சுவரில் உள்ள துளை
ஒரு சிறிய கிராமத்தில், ஒரு பையன் தனது தந்தையுடனும் தாயுடனும் வாழ்ந்து வந்தான். சிறுவன் மிக விரைவில் கோபமடைந்து மற்றவர்களை தனது வார்த்தைகளால் கேலி செய்வான். அவன் கோபத்தினால் குழந்தைகளையும், அண்டை வீட்டாரையும், அவரது நண்பர்களையும் கூட திட்டுவான். இதனால் அவனது நண்பர்களும், அண்டை வீட்டாரும் ஒதுக்க ஆரம்பித்தனர். அவனுடைய பெற்றோர் அவனைப் பற்றி உண்மையிலேயே கவலைப்பட்டனர்.
அவனது தாயும் தந்தையும் அவனது கோபத்தைக் கட்டுப்படுத்தவும், அன்பை வளர்த்துக் கொள்ளவும் பல முறை அறிவுறுத்தினர். துரதிர்ஷ்டவசமாக, அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இறுதியாக, சிறுவனின் தந்தை ஒரு யோசனையுடன் வந்தார்.
ஒரு நாள், அவனுடைய தந்தை அவனுக்கு ஒரு பெரிய பையில் ஆணிகளை கொடுத்தார். ஒவ்வொரு முறையும் கோபம் வரும்போது சுவரில் ஒரு ஆணியை அடிக்குமாறு தனது மகனிடம் கூறினார்.
ஒவ்வொரு முறையும் கோபப்படும்போது, அவன் சுவரில் ஆணியை அடிக்க ஆரம்பித்தான். முதல் நாளில் அவன் 30 ஆணிகளை அடித்தான். அடுத்த சில நாட்களுக்குப் பிறகு, படிப்படியாக சுவற்றில் அடிக்கும் ஆணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
தற்போது சுவற்றிலுள்ள ஆணிகளை ஒவ்வொரு முறையும் கோபத்தை பொருத்துக்கொள்ளும் போதும் அகற்றும்படி அவனுடைய அப்பா அவனிடம் சொன்னார். பல நாட்கள் கழிந்தன, சிறுவன் சுவற்றில் உள்ள ஆணிகளை பெரும்பாலானவையை அகற்ற முடிந்தது. இருப்பினும், அவனால் அகற்ற முடியாத சில ஆணிகள் இருந்தது.
தந்தை அவரை பாராட்டினார், ஒரு துளையை சுட்டிக்காட்டி, "நீ அங்கு என்ன பார்த்தாய்?" என்று மகனிடம் கேட்டார், "சுவரில் ஒரு துளை உள்ளது" என சிறுவன் பதிலளித்தான்.
இதே போல தான் உன்னுடைய கோபமும், உன்னுடைய வார்த்தைகளும். கத்தியால் ஒருவரைக் குத்த முடியும், அவர் உன்னை மன்னிக்கலாம், ஆனால் உள்ளுக்குள்ளே ஏற்பட்ட காயம் எப்போதும் ஆராது. உடல் ரீதியான கஷ்டங்களை விட வார்த்தைகள் மிகவும் வேதனைக்குரியவை! நல்ல நோக்கங்களுக்காக வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள் என்று கூறினார்.
நீதி : இரக்கமற்ற வார்த்தைகள் நீடித்த பாதிப்பைக் கொண்டுவருகின்றன. நாம் பேசும் வார்த்தைகள் எப்போதும் கனிவானதாகவும் இனிமையாகவும் இருக்கட்டும்.
நன்றி
0 Comments