இலங்கையின் புராதன கால கலாசாரம்
புத்த சமயம்
கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் மகிந்த தேரர் இங்கு வருகை தந்து புத்த சமயத்தைப் போதிக்கத் தொடங்கியதில் இருந்து அது இலங்கையின் பிரதான சமயமாக விளங்கி வந்துள்ளது. அதற்குப் பிற்பட்ட காலத்தில் இந்து சமயக் கருத்துக்கள் நாட்டில் பரவியமைக்கு சிறப்பாக இந்தியாவில் கிறிஸ். இருந்து வந்த வர்த்தகர்களும் ஏனையோரும் காரணமாய் இருந்தனர். இஸ்லாமும் தவமும் ! இலங்கையில். அறிமுகமானது பிற்காலத் மேற்கு திலாகும். அவை 6ஆம் நூற்றாண்டில் மத்திய தரைப்பிரதேசங்களிலும் பின்னர் ஆசியாவில் இருந்தும் 16 ஆம் நூற்றாண்டிலும் மேற்கு நாடுகளை மையமாகக் கொண்ட வர்த்தகம் கிழக்கு நாடுகளில் பரவிச் சென்றமையாலும் ஏற்பட்ட விளைவுகளாலாகும்.
மகிந்ததேரரும் அவரது குழுவினரும் இந் நாட்டிற்கு வருகை தந்த பின்னர் சிறிது காலத்தில் புத்த சமயமும் அதனுடன் இணைந்த வணக்க வழிபாடுகளும் இந்நாட்டவரிடையே வேகமாகப் பரவின. நாளுக்கு நாள் எண்ணிக்கையால் அதிகரித்துச் சென்ற பிக்குகள் வாழ்வதற்கான ஆராமைகளின் | பற்றாக்குறையால் இயற்கையாக அமைந்த கற்குகைகளைச் சுத்தம்செய்து அவற்றை அவர்களுக்குத் தானமளிக்கும் நடவ டிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இதுவரை கண்டறியப்பட்டுள்ள பிக்குகளுக்கு தானமளிக்கப்பட்ட அவ்வாறான கற்குகைகள் 1600 இற்கும் மேற்பட்டவை நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் காணப்படுகின்றன.
பொருத்தமான கற்குகை ஒன்றைத் தெரிவு செய்து முதலில் அதனை சுத்தம்செய்து, மழை காலத்தில் குகையினுள் நீர் வழிவதனைத் தடுப்பதற்கான பீலிகளை அமைத்து அவற் றைப் பிக்குகளுக்குத் தானம் செய்தனர். சில கற்குகைகளில் பீலிகளுக்குக் கீழே அவற்றைத் தானமளித்தோர் பற்றிய விபரங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாய் உள்ளது. அக்காலத்தில் அதற்கு "பிராமி" எழுத் துக்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. அக்கல் வெட்டுக்கள் '"'பிராகிருத" எனும் புராதன சிங்கள மொழியிலே எழுதப்பட்டுள்ளன. பாடசாலை சுற் றுலாவில் பங்குபெறும்போது நீங்கள் மிகிந்தல, ரிடிகல, வெஸ்ஸகிரி, சீகிரிய ஆகிய இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்களைக் காண்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கலாம்.
மிகிந்தலையில் ஒரு கற்குகையில் அவ்வாறு செதுக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டு உள்ளது. அந்த கல்வெட்டில் பொருள் பிரதானியான குப்தவின் மகனான சுமண எனும் பிரதானியால் இக்குகை இங்கு வந்துள்ள, வருகை தராத நாற்றிசையிலுமுள்ள பௌத்த குருமார்களுக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குகை விகாரைகள் தவிர பன்னசாவை எனப் பட்ட கட்டட வகை ஒன்றைப் பற்றியும் மூலா தாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கருதப்படுவது பிக்குமார் வாழ்வதற்கு ஓலை, இலுக்குப் புல் ஆகியவற்றால் வேயப்பட்டு மண் ணால் சுவர் எழுப்பப்பட்டுள்ள கட்டடமாகும். கருங்கற்கள், செங்கற்கள் பயன்படுத்தப்பட்டு விகாரைகள் கட்டப்படுவதற்கு முன்னர் பிக்கு கள் வாழ்ந்தனர். இவ்வாறான இடங்களில் தற் காலத்தில் பௌத்த விகாரைகளைக் குறிப்பதற்கு எங்களால் பயன்படுத்தப்படும் பன்சல எனும் சொல் உருவாகி இருப்பது பன்ன சாலா என்பதன் திரிபு ஆகும்.
