எப்போதும்
எச்சரிக்கையாக இருங்கள்
காட்டில், ஒரு சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த சிங்கத்திற்கு வயதானதால் எந்த விலங்குகளையும் வேட்டையாட முடியவில்லை. தன் வயிற்றை காப்பாற்ற தான் எதாவது செய்ய வேண்டும் இல்லையெனில் பட்டினியால் இறந்துவிடக்கூடும் என்று சிங்கம் தனக்குத்தானே சொல்லிக்கொண்டது. சிங்கத்தின் மனதில் ஒரு யோசனை தோன்றியது.
சிங்கம் நோயுற்றது போல் குகைக்குள் படுத்துக் கொள்ளத் தீர்மானித்தது, பின்னர் அதனுடைய உடல்நிலையை பற்றி விசாரிப்பதற்கு யாரேனும் வந்தால், சிங்கம் அதனை இரையாக்க முடிவு செய்தது. சிங்கம் தனது பொல்லாத திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தது, அது செயல்படத் தொடங்கியது. பலரும் சிங்கத்திற்கு இரையாகினர். ஆனால் அத்திட்டம் நிலைக்கவில்லை.
ஒருநாள் நரி நோயுற்ற சிங்கத்தைப் பார்ப்பதற்கு வந்தது. நரிகள் இயற்கையாகவே புத்திசாலித்தனமாக இருப்பதால், நரி குகையின் வாயிலில் நின்று பார்த்தது. அதன் ஆறாவது உணர்வு வேலை செய்தது மற்றும் அது யதார்த்தத்தை அறிந்து கொண்டது.
எனவே, அது வெளியில் இருந்து சிங்கத்தை அழைத்து, "ஐயா! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டது. அதற்கு சிங்கம், "எனக்கு உடல்நிலை சரியில்லை. ஆனால் ஏன் நீ உள்ளே வரவில்லை?" என்று கேட்டது. நரி உடனே, "நான் உள்ளே வர விரும்புறேன், ஐயா! ஆனால் உங்கள் குகைக்குள்ளே செல்லும் கால்தடங்களை பார்த்தால் உள்ளே வந்த எவரும் திரும்பவில்லை, இதை பார்த்தும் குகைக்குள்ளே வர நான் ஒன்றும் முட்டாள் அல்ல", என்று கூறிவிட்டு காட்டில் உள்ள மற்ற விலங்குகளுக்கு எச்சரிக்கை செய்ய சென்றது.
நீதி : எந்தவொரு சூழ்நிலையிலும் ஏதாவது நடப்பதற்கு முன் எப்போதும் கண்களைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி
0 Comments