இலங்கையின் புராதன கால பொருளாதாரம்
நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் கிராமங்களிலேயே வாழ்ந்தனர். அக்கிராம வாசிகளின் வாழ்க்கை இன்றைய சமூகத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் எளிமையானதாக இருந்தது. அனேகமானோரின் வாழ்வாதாரத் தொழிலாக விவசாயமே காணப்பட்டது.
சிலர் சேனைப் பயிர்ச் செய்கைகளிலும் ஈடுபட்ட தோடு பலரும் நெற்செய்கையிலேயே ஈடுபட்டு வந்தனர். மந்தை வளர்ப்பும் வாழ்வாதாரங்களுள் ஒன்றாக இருந்தது. இவற்றுடன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டோரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வந்தனர்.
இலங்கையின் புராதன சமூகத்தில் வாழ்ந்த பெரும்பாலான கிராமத்தவர்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயமே இருந்துவந்தது. பயிர்ச்செய்கையுடன் மந்தை வளர்ப்பும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. விவசாயம் இரு வகைகளில் இடம்பெற்றது. இதில் முதலாவது சேனைப்பயிர்ச்செய்கையாகும். இரண்டாவது நெற் பயிர்ச்செய்கையாகும். இதில் பழைமையானது சேனைப் பயிர்ச்செய்கை என்று வரலாற்று மற்றும் தொல்லியல் மூலாதாரங்களிலும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. வரலாற்று மூலாதாரமான "புத் சரண' எனும் இலக்கியப் படைப்பில் செஹென் என்றும் சிங்கள உம்மக்க ஜாதகத்தில் "சேன" என்றும் கல்வெட்டுக்களில் பிடபிம் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதும் புராதன கால சேனைகளையேயாகும்.
சேனைப் பயிர்ச் செய்கை
சேனைப் பயிர்ச் செய்கை என்பது மேட்டுநிலப் பயிர்ச்செய்கையாகும். தமக்குத் தேவையான அளவு தானியங்களையும் மரக்கறி வகைகளையும் பயிரிட்டுக்கொள்ளக்கூடிய அளவுக்குப்போதுமான நிலப் பரப்பை, பெருங் காடுகளிலிருந்து பெற்று, அவற்றைச் சுத்திகரித்து தீயிட்டுக் கொளுத்தி சேனை ஒன்றை உருவாக்கிக் கொள்வர். முதலில் சுத்திகரிக்கப்பட்ட நிலப்பகுதிக்கு தீயிட முன்னர் சப்தமிட்டு ஒலி எழுப்பி சகல உயிரினங்களையும் இதிலிருந்து அகற்றிவிடுவர்.
புதிதாக தீயிடப்பட்ட காணி நவதெளி சேனை எனப்படும். சேனைகள் மிகவும் வளமானவை நவதெளி சேன எனும் பிரயோகம் சத்தர்ம ரத்னாவலியில் காணப்படுகின்றது. இலங்கையில் சில பிரதேசங்களில் 'நவதெளிசேன'' என்பதற்கு வேறு பொருள் கொள்ளப்படுகின்றது. குரக்கன், கொள்ளு, உளுந்து, பயறு. சோளம், வரகு, தினை, ஓமம் எனும் தானிய வகைகள் ஒன்பதும் செழிப்பாக வளரும் கம்பு, சேனைகள் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன. சில காலம் கைவிடப்பட்டுப் பின்னர் மீளவும் பயிரிடப்படும் சேனைகளை ''கனத்த' எனும் சொல்லால் அநுராதபுர பிரதேசத்து விவசாயிகள் குறிப்பிடுவர். சேனைச் செய்கையின்போது பின்பற்றப்பட்ட நடைமுறை, ஓரிரு முறை பயிரிடப்பட்ட நிலத்தைக் கைவிட்டு விடுவதாகும். சிறிது காலம் அவ்வாறு கைவிடப்பட்ட நிலத்தில் மீண்டும் காடுகள் வளரும். இதனால் புராதன காலச் சேனைச் செய்கையால் சூழலுக்கு மேலதிக பாதிப்புகள் ஏற்படவில்லை.