புராதன பௌத்த ஆராமைகளில் குருமார் பவர் வாழ்ந்து வந்தனர். தலைமைப் பிக்கு ஒருவரின் கீழ் இங்கு வாழ்ந்த ஏனைய குருமார்கள் அந்தேவாசிக பிக்குகள் எனக் குறிப்பிடப்பட்டனர். அநுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த மஹாஎலகமுவேயில் காணப்படும் கற்குகை ஒன்றில் செதுக்கப்பட்டுள்ள விடயத்தில் திஸ்ஸரக்கித எனும் தேரரின் அதே வசிக புஸ்ஸ என்பவர் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அக்காலத்தில் தலைமைப் பிக்கு தேரர் எனும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளார். அவ்வாறு குறிப்பிடப்படும் தலைமைப் பிக்குகளை அண்டி வாழும் மாணவப் பிக்குகள் சதிவிஹரிய" அல்லது சத்தி விஹாரிகா என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதன் பொருள் அண் மித்து வாழ்வோர் என்பதாகும்.
வலகம்பாகு மன்னருடைய காலத்தில் திரிபிடகம் எழுதப்படும் வரை மனனம் செய்வதன் மூலமே பௌத்த போதனைகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. இவை மிகவும் விரிவானவையானதால் அவற் றைப் பகுதி பகுதிகளாக மனனம் செய்திருந்த பிக்குகள் இருந்தனர். அவர்கள் பாணக எனக் குறிப்பிடப்பட்டனர். புத்த சமயத்துடன் சம்பந்தப்பட்ட அவ்வப் பகுதிகளை (பிடக) மனனம் செய்திருந்த பிக்குகள் அவற்றால் குறிப் பிடப்பட்டனர். உதாரணமாக தீகநிகாயவை மனனம் செய்திருந்த பிக்குகள் தீக பாணக என்றும் சங்யுக்த நிகாயாவை மனனம் செய்திருந்த பிக்குகள் சங்யுக்த பாணக எனும் பெயராலும் அறியப்பட்டனர்.
பிக்குகளுக்கு மழை காலத்தில் ஆராமைகளில் அவர்களுக்கு தங்கியிருக்க அழைப்பு விடுப்ப தும், அவர்களுக்கு காவி உடை சடங்குகள் நடத்துதல் என்பன வழங்கும் பௌத்தர்களிடையே மரபாகக் காணப்பட்ட டது. அக்கால குருநாகல் மாவட்டத்தில் ஹெலம்பகல என்னும் இடத்தில் காணப்படும் கல்வெட்டில் ''வசவசிக எனும் சொல் காணப்படுகின்றது. அதன் பொருள் மழை காலத்தில் பாதுகாப்பாக தங்கியிருத்தல் என்பதாகும். அம்மாவட்டத்திலுள்ள கொத்தலகிம் பியாவ என்னும் கல்வெட்டில் "வச வசிக சகதக" என்ற பதம் காணப்படுகின்றது. இது சிங்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. உத்திய என்னும் பிக்கு ஒருவரின் உறவினர் ஒருவரால் கத்தினசீவருய தானமளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் கருத்து நெய்யப்பட்ட காவியுடை என்பதாகும். இக்கல்வெட்டுக்கள் இரண்டும் 2200 வருடங்களுக்கு முற்பட்டவையாகும்.
ஏனைய சமயங்கள்
பௌத்த சமயம் இந்நாட்டவரிடையே வேரூன்றிய காலத்தில் அநுராதபுர நகரிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பிராமணக் குழுக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. அவர்கள் இந்து சமயத்தவர்களாவர். சொத்தி சாலா என்று அக்காலத்தில் குறிப்பிடப்பட்ட விசேட கட்டடம் ஒன்றைப் பற்றி மகாவம் சத்தில் கூறப்பட்டுள்ளது.
பிராமணர்கள் சமய நடவடிக்கைகளை மேற் கொண்ட இடங்கள் அப்படிக் குறிப்பிடப்பட் டுள்ளதாக மகாவம்ச டீகாவில் கூறப்பட்டுள்ளது. அதே போன்று சீவசு சாலா எனும் சொல்லை. விவரிக்கும் அந்நூல் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ள இடம் எனக் குறிப்பிட்டுள்ளது. சிவபெருமானுக்கு பூசைகள் நடத்துவது இந்து மக்களிடையே பரவலாகக் காணப்படும் வழக்கம் ஒன்றாகும்.
