்ச்சி விதியை நிர்ணயிப்பதிலுள்ள வலிமை ஆகியவை ஓர் உதாரணமாக இருக்கின்றதென்பதற்காகவும் பெருமிதம் கொள்கிறது" என்பதாம்.
சுவாமி விபுலானந்தர்
விபுலானந்தர் இலங்கையின் பல பாகங்களிலும் இந்தியத் தேசியத் துணைக்கண்டத்தின் பல பிரதேசங்களிலும் நற்பணி புரிந்த பெரியார் ஆவார். இவர் தாய்மொழி, சைவசமயம். இந்து கல்வி விருத்தி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர்.
கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு பிரதேசத்தின் தெற்கேயுள்ள காரைதீவில் 1892 பங்குனி 27ம் நாள் பிறந்தார். இவரின் பெற்றோர் பெயர் சாமித்தம்பியும் கண்ணம்மையும் ஆவார்கள். இவரின் இளமைப்பெயர் மயில்வாகனம் ஆகும்.
இவர் இளமையில் வைத்தியலிங்க தேசிகர், குஞ்சித்தம்பி ஆகியோரிடம் கல்வி பயின்றார். விபுலானந்தர் சமயத்துறையில் ஈடுபட்டு சாதனைகள் பல நிகழ்த்தவே இவர்கள் அடித்தளம் அமைத்தார் எனலாம். இவர் இளமையில் பெற்ற தமிழ்க்கல்விப் பயிற்சியை விருத்தி செய்து, மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதப் பரீட்சையில் சித்தியெய்திய முதல் இலங்கையர் என்ற பெயரை நிலை நாட்டினார். பின்பு ஆசிரியராக, அதிபராக விளங்கி பல கல்விப் பணிகளைப் புரிந்தார்.
பிரபோதசைதன்னியர் எனும் பிரமச்சரியம் பெற்று விளங்கிய இவர் 1924 இல் துறவு நியமங்களில் பயிற்சி பெற்ற பின் விபுலானந்தர் எனும் பெயரைப் பெற்றார். இவருடைய பணிகளை நோக்கும்போது அவை சமூகநல்லுறவுக்கு வழிகாட்டுகின்றது எனலாம்.
இவருடைய சமயப்பணியில் வெள்ளிக்கிழமைகளில் கூட்டுப்பிரார்த்தனை நடாத்துதல், பாசுரங்களை பாராயணம் செய்தல், வார இறுதியில் சைவ சமய வகுப்பு நடாத்துதல், பண்ணிசைப் பயிற்சி நடத்தல் முதலிய சமயக்கல்வி ஊட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல மாணாக்கரை உருவாக்க உதவினார்.
ஆறுமுகநாவலருக்கு அடுத்தவராக சைவசமய மறுமலர்ச்சிக்காக பாடுபட்டவர். விபுலானந்தரைப் பொறுத்தவரையில் பிற சமயங்களை அவர் குறை கூறவில்லை. இவர் மதமாற்றத்தைக் கண்டித்ததுடன் கிறிஸ்தவ சமயத்தில் காணப்படும் நல்ல விடயங்களையும் புகழ்ந்து பேசினார்.
அடிகளாரின் சமயநோக்கமும் செயற்பாடும் உலக சமயங்களின் அடிப்படை உண்மைகளை ஒவ்வொருவரும் உணர்ந்து சமயப் பூசல்களுக்கு இடமளிக்காமல் வாழ வேண்டும் என்பதாகவே இருந்தது.
இராமகிருஷ்ண மிஷன் வாயிலாக இலங்கையிலும் இந்தியாவிலும் சைவசமயப்பணி புரிந்தார். சமயங்கள் யாவும் ஒருவனாயிருக்கும் இறைவனையே தேடுகின்றன. அவனை அடைவதே வாழ்க்கையின் இலட்சியம். இவ்விலட்சியத்திற்கேற்ப ஞான ஒளியினை ஒருவரின் உள்ளத்தில் பிரகாசிக்கச் செய்வதே கல்வியின் நோக்கமாகும். சமயபக்தி, சமயசேவை. சமய நம்பிக்கை ஆகியன இணைவதால் பிறக்கும் சமயநெறியே மனித வாழ்வை அறநெறிக்கு இட்டுச் செல்வதற்கான ஒரே வழி எனக் கூறியுள்ளார்.
தனக்கென வாழாது பிறருக்காக வாழ்ந்து இறந்தும் இறவாது வாழ்கின்ற சமயப் பெரியார்களுள் இவரும் ஒருவர். இலக்கியவாதியாக, பத்திரிகை ஆசிரயராக. பல்துறையாளராக விளங்கியவர். இலங்கையில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் சிறப்பான பணிகளை செய்தார். இவரைப் பற்றி இவரது சீடரான சுவாமி நடராஜானந்தர் குறிப்பிடுகையில்,
வட இந்தியாவிலே ஒரு விவேகானந்தரைப் போல
ஈழ நாட்டிலே அதிலும் சிறப்பாக கிழக்கிலங்கையில்
ஒரு சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தியவர் விபுலானந்தர்"
பொதுவாக இவரது சிந்தனைகள் சமயம், இலக்கியம், சமூகம், கலை போன்ற பல துறைகளில் செல்வாக்குப் பெற்றிருப்பதை அவதானிக்கலாம்.
இவர் முத்தமிழ் வித்தகராக விளங்கினார். இவரால் எழுதப்பட்ட நூல்களுள் யாழ்நூல் மிகவும் பிரபலமானது. இலங்கைக் கல்வித் திணைக்களத்தில் பாடநூற் சபை, கல்விஆய்வு சபை ஆகியவற்றில் உறுப்பினராக இருந்து ஆக்கபூர்வ பணிகளைச் செய்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ் பேராசிரியராக கடமை புரிந்தார். இவர் இராமகிருஷ்ண மீஷனின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ் வைத்தீஸ்வராக்கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம் போன்றவற்றை நிறுவினார். பாடசாலைகளில் சைவசமயம் கற்பிக்க வேண்டும் எனும் திட்டம் ஏற்பட்டபோது சமயத்திற்கான திட்டம் வகுத்தவர் அடிகளார் ஆவார். யாழ்ப்பாணத்தில் இந்து சாதனம், இந்து இதழ் ஆகிய நூல்களையும் வெளியிட்டு சைவ சமய வளர்ச்சிக்கு வித்திட்டார். இதன் வாயிலாக ஒழுக்கமுள்ள மாணவ சமுதாயத்திற்கு முன்னோடியாக இருந்தார்.
விபுலானந்தர் இயல், இசை, நாடகம் முத்தமிழ் கலைகளில் நன்கு கால்த்தடம் பதித்தவர். கலை இலக்கியம் சம்பந்தமாக இவர் எழுதிய கட்டுரைகள் முதல் அவரது ஆராய்ச்சி மணிமுடி எனக் கருதப்படும் யாழ்நூல்வரை தொகுத்து நோக்கும்போது இவரது கலைச்சாதனைகள் புலனாகின்றன.
கலை பற்றிய அவரது கோட்பாடுகளை அறிய நாகரிக வரலாறு, எகிப்திய வரலாறு. ஜவனபுரக் கலைச்செல்வம் போன்ற ஆக்கங்கள் சான்றாக அமைகின்றன. இவரது இசை ஈடுபாட்டினை அறிவதற்கு சங்கீத பாரிஜாத நட்டபாடை, பண்ணன் எட்டுக்கட்டளை, எண்ணும் இசையும் போன்ற இவரது கட்டுரைகள் இசை பற்றி அறிய அவர் சிந்திப்பதற்கான ஆதாரங்களாகும்.
"என்கடன் பணி செய்து கிடப்பதே" என்ற கூற்றுக்கு அமைவாக விபுலானந்தர் வாழ்ந்து காட்டினார். தென்னாட்டில் ஊற்றெடுத்த அன்புப் பெருக்கு, வடநாட்டில் பரவிய வரன்முறை, மேற்த்திசைச் செல்வம், விஞ்ஞான தீபம் போன்ற கட்டுரைகளில் சமயப்பணிகள் மக்கள் வாழ்க்கையோடு இணைந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வர்ணபேதம், இனபேதம் இல்லாத மனிதகுலத்தை உருவாக்குவதே இவரது கனவாகும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகக் கடமை புரிந்த காலத்தில் திருவேட்களத்தில் ஒதுக்கப்பட்ட ஆதிதிராவிடர் வாழ்கின்ற சேரிகளுக்குச் சென்று பாலகர்கள் கற்கப் பள்ளிகளை நிறுவினார். வளர்ந்தோர் படிக்க இரவுப் பள்ளிகளை நிறுவினார். இதன் மூலம் ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட கல்வியறிவு இல்லாத மக்களுக்கு கல்வியறிவு கிடைக்க வழிகாட்டினார்.
வார்த்தையாலும் வாழ்க்கையாலும் சாதி ஒடுக்கு முறைகளை அவர் என்றைக்கும் ஒரு சீர்திருத்தவாதியாக எதிர்த்து வந்தார். சமய நெறிகள் தீண்டாமையைத் துடைத்தெறியும் ஆற்றல் பெற்றமை என்பது பின்வருமாறு உணர்த்தப்படுகின்றது.