சேனைகளில் பயிரிடப்பட்டவைகளுள் உழுந்து, வரகு, பயறு, குரக்கன், சோளம், எள்ளு, கடுகு, சீரகம், தினை, அரிசி போன்ற தானிய வகைகளும் பூசணிக்காய், கத்தரிக்காய், சாம்பல் பூசணி போன்ற மரக்கறி வகைகளும் நெல், கரும்பு, பருத்தி என்பனவும் பயிரிடப்பட்டன. அவையவற்றுக்கென ஒதுக்கப்பட்டிருந்த சேனை களிலே அவை பயிரிடப்பட்டன. அக்காலத்தில் நாட்டிற்குத் தேவையான துணிகளும் கருப் பட்டியும் உற்பத்தி செய்வதற்குப் போதியளவு பருத்தியும் கரும்பும் விளையும் அளவுக்கு அப்பயிர்ச் செய்கைகள் முன்னேற்றம் அடைந்தி ருந்தன. சம்பளம் பெற்று கரும்புத் தொழிலில் ஈடுப்பட்டோர் பற்றி வம்சக்" கதைகளில் கூறப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நாட்டுக்குத் தேவையான கருப்பட்டி இந்நாட்டில் தயாரிக்கப் பட்டது. 16 ஆம் நூற்றாண்டு வரை இந்நாட்டிற்கு சீனி இறக்குமதி செய்யப்படவில்லை அறிஞர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
சேனை ஒன்று உருவாக்கப்படுவது தமது இருப் பிடத்தில் இருந்து ஓரளவு தூரமான பிரதே சங்களிலாகும். சேனையில் இருந்து விளைச்சல் பெற்றுக்கொள்ளும்வரை அவர்கள் சேனையில் கட்டப்பட்டுள்ள குடிசை ஒன்றில் தற்காலிகமாகத் தங்கியிருப்பர். சேனையை வன விலங்குகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு அதனைச் சூழக் கட்டப்படும் கம்புகளால் ஆன வேலி தண்டு வெட்ட என்று குறிப்பிடப்படும். சேனையில் உயர் மரம் ஒன்றில் கட்டப்பட்ட சிறு குடிசை பெல எனப்படும்.
இரவு நேரத்தில் வரும் மிருகங்களிடம் இருந்து தமது சேனையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பொழுது புலரும் வரையில் இதில் தங்கியிருப்பர். சேனைப் பயிர்ச்செய்கைக்காக அரசர்களில் சிலர் வரி அறவீடு செய்துள்ளனர். கெதிஅட, கெடுகனக என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருப்பது இவ்வாறான இருவகை வரிகளையாகும். பொலன் னறுவையை ஆண்ட நிஸ்ஸங்கமல்ல மன்னன் (கி.பி. 1187 - 1196) இவ்விரு வகை வரிகளையும் நீக்கியதாக அவனது கல்வெட்டுக்களில் குறிப்பிடப் பட்டுள்ளன.
புராதன காலத்தில் சனத்தொகை குறைவான படியால் சேனைச் செய்கை மூலம் தமது தேவைகளை அவர்கள் பூர்த்திசெய்யக்கூடியதாக இருந்தது. பெருகிச் செல்லும் சனத் தொகையின் உணவுத் தேவையை நிறைவுசெய்வதற்காகவே வயல்களில் நெல் பயிரிடும் முறை ஆரம்பமானது.
நெற் செய்கை
கல்வெட்டுக்களில் நெற் செய்கை இடம்பெறும் இடங்கள் வயல் என்றும் கெத என்றும் இரு சொற்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளன; சில வேளை சிற்றளவில் நெற் செய்கை பண்ணப்படும். இடங்களை வயல் என்று குறிப்பிட்டிருக்கலாம். கெத எனும் சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து பெறப்பட்டது. பல வயல்களைக் கொண்ட பரந்த இடத்தை இது குறித்து நிற்கின்றது.
