கல்விக்கான பரந்துபட்ட வரைவிலக்கணங்கள்- BROAD DEFINITIONS OF EDUCATION


கல்விக்கான பரந்துபட்ட 

வரைவிலக்கணங்கள்


கல்விக்கான பரந்துபட்ட வரைவிலக்கணங்கள்- BROAD DEFINITIONS OF EDUCATION

கல்வி என்பதைக் குறிக்கும் ஆங்கிலப்பதமான ‘Education’ என்ற சொல் ‘Educare’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து தோன்றியதாகும். 'கல்வி 'எனும் சொல்லானது பரந்துபட்ட பொருளுடையதாகக் காணப்படுகின்றது. 'கல்' என்ற வினையடியோடு 'வி' எனும் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து கல்வி என்றாகின்றது. இது கல்லுதல் அல்லது அகழ்தல் என்றும் பொருள்படும். உள்ளே இருப்பதனை வெளிக்கொண்டு வருதல் எனவும் கூறலாம். எனவே கல்வி என்பது ' பிள்ளையின் உள்ளிருக்கும் ஆற்றலினை மலரச் செய்வது' என்று வரையறுத்துக் கூறமுடியும்.

கல்வியானது பல்வேறுபட்ட விடயங்களை  உள்ளடக்கியுள்ளதால் இதனை வரைவிலக்கணம் ஒன்றில் உள்ளடக்குவது மிகவும் கடிமானாகும். எனினும் கல்வித்தத்துவவியலாளர்கள் கல்விக்கு பல்வேறு விதமான வரைவிலக்கணங்களை கொடுத்துள்ளனர். அவற்றை பின்வருமாறு நோக்கலாம்.

விபுலானந்தர் - ஒரு முழுமையான மனிதனை உருவாக்குவதே கல்வி.

எமர்சன் - மாணவர்களை மதிப்பதில்தான் கல்வியின் ரகசியம் அடங்கியுள்ளது 

பிளாட்டோ - பிறவித் திறமையை வளர்ப்பதற்காகவே கல்வியறிவு பயன்படவேண்டும். ஆரம்ப வயதுகளில் பிள்ளைகளிடம் ஏற்படும் இயல்பான ஆர்வம், உயரிய நற்செயல் ஆகியவற்றிற்கு உரியமுறையில் அளிக்கப்படும் பயிற்சியே கல்வி.நாம் கற்கவில்லை, நாம் கற்றல் என்று அழைப்பது நினைவுகூரும் செயல் மட்டுமே. கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது. ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூலவேர்.

யூரிபிடிஸ் - இளமைக் காலத்தில் கல்வியைப் புறக்கணித்தவன்  இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால வாழ்விலும்  இறந்தவன். 

ராபர்ட் கிரீன் இங்கர்சால் - பொது அறிவு இல்லாத கல்வியை விட, கல்வி இல்லாத பொது அறிவானது ஆயிரம் மடங்கு சிறந்தது.

ஜிவெனால் - எடுத்தால் குறைவது செல்வம், கொடுத்தல் வளர்வது கல்வி. 

ஜிக்ஜேக்ளர் - கல்விக்கூடம் ஒரு தோட்டம்; மாணவர்கள் செடிகள்; ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள். 

பெர்னார்ட்ஷா - வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது.

சோக்கிரட்டீஸ்  - உறுதியான உடலில் உறுதியான மனதைத் தோற்றுவிப்பதே கல்வி.

நாலடியார் - எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல் மம்மர் அறுக்கும் மருந்து.

சார்லஸ் எஃப் கெட்டரிங் - கண்டுபிடிப்பாளர்கள் சாதாரண மனிதர்களே. ஆனால் அவர்கள் தாங்கள் கற்ற கல்வியை பற்றி அதிகம் கவலைப்படாதவர்கள். 

வில்லியம் பட்லர் ஈட்ஸ் - கல்வி என்பது வெறுமனே ஒரு வாளியை நிரப்பும் விஷயமல்ல அது நெருப்பை பற்ற வைக்கும் விஷயம் போன்றது.

