தமிழ் கட்டுரை
நீரின் முக்கியத்துவம்
இவ்வுலகமானது பஞ்சபூதங்களால் ஆனது எனவே மனித வாழ்க்கைக்கு இவை அனைத்தும் மிகவும் முக்கியமானதாக காணப்படுகிறது. அந்த வகையில் ஆகாயம், காற்று, நெருப்பு என்பன எவ்வளவுதான் எமக்கு இன்றியமையாததாக அமைந்திருந்தாலும் மனிதர்கள் மத்தியில் நிலம் மற்றும் நீரின் முக்கியத்துவம்தான் பெரிதாக தெரிகிறது. அவ்வாறு தெரிந்தும் என்ன செய்வது நாம் அவற்றை விட்டுவெப்பதில்லையே. சரி சற்று சிந்தித்து பார்த்தீர்களா ஏன் நீர் மற்றும் நிலத்தின் ஆற்றல் மிகையாக தெரிகிறது என்று, ஏனென்றால் அவற்றை பணம் கொடுத்தும் வாக்குகின்றோம் அல்லவா அதனால்தான். சிறிது காலத்தில் நாம் காற்றையும் பணம் கொடுத்துதான் வாங்கப்போகிறோம் அதன் முக்கியத்துவத்தையும் அப்போதுதான் உணரப்போகிறோம். பின்பு காற்றின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் இன்னுமொரு கட்டுரையும் நான் எழுத வேண்டும். அப்படி என்றால் நீங்கள் காற்றை பணம் கொடுத்து வாங்கும் நிலமை ஏற்பட்ட பின்புதான் அதன் முக்கியத்துவத்தை எமக்கு கூறுவீர்களா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஏனென்றால் பிறர் என்னதான் எமக்கு நன்மையை கூறினாலும் அதில் இருக்கும் குறைகளை கண்டுபிடிப்பதே நமது இயல்பாகி விட்டதே என்ன செய்வது. சரி முதலில் நான் அந்த கேள்விக்கு பதிலை கூறுகின்றேன். அதாவது நீர் பற்றாக்குறை வருவதற்கு முன்பே அதன் முக்கியத்துவம் பற்றி பலர் கூறியிருந்தனர் ஆனால் நாம் அதை கேட்டோமா இல்லை. அப்படி கேட்டிருந்தால் இப்போது நீரை பணம் கொடுத்து வாங்கும் நிலமை ஏற்பட்டு இருக்குமா இல்லை. சரி இவ்வளவு பேசுகின்றீர்களே இது முதலில் கட்டுரை மாதிரியும் தெரியவில்லை, நீரின் முக்கியத்துவம் பற்றியும் பேசவில்லை. புரிகிறது உங்கள் விமர்சனம். எனவே நீரின் முக்கியத்துவம் பற்றி பார்ப்போம்.
அந்த வகையில் நீர் எமது உலகில் நான்கில் மூன்று பங்கு காணப்படுகிறது. ஆயினும் அதற்கு பற்றாக்குறை ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. என்ன செய்ய முடியும் அதில் 97 சதவீதமானவை உவர்நீராக காணப்படுகிறதே. எஞ்சிய மூன்று சதவீதம்தான் எமது அன்றாட தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவேதான் நாம் நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நீரானது எவ்வாறு எனக்கு முக்கியம் பெறுகிறது என்று பார்த்தால் நாம் துயில் எழுவதிலிருந்து தூங்கும் வரை அன்றாட செயற்பாடுகளில் பெரும்பாலானவை நீரினாலே பூரணப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் குடித்தல், குளித்தல், சமைத்தல், விவசாய தேவைகள் மற்றும் ஏனைய தேவைகள் என பல்வேறு தேவைகளுக்கும் நீர் உதவுகிறது. ஆனால் நாம் பதிலுக்கு அவற்றை அசுத்தம் செய்கிறோமே தவிர அதனை பேணிப் பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கைகளையும் முழுமையாக செய்வதில்லை. நாம் எவ்வாறு நீரை அசுத்தம் செய்கிறோம். நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டுதல், வைத்தியசாலை கழிவுகள் மற்றும் ஏனைய தொழிற்சாலை கழிவுகள் என பல்வேறு கழிவுகளையும் நீர்நிலைகளில் கொட்டுகிறோம். இதன் மூலம் அசுத்தமாவதுடன் எமக்கு பல நோய்களும் ஏற்படுகின்றன. பொதுவாக நமது குப்பைகள் மூலமே நமது சூழல் மாசுபடுகிறது. அதாவது குப்பைகளை எரிப்பதன் மூலம் வலியும், அதனை