பெரும்பாலும் நீர்ப்பாசனத்தின் மூலமே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. பருவ மழையின்போது குளங்களில் சேகரிக்கப்பட்ட நீர் கால்வாய்கள் மூலம் வயல்களுக்கு விநியோ கிக்கப்பட்டது. வருடாந்தம் இரு போகங்கள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டன. ஒரு முறை நெல் பயிரிடப்படும் காலம் போகம் எனப்பட்டது. இவ்விரு காலத்தையும் பெரும் போகம், சிறுபோகம் எனக் குறிப்பிடுவர். இவற்றுடன் இடைப் போகம் பற்றியும் கல் வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பெரும். சிறு போகங்களுடன் இடைப்போகம் மேற் கொள்ளப்படுவது நீர் கிடைக்கும் தன்மையைப் பொருத்ததாகும்.
நெற்செய்கையை வெற்றிகரமாக நடத்துவதற்கு மந்தை வளர்ப்பு உலர் வலயத்தில் பிரதான தேவையாக இருந்தது போதியளவு நீரைப் பெற்றுக் கொள்வதாகும். மழைநீரைத் தேக்கி வைத்துக் கொள்வதும், ஆறுகளை மறித்து கால்வாய்கள் மூலம் நீரை வயல்களுக்கு அனுப்புவதும் அத்தேவைகளை நிறைவுசெய்து கொள்வதற்கு கையாளப்பட்ட இரு முறைகளாகும். குளங்களைக் கட்டும் செல்வம் வழக்கம் இந்நாட்டில் வளர்ச்சியுற்றதற்கு காரணம் நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தேவைக்கு பயன்படுத்துவதற்காகும். மகாபராக்கிரமபாகு மன்னனால் (கி.பி. 1153 - 1186) கூறப்பட்ட, விண்ணிலிருந்து மண்ணில் பொழியும் ஒரு துளி நீரையேனும் மனிதனுக்கு பயன்படாது கடலில் கலக்கவிட மாட்டேன்." என்ற கூற்று நீரைப் பாதுகாத்துக் கொள்வதன் முக்கியத்துவம் அரச னின் பார்வையில் எவ்வாறிருந்தது என்பதை எமக்கு காண்பிக்கின்றது. இயற்கையுடன் ஒன்றி ணைந்து செயற்பட்டதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கைக்குப் பேருபகாரத்தைப் பெற்றுக் கொண்டனர்.
மந்தை வளர்ப்பு
விவசாய நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக அக் காலத்தில் மந்தை வளர்ப்பும் இடம்பெற்றது. அவற்றுள் முதலிடம் பெற்றது மாடு வளர்ப்பாகும். மாடு வளர்ப்போருக்கென ஒதுக்கப்பட்ட "கோபாலகம்" பற்றிக் கல்வெட்டுக்களிலும் இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளன. மிருகச் அல்லது உணவுத் தேவையில் இவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் பொருள்கள் பேருபகாரமாய் அமைந்தன. தயிர், நெய், வெண்ணெய் என்பன அவற்றுள் முக்கியமானவையாகும். கொழும்பு நூதன சாலையில் உள்ள நான்காம் காசியப்ப மன்னனால் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் "கிரிகெரி" எனும் சொல் காணப்படுகின்றது. இது பால் பெற்றுக் கொள்ள வளர்க்கும் பசுக்களை குறிப்பிடுகின்றது. பெண்ணொருத்தி பசுவிலிருந்து பால் கறப்ப தனைக் காண்பிக்கும் சிற்பம் ஒன்று சீகிரியில் அமைந்துள்ள நாகபப்பா எனக் குறிப்பிடப்படும். விகாரையுள் தாதுகாப்பத்தில் வைக்கப்பட்டுள்ள மகாமேருக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
மாடுகளைத் தவிர கோழிகளும் ஆடுகளும் வீடுகளில் வளர்க்கப்பட்டன. பொலன்னறுவை மெதிகிரியில் உள்ள எத்வெஹர மண்டபத்தில், வைத்தியசாலையில் தேவைக்காக இயற்கையாக நோயாளர்களின் ஆடுகளினதும் கோழிகளினதும் மரணித்த மாமிசம் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டுமெனக் குறிப்பிடும் விடயம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் காணப் படுகின்றது.