காந்திஜி - மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே, உண்மையான கல்வி.

போப் - பெற்ற பிள்ளை கைவிட்டாலும், கற்ற கல்வி கைவிடாது. கல்வி ஆபரணமல்ல, ஆடை.

ஜோசப் அடிசன் - பளிங்கு கல் அழகிய சிற்பமாவது போல் கல்வியினால் ஆன்மா சிறப்படைகின்றது.

மரேஷால் - கற்றறிந்த மனிதன் என்று யாருமில்லை. கற்கும் மனிதர்கள்தான் உள்ளனர்.

விக்டர் ஹியூகோ - நன்கு கற்றுணர்ந்த மனிதனே தன்னுடைய அறியாமையைப்பற்றி அறிவான். ஒரு பள்ளிக்கூடத்தின் கதவைத் திறப்பவன், ஒரு சிறைச்சாலையை மூடுகிறான்.

ரிச்சர்ட் பாக் - எந்த சிறந்ததை நீங்கள் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டியிருந்ததோ அதையே கற்றுக்கொடுங்கள்.

ஸ்டீபன் கோவே - கற்பித்தலின் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ள முடியும் என்ற கருத்தில் எனக்கு  நம்பிக்கை உண்டு.

அன்டன் செக்கோவ் - ஞானம் வயதிலிருந்து கிடைப்பதல்ல, கல்வி மற்றும் கற்றலிலிருந்து வருகிறது. 

ஜோன் டூயி - பிள்ளைக்கு தனது சூழலில் வாழ்வதற்குத் தேவையான அனுபவங்களை கொடுப்பதே கல்வி. கல்வி என்பது வாழ்க்கைக்கான தயாரிப்பு அல்ல, கல்வியே வாழ்க்கையே.

ராபர்ட் ஜி இங்கர்சால் - ஒரு விதத்தில் - பொது அறிவு இல்லாமல் கல்வி பெறுவதை விட கல்வி இல்லாமல் பொது அறிவு இருப்பது ஆயிரம் மடங்கு சிறந்தது. 

ஹெலன் கெல்லர் - கல்வியின் மிக உயர்ந்த விளைவு சகிப்புத்தன்மை. 

டோனி புசன் - எப்படிக் கற்றுக்கொள்வது என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான திறமை.

ஹென்றி ஃபோர்டு - கற்றலை நிறுத்தும் எவரும் வயதானவராகிவிடுவார்கள், இருபது வயதானாலும் எண்பது வயதானாலும். கற்றலைத் தொடரும் எவரும் இளமையாக இருப்பார்கள். உங்கள் மனதை இளமையாக வைத்திருப்பதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய விஷயம். 

பிரான்சிஸ் பேகன் - மகிழ்ச்சிகரமான அதிஷ்டமுள்ள வாழ்க்கையை நடாத்தும் பொறுப்பும் புத்தியை விருத்தி செய்வதும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதுமே கல்வி.

அலெக்சாண்டர் போப் - குறைவான கற்றல் ஒரு ஆபத்தான விஷயம்.  

ஜோ கார்லோசோ - கற்பதை நிறுத்தாதீர்கள். நீங்கள் தினமும் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டால், உங்கள் போட்டியின் 99% ஐ நீங்கள் வெல்வீர்கள். 

டெனிஸ் வெய்ட்லி - தொடர்ச்சியான கற்றல் என்பது எந்தவொரு துறையிலும் வெற்றிபெற குறைந்தபட்ச தேவை.

பி.பி. கிங் - கற்றலின் அழகான விஷயம் என்னவென்றால், அதை உங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது. 

விளாடிமிர் லெனின் - கற்றல் ஒருபோதும் பிழைகள் மற்றும் தோல்வி இல்லாமல் செய்யப்படுவதில்லை. 

கொலின் பவல் - வெற்றிக்கு எந்த ரகசியங்களும் இல்லை. திட்டமிடல், கடின உழைப்பு மற்றும் தோல்வியிலிருந்து கற்றல் ஆகியவற்றின் விளைவே வெற்றி. 