"தம்மை ஆண்டவனுக்கும் மக்களுக்கும் உற்ற நண்பராகவும் தொண்டராகவும் உடன் உழைப்பவராகவும் கருதிய மூதறிஞர் வகுப்பு வேற்றுமை காட்டாது எல்லோரும் ஓர்குலம் எனும் உண்மையைகடைப்பிடித்து வாழ்ந்து வந்தார்". இலங்கையில் மட்டக்களப்பு, கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்தில் அநாதை விடுதிகள் கட்டி நிர்வகித்தமையும் அவரது சமூகப்பணிகளையே எடுத்துக்காட்டுகின்றன.
இவ்வாறு சமயத்திற்கும். தமிழுக்கும் தொண்டாற்றி மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அடிகளார் 1947 ஆம் ஆண்டு இம்மண்ணுலக வாழ்வைத் துறந்து புகழ் உடம்பு எய்தினார்.
மார்ட்டின் லூதர்கிங்
வெள்ளை இனவெறியர்களால் அடக்குமுறைக்குட்பட்டு துன்பத்தை அனுபவித்த கறுப்பின மக்களுக்கு சம உரிமையை பெற்றுக் கொடுக்க அயராது உழைத்தவர் மார்ட்டின் லூதர்கிங்.
இரண்டாம் காந்தி என அழைக்கப்படும் இவர் அன்பே வெல்லும் எனும் தாரக மந்திரத்தை நடைமுறையில் நிரூபித்துக்காட்டியவர்.
இவர் 1929 Jan 05 பிறந்தார். சிறுவயதிலேயே நிறவெறிக் கொடுமைகளைச் சந்தித்தார். கறுப்பின மக்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டும் என சாத்வீக முறையில் அவர்களை திரட்டும் பணியில் ஈடுபட்டார். இடைவிடாது பிரசங்கங்களை மேற்கொண்டார்.
அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர இன ஒதுக்கல் கொடுமைகளை எதிர்த்து முழக்கம் செய்தார்.
சகோதரர்களே! வன்முறையை நாம் ஆதரிக்கவில்லை. நாம் நம்முடைய வெள்ளை சகோதரர்களை நேசிக்க வேண்டும் என சமத்துவத்தை வலியுறுத்தினார்.
நிறவேற்றுமை களைய பேரூந்துப் புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர். லூதர் கறுப்பின மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். இவருடைய நிதானமாக போக்கு, சகிப்புத்தன்மை, கறுப்பு இன மக்கள் சமூக சமத்துவத்தை அடைய வேண்டும் என்ற இலட்சிய உறுதி அவரை தனித்துவம் மிக்கத் தலைவர் என்பதை உறுதிப்படுத்தியது.
இவர் அமைதிக்காகப் பாடுபட்டமையால் 1964ம் ஆண்டு oct 14 நோபல் பரிசு பெற தெரிவு செய்யப்பட்டார்.
மக்கள் அனைவரும் அமைதியாக வாழ ஒரு முறையைக் கண்டுபிடிக்க வேண்டும். இதை சாதிக்க பழிவாங்கல், ஆக்கிரமிப்பு. திருப்பி அடித்தல் போன்றவற்றை நிராகரித்து மனித மோதல்களுக்கு தீர்வு காணக் கூடிய வழி முறையை மனிதன் உருவாக்க வேண்டும் எனவும், அதற்கு அன்பு என்பதே அடித்தளமாகும் என வலியுறுத்தினார்.
மார்டின் சிறந்த பேச்சாளர். மறுமலர்ச்சி தரும் ஊக்கத்துடன் சொற்பொழிவாற்றினார். பல நூற்றாண்டுகளாக அடிமைகளாகவும் நசுக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்த நீக்ரோ இனம் மந்த நிலையில் இருந்தது. அவருடைய வீரமிக்க பேச்சுக்கள் நீக்ரோ இனத்திற்கு மின்சாரம் பாய்ச்சியது போல இருந்தன. இவருடைய அழுத்தமான சொற்போருக்கு 1963
இல் நடைபெற்றது. அப்பொழுது 2,500.00 அமெரிக்கர்கள் ஜாதி, மத, இன வேறுபாடு இல்லாமல் வாஷிங்டனுக்குச் செல்லத் தயாரானார்கள். அவருடைய சொற்பொழிவின் சாரம் யாதெனில் "இன வேற்றுமையும் மறையும், கடவுளின் குழந்தைகள், கடவுளின் பூமியில் சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் வாழ வேண்டும். இந்த நாளைத்தான் நான் எதிர்நோக்கியிருக்கின்றேன்" என்பதாம். அதுவே அவரது கனவாகும்.
இவர் தனது பிரசங்கங்களில் "பிறருக்கு சேவை செய்ய மார்டின்லூதர் கிங் தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தார் என அந்நாளில் யாராவது குறிப்பிட வேண்டும் என விரும்புகின்றேன். மார்டின் லூதர்கிங் சிலரிடம் அன்பு காட்ட முயற்சித்தார். பட்டினியால் வாடுவோருக்கு உணவு கொடுக்க முயற்சித்தேன் எனவும், மனித குலத்தை நேசிக்கவும் அதற்கு சேவை செய்யவும் முயற்சித்தேன் என பிறர் கூற வேண்டும். அமைதிக்காக முறசறைந்தவன் நேர்மைக்காக முரசறைந்தவன் எனக் கூறுங்கள் இதர அற்பமான விடயங்கள் ஒரு பொருட்டல்ல விட்டுச்செல்ல என்னிடம் பணம் ஏதும் இருக்காது ஆனால் நான் கொள்கைப் பிடிப்புள்ள வாழ்வை விட்டுச் செல்ல விரும்புகின்றேன்" எனக் கூறினார்.
இவர் தனது எழுச்சி உரையில் தான் ஒரு கனவு கண்டதாகக் கூறுகின்றார். பழைய அடிமைகளின் மகான்களும் அடிமைச் சொந்தக்காரர்களின் மகான்களும் ஜார்ஜியாவின் செங்குன்றங்களின் ''சகோதரத்துவம'' எனும் மேசையைச் சுற்றி ஒருநாள் ஒன்றாக உட்காருவார்கள் என்று நான் கனவு கண்டேன்.
அடக்குமுறை வெப்பத்தினால் வெந்து தணியும் மாநிலமான மிஸி ஸிப்பி மாநிலம் கூட சுதந்திரம் மற்றும் நீதியின் பாலைவனப் பசுஞ்சோலையாக ஒருநாள் மாற்றப்படும் எனக் கனவு கண்டேன்.
என்னுடைய நான்கு சின்னஞ்சிறிய குழந்தைகளும் தங்களுடைய தோலின் நிறத்தைக் கொண்டு தீர்மானிக்கப்படாமல் அவர்களுடைய ஒழுக்கத்தின் தன்மையைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்ற ஒரு நாட்டில் ஓர்நாள் வாழ்வார்கள் என்று கனவு கண்டேன்.
தீய குணம் வாய்ந்த இன வெறியர்களும் குறுக்கீடு செய்வது பயனற்றுப் போகச் செய்வது போன்றவற்றை கூறும் ஆளுநர் உள்ள அலபாமாவில் ஒருநாள் சின்னஞ்சிறு கறுப்பு இனச்சிறுவர்களும், சிறுமிகள், சகோதர சகோதரிகளாக கைகோர்த்து நிற்பார்கள் என சகோதரத்துவத்தை தனது கனவின் மூலம் எடுத்துரைத்தார்.
'' பள்ளத்தாக்கும் உயர்ந்து நிற்கும் மலையும் குன்றும் பள்ள மாக்கப்பட்டு விடும் எனவும், கரடுமுரடான இடங்கள் சமதளமாகவும் வளைந்து காணப்படும் இடங்கள் நேரானதாகவும் மாறும்'' என கனவு கண்டதாக கூறுகிறார்.
இதுவே நமது நம்பிக்கை இந்த விசுவாசத்துடன் தான் தெற்குப் பகுதிக்கு செல்வதாக கூறுகிறார். இந்த விசுவாசத்துடன் நமது நாட்டின் சச்சரவு மிக்க மன வேற்றுமைகளை அழகான சகோதரத்துவ சங்கீதமாக மாற்றுவோம்.
இந்த விசுவாசத்துடன் ஒருநாள் நாம் அனைவரும் சுதந்திரர்களாவோம் என்ற உணர்வுடன் நாம் ஒன்றுசேர்ந்து பணிபுரிய இயலும், கடவுளை வழிபட இயலும், போராட இயலும், விடுதலைக்கு ஒன்றாக நிற்க இயலும் எனக் கூறினார். இதுதான் அந்தநாளாகும்.