புதைப்பதன் மூலம் நிலமும், நீர் நிலைகளில் தெரிவதன் மூலம் நீரும் மாசுபடுகிறது. அப்போது குப்பைகளை என்னதான் செய்வது? மீள்சுழற்சி இதன் மூலம் எமது நேரம் சொற்ப அளவு விரயமாகிறது என்றாலும் அதன் பலன் எமக்கு சாதகமாகவே அமைகிறது. அப்படி என்றால் அதை செய்வதில் எமக்கு என்ன கஷ்டம் ஏற்பட போகிறது. மீள்சுழற்சி செய்வதன் மூலம் நேரம் விரயமாகிறது என்று முன்பு கூறியிருந்தோம். அதாவது நாம் அனைத்து விதமான குப்பைகளையும் இலகுவாக ஒரே தொட்டியில் போடுகின்றோம். இது எமது அவசரம். ஆனால் சிறிது நேரம் ஒதுக்கி அதனை வெவ்வேறாக பிரித்து வெவ்வேறு தொட்டியில் போடுவதன் மூலம் மீள்சுழற்சி செய்ய முடியும். அந்த வகையிலேதான் நேரம் விரயமாகும் என்று கூறியிருந்தேன். ஆனால் அது நமக்கு நன்மையை தருகிறது என்றால் அது தவறு இல்லை என்று தான் கூற முடியும். நான் தலைப்பை தாண்டி செல்வதாக தெரிகிறது. எனவே தலைப்பிற்குள் செல்வோம்.
அந்த வகையில் எமது அன்றாட தேவைகளில் பெரும்பாலானவை நீரினாலே பூர்த்தி செய்யப்படுகிறது. என்று ஒற்றை வார்த்தையில் கூறிவிட முடியாது, சிறு பிள்ளைகள் போல் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் அவை உதவுகிறது என்றும் கூறி விட முடியாது ஆனால் நான் முன்பு அவ்வாறே கூறியிருந்தேன். ஒரு பொருளின் அளவு குறைந்து அதன் தேவை அதிகரிக்கும் பட்சத்திலேயே அதற்கான கேள்வி அதிகரிக்கின்றது. அந்த வகையில் பஞ்சபூதத்தில் நிலம், நீர் ஆகியவற்றின் தேவையே அதிகமாக இருக்கின்றது. அதன் அடிப்படையில் தான் தற்போது கடல் நீரையும் குடிநீராக்குகின்றோம். ஆம் கடல் நீரில் காணப்படும் உவர் தன்மையை நீக்கும் கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் அதனை குடிநீராகவும் பயன்படுத்துகின்றனர். இதனால் என்னவோ கடல்நீருக்கும் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் மனிதர்களாகிய நாம் எதையும் விட்டு வைப்பதில்லையே. மரத்தை வெட்டுகின்றனர் இதனால் மழை நீரை குறைக்கின்றன அப்படி இருக்கையில் மரத்தை வெட்டாமல் இருந்தால் கடல் நீரை குடிநீராக்கும் செயற்பாட்டிற்கான செலவு மீதப்படும் அல்லவா அப்படி என்றால் மரம் வெட்டுவதை தவிர்த்தால் நீரை சேமிக்கலாம். மரம் எவ்வாறு எமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விடையமே. ஆயினும் இதனை சில குழந்தைகளும் வாசிப்பர் அல்லவா எனவே அவர்ளுக்காக இங்கு நான் கூறுகின்றேன். மரமானது தனது சுவாசத்தின் மூலம் நீராவியை வெளியேற்றுகிறது அவை மழை மேகங்களாக மாறுகின்றது. இதன் மூலம் எமக்கு மழை கிடைக்கின்றது. இதனால் ஆறு குளங்கள் நிறைகின்றன. நீர் இயற்கையாகவே கிடைக்கின்றது. அப்படி இருக்கும் போது நாம் பல்வேறு விதமான குடியிருப்பு திட்டங்கள் தொழிற்சாலைகள் என இடங்களை எடுப்பதற்காக மரங்களை வெட்டுகின்றோம். சரி அப்போது இந்த குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளை எங்குதான் அமைப்பது? இந்த கட்டுமானங்கள் மூலம் நன்மை ஏற்படுகிறது என்றால் பரவாயில்லை. ஆனால் பல்வேறு மரங்களை அழித்து தான் அவற்றை நிறுவ வேண்டும் என்றால் இது எமக்கு பாதிப்பையை ஏற்படுத்தும் எனவே ஒரு மரத்தை வெட்டுவது என்றால் இரு மரங்களை நட்டு விட்டு வெட்டுங்கள் அப்படியானால் மரங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் நமக்கான நீரும் கிடைத்துவிடும்.