மூர் - நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும், நமக்குத் தெரிந்தவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எச். ஜி. வெல்ஸ் - முதலாவதாக மாணவன் தன் தாய்மொழியில் புரிந்து கொள்ளவும். பேசவும், படிக்கவும். எழுதவும் நாம் கற்பிக்கவேண்டும். 

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் - ஒரு மாணவனிடம் மறைந்திருக்கும் உண்மையான திறமை, அறிவு, ஆற்றல் சிந்தனை இவற்றை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, மாணவர்கள் மண்டைகளில் பல கரடுமுரடான செய்திகளைத் திணிப்பது அல்ல கல்வி. 

திரு. வி. கலியாணசுந்தரனார் - கல்வி என்பது வெறும் ஏட்டுப் படிப்பு மட்டுமன்று. பட்டம் பதவிகளைக் குறிக்கொண்டு படித்தலும் கல்வியாகாது. கல்வி என்பது அறியாமையை நீக்கி அறிவை விளங்கச் செய்வது.

ராபர்ட் பிராஸ்ட் - கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும்   திறன்.

சுவாமி விவேகானந்தர் - நல்ல ஒழுக்கத்தை உருவாக்குவதாகவும், மனவலிமையை வளர்ப்பதாகவும், விரிந்த அறிவைத் தருவதாகவும், ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக்கொண்டு நிற்கச் செய்வதாகவும் இருக்கக்கூடிய கல்விதான் நமக்குத் தேவை. மனிதனிடம் ஏற்கனவே பொதிந்திருக்கும் முழுமை பெற்ற நிறைவினை மலரச் செய்வதே கல்வி.

ரூஸோ - இயற்கைக்கேற்ப விருத்தியடையும் செயற்பாடே கல்வி.

ஹேர்மன் ஹொன் - நுண்மதி, மனவெழுச்சிகள் மற்றும் உடல் உள ரீதியில் முன்னேறியுள்ள மனிதன் மேற்கொள்ளும் சதாகாலச் செயற்பாடே கல்வி.

ஈ.சீ மூவர் - தான் வாழும் சமூகத்தில் தனக்கு கிடைக்க வேண்டிய இடத்தை பெற்றுக் கொள்வதற்காக உரிய அனுபவங்களை வழங்குவதே கல்வி.

லெஸ்டர் ஸ்மித் - கல்விக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை கட்டியெழுப்புவதே கல்வி.

அ மெண்டர் - அனுபவங்கள் பற்றி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற புதுப்பித்தலே கல்வி.

பவ்லோபிரேயர் - சிறுபராயத்தில் இயற்கையில் வளரும் பிள்ளைக்கு நல்ல பயிற்சியும் பழக்க வழக்கங்களையும் வழங்கி அபிவிருத்தி செய்தலே கல்வி.

ஆர்.எஸ்.பீட்டர்ஸ் - பிள்ளையில் உயர் மானிட பண்புகளை பயிற்று விப்பதற்கான திட்டமிட்ட முயற்சியே கல்வி.

அல்லாமா இக்பால் - தன்னைப் புரிந்து கொண்டு அறிவான முறையில் செயல்படுவதே கல்வி.

ஷேக் வலியுள்ளாஹ் - கல்வி என்பது நல்லது மற்றும் கெட்ட உணர்வுகளை வளர்த்துக் கொள்ளும் செயற்பாடே கல்வி.

எட்கார் பொரோ - வாழக் கற்றுக்கொள்வதே கல்வி.

சாணக்யா - கல்வியே சிறந்த நண்பன். கற்றவர் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறார். கல்வி அழகையும் இளமையையும் வெல்லும். 

ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ் - கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

டிசிடெரியஸ் எராஸ்மஸ் - ஒரு தேசத்தின் முதன்மையான நம்பிக்கை அதன் இளைஞர்களின் சரியான கல்வியில் உள்ளது. 

லிண்டன் பெய்ன்ஸ் ஜான்சன் - கல்வி என்பது ஒரு செலவு அல்ல. அது ஒரு முதலீடு என்று நாங்கள் நம்புகிறோம். 