கைத்தொழில்
பண்டைய காலத்தில் இருந்தே இலங்கையில் உலோகக் கைத்தொழில் மிகவும் முன்னேற்ற கரமாக விளங்கி வந்ததை முன்னைய பாடங்களில் கற்றுக் கொண்டிருப்பீர்கள். உலோகங்களைப் பயன்படுத்தி கைத்தொழில்களில் ஈடுபடுவோர் பற்றிய தகவல்கள் கல்வெட்டுகளில் காணப் படுகின்றன. இவற்றுள் முக்கியத்துவம் பெறுவது இரும்புத் தொழிலை மேற்கொண்ட கம்மாளர்களாவர். இவர்களைக் குறிக்க கல்வெட்டுகளில் கபர எனும் பெயர் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இரும்பைக் கையா ளும் சும்மாளர் கிராம மக்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட நபராவார். அன்றாட விவ சாய நடவடிக்கைகளுக்கான மண்வெட்டி, ஏர், அரிவாள் என்பவற்றை அவர்களுக்குச் செய்து கொடுத்தது பட்டறைக் கொல்லர்களேயாவர். பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த முதுகல்ல எனும் இடத்தில் காணப்படும் கல் வெட்டு ஒன்றில் மஜ்ஜிம எனும் கம்மாளரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
இதற்கு மேலும் செம்பு (தம்பகர). வெள்ளீயம் (டின்) உலோகங்களால் கைத்தொழில்களை மேற் கொண்ட கலைஞர்கள் அக்காலத்தில் இருந்துள் ளனர். அக்காலத்தில் தங்கக் கைத்தொழிலில் ஈடுபட்ட பொற்கொல்லர்கள் வேடுகளில் புராதன பதி துவாதார என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மண்டகல எனும் இடத் தில் உள்ள ஒரு கல்வெட்டில் துலதர சுமண என்ற பெயர் கொண்ட பொற்கொல்லரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அநுராதபுரம், மகாகாமம் எனும் பண்டைய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வுகளில் கண்டறியப் பட்டுள்ள இரத்தினக் கற்களினாலும் ஏனைய வகைக் கற்களாலும் செய்யப்பட்ட மாலைகள், மோதிரங்கள் மூலம் இலங்கையில் காணப்பட்ட இரத்தினக் கைத்தொழிலின் தன்மையை அறிய முடிகின்றது. அவ்வாறான கைத்தொழில்களில் ஈடுபட்ட கலைஞர்கள் மணிகர எனும் சொல் லாலும் குறிப்பிடப்பட்டனர்.
புராதன காலத்தில் எமது சமூகத்தில் காணப்பட்ட இன்னொரு கைத்தொழில் யானை செதுக்கல் ஆகும். கண்டிக் காலத்திற்குரிய தந்தச் வேகிரிய தேவாலயத்திற்கு அருகில் காணப்பட்ட கல்வெட்டு ஒன்றில் தடிக சுமண எனும் யானைத் தந்தச் செதுக்கல் கலைஞர் ஒருவரைப் பற்றிப் கூறப்பட்டுள்ளது. தடிக என்பது யானைத் தந்தத்தைக் குறிப்பதாகும்.
அக்காலத்தில் வாழ்ந்த சாதாரண மக்களுக்கு தமது அன்றாடத் தேவைகளுக்கு மிகவும் உபயோ கமாக இருந்தது மட்பாண்டங்களாகும். தொல் பொருள் அகழ்வுகளின்போது பெருந்தொகையான மட்பாண்ட சிதைவுகள் கண்டெடுக்கப்பட் டுள்ளன. மட்பாண்டம் வனைதல் அக்காலத்தில் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட கைத்தொழிலாக இருந்தது.