இந்நாளில் தான் கடவுளின் குழந்தைகள் அனைவரும் "என்னுடைய நாடு உன்னுடையது. விடுதலையின் இனிய பூமி, இதனைக் குறித்து நான் பாடுபடுகின்றேன் எங்கள் தந்தை இறந்த பூமி, புனிதப் பயணப் பெருமை வாய்ந்த நாடு, ஒவ்வொரு மலையின் பக்கவாட்டிலும் சுதந்திரம் ஒலிக்கட்டும் எனக் கூறுவர்''
அமெரிக்காவின் பல பாகங்களிலும் சுதந்திர ஒலி ஒலிக்கட்டும் எனவும் இதனை ஒவ்வொரு மாநிலம், கிராமம், குக்கிராமம் என ஒவ்வொரு இடத்திலும் மணியோசை எழுப்ப அனுமதிக்கும் போது அந்த நாளை துரிதமாக கொண்டுவர முடியும்.
அதாவது கடவுளின் குழந்தைகளான கறுப்பர்களும் வெள்ளையர்களும், யூதர்களும், மேல்தட்டு மனிதர்களும், கத்தோலிக்கர்களும், புரட்டஸ்தாந்துகளும் கைகோர்த்து நின்று கறுப்பு இனமக்களின் பழமை வாய்ந்த பாடலான.
"இறுதியில் விடுதலை, இறுதியில் விடுதலை மகத்தான கடவுள் வல்லமை மிக்கவர் இறுதியாக நாம் விடுதலை அடைந்தோம்" என்ற பாடலை நாம் அனைவரும் பாட இயலும்.
இவ்வாறு நெஞ்சம் நெகிழும் வகையில் மார்டின் லூதர் கிங் எழுச்சி உரை நிகழ்த்தி முடிந்ததும் கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்களும் மெய் சிலிர்த்து ஆரவாரம் செய்தனர்.
அடிமை நிலையை தகர்த்தெறிய ஆபிரகாம் லிங்கன் ஆற்றிய உரைபோல வாஷிங்டன் பேரணியில் மார்டின் லூதர் ஆற்றிய "நான் ஒரு கனவு கண்டேன்" எனும் உரையும் வரலாற்று புகழ் பெற்று ஆவணமாகி விட்டது.
அமைதியான முறையில் நீக்ரோக்களின் உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடி அமெரிக்காவின் நீதியை நிலை நிறுத்த அறைகூவினார். கண்ணுக்கு கண் என்ற பழிவாங்குதலை அவர் அறவே வெறுத்தார் அகிம்சா முறையிலேயே போராடினார். அதுவே அவருடைய போர்கருவி. "இக்கருவி ரணம் ஆகாமல் வெட்டும். அதைப் பயன்படுத்தும் மனிதனை மேன்மைப்படுத்துகிறது. குணப்படுத்தும் உடைவாள் அது" என மார்டின் கூறுவதனூடாக நல்லுறவிற்கான பாதையைத் திறந்து விடுகின்றார்.
இவர் ஜேம்ரேயாஸ் என்பவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
பேராயர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர்
1920 ம் ஆண்டு மே மாதம் 18ம் திததி போலந்தின் வாதோவிச்சி எனும் நகரில் பிறந்த கறோல் யோசப் வொய்த்திவா என்ற பெயர் கொண்ட திருத்தந்தை 2ம் ஜான் பால் (யோவான் பவுல்) 1929ல் எமிளியா என்ற தனது தாயை இழந்தார். தமது ஒரே சகோதரனான மருத்துவர் எட்மண்டை 1932ல் இழந்தார். செருமினிய நாட்சிகளின் ஆக்கிரமிப்பால் போலந்தின் பல்கலைகழகம் 1939ல் மூடப்பட்டது.
எனவே செருமனிக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் சுண்ணாம்புக்கல் அகழ்விடத்திலும் பின்னர் சொல்வாய் நகரில் வேரித் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். 2ம் உலகப் போருக்குப் பின்னர் கல்விப்படிப்பை மீண்டும் தொடர்ந்து 1946) குருவானார். 1964ல் கிராக்கோவ் பேராயராகவும் 1967ல் கர்த்தினாகவும் உயர்த்தப்பட்டார்.
முதலில் சமூக நல்லுறவு என்றால் என்ன என்பதை நோக்குவோமாக இருந்தால் இன,மத,மொழி,பால் வர்க்க,கலாசார வேறுபாடுகள் அமைத்து அதற்கு அப்பால் இயல்பான தன்மைகளைக்கொண்டு ஐக்கியம், புரிந்துணர்வு. விட்டுக்கொடுப்பு, சகோதரத்துவம், சகிப்புத்தன்மை என்பன ஒரு சமூகத்தில் ஒருங்கே காணப்படுமாயின் அதனை சமூக நல்லுறவு என்று கூறலாம்.
அந்தவகையில் இத்தன்மை வாய்ந்த சமூக நல்லுறவு பற்றி அருள் சின்னப்பருடைய பார்வை எத்தகையது என்பதை பார்த்தால், இவர் இவருடைய தாய்மொழியான போவியம் மட்டுமல்லாது இத்தாலியம், பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம், எசுப்பாணியம், போர்த்துக்கீசம். உக்குரொனியம், ரஸ்யம், குரொசியம் முதலிய பல்வேறுபட்ட மொழிகளை அறிந்து பல நாடுகளுக்கு சென்று மக்களுடன் பிரசங்கங்களை மேற்கொண்டுள்ளார். இவ்வகையில் சமூக நல்லுறவை முதலில் மொழிகளின் அடிப்படையில் ஆரம்பித்துள்ளார் என்பது புலனாகின்றது.
திருச்சபையில் மக்கள் மயப்படுத்தும் செயற்பாட்டைக் கொண்டு வந்தார். இத்திட்டங்களின் பயனாக சாதாரண மக்கள் தொடக்கம் அனைவரும் திருச்சபையில் சடங்குகளை செய்தனர். இதன் மூலம் மக்களை நேரடியாக தரிசிக்கவும், அவர்களை ஆசிர்வதிக்கவும். அவர்களது விசுவாசத்தை உறுதிப்படுத்தவும் இது உதவுகின்றது. உலக நாடுகள் பலவற்றுக்கு விஜயம் மேற்கொண்டு சமாதான தூதுவராகவும். சமய சௌஜன்ய யாத்திரையாகவும், நல்லெண்ண அடிப்படையில் பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் சமூகநல்லுறவை ஏற்படுத்தினார். இவரது வருகையில் இலங்கை வருகையும் இருந்தது. போர்த்துக்கேயருடைய காலத்திலேயே இலங்கையில் கத்தோலிக்க கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வகையில் மக்கள் கத்தோலிக்கத்திற்கு மதம் மாற்றப்பட்டனர்.
சிலர் ஒல்லாந்தர் ஆட்சி வந்ததுமே மிக இலகுவாக கத்தோலிக்கத்தை மறுதலித்தனர். ஒல்லாந்தர்கள் கத்தோலிக்கத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டதனால் அருட்சாதனைகளை நிறைவேற்றி மறையறிவை ஊட்ட குழுக்கள் இல்லாத போதே யோசேவால் கூலித் தொழிலாளாராக இலங்கையின் கரையோரங்களில் கால் தடம் பதித்தார்.
முதலில் உதரிகளாமச் சிதறிக்கிடந்த கத்தோலிக்கரை தேடிச்சென்று சந்தித்து அவர்களை ஒன்று திரட்டினார். மறைவாக வீடுகளிலே கூடி செபிக்கவும் செயற்படவும் தூண்டினார்.அவர்களை வீடுகளிலே படிப்படியாக அவர்களை ஒரு விசுவாசக் குழுக்களாகக் கட்டியெழுப்பினார்.
இவருடைய பணி மக்களை ஒரு நம்பிக்கையாளர் குழுக்களாக கட்டியெழுப்புவதில் தான் இவர் முழுமூச்சாக திகழ்ந்தார். இவர் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய இரண்டு வருடங்களும் சரி அல்லது கண்டியை மையமாகக் கொண்டு தூய பவுல் அடிகளாரின் தூதுப் பயணங்களைப் போல இவர் மேற்கொண்ட தூதுப் பயணங்களிலும் சரி வெவ்வேறு இடங்களில் கிறிஸ்தவ குழுமங்களைக் கட்டியெழுப்புவதையே இலக்காகக் கொண்டார்.
இதுமட்டுமன்றி கிறிஸ்தவதினத்தன்று 1689ல் ஒல்லாந்தரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் தமது உயிரை துச்சமாக வைத்து ஏழு பேர் தரவல்ல ஒரு விசுவாச குழுமத்தை உருவாக்கினார். 1704ல் புத்தளம், மாந்தோட்டம், திருகோணமலை, மட்டக்களப்பு முதலிய இடங்களிலும் 1697ல் நீர்கொழும்பு, குருபவிலி போன்ற இடங்களில் சமூகமக்களை ஒன்றிணைத்து ஒற்றுமை சமூக நல்லுறவிற்காக மறை பணிகளை செய்துள்ளார்.