ஓப்ரா வின்ஃப்ரே - இந்த உலகைத் திறப்பதற்கான சாவி கல்வி, சுதந்திரத்திற்கான கடவுச்சீட்டு கல்வி. 

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி - கல்விக்கு முடிவே இல்லை. ஒரு புத்தகத்தைப் படித்து, தேர்வில் தேர்ச்சி பெற்று, முடிப்பதல்ல கல்வி. நீங்கள் பிறந்தது முதல் இறக்கும் வரை, முழு வாழ்க்கையும், ஒரு கற்றல் செயல்முறையே.

எபிக்டெட்டஸ் - ஒரு மனிதன் தனக்கு ஏற்கனவே தெரியும் என்று நினைப்பதைக் கற்றுக்கொள்வது சாத்தியமற்றது. 

ஆலன் ப்ளூம் - கல்வி என்பது இருளில் இருந்து ஒளியை நோக்கி நகர்வது. 

ஜி. எம். ட்ரெவெலியன் - கல்வியானது படிக்கத்தெரிந்த, ஆனால் படிக்கத் தகுந்தவற்றை வேறுபடுத்திப் பார்க்க முடியாத ஒரு பரந்த மக்களை உருவாக்கியுள்ளது. 

பர்க் - எந்தக் கல்வி தேவை? ஒரு மூட்டை நூல்களை வாசித்தலா? அன்று.! அடக்கம், ஒழுங்கு அறம், நீதி இவற்றின் முன்மாதிரிகளே தேவை. கல்வி கற்பிக்கும் ஆசிரியன் நூலறிவைப் புகட்டும் பொழுது மெய்யறிவை மறந்து விடலாகாது. டெம்பிள் ஆராய்ச்சி முறையை ஒட்டிய கல்வி முறையே இணையற்றதாகும்.

எட்மண்ட் பர்க் - படித்ததை பிரதிபலிக்காமல் படித்துக்கொண்டே இருப்பது, ஜீரணிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதைப் போன்றது. கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று, அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்.

ஹெர்பர்ட் ஸ்பென்சர் - கல்வியின் உயர்ந்த நோக்கம் அறிவு அல்ல செயல். 

மால்கம் ஃபோர்ப்ஸ் - கல்வியின் நோக்கம் வெறுமையான மனதைத் திறந்த மனதாக மாற்றுவதாகும். 

ஜேம்ஸ் தர்பர் - எல்லாப் பதில்களையும் தெரிந்து கொள்வதை விட, சில கேள்விகளை தெரிந்து கொள்வது சிறந்தது. 

அரிஸ்டாட்டில் - கல்வியின் வேர்கள் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால், அது தரும் பழம் இனிப்பு நிறைந்தது. மனிதனின் திறமையை குறிப்பாக அவனுடைய மனதை வளர்க்கின்ற ஒரு செயற்பாங்கே கல்வி.

ஜோசப் ஸ்டாலின் - கல்வி என்பது ஒரு ஆயுதம், அதன் விளைவு அதைப் பிரயோகிக்கும் கைகளால் தீர்மானிக்கப்படுகிறது. 

மார்க் ட்வைன் - சிலர் கல்லூரிக்குச் செல்லாமலேயே கல்வி கற்கிறார்கள். மற்றவர்கள் கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகுதான் கல்வி கற்பார்கள்.

ஹென்றி ஃபோர்ட் - கற்றலை நிறுத்தும் எவரும், இருபது அல்லது எண்பது வயதினராக இருந்தாலும் வயதானவரே. கற்றலைத் தொடரும் எவரும் இளமையாக இருப்பார்கள். வாழ்க்கையில் மிகப் பெரிய விஷயம் உங்கள் மனதை இளமையாக வைத்திருப்பதுதான். ஒரு மனிதனின் உண்மையான கல்வி அவன் பள்ளியை விட்டு வெளியேறிய பிறகே தொடங்குகிறது. உண்மையான கல்வி ஒழுக்கமான வாழ்க்கையின் மூலம் பெறப்படுகிறது. 

பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் - தங்களின் தெரிவை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யத் தயாராக இல்லாவிட்டால் ஜனநாயகம் வெற்றிபெறாது. எனவே ஜனநாயகத்தின் உண்மையான பாதுகாப்பு அரண் கல்வி. 

எமிலி டிக்கின்சன் - கற்றுக் கொண்டே இருக்கும் வரை உங்களால் இளமையாக இருக்க முடியும். 

நெல்சன் மண்டேலா - குடிமக்கள் கல்வியறிவு பெறாதவரை, எந்தவொரு நாடும் உண்மையில் அபிவிருத்தியடைய முடியாது. இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. 

ஸ்டீபன் ஹாக்கிங் - வாசித்தல் மற்றும் மேலும் மேலும் அதிக அறிவைப் பெறுதலை விட சிறந்தது எதுவும் இல்லை. 

சே குவேரா - கல்வியறிவு பெற்றவராக இருப்பதே ஒரு புரட்சியாளரின் முதற் கடமை. 

ஜேம்ஸ் மேடிசன் - அறிவு எப்பொழுதும் அறியாமையை ஆளும். 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - எனது மாணவர்களுக்கு நான் ஒருபோதும் கற்பிப்பதில்லை, அவர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்த மட்டுமே முயற்சிக்கிறேன். ஒருவர் பள்ளியில் படித்ததை மறந்த பிறகு எஞ்சியிருப்பதே கல்வி. தகவல் ஒரு அறிவு அல்ல. அறிவின் ஒரே மூலம் அனுபவம் மட்டுமே. ஞானத்தை அடைய உங்களுக்கு அனுபவம் தேவை. அறிவை விட கற்பனை முக்கியமானது.  அறிவுக்கு எல்லை உண்டு. கற்பனை உலகைச் சுற்றி வருகிறது. கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல, அது சிந்ததிப்பதற்காக மூளையை பயிற்றுவிப்பது.

சீன பழமொழி - ஆசிரியர்கள் கதவைத் திறக்கிறார்கள், ஆனால் நீங்கள்தான் உள்ளே செல்ல வேண்டும். 

மகாத்மா காந்தி - நீங்கள் நாளையே இறந்துவிடுவீர்கள் என்பது போல வாழுங்கள். நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள் என்பது போல கற்றுக்கொள்ளுங்கள். நல்ல கல்வி என்பது உடல், உள்ளம், ஆன்மா ஆகிய மூன்றையும் ஒருமித்து வளர்க்கவேண்டும். பிள்ளையினுள்ளே அடங்கியுள்ள அனைத்து ஆற்றலையும் வெளிக்கொணருவதே கல்வி.

பெஞ்சமின் பிராங்க்ளின் - அறிவில் முதலீடு செய்வது சிறந்த வட்டியைக் கொடுக்கும். கல்வி இல்லாத மேதை சுரங்கத்தில் உள்ள வெள்ளி போன்றவர். கல்வி இல்லாத பகுத்தறிவு, பகுத்தறிவு இல்லாத கல்வியை விடச் சிறந்தது. 

ஜான் ஹெர்சி - தோல்வியில் இருந்தே கற்றல் தொடங்குகிறது, முதல் தோல்வியே கல்வியின் ஆரம்பம். 

திபெத்திய பழமொழி - கல்வி இல்லாத குழந்தை சிறகு இல்லாத பறவை போன்றது. 

ஜார்ஜ் வாஷிங்டன் - கற்றறிந்தவர்களாக இருப்பது மட்டுமல்ல, நல்லொழுக்கத்துடன் இருப்பதும் மிகவும் முக்கியமானது. 

ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் - கல்வியே சுதந்திரத்தின் தங்கக் கதவைத் திறப்பதற்கான சாவியாகும்.

இம்மானுவேல் கான்ட் - நல்ல கல்வியின் மூலம் தான் உலகில் உள்ள அனைத்து நன்மைகளும் உருவாகின்றன. 

