மூன்று மகன்களும்
ஒரு கட்டு குச்சியும்
ஒரு காலத்தில் ஒரு வயதான முதியவர் தனது மூன்று மகன்களுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். இந்த மூன்று மகன்களுமே கடின உழைப்பாளர்கள், ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. முதியவரும் பலமுறை அவர்களை ஒன்றுபடுத்த முயற்சித்தார் ஆனால் அவரால் முடியவில்லை.
மாதங்கள் ஓடின, முதியவருக்கு உடம்பு சரியில்லாமல் போனது, அவர் தனது மகன்களை ஒற்றுமையாக இருக்க சொன்னார், ஆனால் அவரின் பேச்சை அவர்கள் கேட்கவில்லை. ஆகையால் அவர் ஒரு நடைமுறை பாடத்தை கற்பிக்க முடிவு செய்தார்.
உடனே முதியவர் தனது மகன்களை அழைத்து, "நான் உங்களுக்கு ஒரு கட்டு குச்சியைக் கொடுப்பேன். ஒவ்வொரு குச்சியையும் தனியாக எடுத்து இரண்டாக உடைக்க வேண்டும். அதிக குச்சிகளை உடைப்பவர் பரிசு பெறுவார்" என்று கூற மகன்களும் ஒப்புக்கொண்டனர்.
அந்த முதியவர் தலா 10 குச்சிகளைக் கொண்ட கட்டுகளைக் கொடுத்தார், ஒவ்வொரு குச்சியையும் துண்டுகளாக உடைக்கச் சொன்னார். அவர்கள் குச்சிகளை நிமிடங்களில் துண்டுகளாக உடைத்தனர். முதலில் யார் வந்தார்கள் என்று அவர்கள் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்தார்கள்.
இதைப் பார்த்த முதியவர் விளையாட்டு இன்னும் முடியவில்லை, மீண்டும் உங்களிடம் ஒரு கட்டு குச்சிகளை கொடுப்பேன், அவற்றை பிரிக்காமல் அப்படியே முழுவதுமாக உடைத்து காட்ட வேண்டும் என்று கூறினார். மூவரும் முயற்சி செய்தனர், ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
மூன்று மகன்களும் தங்கள் தோல்வியை தங்கள் தந்தையிடம் தெரிவித்தனர்.
முதியவர் மகன்களிடம், "அன்பு மகன்களே! நீங்கள் ஒரு குச்சியை துண்டு துண்டாக உடைக்கலாம், ஆனால் கட்டு குச்சிகளை ஒன்றாக உடைக்க முடியாது. அது போல தான் நீங்கள் மூவரும் ஒற்றுமையாக இருந்தால் யாரும் உங்களை எதுவும் செய்ய முடியாது, ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் மற்றவர்கள் உங்களை எளிதில் தோற்கடித்து விடுவார்கள்" என்று கூறினார்.
மூன்று மகன்களும் ஒற்றுமையின் பலத்தை புரிந்துகொண்டு, நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருப்போம் என்று தந்தைக்கு உறுதியளித்தனர்.
நீதி : ஒற்றுமையே பலம்.
நன்றி
0 Comments