இவர் கத்தோலிக்க கலாசாரத்தை தமிழில் மட்டுமன்றி சிங்கள மொழியிலும் சிங்கள சமூக கவரும் முகமாக உரையாற்றி ஒரு பூரண நல்லுறவை வளர்த்துள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் 264வது திருத்தந்தையாவார். இவர் 26 ஆண்டுகள் 168 நாட்கள் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றினார்.இதுவரை பணியாற்றிய திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தையாவர். மேலும் 1520க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதற் தடவையாகும்.இவர் 1978 ம் ஆண்டு 16ம் நாள் பதவியேற்றார்.வரலாற்றில் நீண்டகாலம் இப்பதவி இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர்.2005 ஏப்ரல் 2 தனது 84வது வயதில் இயற்கை எய்தினார்.
அன்னை தெரேசா
உலகப் புகழ் பெற்ற சமூகசேவகியும், நோபல் பரிசு பெற்றவரான அன்னை தெரேசா அவர்கள் யூகோசிலேவியாவில் 1910, யுரபரளவஇ 26ம் திகதி அல்போனிய பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்பதாகும். 2ம் உலகப் போரில் தன் தந்தையை இழந்த இவருக்கு. 12 வயதிலேயே துறவியாகும் எண்ணம் தோன்றியதுடன், ஏழைகளுக்கு சேவை செய்வதில் தன் வாழ்நாளை அர்ப்பணிக்கத் தீர்மானித்தார்.
அன்னை அவர்கள் தம்மை கிறிஸ்தவ மதத்தோடு இணைத்துக் கொண்டார். இயேசு கிறிஸ்துவின் போதனைக்கு இணங்க ஏழைகளின் புன்னகையில் திருப்தியடைய ஏங்கி நின்றார். இவருடைய சேவைகள் கிறிஸ்தவ மதத்தில் இயேசு உரைத்த மொழிகளின் பிரகாரமாய் அமைந்தது. இயேசுவின் பெயரால் அன்பின் பணியைச் செய்வதே அவருடைய நினைவும். கனவுமாய் இருந்தது. இறைபக்தி நிறைந்த சூழலில் வளர்ந்த இவர். தனது 18வது வயதில் கன்னியாஸ்திரி மடத்தில் சேர்ந்து கொண்டார். 1928ம் ஆண்டு 'லொறோஸ்டோ' மடத்தில் தன் கன்னியாஸ்திரி வாழ்க்கையை ஆரம்பித்தார். பின் 1929ம் ஆண்டு இந்தியா சென்று தனது பணியை முன்னெடுக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கல்கத்தாவில் உள்ள கன்னியாஸ்திரி மடம் ஒன்றில் சேர்ந்து 1931ம் ஆண்டு கன்னியாஸ்திரியாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். கல்கத்தாவிலுள்ள புனித மரியாள் பாடசாலையில் 17 வருடங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அது வறிய மற்றும் அநாதை குழந்தைகளுக்காகவே நடாத்தப்பட்ட பாடசாலையாகும். 1944 ஆண்டு அதே பாடசாலையில் அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரின் வழிநடத்தலின் கீழ் அங்குள்ள மாணவர்கள் நன்மையைப் பெற்றுக் கொண்டனர்.
இவர் கடமையாற்றிய மடத்தின் அனுமதியைப் பெற்று வெளியுலகிலும் தனது பணியை ஆரம்பித்தார். திரேசா அவர்கள் "நான் கன்னி மடத்தை விட்டு வெளியேறி ஏழைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டே அவர்களுக்கு உதவ வேண்டும், இது ஒரு கட்டளை, இதைத் தவறுவது விசுவாசத்தை மறுதலிப்பதற்கு ஒப்பானது". எனக் கூறினார். 1931ல் ஒரு மத நிகழ்ச்சியில் தீட்சையளிக்கப்பட்டு 'தெரேசா' என அழைக்கப்பட்டார்.
தொடக்கத்தில் 'மோதிஜ்ஜில்' என்ற சேரியில் தனது பணியைத் தொடங்கினார். அங்கேயே நிரந்தரமாக தங்கிக் கொள்ள முடிவெடுத்து ஜந்து ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்து ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்துத் தங்கினார். அங்குள்ள மக்களிடம் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினார். அப்பகுதிப் பிள்ளைகளுக்குச் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் போதித்தார். பின்னர் அப்பகுதிச் சிறுவர்களை அழைத்து அவர்களுக்கு இலவசமாகக் கல்வி கற்பித்தார். ஒரு மர நிழலில் 5 வறிய குழந்தைகளுக்கு பாடம் போதிக்கும் முறையோடு ஆரம்பித்த இவரது பணி மக்கள் சேவை செய்யும் அளவிற்கு வளர்ச்சிப் பெற்றது. ஏராளமான ஏழைப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியின் முதுகெலும்பாக இருந்தார். அன்பே உருவான அன்னை ஏழைகளைப் பற்றி அறிய வேண்டுமானால் நாமும் ஏழைகளாக மாற வேண்டும் எனக் கூறினார்.
'கள்ளிக் கோட்டை' எனும் இடத்தில் வயோதிபர்களுக்கான ஒரு இல்லம் அமைத்து அவர்களுக்கு சேவையாற்றத் தொடங்கினார். அதன் பின் பட்டினியினால் வாடுவோர், ஆதரவற்றோருக்கு அடைக்கலம் தந்தார். இச்செயற்பாடுகள் இந்திய உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. அவர்களின் பாராட்டையும் பெற்றார். அன்னையின் சமூகப் பணி மெல்ல மெல்ல விரிவடைந்தது. தன்னோடு என்டேலிப் பள்ளியில் படித்த மாணவிகளையும் சேவகிகளாக இணைத்துக் கொண்டார்.
07 அக்டோபர் 1950 அன்று அன்னை தெரேசா அவர்கள் இந்தியாவில் "மிசனரிஸ் ஆப் சாரிட்டி” என்ற பெயரில் இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார். தனது இயக்கத்திற்கான சட்டதிட்டங்களை உருவாக்கினார். இதன் கடமையாக "உண்ண உணவற்றவர்கள், உடுக்க உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழுநோயாளிகள் போன்றவர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களென எண்ணிக் கொண்டிருப்பவர்களையும், அன்பு செய்யப்படாதவர்கள் எனவும் எண்ணிக் கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரம் என்று எண்ணப்பட்டுப் புறக்கணிக்கப் பட்டவர்களையும் கவனித்தலேயாகும்". இவ்வியக்கத்தில் சேவை செய்வதற்காக கல்கத்தாவிலிருந்து பல பெண்கள் ஆர்வத்தோடு வந்து சேர்ந்தார்கள். ஆரோக்கியமான உடல் மற்றும் உலகப் பொது அறிவு, புன்னகையுடன் சேவை செய்தல்
இம்மூன்றுமே அன்னையின் இயக்கத்தில் முக்கிய குறிக்கோள்களாகும். 1963 இல் கல்கத்தாவில் இதன் கிளை ஒன்று தொடங்கப்பட்டது. இந்தியா மட்டுமன்றி இலங்கை, ஆஸ்திரேலியா, தன்சானியா, இத்தாலி, வெனிசுவெலா, அயர்லாந்து, இங்கிலாந்து, போன்ற நாடுகளிலும் அன்னையின் சேவை மையங்கள் தோன்றின. கல்கத்தாவில் 13 உறுப்பினர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வியக்கம். இன்று 130 நாடுகளில் செயற்பட்டு வருகின்றது. 50க்கும் அதிகமான அநாதை சிறுவர் இல்லங்கள் இயங்குகின்றன.
1950ல் 'நிர்மல் ஹிருதயா' என்ற பெயரில் தொண்டு இல்லத்தை நிறுவினார். இதற்கு 'தூயமனது' என்பது பொருள். உருக்குலைந்த உடல்களில் புண்களோடு உள்ளவர்களை தங்க வைத்து அவர்களது புண்களைக் கழுவி சுத்தம் செய்து, உறவினரால் கைவிடப்பட்ட நோயாளிகளைப் பராமரித்தார். அருவருப்புத் தரக்கூடிய வேலைகளை அன்னை மனங்கோணாது செய்தார்.
நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய பாட்னாவில் உள்ள மெடிக்கல் மிசனரியில் பயிற்சி மேற்கொண்டார். எளிமையின் சிகரமாக விளங்கும் அன்னை மிசனரிஸ் ஆப் சேரிடி அமைப்பின் ஊழியர்கள் அணியும் நீலநிறக் கோடுகளைக் கொண்ட வெள்ளைப் புடவையையும், ஒரு முழுக்கை வெள்ளைச் சட்டையையும் அணிந்து கொண்டார். காலில் ஒரு எளிமையான செருப்பு. இதுவே அன்னையின் புதிய தோற்றம்.
1955 சிசுபவன் என்ற அமைப்பை உருவாக்கி ஊனமுற்ற குழந்தைகளை சேர்த்துப் பராமரித்தார். 1952இல் கல்கத்தாவில் ஒதுக்கப்பட்ட இடத்தில் இறப்பின் வாயிலில் இருப்போருக்கு இல்லம் ஒன்றை நிறுவினார். இந்திய அதிகாரிகளின் துணையுடன் புகழ் பெற்ற இந்துக் கோயிலை நல்வாழ்வு மையமாக மாற்றி ( The galigod home for the dyang) இறப்பின் வாயிலில் இருப்போருக்கான 'காளிகாட் இல்லம்' என்று பெயரிட்டார். இவ்வில்லத்தில் இருப்பவர்களுக்கு மருத்துவ வசதிகள் வழங்குவதுடன் இறந்த பின் அவர்கள் சார்ந்த மதச்சடங்குகளுடன் கௌரவமான மரணத்தை அடையும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தார். இங்கு மத வேறுபாடுகளுக்கு இடமிருக்கவில்லை.