சாய் பாபா - அறிவை ஞானமாக மாற்றி, ஞானம் குணத்தில் வெளிப்பட்டாலன்றி, கல்வி என்பது ஒரு வீணான செயலாகும். இன்றைய கல்வியானது, அன்றாட வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலையோ, மனஉறுதியையோ மாணவர்களுக்கு வழங்கவில்லை. கல்வித் துறை அறியாமையின் விளையாட்டு மைதானமாக மாறிவிட்டது. நல்ல நடத்தையே கல்வியறிவு பெற்றவரின் அடையாளம். பத்துப் புத்தகங்களைப் படித்ததால் மட்டுமே நீங்கள் படித்தவர்கள் இல்லை. இன்றைய கல்வி முறை கற்றவரை சுயநலவாதியாக்குகிறது. அந்த நபரை புலன்களுக்கு அடிமையாக்குகிறது. அதன் விளைவாக அந்த நபர் தனது தெய்வீக தன்மையை மறந்து விடுகிறார். 

பெர்சி பைஷ் ஷெல்லி - நாம் எவ்வளவு அதிகமாகக் கற்றுக் கொள்கிறோமோ, நாம் அவ்வளவு அதிகமாக நம் அறியாமையை அறிந்துகொள்கிறோம். 

மாஜினி - கல்வியே ஆன்மாவின் உணவு, அஃதின்றேல் நம் சக்திகள் எல்லாம் ஸ்தம்பித்து நின்றுவிடும், பயன்தரா. கல்வியும், வாளுமே ஒரு தேசம் புத்துயிர் பெறுவதற்கும் விடுதலை பெறுவதற்குமான இரண்டு சாதனங்கள் ஆகும். 

ரஸ்கின் - கல்வியின் லட்சியம் நல்ல காரியங்களைச் செய்யக் கற்றுக் கொடுப்பதன்று; நல்ல காரியங்களைச் செய்வதில் ஆசையும் ஆனந்தமும் உண்டாக்குவதேயாகும். கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று; ஒழுக்கத்தை ஒழுக செய்வதேயாகும். பொய்க் கல்வி பெருமை பேசும், மெய்க் கல்வி தாழ்ச்சி சொல்லும். ஜீவராசிகள் அனைத்திடமும் அன்பு செய்யத் துண்டுவதே உண்மையான கல்வி. ஆனந்தம் அளிப்பதும் அதுவே. மிருதுவாக மரம் இழைக்க, நேரான கோடு கிழிக்க, கோணாத சுவர் எழுப்பக் கற்றுக் கொள்ளட்டும். அப்படியானால் எந்த மனிதனும் எந்தக் காலத்திலும் கற்பிக்க இயலாத அத்தனை விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். சரியான வழியில் சந்தோஷம் அடையச் செய்யாத கல்வி எல்லாம் வீணேயாகும். நடை எழுதவும், இசை பாடவும், உருவம் தீட்டவும் முழு வல்லமை பெற்ற பொழுதே கல்வி முற்றுப் பெறும். கல்வியின் லட்சியம் விஷயங்களை அறிவது அல்ல. வேலைக்கு அடிகோலுவது அல்ல. சான்றோனாகவும் அறிஞனாகவும் செய்வதேயாகும். 

ஆவ்பரி - அறிவு தரும் கல்விக்கு ஆகும் செலவை விட அறியாமைக்கு ஆகும் செலவே அதிகம். கல்வி கற்பிக்க ஒவ்வொருவனிடம் ஒரு மாணவனாவது இருக்கவே செய்கிறான். கல்வி எதற்காக? நல்ல தொழிலாளி ஆக்குவதற்கே. வாழ்வில் வெகு முக்கியமாய்க் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் எங்ஙனம் வாழ்வது என்பதே. அதிகம் கற்றவரே அற்பமாகவே தெரியும் என்று அறிந்து கொள்ளக் கூடியவர். கற்பது கடினம், ஆனால் அதை விடக் கடினம் கற்பதை மறப்பது. 

மில்டன் - சொந்தக் காரியம் பொதுக் காரியம் எல்லாவற்றையும் நியாயமாயும் சாமர்த்தியமாயும் பெருந்தன்மையாயும் செய்யக் கற்றுக் கொடுப்பதே பரிபூரணமான கல்வி.

