பன்மைத்துவவாத அணுகுமுறை
அரசறிவியலுக்கு அப்பாலுள்ள துறைகளில் காணப்படும் கோட்பாடு, எண்ணக்கருக்கள் மற்றும் விதிமுறைகளை அரசரவியியலின் விபரிப்புக்கும் பயன்படுத்துதல் பன்மைத்துவவாத அணுகுமுறை எனப்படும்.
அரசறிவியலில் வரலாற்றைப் பார்க்கும்போது பன்மைத்துவவாதம் என்ற எண்ணக்கருவில் மூன்று விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.அவை,
குறிப்பிட்ட பாடத்துறையாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் சமூகத்தின் ஏனைய பிரிவுகளுடன் அரசியலானது கூடி குறைந்த அளவில் தொடர்புபடுகிறது என்பதை ஏற்றுக் கொள்ளல்.
அரசறிவியலில் தனக்கே உரித்தான கோட்பாடு மற்றும் எண்ணக்கருக்கள் காணப்பட்டாலும் ஏனைய பாடப்பரப்புகளின் கோட்பாடுகள் மற்றும் எண்ணக்கருக்கலோடு தங்கியிருக்கும் நிலை காணப்படல்.
கோட்பாடு மற்றும் எண்ணக்கருக்கலுக்கு மேலாக விதிமுறைகள் தொடர்பிலும் அரசறிவியலானது ஏனைய பாடத்துறைகளின் விதிமுறைகளோடு தொடர்புபடுகிறது.
மேற்குறிப்பிட்ட வகையில் பன்மைத்துவவாதம் என்ற எண்ணக் கருவில் மூன்று விடயங்கள் காணப்படுவதுடன் அதில் அரசறிவியலின் வரலாற்றை பார்க்கும் போது அரச அறிவியல் எப்போதும் ஏனைய பாடத்துறைகளுடன் தொடர்புபட்டு போதிக்கப்படுகின்றது என்பது தெளிவாகிறது. உதாரணம்,
கிரேக்க யுகத்தில் தத்துவவியலுடன் சேர்ந்து அரசியல் போதிக்கப்பட்டது.
உரோம காலத்தில் இறையியல், வரலாறு மற்றும் சட்டவியலுடன் இணைந்து அரசியல் போதிக்கப்பட்டது.
19 ம் நூற்றாண்டில் அரசியல் பொருளாதாரம் மற்றும் சட்டவியலுடன் இணைந்து போதிக்கப்பட்டது.
அவ்வாறே 20 ம் நூற்றாண்டில் மானுடவியல், உளவியல், புவியியல், கலை, கலாசாரம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடத்துறைகளுடன் இணைந்து அரசியல் போதிக்கப்பட்டது.
மேற்குறிப்பிடப்பட்டதன் அடிப்படையில் காலத்தை அடிப்படையாகக் கொண்டு அரசறிவியலானது ஏனைய பாடப்பரப்புகளுடன் தொடர்பட்டு வளர்ச்சி அடைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.
அரசியல் என்பதை பன்மைத்துவ வாத அணுகுமுறையான் அடிப்படையில் நோக்கும் போது அது சமூகத்தில் ஏனைய அம்சங்களுடன் இணைந்துள்ள சமூகத்தினால் மேலோங்கி உள்ள தோற்றப்பாடாகும்.
நன்றி
0 Comments