வனைதல் கைத்தொழிலில் ஈடுபட்டவர்களைப் பற்றி இற்றைக்கு 2250 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கல்வெட்டுக்களில்கூட குறிப்பிடப் பட்டுள்ளன. அக்காலத்தில் அவர்கள் கும்பகார என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்ட மாவட்டத்தில் வெஹெரகெம் எனும் இடத்தில் காணப்பட்ட கல்வெட்டில் ததவய"என்னும் சொல்லால் நூல் நூற்பவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். நூல் நூற்றல் துணி நெசவுக்கான ஒரு செயற்பாடாகும். மிகப் புராதன காலத்தில் இருந்து துணி நெசவு என்பது நாட்டில் இடம்பெற்று வந்தமை பற்றி வரலாற்று மூலாதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வெஹரகெம கல்வெட்டில் நூல் நூற்போர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளமை அக்காலத்தில் நிலவிய நெசவுக் கைத்தொழில் பற்றிய திட்டமான ஆதா ரமாகும்.
இவ்வாறு தொழில் ரீதியாகப் பல்வேறுபட்ட கைத்தொழில்களில் ஈடுபட்ட நபர்களைப் பற்றிய விடயங்கள் எங்கள் வரலாற்றில் கூறப்படுவதன் மூலம் எமது நாட்டில் நிலவிய புராதன சமூகம் மிகவும் முறையான விதமாக தாபன ரீதியில் செயல்பட்டு வந்துள்ளது என்பது தெரிகின்றது. எல்லா வகையான தொழிலாளர்களும் அக்கால சமூகத்தில் சிறப்பாக செயற்பட்டதிலிருந்து தமது அறிவாலும் உழைப்பாலும் மிகவும் பெறுமதியான பங்களிப்பை அவர்கள் செய்துள்ளனர்.
வர்த்தகம்
புராதன காலத்தில் நகரங்கள் சிலவே காணப் பட்டன. வரலாற்று மூலாதாரங்களில் குறிப் பிடப்படும் அளவுக்கு அநுராதபுரம், மகாகாமம் என்பன அவற்றுள் முக்கியமானவையாகும். அவற்றைக் குறிப்பதற்கு நகர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான நகர்களில் வசதி படைத்தவர்களே வாழ்ந்து வந்துள்ளனர். அந்நகர்களில் உள்நாட்டவர்கள் போன்றே வெளிநாட்டவரும் வாழ்ந்துள்ளனர். அநுராதபுர நகரத்தின் தெற்கு வாயிலின் அருகில் காலசுமண என்ற பெயரில் வர்த்தக சந்தை ஒன்றிருந்தது.
வர்த்தகம் இந்நாட்டில் புராதன காலத்தில் இருந்தே பிரதான சீவனோபாயமாக இருந்து வந்துள்ளது. வர்த்தக நடவடிக்கைகள் உள்நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளுடனும் இடம்பெற்றன. சீகிரியா வின் மேற்கில் உள்ள நீர்ப்பூங்காவில் காணப்படும் கல்வெட்டில் '"அபலவபர" என்ற பெயருடைய நபர் பற்றிப் பிரஸ்தாபிக்கப்படுகின்றது. அது ''ஆம்ல'' வியாபாரம் என்பது பழைய சிங்களத் திவ் எழுதப்பட்டுள்ள விதமாகும். அவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பது புளி வியாபாரியை ஆகும். அக்கல்வெட்டு 2250 வருடங்களுக்கு முன் செதுக்குவிக்கப்பட்டதாகும். சிறு குழுவினரைத் தவிர ஏனைய வர்த்தகர்கள் கூட்டாக ஒன்றுபட்டு செயல்பட்டனர். அப்படியான சங்கமொன்றைக் குறிப்பிடுவது 'புகய" எனும் பெயராலாகும். சில இடங்களில் அது "நியமஸ்தான" என்ற சொல்லாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தகத் தில் ஈடுபடும் கூட்டத்தினர் அக்காலத்தில் ''வணிஜு" எனும் பெயராலோ "வாபர" எனும் பெயராலோகுறிப்பிடப்பட்டுள்ளனர். வாபர என்ற சொல் பழைய சிங்கள மொழியில் வியாபாரம் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதாகும்.