ஜோன் மில்டன் - யுத்தத்திலும், சமாதானத்திலும் தனித்தும், பொதுவாகவும் அனைத்து செயல்களையும் நீதியாகவும், முன்மாதிரியுடனும் நிறைவேற்றக்கூடிய மனிதனை உருவாக்குவதே கல்வி.

மெல்போர்ன் - இளஞ்சிறார் செவிமடுக்க வேண்டிய மொழிகள் இவையே உனக்கு வேண்டியதை நீயே உண்டாக்கிக் கொள்ளலாம். நீ பட்டினி இருப்பதும் இல்லாததும் உன் முயற்சியைப் பெறுத்ததேயாகும்.

யுரீப்பிடீஸ் - இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால விஷயத்தில் இறந்தவன். 

மில் - மாணவனிடம் செய்ய முடியாததைச் செய்யச் சொல்லாத வரை, அவன் செய்ய முடிந்ததையெல்லாம் ஒரு பொழுதும் செய்யப் போவதில்லை. –

ஜோன் ஸ்டூவர்ட் மில் - எந்த ஒரு சந்ததியினரும் பின்பற்றுவதற்தாக அல்லது முன்னேற்றுவதற்காக நமது இளைய சந்ததியினருக்கு கலாசாரத்தை ஒப்படைத்தலே கல்வி.

போனால்டு - சிறுவர்களுகான பிரமாதமான கல்வி, அறிவு ஊட்டுவதல்ல. நல்ல பழக்க வழக்கங்கள் அமைப்பதேயாகும். 

கதே - யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர்  எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார்.மாணவர் அறிவதற்கு உத்தேசிக்கப்பட்டதை மட்டுமே அறியும் ஆசானை விட பயங்கரமான பொருள் ஒன்றும் உலகில் கிடையாது. 

குன்றிலியன் - மூடர் முன் முற்றக் கற்றவனாகக் காட்சிக் கொள்ள விரும்புகிறவன் முற்றக் கற்றவர் முன் மூடனாகக் காட்டிக் கொள்கிறான். 

ஹோம்ஸ் - பிறர் உவக்கும் வண்ணம் நடந்து கொள்வதற்கான ஆசையும் அறிவும் ஏற்படுத்துவதே குழந்தைகளை கெளரவமானவராக வளர்ப்பதன் சாரமாகும். 

கிப்பன் - இரண்டுவிதக் கல்விப்பயிற்சி உண்டு. பிறரிடம் பெறுவது ஒன்று. தன்னிடமே பெறுவது ஒன்று. இரண்டிலும் இதுவே ஏற்ற முடையது. 

எடிஸன் - கல்வியில்லாத ஆன்மா பணி செய்யாத சலவைக் கல். 

தாக்கரே - நம் மனத்தைக் கல்வியிடம் ஈடுபடுத்துவதற்கு ஆசிரியரிடம் இருக்க வேண்டிய இரண்டு முக்கிய சக்திகள் புதியதை அறிந்ததாகச் செய்வதும், அறிந்ததைப் புதியதாகச் செய்வதுமாகும். 

லிச்சென்பரி - அதிகம் படிப்பவன் அகந்தை உடையான், கல்வியைக் காட்டுவதில் கருத்துடையான், அதிகம் பார்ப்பவன் அறிவு உடையான், அயலாருடன் வாழ்வான், அவர்க்கு உதவுவான். 

யங் - அறிவை மேலும் மேலும் கூர்மையாக்கிக்கொள்ளப் பயன்படும் கருவி கல்வி. வாழக் கற்பிப்பவன் மரிக்கவும் கற்பிக்கக் கற்றவன்.

ஸ்காட்  - நாம் பெறும் கல்வியில் அதிகச் சிறப்பான பாகம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்வதுதான். 

போலிங் புரூக் - சான்றோனாக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலே யாகும். அதனால் பெறும் அறிவும் தன்னைப் பிறர் மெச்சும்படி செய்ய மட்டும் கற்றுக் கொண்ட ஒருவித மடமையேயன்றி வேறன்றுமில்லை. 


நன்றி

Post a Comment

0 Comments