நாம் இன்றளவும் பயன்படுத்தும் நீரானது எமது முன்னோர்களால் குளங்கள் கட்டி பாதுகாக்கப்பட்ட நீராகவே காணப்படுகிறது. ஆனால் நாம் இன்று அளவில் அவர்கள் அளவிற்கு குளங்களையும் கட்டுவதில்லை என்றாலும் அவர்கள் கட்டிய குளங்களை பாதுகாப்பதுமில்லை. அப்படி இருக்கும்போது எமது எதிர்கால மக்கள் எவ்வாறு நீரை பயன்படுத்துவர். அதற்கு தான் கடல் நீரை குடிநீராக மாற்றி பாவிக்கின்றனர் என்று. ஒரு முறை யோசித்துப் பாருங்கள் செயற்கையாக உருவாக்கப்படும் விடயங்கள் என்றும் இயற்கையை மிஞ்சுவதில்லை. அப்படி இருக்கும்போது அந்நீரானது செயற்கையாக உருவாக்கப்பட்டது. எனவே அதை எவ்வாறு நல்லது என்று கூற முடியும். சரி அது நல்லதாகவே இருக்கட்டும் ஆனால் சுத்தமான நீர் இருக்கும்போது அதனை அசுத்தமாக்கி அதனை மீண்டும் சுத்தமாகி குடிப்பதை விட சுத்தமான நீரை பேணிப்பாதுகாப்பதன் மூலம் இயற்கையாகவே சுத்தமான நீரை பெற்றுக்கொள்ள முடியும். மேலும், கருவிகளை பயன்படுத்துவதற்கான செலவுகளும் குறையும்.
நாம் நமது முன்னோர்கள் போன்று பல குளங்களை கட்ட வேண்டும், அவர்களால் கட்டப்பட்ட குளங்களை பாதுகாக்க வேண்டும். மேலும், எமக்கான நீரையும் பெற்றுக் கொள்வதோடு எதிர்கால சந்ததியினருக்கும் நீரை சேமித்து வைக்க வேண்டும். ஒரு முறை யோசித்து பாருங்கள் எமது முன்னோர்கள் தான் மட்டும் பயன்படுத்தினால் போதும் என்ற எண்ணத்தோடு எவ்வித குளங்களையும் கட்டாமல் இருந்திருந்தால் எமது நிலைமை எப்படி இருந்திருக்கக்கூடும், நீருக்கும் சண்டையிட வேண்டிதான் ஏற்பட்டிருக்கும். இப்போதும் சில இடங்களில் இவ்வாறுதான் இடம்பெறுகிறது. அதை நினைக்கும் போது கவலையாகத்தான் இருக்கிறது ஆனால் என்ன செய்ய முடியும் அதற்கான வேலைப்பாடுகளும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
எமது முன்னோர்கள் இதை ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள் அதனால் தான் அவர்கள் இத்தனை பெரிய குளங்களை கட்டுவித்தார்கள். ஏன்? நமது எதிர்கால சந்ததியினர் எப்படியும் குளங்களைய கட்டமாட்டார்கள் எனவே நாம் அவர்களுக்காக கட்டிய வைப்போம் என்று நினைத்திருப்பார்கள் போல, நீங்களே யோசித்து பாருங்கள் இப்போது எத்தனை பெரிய குடியிருப்புகள், கட்டடங்கள் என செலவுகள் இடம்பெறுகிறது. ஆனால் குளங்களை கட்டுதல் என்பதற்காக நிதி ஒதுக்கப்படுகிறதா? என்றால் இல்லை என்றுதான் கூறமுடியும்.
எனவே இக்கட்டுரையை வாசித்ததன் பின்னாவது நீங்கள் அனைவரும் நீரை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் சிக்கனமாக பயன்படுத்துவோம் என்றே நான் கூறியிருக்கலாம். ஆனால் நான் இக்கட்டுரை எழுதும்போதே நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்ததோடு நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் ஆரம்பித்து விட்டேன். எனவே நீங்கள் அனைவரும் இன்றிலிருந்து நீரை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.
இந்த கட்டுரை பிடித்திருந்தால் Share செய்யுங்கள் இதன் மூலம் போட்டியாளரை வெற்றி பெர செய்யலாம்.
நன்றி
0 Comments