1982 இல் பெய்ரூட்டின் கடும் முற்றுகையைத் தொடர்ந்து இஸ்ரேயல் படைகளுக்கும் பாலஸ்தீன கொரில்லாக்களுக்கும் இடையே தற்காலிகப் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்து, முன்னோடி தாக்குதலுக்கு உள்ளான ஒரு மருத்துவ மனையினுள் சிக்கிக் கொண்டிருந்த 37 குழந்தைகளை மீட்டார். செஞ்சிலுவைச் சங்கத்தாருடன் சேர்ந்து யுத்த பகுதியினூடே பாழ்பட்ட மருத்துவ மனைக்குச் சென்று நோயாளிகளை வெளியேற்றினார்.
பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காள தேசம் ஆன போது உள்நாட்டுப் போரால் வங்காள தேச மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு வந்த போது, அவர்களுக்காக அகதிகள் பாதுகாப்பு இல்லம் அமைத்தார். கருக்கலைப்பு மற்றும் விவாகரத்துக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு உடையவராய் இருந்தார். கருக்கலைப்பு உலக சமாதானத்தை அழிக்கும் மிகப்பெரியக் காரணியெனக் கூறினார்.
எதியோப்பியாவில் பசித்தோருக்கும் செர்னோபிலின் அணுக்கதிர்களின் தாக்கத்துக்குள்ளானவர்களுக்கும், ஆர்மீனியாவின் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டோருக்கும், உதவியும் ஊழியமும் செய்ய பயணித்தார். அன்னை இலங்கைக்கு விஜயம் செய்த போது அவருக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடைய சேவைகள் இலங்கையிலும் தொடர்ந்தது. இலங்கையில் முதன்முதலாக மாதம்பிட்டியில் அவரது சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து பல மாவட்டங்களில் அன்னையின் சேவை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதனூடாக லட்சக்கணக்கான மக்கள் பலனடைந்து வருகின்றனர்.
தனக்கு கிடைக்கும் நன்கொடைப் பணத்தை தன்னுடைய இயக்கத்திற்கும் சிறுவர்களின் கல்விக்கும் நோயாளிகளின் மருத்துவ செலவிற்கும், ஏழைகளின் வாழ்க்கைத் தரத்திற்கும் பயன்படுத்தினார். இவரது சேவையைக் கண்ட கன்னியாசி மடம் இவரை அன்னை தெரேசா என அழைத்தனர். கல்கத்தா பணியாளர் சபைக்கூடாக இவர் செய்த சேவை சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்ட வறுமைக்கு எதிரான பொதுச் சேவையாகும். இவர் உலகில் நடமாடும் தெய்வம் எனவும் அழைக்கப்பட்டார். கருணை, காருண்யம், தயாள சிந்தனை இம்மூன்றும் அன்னையின் தாரக மந்திரமாகும்.
அன்னையின் சேவையைப் பாராட்டி 1962 ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. அதே ஆண்டு பிலிப்பைன்ஸ், மாக்சேசே விருதை வழங்கியது. 1971 இல் "கென்னடி சர்வதேச விருது ஜவர்கலால் நேருவினால் வழங்கப்பட்டது. 1979 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார. பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விழாவை மறுத்த அவர், அதற்கான கூ192,000 நிதியை இந்தியாவின் ஏழை மக்களுக்குக் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டார். அன்னை தெரேசா பரிசை பெற்ற போது உலக சமாதானத்தை மேம்படுத்த நாம் என்ன செய்யவேண்டும் எனக்கேட்ட போது அதற்கு அவர் 'வீட்டிற்கு போய் உங்கள் குடும்பத்தை அன்பு செய்யுங்கள்' எனக் கூறினார். 1980 இல் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்து. அத்தோடு அன்னை 1999 ஆம் ஆண்டு அமெரிக்கக் கருத்துக் கணிப்பின்படி 20 ஆம் நூற்றாண்டில் அதிகமாகப் புகழப்பட்ட பெண்மணியாகக் கருதப்பட்டார்.
1980 ஆம் ஆண்டு இந்திய அரசு அன்னை தெரேசாவின் உருவம் பதித்த தபால் தலை ஒன்றை வெளியிட்டு அன்னையின் சமூகப் பணியைக் கௌரவித்தது. உயிருடன் இருக்கும் யாருக்கும் மத்திய அரசு தபால் தலை வெளியிடுவதில்லை. அன்னை தெரேசா ஒருவரே அந்தப் பெருமையைப் பெற்றார். இவை மட்டுமன்றி அன்னை தெரேசா தனது சமூக சேவைகளுக்ககாகப் பெற்ற பரிசில்களும் பாராட்டுதல்களும் எண்ணிலடங்காதவை. அன்னை 05 செப்டெம்பர் 1997 ஆம் ஆண்டு இரவு சுமார் 9.30 மணியளவில் மாரடைப்பினால் கல்கத்தாவில் காலமானார். இவர் இறந்த ஆண்டில் தமிழக அரசு மகளிர் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பித்து அதற்கு அன்னை தெரேசா பல்கலைக் கழகம் எனப் பெயரிட்டது.
இவ்வாறாக சமூக சீர்திருத்தத்தில் அன்னை தெரேசாவின் பணி உலகளவில் பெறுமதியாகக் கருதப்படுகின்றது.
நெல்சன் மண்டேலா
அவர் வேறு யாருமில்லை. இந்த உலகத்தை விட்டு அவர் நீங்கிய போது உலகில் பல்வேறு மூலைகளிலும் உள்ள மக்கள் கண்ணீர் வடித்து தங்களது அளப்பற்ற அன்பை வெளிப்படுத்திய வரலாற்று நாயகனான 'நெல்சன் மண்டேலாவே' ஆவார். முதலில் ஆயுதத்தை கையிலெடுத்து தனது இலட்சியத்தை அடைய நினைத்த மண்டேலா பின்னர் அதிலிருந்து விலகி அஹிம்சை பாதையை தேர்ந்தெடுத்து அதன் வழி நடைபோட்டு வெற்றி இலக்கை அடைந்தார்.
எவ்வாறு மகாத்மா காந்தி அவர்கள் டால்ஸ்டோயிடமிருந்து அஹிம்சை என்ற உன்னதமான விடயத்தைப் பெற்றுக்கொண்டாரோ, அதே போல மண்டேலாவும் மகாத்மா காந்தியிடமிருந்து அஹிம்சையை தனது வாழ்விற்கான அடிப்படையாகப் பெற்றுக்கொண்டார் எனலாம். இதற்கு சான்றாக, 27 வருடங்கள் சிறையிலிருந்த நெல்சன் மண்டேலாவை சிறையில் எவ்வாறு பொழுதை கழித்தீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது அவர் கூறிய பதில், "27 ஆண்டுகளும் நான் திரும்பத் திரும்பப் படித்த ஒரே புத்தகம் மகாத்மா காந்தியடிகளின் சுயசரிதையாகிய சத்திய சோதனை மட்டுமே" என்பதே ஆகும்.
தனக்கென எதையும் நோக்காமல் சமுதாய நலன், பிறர்நலம், பொதுநலம் என்ற அடிப்படையில் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையை நடாத்தி அதன் மூலம் இலக்கையும் வெற்றியையும் அடைந்தவர்கள் அதிகமானவர்கள் ஆவர். அத்தோடு அராஜகத்தாலும் ஆயுதத்தாலும் எந்தவித வெற்றியையும் அடைய முடியாது. மாறாக விழுமியப் பண்புகளே நிலையான வெற்றிக்கு வழிவகுத்திருக்கின்றன. அந்த அடிப்படையில் தனது இலட்சிய சிந்தனையை அடைவதற்கான முதலில் அராஜகத்தையும் ஆயுதத்தையும் ஏந்தி, பின் அஹிம்சையை அடிப்படையாக் கொண்டு தனது இலட்சியத்தை அடைந்த மாமனிதனைப் பற்றியும் அவரிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விழுமியப் பண்புகளையையுமே இங்கு நோக்கப்போகின்றோம்.
நாம் நெல்சன் மண்டேலாவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய விழுமியப் பண்புகளை வேறு எங்கும் தேடத் தேவையில்லை. அவரது வாழ்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் திரும்பத் திரும்ப புரட்டிப் பார்த்தாலே தெரிந்துவிடும். ஏனெனில், ஒருவன் தன் வாழ்வில் காணக்கூடாத கொடுமைகள் அனைத்தையும் கண்டு, அதை அனுபவித்து அதிலிருந்து மீண்டெழுந்து வந்தவர் ஆவார். இதிலென்ன இருக்கின்றது? என்று நீங்கள் வினவலாம். இதில் ஒன்றுமில்லை ஆனால் அவ்வாறு மீண்டெழுந்து வந்த பிறகு தனக்குத் துன்பமிழைத்தவர்களை மன்னித்து அவர்களை தன்னைப் போல மதித்த மாமனிதச் செயல்தான் அவரை இன்றைய உலக நாடுகளே பேசுவதற்கு காரணமாக அமைகின்றது.