இவ்வர்த்தகர்கள் புராதன சமூகத்தில் வாழ்ந்த செல்வந்தர்கள் ஆவர். அவர்கள் பிக்குகளுக்கு வாழ்வதற்குக் கற்குகைகளைத் தானமளித்துள் ளனர். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மண்டகல என்னும் இடத்தில் காணப்பட்ட கல்வெட்டு ஒன்றில் சுமண எனும் வணிகரால் அவ்வாறு தானமளிக்கப்பட்ட கற்குகை ஒன்று பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே மாவட் டத்தில் வெஹெரகெம் எனும் இடத்தில் கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றில் சுமண எனும் வணிகரால் தானமளிக்கப்பட்ட கற்குகை ஒன்று பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே மாவட்டத்தில் வெஹொக்கம எனும் இடத்தில் கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றில் "ததவய புகஹு" எனும் வார்த்தை காணப்படுகின்றது. இது நூல் நூற்பவரை அல்லது நெசவாளியைக் குறிப்பதாகும். துணி நெய்து வியாபாரம் செய்பவர்களின் சங்கம் ஒன்றின் மூலம் பிக்குகளுக்கு குகை ஒன்று தானம் செய்யப்பட்டது தொடர்பான விடயங்கள் இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன.
வியாபார நகர்களுக்கும் கிராமங்களுக்கும் அண் மையில் வியாபாரம் செய்வதற்காக சந்தைகள் காணப்பட்டன. மகாகிராமையில் இருந்து அநுராதபுரத்திற்கு வந்த சுர நிமல என்பவர் நறுமணப் பொருள்களை வாங்கியதாக இலக்கிய மூலாதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. நான்காம் உதய (கி.பி. 946 -954) மன்னனின் ஹோபிடிகம தூண் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள விடயங்கள் மூலம் புராதன சந்தைகள் முறையாக நிர்வகிக்கப்பட்டமை பற்றி அறிய முடிகின்றது.
இது தொடர்பாகக் கூறக்கூடிய சிறந்த உதா ரணம் சொரபொர வாவி தூண் கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ள ஹோபிடிகம் சந்தை யைப் பற்றியாகும். அதன் நிர்வாகம் பற்றி அரசனால் பிறப்பிக்கப்பட்ட சட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
சந்தைக்கு வரும் வண்டிகளிலிருந்து அல்லாது, சந்தையைக் கடந்து செல்லும் வண்டி களிலிருந்து வரிவசூலிக்கப்படக்கூடாது என்று சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சூரிய பாதுகாக்கப்பட்ட மண்டபம் கீழ் மட்டுமே வெற்றிலை வியாபாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மூலம் போன கூடாது குறிப்பிடப்பட்டிருப்பது, வெற்றிலையை மக்களுக்கு என்பதற்காகவாகும். சட்ட காய்ந்துப் விற்கக் அக்காலத்தில் போயா தினங்களில் வர்த்தகம் இடம்பெறவில்லை. நோன்மதி தினங்களில் வர்த்தகம் புரிந்தோரிடம் இருந்து தண்டப் பணம் வசூலிக்கப்பட்டது. ஹோபிடிகம சந்தையில் நோன்மதி தினத்தில் வர்த்தகத்தில் ஈடுப்படுவோர் தண்டமாக மஹியங்கனை விகாரைக்கு விளக் கேற்றுவதற்கு எண்ணெய் வழங்க வேண்டும் எனப் பணிக்கப்பட்டிருந்தது.
