தென்னாசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு / சார்க் அமைப்பு - SOUTH ASIAN ASSOCIATION OF REGIONAL COOPERATION (SAARC)


தென்னாசிய நாடுகளின் 

பிராந்திய கூட்டமைப்பு


தென்னாசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு / சார்க் அமைப்பு - SOUTH ASIAN ASSOCIATION OF REGIONAL COOPERATION (SAARC)

1985 டிசம்பர் 8 ஆம் திகதி பங்களாதேஷ் டாக்கா நகரில் ஆரம்பிக்கப்பட்டது. தென்னாசிய நாடுகள் இணைந்து வலய ரீதியான அமைப்பாக செயற்படுவதற்கு உருவாக்கப்பட்டது.

அங்கத்துவ நாடுகள் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், பாக்கிஸ்த்தான். இலங்கை 2007ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அங்கத்துவம் பெற்றது.

சார்க் பிராந்தியம் 7 முக்கிய நாடுகளை உள்ளடக்கியுள்ளது. புவியியல், பொருளாதார, சமயம், கலாசாரம் என்ற பல்வேறு காரணிகளையும், வரலாற்று ரீதியான வளர்ச்சிகளையும் தாக்கங்களையும் வைத்து நோக்கும் இடத்து தென்னாசிய பிராந்தியத்தில் பல ஒருமைப்பாடுகளையும் காண முடியும். இது சர்வதேச நோக்குக்கும் கூடிய பங்களிப்பு செய்யும் வழிமுறைகளாகும். இவ் அடிப்படை சிந்தனையின் வழிகாட்டலின் கீழ் வேற்றுமையில் ஒற்றுமை எனும் தத்துவமே சார்க் அமைப்பின் அடிப்படைத் தத்துவமாகும். 

வலய மட்டத்தில் அங்கத்துவ நாடுகளின் சுயாதீனத்திற்கும் தன்னாதிக்கத்திறற்கும் நிலத் தொடர்புக்கும் மதிப்பளித்தல். ஒருவர் மீது ஒருவர் தலையிடாமை, தகராறுகளை சமாதானமாகத் தீர்த்தல், சமத்துவம் ஆகிய கொள்கைகளில் நின்று கருமமாற்ற அங்கத்துவ நாடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. 

சார்க் அமைப்பின் குறிக்கோள்

தெற்காசிய நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை விருத்தி செய்தல். அன்றாட வாழ்க்கை வசதிகளை முன்னேற்றுதல்.

பொருளாதார துரித வளர்ச்சி காணல், சமூக முன்னேற்றத்தில் தனது பிராந்திய கலாசாரத்தை பாதுகாத்தல்.

தெற்காசிய நாடுகளில் ஏற்படும் பிரச்சினைகளைப் பகிர்ந்து ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் விளங்கி முடிவு காணல்.

விஞ்ஞானம், தொழில்நுட்பம்.  கலை. கலாசாரம், தொழில், பொருளாதாரம் என்பவற்றினைக்  கூட்டாக இணைந்து ஒருவருக்கொருவர் உதவி அபிவிருத்தியடைதல்.

மற்றைய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுடன் ஒத்துழைத்து தமது இயற்கை வளங்களைப் பகிர்ந்து அபிவிருத்தியடைய முயற்சித்தல்.

சர்வதேச பொது நியாயத் தீர்வுகளில் கூட்டாக முடிவெடுத்து அதற்கு ஆதரவு அளித்தல்.

சர்வதேச பொது நியாயத் தீரவுகளில் கூட்டாக முடிவெடுத்து அதற்கு ஆதரவு அளித்தல்.

சர்வதேச பொதுத் தாபனங்களிலும் பிராந்திய தாபனங்களிலும் ஒன்றுபட்ட கருத்தை வெளிப்படுத்தல்.

சார்க் அமைப்பானது பல்வேறு ஒருங்கிணைப்பு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

பயங்கரவாதத்தை தடை செய்தல்.

போதைப் பொருள் பாவனைக் கடத்தல்களை தடை செய்தல்.

இயற்கைஅழிவு, விவசாய தகவல்களைப் பற்றி பரிமாறல்.

அவசரத் தேவைக்கான உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை செயற்படுத்தல்.

சுகாதாரம், சனத்தொகை பற்றிய திட்டங்கள்.

ஆராய்ச்சி நிறுவனங்கள்.

பல செயற்பாடுகளை வலய நாடுகளுக்குள் நல்லுறவை பேணும் நோக்குடன் முன்னெடுத்தது. சார்க் அமைப்பாது தென்னாசிய வலயத்தில் வறுமையை ஒழிப்பதற்கு பல செயற்திட்டங்களை முன்னெடுத்தது.

விவசாய அபிவிருத்தி.

கல்வி கலாசார விளையாட்டு அபிவிருத்தி.

குழந்தை நலம் பேணல்.

சுற்றாடல் அபிவிருத்தி.

அங்கத்துவ நாடுகள் இடருறும் வேளையில் உணவு அளிப்பதற்கான அமைப்பு

தொழில்நுட்ப அறிவை பரிமாறக் கொள்ளல்

அனர்த்த நேரங்களில் ஒத்துழைப்புடன் கருமமாற்றல்

இவ்வமைப்பானது வலய நாடுகளுடன் இணைந்து அவற்றின் ஒத்துழைப்புடன் பல்வேறு பணிகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல் பிற அமைப்புக்களுடனும் இணைந்து வலய ஒத்துழைப்புக்காகவும் சர்வதேச ஒத்துழைப்புக்காகவும் பல பணிகளை மேற்கொண்டன.

நன்றி


Post a Comment

0 Comments