ஒப்பீட்டு அணுகுமுறை
ஒப்பீடு என்பதன் கருத்து தொடர்புபடுத்துவது என்பதாகும். அதாவது ஒரு சமூக அரசியல் தோற்றப்பாட்டை அல்லது பிரச்சனையை அல்லது கருப்பொருளை பிரிதொரு நிலையுடன் ஒப்பீட்டு பார்ப்பதன் மூலம் அது பற்றிய சிறந்த அறிவைப் பெற்றுக் கொள்வதே ஒப்பீட்டு அணுகுமுறை எனப்படும்.
அரசியலை ஏன் ஒப்பீடு ரீதியாக கற்க வேண்டும் என்பதற்கு கெனன் நியூற்றன் மற்றும் ஜோன் மெண்டஸ் ஆகியோர் ஒப்பீட்டு அரசியலுக்கான அடிப்படை என்னும் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் முக்கியமானவை ஆகும். அந்த அடிப்படையில்,
நமது நாட்டின் அரசியலை சிறப்பாக விளங்கிக் கொள்வதற்கு வேறு நாட்டின் அரசியல் பற்றிய அறிவை பெறுவது முக்கியமானதாகும்.
ஒவ்வொரு நாட்டினதும் அரசியல் வரலாறு, அரசியல் பின்புலம், அரசியல் நிறுவனங்கள் பற்றிய ஒப்பீடு ரீதியான அறிவு இல்லாமல் அந்நாடுகளின் அரசியல் பற்றிய சிறப்பான தெளிவினை பெற்றுக்கொள்ள முடியாது.
போன்றவற்றை குறிப்பிடலாம்.
ஒப்பீட்டு அணுகு முறையின் வகைகள்
ஒப்பீட்டு அணுகுமுறையின் வகைகளை வகைப்படுத்தும் போது அவற்றை மூன்று வகைகளாக வகைப்படுத்தி அவற்றை நோக்குகின்றனர்.
20 ம் நூற்றாண்டின் ஒப்பீட்டு அணுகுமுறை
சமகால ஒப்பீட்டு அணுகுமுறை
பழமையான ஒப்பீட்டு அணுகுமுறை
பழமையான ஒப்பீட்டு அணுகுமுறை கிரேக்க, உரோம, மத்திய கால அரசியல் சிந்தனையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அரிஸ்டோட்டில் தனது அரசியல் என்ற நூலில் அக்கால கிரேக்க குடியரசுகளில் காணப்பட்ட அரசியல் அமைப்பு வகைப்படுத்தலுக்கு ஒப்பிட்டு அணுகுமுறையை பயன்படுத்தி உள்ளார். இவர் அரசாங்கத்தின் இயல்புகளை வகைப்படுத்துவதற்காக இரு வகையான அளவீட்டு கருவிகளை பயன்படுத்தி உள்ளார். அவை,
அரசாங்கமானது ஊழல் மிக்கதா?
என்பனவாகும்.
மேற்குறிப்பிட்ட இரண்டு வழிமுறைகள் ஊடாகவே அளவீட்டு முறைகளை பயன்படுத்தி உள்ளார் என்பதை அறிய முடிகிறது.
அரசியலமைப்பு தொடர்பான ஒப்பிட்டு ஆய்வினை அடிப்படையாகக் கொண்டே அரிஸ்டோட்டில் கிரேக்கத்தில் நிலவிய அரசியல் அமைப்புகளை பின்வருமாறு வகைப்படுத்தி இருந்தமை சிறப்பு அம்சமாகும்.
முடியாட்சி
கொடுங்கோன்மை ஆட்சி
சில்லோராட்சி
ஜனநாயக ஆட்சி
20 ம் நூற்றாண்டின் ஒப்பீட்டு அணுகுமுறை
இம்முறையானது 1960 ஆம் ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அரசியல் கட்சியின் விஞ்ஞான ரீதியான பின்னணியுடன் வளர்ச்சி அடைந்தது.