கி.பி. 11ஆம் நூற்றாண்டில் இருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை இந்நாட்டில் செயற்பட்ட தென்னிந்திய வம்சாவளிகளின் வர்த்தக நிறுவனங் கள் பல பற்றி இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட அக்காலத்திற்குரிய தமிழ் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. நானாதேசி, வலஞ்சியார். ஐந்நூற்றுவர் என்பன அவற்றுள் சிலவாகும். நானாதேசி வர்த்தக நிறுவனத்திற்குரிய உலோக முத்திரைகள் அம்பாந்தோட்டையில் கண் டெடுக்கப்பட்டுள்ளன.
அநுராதபுர ஆரம்பக் காலத்தில் இந்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு வெளிநாட்டு வியாபாரிகள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. தென் மாகாணத்தில் அமைந்துள்ள போவத்தேகல எனும் இடத்தில் காணப்படும் கல்வெட்டில் ''கபோஜ மஹ புகிய" எனும் வாசகம் காணப்படுகின்றது. அதில் குறிப்பிடப்படுவது காம் போஜர்களின் பெரு வர்த்தக அமைப்பு ஒன்று பற்றியதாகும். கம்போடியர்கள் என்று அக்காலத் தில் ஆப்கானிஸ்தானில் இருந்து இங்கு வந்த வர்த்தகர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
புராதன காலத்திலிருந்தே சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளில் எமது நாடு குறிப்பிடத்தகு பங்காற்றியுள்ளது. அதில் செல்வாக்கு செலுத்திய முக்கிய காரணி இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்திருந்தமையாகும். கிழக்கு மேற்கு வர்த்தக நடவடிக்கைகளின் பரிமாற்று நிலையமாக இலங்கை இருந்து புராதன வர்த்தகத்திற்கு ஆற்றிய பணி அளப்பரியதாகும்.
அநுராதபுரம் ஒரு நகரமாக வளர்ச்சி பெற்றதற்கு முக்கியமான காரணி சர்வதேச வியாபாரமாகும். நகருக்கு மேற்காக மாந்தை (மாதோட்ட) துறைமுகமும் கிழக்காக கோகண்ண என்று அழைக்கப்பட்ட திருக்கோணமலை துறை முகமும் அமைந்திருந்தன. இவற்றோடு
மேற்கு, கிழக்கு கரையோரங்களில் காணப்பட்ட சிறிய துறைமுகங்களின் செயற்பாடும் இதற்கு கணிசமாகப் பங்களித்தன. வட கடற்கரையில் அமைந்திருந்த ஜம்புகோளப்பட்டினம் எனும் சிறிய துறைமுகத்திற்கு புனித வெள்ளரசு மரக் கிளை கொண்டுவரப்பட்டமையும் கிழக்கு கடற்கரையில் உள்ள லங்காப்பட்டினம் எனக் குறிப்பிடப்படும் சிறிய கப்பல் தரிப்பிடத்தில் புனித தந்ததாது, ஹேமமாலா இளவரசியாலும் தந்த இளவரசனாலும் கொண்டுவரப்பட்டமையும் இதற்கு உதாரணங்களாகும்.
ஏனைய தொழில்கள்
ஆசிரியர்கள்
ஆசிரியத் தொழிலும் புராதன காலத்திலிருந்தே இங்கு நிலவி வந்துள்ளது. ஆசிரியர்களைக் குறிப்பதற்கு பழைய பதி வேடுகளில் ஆசார்ய எனும் சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. கலைகளைக் கற்பிக்கும் நபர்கள் மட்டும் அல்ல, கலைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்த நபர்களும் ஆசார்ய எனும் பெயரால் குறிப்பிடப்பட்டனர். இவர்கள் பல்வேறு கலைகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தனர். யானையைப் பழக்கும் ஆசிரியர்கள் (ஹஸ்தி ஆசார்ய) குதிரை மீதேறிச் செல்வதைக் கற்பித் தோர் (அஸ்வ ஆசார்ய), அம்பு எய்தும் கலையைக் கற்பித்தோர் (துனு ஆசார்ய) பற்றிய விடயங்கள் கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளன.
