சிங்கமும் எலியும்
ஒரு முறை காட்டின் ராஜாவான சிங்கம் தூங்கி கொண்டிருந்தபோது, ஒரு சிறிய சுண்டெலி அதன் மேலும் கீழும் ஏறி விளையாட ஆரம்பித்தது. இது விரைவில் சிங்கத்தை எழுப்பியது, சிங்கம் தனது பெரிய பாதத்தை சுண்டெலியின் மீது வைத்து, அதை விழுங்க தன் பெரிய வாயை திறந்தது.
"அரசரே! என்னை மன்னித்துவிடுங்கள்" என்று சுண்டெலி அழுதது. "இந்த முறை மட்டும் நீங்கள் என்னை மன்னியுங்கள். நீங்கள் என்னை மன்னித்து விட்டால் உங்களுடைய அன்பை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன், யாருக்கு தெரியும் என்றாவது உங்களுக்கு ஒரு நல்லது நடக்கலாம், எனவே என்னை மன்னித்து விடுங்கள்" என்று கெஞ்சியது. சிங்கமும் சற்று யோசித்து விட்டு அதனால் கூட நமக்கு ஒரு நன்மை கிடைக்கும் என்று எண்ணி தனது பாதத்தைத் தூக்கி அதை விடுவித்தது.
சில நாட்கள் கழித்து, ஒரு சில வேட்டைக்காரர்கள் சிங்கத்தை பிடித்து, ஒரு மரத்தில் கட்டிவிட்டு, பிறகு அவர்கள் சிங்கத்தை மிருகக்காட்சிசாலைக்கு எடுத்துச் செல்ல வண்டியை தேடி சென்றனர்.
அப்போது அந்த வழியாக அந்த சுண்டெலி கடந்து சென்றபோது, சிங்கத்தின் துன்பத்தைக் கண்டு, அவரிடம் ஓடி, கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்து விட்டது. சுண்டெலி சிங்கத்திடம் "நான் சொன்னது சரி அல்லவா என்றது?". சிங்கமும் அதை ஒப்புக் கொண்டது.
நீதி : சிறிய இரக்க செயல்களுக்கு கூட பெரிய வெகுமதி கிடைக்கும்.
நன்றி
0 Comments