மன்னிக்கின்ற மனப்பாங்கு என்ற விடயத்தை நாம் மண்டேலாவைத் தவிர வேறு எவரிடமும் கற்றுக்கொள்ளவேண்டிய தேவை இருக்காது. அதுபோல பொறுமை, அஹிம்சை, மனிதாபிமானம், சமத்துவம் போன்ற எண்ணற்ற விழுமியப் பண்புகளை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவரிடம் சமத்துவ மனப்பாங்கு காணப்பட்டதற்கு உதாரணமாக
1964ல் அவர் ஆற்றிய உரையின் சுருக்கத்தில் காணலாம். அதாவது,
"I have fought against white domination, and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I hope to live for and to achieve. But if needs be, it is an ideal for which I amprepared to die." (Conclusion of his three-hour defence speech at his 1964 trial for sabotage and treason)
இருபதாம் நூற்றாண்டு வரலாறு நினைவில் வைத்திருக்கும் மூன்றாமவர், அவர்தான் நவீன இருபதாம் நூற்றாண்டில்கூட இன ஒதுக்கல் என்ற அசிங்கத்தால் இருண்டு போயிருந்த தென்னாப்பிரிக்காவில் விடிவெள்ளியாக உதித்து அந்த மண்ணின் மைந்தர்களான கறுப்பினத்தவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஒப்பற்ற தலைவர் நெல்சன் மண்டேலா (Nelson Mandela). தன் கொள்கைக்காக 27-ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் ஒரு தேசத்தின் அதிபரான கதைதான் நெல்சன் மண்டேலாவின் கதை. 1918-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் தென்னாபிரிக்காவின் Transkei என்ற பகுதியில் தெம்பு (Thembu) இனத்தலைவருக்கு மகனாக பிறந்தார் நெல்சன் மண்டேலா. ஆரம்பம் முதலே அவரது வாழ்க்கை முட்புதர்கள் நிறைந்த ஒன்றாகத்தான் இருந்தது.
சொந்த மண்ணில் தம் மக்கள் அடிமைப்படுத்தப்படுவதையும், கேவலமாக நடத்தப்படுவதையும் பார்த்து சிறுபான்மை வெள்ளையினத்தவரின் ஆதிக்கத்தைத் தகர்க்க வேண்டும் என்ற உணர்வு அவருக்கு சிறுவயதிலிருந்தே மனத்தில் பதிந்தது. குழசவ ரியசநபல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது ஒருமுறை மாணவர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக அவர் அந்தக்கல்வி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் நெல்சன் மண்டேலா கல்வியை கைவிடவில்லை. Witwatersrand என்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் Walter Sisulu என்ற நண்பருடன் இணைந்து தென்னாப்பிரிக்காவின் கருப்பின முதல் சட்ட நிறுவனத்தைத் தொடங்கினார். நெல்சன் மண்டேலா பிறந்தபோது தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் அதன் உச்சத்தில் இருந்தது. தொன்று தொட்டு கறுப்பர்கள்தான் தென்னாபிரிக்கா மண்ணுக்கு சொந்தக்காரர்கள்.
பதினேழாம் நூற்றாண்டில் அங்கு வந்து குடியேறிய பிரெஞ்சு டச்சு நாட்டவர்களையும், ஆங்கிலேயர்களையும் வரவேற்றது தென்னாப்பிரிக்க மண். எண்ணிக்கை பெருக பெருக அதிகாரத்தைக் கைப்பற்றி கறுப்பினத்தவர்களை கொத்தடிமைகளாக நடத்த எத்தனித்தனர் விருந்தினர்களாக வந்த வெள்ளையர்கள். தென்னாப்பிரிக்காவின் மக்கள் தொகையில் எண்பது விழுக்காட்டினராக இருந்த கறுப்பர்களுக்கு வெள்ளையர்கள் ஒதுக்கிக் கொடுத்த நிலப்பரப்பு எவ்வுளவு தெரியுமா? வெறும் பதின்மூன்று விழுக்காடுதான். வெள்ளையர்களுக்கென்று தனி பள்ளிக்கூடங்கள், நூலகங்கள், மருத்துவமனைகள், பூங்காக்கள், கட்டடங்கள். அங்கே கருப்பர்களுக்கு அனுமதி கிடையாது. வெள்ளையர்கள் வாழும் பகுதியில் நடப்பதற்குகூட கருப்பினத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இப்படிப்பட்ட கொடுமைகளை எதிர்த்து எண்பது விழுக்காட்டினர் மக்களால் போராடியிருக்க முடியாதா? என்று நீங்கள் கேட்கலாம். வெள்ளையர்கள் புத்திசாலிகள் அவர்கள் மொழிகளின் பெயரால் கறுப்பர்களை பிரித்து வைத்திருந்தனர். ஆனால் வெள்ளையின ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வந்தது ANC எனப்படும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ். அப்போது கல்லூரி மாணவராக இருந்த நெல்சன் மண்டேலா காங்கிரசின் இளையர் பிரிவைத் தொடங்கினார். மண்டேலாவின் வருகைக்குப்பிறகு இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. 1960 ஆம் ஆண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய கருப்பினத்தவரின் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர். இருபதாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். கொதித்தெழுந்த மக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவே ஆப்பிரிக்க தேசிய காங்கிரசை தடை செய்தது தென்னாப்பிரிக்க அரசு.
இனி அஹிம்சை வழி பலன் தராது என்று நம்பிய மண்டேலாவும், அவரது நண்பர்களும் ஆயுதம் ஏந்த முடிவெடுத்து ரகசியமாக நாட்டை விட்டு வெளியேறினர். 1962 ஆம் ஆண்டு நாடு திரும்பிய அவரை கைது செய்தது தென்னாபிரிக்க அரசு. ஆவணங்கள் இன்றி நாட்டை விட்டு வெளியேறினார் என்றும், அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்றும் கூறி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஒரு தீவுச்சிறையில் அடைத்தது தென்னாப்பிரிக்க அரசு அந்த ஆண்டு 1964. அடுத்த 27-ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார் மண்டேலா. இனி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால் விடுதலை செய்வதாக 1973 ஆம் ஆண்டு மற்றும் 1983-ஆம் ஆண்டிலும் தென்னாப்பிரிக்க அதிபர் கேட்டுக்கொண்டும் அதனை ஏற்க மறுத்து விட்டார் மண்டேலா. அவரது மனஉறுதி கறுப்பினத்தவர்களை ஒன்றுபட ஊக்கமூட்டியது. நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன.
மண்டேலாவை விடுவிக்க கோரி உலக நாடுகளும் தென்னாபிரிக்காவை நெருக்கத் தொடங்கின பணிய மறுக்கவே தென்னாபிரிக்காவின் மீது கடுமையான பொருளியல் தடைகளை விதித்தன உலக நாடுகள். உலகமே போர்க்கொடி தூக்கிய பிறகு தமது அட்டுழியங்களை உணர்ந்தது வெள்ளையின சமூகம். 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் அப்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் F.W.de Klerk நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்தார். புன்னகையோடு வெளி வந்த அவரை உலகம் அதிசயமாக பார்த்தது. தமது வாழ்க்கையின் கால் நூற்றாண்டை நான்கு சுவருக்குள் கழித்த அவரிடம் எந்தவித காழ்ப்புணர்ச்சியோ, வெறுப்புணர்ச்சியோ அறவே இல்லை. அவரது விடுதலைக்குப் பிறகு இன ஒதுக்கல் சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. கறுப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
1994 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்று தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார் நெல்சன் மண்டேலா. அவ்வுளவு கொடுமைகளுக்குப்பிறகு அதிபரான அவர் என்ன சொன்னார் தெரியுமா? தமது மக்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்...
"நம்மை ஒடுக்கியவர்களைப் பார்த்து நாமெல்லாம் தென்னாப்பிரிக்கர்கள் பழைய ரணங்களை மறந்து ஒன்றாக இணைந்து புதிய தென்னாப்பிரிக்காவை உருவாக்குவோம், எல்லா கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் நட்பு கரத்தை நீட்டுகிறேன் இந்த நாட்டை மறுநிர்மாணம் செய்ய உதவுமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்".
இப்படிப்பட்ட உன்னத தலைவர் வாழும் காலத்திலேயே வாழ நாமெல்லாம் பேறு பெற்றவர்கள். தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் என்ற அரக்கன் ஒழிய பாடுபட்ட அவருக்கும், அதிபர் F. W. de Klerk அவர்களுக்கும் 1993 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு அவராகவே அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். பல்லாண்டுகள் தனது மக்கள் பட்ட கொடுமைகளையும், 27 ஆண்டுகள் தாம் அனுபவித்த வேதனைகளையும் நினைத்து அதிகாரம் தன் கையில் வந்தவுடன் நெல்சன் மண்டேலா வெள்ளையினத்தவரை பழி வாங்க புறப்பட்டிருந்தாலும் நாம் அதற்கு நியாயம் கற்பித்திருக்கலாம். சராசரி மனிதர்களின் இயல்பு அது. ஆனால் சராசரி மனிதனிலிருந்து அவர் உயர்ந்து நிற்கிறார் அதற்கு காரணம் அவரிடமிருந்த நற்பண்புகளும் மன்னிக்கும் மனப்பாங்குமே எனலாம்.
நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை நமக்கு பல பாடங்களை தந்தாலும் ஒரு பாடம் உயர்ந்து நிற்கிறது. அதுதான் "மன்னிப்பு'' எனும் பாடம். தவறு செய்யும்போது மன்னிப்பு கேட்போருக்கும், தவறு செய்தவர்களை மன்னிக்கத் தெரிந்தோருக்கும் நிச்சயம் எந்த வானமும் வசப்படும். இதன் மூலமாக நெல்சன் மண்டேலா இனஒதுக்கல்களை ஒழித்து நல்லுறவுக்கு வழிகாட்டிய மேதையாக விளங்குகின்றார்.
அநகாரிக தர்மபால
அநகாரிக தர்மபால அவர்கள் போதனையில் மட்டுமன்றி சாதனையிலும் ஓர் உண்மையான புத்தசமயத்தவனாகவே விளங்கினார். அவர் எளிய வாழ்க்கை முறையினை மேற்கொண்டது மட்டுமன்றி உண்மை பேசுவதையே தமது உயிர் மூச்சாகவும் கொண்டிருந்தார். மனித இனத்துக்கு சேவை செய்வதே மனிதனின் தலையாய கடமையென்பதை உணர்ந்த அவர், அதனாற் பெறுமின்பமே தலையானது என அவ்வழி நடந்தார்.
அநகாரிக தர்மபால தேசிய உணர்வு மிகுந்தவராயிருந்தார். ஆனால், நாட்டின் சுதந்திரத்தை பெறப் படைப்பலத்தைப் பெருக்குவதையோ அல்லது போர் முறையையோ விரும்பவில்லை. அன்பையும். அறத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஆத்மீக நெறியையே விரும்பினார்.
ஏழைகள் வாழ வழியற்றவர்கள், அவர்கள் எந்நாட்டவராயினும், எம்மதத்தவராயினும், எம்மொழி பேசுபவராயினும், அவர்களுக்குத் தம்மாலான சேவை செய்ய அவர் பின்னின்றதில்லை. இந்தியாவில் அவர் தங்கியிருந்த காலத்தில் அந்நாட்டு மக்கள் வறுமையினால் வாடுவதைக்கண்டு அதைப்போக்க அவர் எடுத்த முயற்சிகள் அநந்தம். இந்திய மக்களின் வறுமைக்கும். துன்பத்திற்கும் காரணம் அவர்களது அறியாமையே என உணர்ந்து அறியாமை எனும் இருளைப் போக்க ஆவனசெய்தார்.
இலங்கையிலுள்ள பௌத்த பிள்ளைகளின் சமய அனுட்டானச் சூழலுக்கு ஏதுவாயமையும் கல்வி வசதியின்மையைக் கண்டு அதிசயித்து அவர் தாம் கண்ட பரிதாப நிலையைப் போக்க முற்பட்டார். பௌத்த தலைவர்களினதும், மதக் குருமார்களினதும் கண்காணிப்பின் கீழ் பௌத்தமத பிரமஞானசங்க நிறுவ உதவினார். இச்சங்கமே கொழும்பிலுள்ள ஆனந்தாக்கல்லூரி, கண்டியிலுள்ள தர்மராஜக்கல்லூரி, காலியிலுள்ள மகிந்தாக்கல்லூரி, ஆகியனவற்றை நிறுவியது. இப்பௌத்த பிரமஞான சங்கம் பௌத்த கல்வி அபிவிருத்தியில் ஈடுபடுவதற்குத் தேவையான நிதியைத் தர்மபால அவர்களே நாடு முழுதும் சென்று திரட்டினார்.
இலங்கையின் ஒவ்வொரு கிராமத்திலும் புத்தவிகாரைக்கு அருகிலும் ஒரு பாடசாலையேனும் இருக்க வேண்டும். அப்பாடசாலைகளில் வீட்டுப்பணிக்கேற்ற தொழிற்கட்டிடங்கள், நீர் விநியோகம், சுகாதார வசதிகள் ஆகியன அமைந்திருத்தல் அவசியம். கமத்தொழில், தோட்டச்செய்கை, சமயற்கலை, பின்னல்வேலை. தையல்வேலை,தும்புவேலை ஆகியன துணைக்கலைத்திட்டங்களாக இடம்பெறல் முக்கியமானது என்றும், பிள்ளைகளுக்கு கலைத்திட்ட பயிற்சியுடன், நம் நட்டின் பழக்கவழக்கங்கள், நல்லொழுக்கம், சுகாதாரத்தைப் பேணல் என்பனவும் போதிக்கப்படல் வேண்டும் எனவும் கூறினார், அத்தோடு தேகப் பயிற்சியும், தேக ஆரோக்கியமும் அவரது கல்விக் கொள்கையில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
புத்த குருமாரின் கல்வியிலும் அநகாரிக அதிக கவனம் எடுத்தார். கல்வியறிவற்ற மதகுருவினால் நாட்டிற்கும் மதத்திற்கும் நன்மை ஏற்படாது என்பது அவரது கருத்தாகும். எனவே மதகுருமார்கள் சமய அறிவோடு இன்றைய தேவைகளுக்கேற்றவகையில் மற்றத்துறைகளிலும், பிறமொழிகளிலும் அறிவு பெறல் வேண்டும். பிரதானமாக ஆங்கில மொழியிலும் அறிவு பெறல் அவசியம். ஆங்கில அறிவின்றி பிறநாட்டவருக்கு புத்தரின் போதனையைப் போதிக்க முடியாது. மேலும் கல்வி விருத்தியிற் புத்தகுருமார் மிகக்கூடிய அக்கறை கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தரீதியில் புத்தரின் போதனைகளை மக்களுக்குப் பரப்பி சமாதானமான உலகுக்கு வழிகாட்டியுள்ளார்.
இரண்டாம் கலீபா உமர் (ரழி)
நபி (ஸல்) அவர்களின் குறைஷி வம்சத்தில் பிறந்தார். இவர் இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது கலிபாவாக திகழ்ந்தார். அவரது ஆட்சிக் காலம் பத்து அரை வருடங்களாகும். இஸ்லாமிய ஆட்சி விஸ்தீரத்திற்கு ஒரு மைல் கல்லாக திகழ்ந்தார். இவரது புகழ் பரவலடைய காரணங்களாக, அவரது ஈமான், நம்பிக்கை, அல்குரானை கையாளும் விதம், சமூக சேவைகள் மற்றும் நல்லுறவுக்கான ஏற்பாடுகள் நகரங்கள் நிர்மானிப்பு (கூபா, பஸரா, புஸ்தாத், ஜிஸா), முதன் முறையாக தபால் சேவையையும் அதற்கான ஊழியர்களையும் நியமித்தமை, இவர் இரவில் மாறுவேடம் பூண்டு மக்களோடு இணைந்து தனது பிரஜைகளின் குறைகளை அறிந்து கொண்டமை, “மூட்டை சுமந்த முடி மன்னன்" என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டமை.
மதீனா, மக்கா நகருக்கு இடைப்பட்ட இடங்களில் உணவகங்களை நிறுவி பிரயாணிகளினதும் மக்களினதும் பசியை தீர்த்தமை. தனது ஆட்சி எல்லையை மாநிலங்களாக பிரித்து அவற்றிற்கு ஒவ்வொரு கவர்ணர்இ ஒரு காதிஇ ஒரு நீதிபதி என்போரை நியமித்தமையும்இ தானே அவர்களை கணித்தமை. இதன் மூலம் மக்களின் தேவைகளையும்இ பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்தமை. மாகாண பிரிவு, பொலிஸ் பிரிவு, இராணுவ பிரிவு என்பவற்றை நிறுவியமை, பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமமான நீதி வழங்கியமை. உதாரணமாக, நைல்நதியில் பழி கொடுக்கும் பழக்கம் இல்லாதொழிப்பு.
இலஞ்சம், ஊழல் என்பன இவரது ஆட்சியில் இல்லாதொழிக்கப்பட்டது. தனிமனித சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பன காணப்பட்டமை. உதாரணமாக, பைத்துல் மால் மூலம் வழங்கப்பட்ட ஜிப்பா தைப்பதற்கான புடவை சம்பவம். வழிப்போக்கர்கள் மற்றும் பிரயாணிகள் என்போர் தங்குவதற்கு என ஊரின் நடுவே பொது கட்டிடம் என்பன அமைப்பு.