வைத்தியர்கள்
சமூகத்தை நல்ல முறையில் கொண்டு நடத்துவதற்கு அம்மக்கள் தேகிகளாக இருப்பது அத்தியாவசியமாகும். இதற்கு வைத்தியர்களின் சேவை இன்றியமை யாததாகும். அநுராதபுரத்தின் ஆரம்ப காலத்தில் இந்நாட்டவர்கள் வைத்திய சேவையை மிக உயர்வாக மதித்து வந்துள்ளனர். வைத்தியர்களைக் குறிப்பதற்குக் கல்வெட்டுக்களில் பிரயோகிக்கப் படும் சொல் 'வெஜ என்பதாகும். கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் வைத்தியர்கள் சிலர் மஹவெதனா எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவ்வாறான சொற்பிரயோகம் முதன்மை வைத்தியரையோ அறுவை சிகிச்சை செய்யும் வைத்தியரையோ குறித்திருக்கலாம்.
சட்ட நிபுணர்கள்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அக்காலத்தில் நிலவிய சட்டங்கள் சம்பந்தமான துறைபோன அறிவுள்ளவர்கள் வாழ்ந்துள்ளனர். பெரும்பாலும் இவர்கள் நியாயத்தை வழங்குவதற்கு அரசர்களுக்குத் தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குபவர் களாக இருந்தனர். இவர்கள் வொஹார எனும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளனர். இது சமஸ்கிருத மொழிச் சொல்லான வியவகார என்பதிலிருந்து வந்ததாகும். அக்கால சமூகத்தில் நீதிதுறைசார் விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கே இப்பெயர் வழங்கப்பட்டது.
பல்வேறு கலைஞர்கள்
பல்வகைப்பட்ட கைத்தொழில்களில் ஈடுப்பட்டவர்களும் கலைத் துவமான தொழில்களில் ஈடுப்பட்டபவர்க ளும் புராதன சமூகத்திலும் வாழ்ந்து வந்தனர். கவைஞர்களில் நடனமாடுவோர், சித்திரம் வரைபவர்கள். கவிஞர்கள் பற்றிய விடயங்கள் புராதன மூலாதாரங்களில் காணப்படுகின்றன. குருணாகல் மாவட்டத்தில் மெதகமவில் அமைந்துள்ள புராதன விகாரையில் இற்றைக்கு 2200 வருடங்களுக்கு முன்னர் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் திஸ்ஸ என்ற நடனக் கலைஞர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது மனைவி பருமக பதவி வகிப்பவராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை முக்கியமான ஒரு விடயமாகும். நடனத் தொழில் சமூகத்தில் முக்கியமான இடத்தை வகித்து வந்தது என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.
சித்திரக் கலைஞர்களாகக் குறிப்பிட சிதகர என்ற சொல்லும் லபன எனும் சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாவது சொல் சித்திரக்கார எனும் சொல்லாலும் இரண்டா வது சொல் வேபன எனும் சொல்லாலும் ஆக்கப்பட்டுள்ளன. சமஸ்கிருதத்தில் லேபத எனும் சொல் பயன்படுத்தப்படுவது அலங்காரப் படுத்தல் என்பதற்காகும். நிறங்களைப் பூசு வதன் மூலம் சித்திரக் கலை உருவாவதனால் சித்திரக் கலைஞர்களைக் குறிக்க லேபத எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அம்பாந் தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நெட்டுக்கந்த எனும் இடத்தில் உள்ளகல்வெட்டில் லபன திஸ்ஸ என்பவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது நாட்டின் உன்னத படைப்பாளர்களாகக் கவிஞர்கள் காணப்பட்டனர். அவர்களைக் குறிப்பதற்கு கவி என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள லபத திஸ்ஸ என்பவருடைய மகன் சஞ்சயன் இக்கல் வெட்டில் கவிஞர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
நன்றி
0 Comments