அரசறிவியலில் கோட்பாடுகளும், விதிமுறைகளும் இயற்கை விஞ்ஞான விதிமுறைகளுக்கு ஏற்றதாக அமைய வேண்டும் என்ற கருத்தே விஞ்ஞான ரீதியான அரச அறிவியலின் பாடப் பரப்பின் பிரதான தர்க்கமாக இருந்தது.
இங்கு அரசியல் யாப்புகள், அரசியல் வரலாறு, அரசாங்க முறைகள், ஆட்சி முறைகள், முரண்பாடுகள் என்பவற்றைப் பற்றி ஒப்பீடுகளை மேற்கொள்ளாது அனுபவம் சார்ந்த முறையில் அவதானிக்கக்கூடிய நிகழ்கால அரசியல் நவீனமயமாதல், அரசியல் அபிவிருத்தி, அரசியல் கலாசாரம், அரசியல் சமூகமயமாதல், அரசியல் நடத்தை போன்ற அரசியல் கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு வேறுபட்ட அரசியல் முறைகளை ஒப்பிட்டு ரீதியாக கற்க முடியும் என்று கூறப்பட்டு இம்முறையைப் பயன்படுத்தினார்கள்.
இம்முறைகளை பயன்படுத்தியவர்களாக A. ஆல்மண்ட், S. கோல்மண்ட், S.M. லிப்சட் போன்றோரை குறிப்பிடலாம்.
சமகால ஒப்பீட்டு அணுகுமுறை
சமகால ஒப்பீட்டு அரசியலின் வரலாற்றை நோக்கும்போது அதன் கற்கைக்கு உட்படும் விடையங்கள் நெகிழ்ச்சி தன்மை வாய்ந்ததாகவே காணப்படுகிறது. அதாவது,
அரசியல் நடவடிக்கைகள்
அரசியல் நிலைமாற்றங்கள்
சமூக, அரசியல் முரண்பாடுகள் சமாதான நடவடிக்கைகள்
பெண்களின் அரசியல் பங்கேற்பு
சமூக, அரசியல் மோதல்
ஒப்பீட்டு அணு முறையின் நோக்கங்கள்
ஜனநாயகம், அரசியல் அபிவிருத்தி போன்ற முன்மாதிரிகளை அவசியமற்றது என்பதை விவரித்தல்.
அரசியலில் இருந்து ஒப்பிட்டு கல்வியை தேர்ந்தெடுப்பதன் ஒவ்வொரு நாட்டினதும் அரசியல் விவரிப்பை பலப்படுத்துதல்.
ஒப்பிட்டு அணுகு முறையின் நன்மைகள்
ஒப்பீட்டு ஆய்வு முறை அதிகம் விஞ்ஞானத்தன்மை பொருந்தியதால் சாதாரண நிலைகளை கண்டறிவதுடன் ஒத்த காரணிகள் மூலம் சமனான பெறுபேறுகள் கிடைக்கப்பட்டுள்ளதா என்பதை அறியவும் அவ்வாறு இல்லையேல் பாதித்த காரணிகளை அறியவும், பரிசீலிக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
ஒப்பிட்டு அரசியல் என்ற புதியதொரு பாடத்துறையை அரச அறிவியலின் வளர்ச்சிக்கு காரணமாகிறது.
இரண்டு அரசியல் நிறுவனங்களை ஒப்பீடு செய்யும் போது அவற்றின் வளர்ச்சி, வீழ்ச்சி என்றவற்றை அறிய வாய்ப்பு கிடைக்கிறது.
பல்வேறு முறைகளை ஒப்பிடுவதனால் பெறப்படும் முடிவு அதிக அளவு உறுதித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.
சிறந்த கொள்கைகளை உடைய அரசியல் முறையை கண்டுபிடிக்க உதவுதல்.
நன்றி.
0 Comments