பொது சேவைகள். கிணறுகள் அமைப்பு, வீதிகள் அமைப்பு, வீதிகளின் இரு மருங்கிலும் மரம் நாட்டியமை, கால்வாய்கள் கட்டப்பட்டமை, அஜமிகள் (முஸ்லிம் அல்லாதோர்) அரபிகளுக்கிடையே முரண்பாடு ஏற்படாத வண்ணம் செயற்பட்டமை, ஜனநாயக ஆட்சிக்கு வழிவகுப்பு உதாரணமாக: இவரது காலத்தில் தான் தவறு செய்தாலும் அவரை குற்றவாளியாக காண்பிக்கும் உரிமை மக்களிடம் காணப்பட்டமை.
உமர் (ரழி) கூற்று “தான் தவறு, பிழை செய்தால் எனக்கு நல்வழியை காண்பியுங்கள்." பிரஜைகள் மீது அளவுகடந்த அன்பு, கருணையை கொண்ட ஒரு ஆட்சியாளர். உமர் (ரழி) அவர்கள் 10 வருடமும் 06 மாதமுமே இவ் உலகில் தனது தலைசிறந்த ஆட்சியை மேற்கொண்டவர் ஆவார். இவர் தனது 63 வது வயதில் “அபுலு ஸுஆ" என்ற முஸ்லிம் அல்லாத ஒருவரால் கொலை செய்யப்பட்டு தனது வாழ்வை முடித்துக் கொண்டார்.
சமூகநல்லுறவை மேம்படுத்துவதில் உலக சமயங்களின் பங்கு.
இந்து சமயம்
"எங்களுடைய தேசத்திற்குரியவராக (சந்தேஸ்ய) மட்டுமன்றி, பிற நாட்டவர்களுக்குரியவராகவும் (விதேஸ்ய) இறைவன் இயங்குகின்றான்" (அதர்வன வேதம் 4:16,8)
"எல்லா உயிரினங்களினதும் என்னை நட்புக்
கண்ணுடன் நோக்குவானாக! எல்லா உயிரினங்களிலும்
நாம் நட்பு நிலையில் நோக்குவோமாக! நாங்கள்
அனைவரும் நண்பர்களைப் போல ஒருவரை
ஒருவர் நோக்குவோமாக"
முற்காலத்தில் தெய்வங்கள் ஒன்றுபட்டு
இன்பமாக வாழுவீர்களாக" என்பதாகும்.
உங்களுடைய வீட்டிலே இன்பங்களை அனுபவித்துக் கொண்டு வாழ்நாள்
முழுவதும் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்களாக!" (இ.வே 8:31:8) இல் கூறப்பட்டுள்ளது.
மாதொரு பாகனார் தாம் வருவார்"
எனும் வரிகள் மூலம் எடுத்துரைத்தார்.
இறைவன் அன்புள்ளம் கொண்ட உயிர்களிடத்தில்தான் புகுந்து கலந்து நின்று பிறவித் துன்பத்தை நீக்குகின்றான் எனத் திருமந்திரம்
முன்பப் பிறவி முடிவது தானே"
"ஒன்றே குலம் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை, நாணமே ..." (2104)
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக" (காதை 2:64-67)
மனிதர்கள் அகந்தை மிக்கவர்கள். மற்ற உயிரைக் கொல்வதில் அவர்கள் மறுபரிசீலனை என்பதற்கே இடமில்லை. நம்மைப் போன்றுதான் மற்ற உயிரினங்களும். பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும், துன்பமின்றியும் வாழவிரும்பும்.
எது உங்களுடையதில்லையோ அதை நீங்கள் உபயோகிக்கக்கூடாது. எது உங்களுடையதில்லையோ அதன்மீது உரிமை பாராட்டக்கூடாது.
உனக்கு உண்மையல்ல என்று படுகின்றதோ அதனைப் பேசாதிரு. எது நிறைவானதோ, குறையற்றதோ, முழுமையானதோ, அதுவே சரியான பேச்சு. நம்முடைய வார்த்தைகள் ஒருவரை எதிராகத் திருப்பக் கூடாது. பொய்யுரை தவிர்க்கப்படக்கூடியது.
கெட்ட நடத்தையை தவிர்த்தல், போதைப் பழக்கத்திலிருந்து விலகுதல். இவற்றையே பஞ்சசீலம் என்பர். இவற்றை மனிதன் கடைப்பிடிக்க வேண்டும். இவற்றோடு அட்டசீலம், தசசீலம் என்பவற்றையும் கடைப்பிடிக்கும் போது, அவன் மனித மாண்புடையவனாகின்றான். இதனை மணிமேகலை அழகாக எடுத்துக் காட்டுகின்றதுது.
உள்ளக்களவும் அன்று உரவோர் துறந்தவை" (காதை 24:77-78)
புத்தர் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்ற போது தர்மமே அரண், தர்மமே தீபம் எனக் கூறுகின்றார். எந்த ஒரு சமயத்திற்கும் பகையாயிருப்பது சகிப்பில்லாத்தன்மை ஆகும்.
"பிக்குகளே, எனக்கெதிராக மற்றவர் பேசினால் என் தர்மத்துக்கெதிராகப் பேசினால் நீங்கள் அதையீட்டு கோபிக்கவோ, அதிருப்தி கொள்ளவோ பகை கொள்ளவோ வேண்டியதில்லை. அப்படிச் செய்தீர்களானால் உங்கள் ஆன்ம பக்குவம் கெடுவது மட்டுமன்றி அவர்கள் சொல்வது சரியோ பிழையோ என்பதை அறிந்து கொள்ள முடியாதவராயுமிருப்பீர்"
"ஆண்டவர் உன்பக்கம் தம் திருமுகத்தைத் திருப்பி உனக்கு சமாதானம் அருள்வாராக" (எண் 6:24)
"சமாதானமான இருப்பிடத்திலும் அச்சமறியாக் கூடாரங்களிலும் அமைதி நிறைந்த இல்லங்களிலும் நம்மக்கள் குடியிருப்பார்கள் (ஏசா 32:18)
மேலும் யூதர்களுக்கு சமாதானம் என்பது ஜாவே இறைவன் அளிக்கும் நன்கொடையாகும். இதை மனதில் வைத்தே கெதெயோன் கடவுளுக்கு பலிசெலுத்தக் கட்டிய பீடத்தின்மேல்
அமோக விளைச்சல்
பகைவனின் அச்சுறுத்தல் இல்லாமை
காட்டு மிருகங்களின் தொல்லை இல்லாமை
இறைவனின் உடன்படிக்கை அமுலில் இருக்கும்
மக்கள் மத்தியில் இறைவனின் பிரசன்னம் குடி கொண்டிருக்கும்.
"அமைதியாக இருப்பது நேர்மையுடன் நடந்து கொள்வதாகும்" (சங் 72:2-3)
சமாதானம் என்பது நீதி நெறிமுறையை மையமாக வைத்து செயற்பட வேண்டிய ஒன்று.
இறைவன் மனிதனுக்கும் மனித சமுதாயத்திற்கும் கொடுக்கும் நன்கொடை எனவே எல்லா மனிதர்களும் அதனை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக தங்களை மாற்றியமைக்கும் கொள்ள வேண்டும்.
"இருபதாயிரம் பேருடன் தன்னை எதிர்த்து வருபவனையும் பத்தாயிரம் பேருடன் எதிர்க்க முடியாதெனின், இன்னும் தொலைவில் இருக்கும் போதே தூதுவிடுத்து சமாதானத்திற்கு ஆவன கோருவான்" (லூக் 14:32)
"கிறிஸ்துவே நம் சமாதானம். அவரே யூத
இயேசு தம் சீடர்களை நோக்கி "சமாதானத்தை உனக்கு விட்டுச் செல்கின்றேன். என் சமாதானத்தையே உங்களுக்கு அளிக்கின்றேன்." (யோவான் 14:27)
"தேவ ஆசி அளிக்கும் ஒருமைப்பாட்டைச் சமாதானம் என்னும் பிணைப்பால் காப்பாற்ற கண்ணும் கருத்துமாய் இருங்கள்'' (எபே 4:3)
இயேசுவின் ஒவ்வொரு சீடரும் சமாதானத்தை நிலைநாட்ட அயராது உழைப்பவர்களாக திகழ வேண்டும். ஏனெனில் இயேசு கூறியுள்ளார்.
"சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்" (மத்: 5:9) எனக் கூறப்படுகின்றது.
"அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும்போது ஸலாம் கூறிவிடுவார்கள்"
(குர் ஆன் 25:63) என குர்ஆனில் சமாதானம் பற்றி கூறியுள்ளார்.
"மனிதர்களே! ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்து தான் நாம் உங்களை படைத்துள்ளோம்" (அல் 49:13) எனக் கூறியுள்ளார்.
"நடுநிலையுள்ள சமுதாயமாக உம்மத்தே வஸதாக
இங்கு நடுநிலை என்பது நீதியாகும்.
நல்லிணக்கத்தின் மூலம் சமாதானம் எடுத்துக்காட்டப்படுகின்றது.
"அவ்விருவருக்கிடையில் பிளவு ஏற்படும் என்று
என சமாதானம் பற்றி கூறப்படுகின்றது.
"நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர்
"நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம்.
அருள் செய்யப்படுவீர்கள்" (குர் ஆன் 49:10)
0 Comments