தென்னிந்தியா இலங்கைக்கு அருகே அமைந் திருந்தமையும் இரு நாடுகளுக்கிடையேயும் விரிவான முறையில் தொடர்புகள் இடம்பெற்ற மையாலும் இந்து சமயக் கருத்துக்கள் இந்நாட்டில் பரவின. வர்த்தகத்திற்காக இந்நாட்டிற்கு வந்த தமிழ் வியாபாரிகள் பற்றிக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் அவர்கள் "தமெட" எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அது திராவிடர்களைக் குறிக்க சிங்கள பிராகிருத மொழியில் எழுதப்பட்ட முறையாகும். கி.பி. 7ஆம் நூற்றாண்டளவில் இந்நாட்டின் பிரதான துறைமுகங்களை அண்டி குறிப்பிடத்தக்க அளவுக்கு தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளார்கள். மா தோட்டை துறைமுகத்திற்கு அருகில் அமைந் துள்ள திருக்கேதீஸ்வரம் இந்துக் கோவில், திருகோணமலையில் அமைந்துள்ள புராதன கோகண்ண தித்தவுக்கு (துறைமுகம்) அருகில் கட்டப்பட்டுள்ள திருக்கோணேஸ்வரம் கோவில் என்பன அக்காலத்தில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்களின் வழிபாட்டிடங்களாகும்.
சிலுவை அடையாளத்துடன் கூடிய புராதன கற்றூண் ஒன்று அநுராதபுரத்தில் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. அச்சிலுவை கத்தோலிக்க சமயப் பிரிவுகளில் ஒன்றான நெஸ்டோரியர்களுக்கு உரியதாகும். பிற்காலத்தில் பாரசீகத்தை மையமாகக் கொண்டு பரவிய நெஸ்டோரிய சமயப் பிரிவினர் வியாபாரத்தின் பொருட்டு இலங்கைக்கு வந்துள் ளனர். கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேச சஞ்சாரி கொஸ்மொஸ் இண்டிகொப்லேடஸ், அநுராத புரத்தில் வாழ்ந்த பாரசீக வியா பாரிகள் பற்றிக் கூறியுள்ளார். அநுராதபுரத்தில் கண்டுப்பிடிக்கப் பட்டுள்ள நெஸ்டோரியர்களின் சிலுவை அவ்வர்த்தகர்களின் வழிபாட்டிற்குரிய கத்தோலிக்க சமயத்தை வெளிக்காட்டும் ஒரு குறியீடாகும். இச்சிலுவை உள்ள ஈற்றூண் கி.பி. 8 ஆம் அல்லது 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
கி.பி.9ஆம் நூற்றாண்டின் பின்னர் இஸ்லாமிய சமயக் கருத்துக்களும் நிலவியது என்பதற்கான இலங்கையில் சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இன்று கண்டறியப்பட்டுள்ள புராதன அரபு பூகோள வியல் நூலான கிதாப் அல் மஸ்விக் வல் மமாலிக் கில் இலங்கை செரண்டிப் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அராபியர் இலங்கையை செரண்டிப் எனக் குறிப்பிட்டனர். இந்நூல் எழுதப்பட்டது கி.பி.845 இல் அல்லது அதற்கு அண்மைய காலத்திலாகும். அராபியர்கள் இலங்கையுடன் புராதன காலத்தில் இருந்தே நல்லுறவைக் கொண்டிருந்தனர். அது வர்த்தகத் தொடர்புகளைவிட மேலான ஒன்றாகும். முகம்மது நபி அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அவருடைய சமயத்தைப் பற்றி ஐயந்திரிபற அறிந்து கொண்டு வருவதற்காக சொண்டிப்பில் இருந்து ஒரு குழுவினர் அரேபியாவுக்கு வந்ததாக இபன் சஹ்ரியர் என்பவரால் கி.பி. 953 இல் எழுதப்பட்ட அஜாயிப் அல் ஹிந்த் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தாத் நகரத்தை மையமாகக் கொண்ட அப்பாஸியர்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியரின் வர்த்தக ஆதிக்கம் கி.பி. 751 - 1258 ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் ஆசியா எங்கும் பரந்து நிலைத்து நின்றது. சர்வதேச வியாபாரத்தை சிறப்பாக மேற்கொள்வதற்காக இலங்கையின் ஆட்சியாளர்கள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கி.பி. 9 ஆம் நூற்றாண் டில் வாழ்ந்த அவ் - பலசூரி எனும் அராபிய வரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி
அறிவைப் பெற்றுக் கொள்வதற்கும் அதைப் பரப்புவதற்குமான அமைப்புகள் புராதன காலத்தில் இருந்தே எமது நாட்டில் இருந்து வந்துள்ளன. ஆரம்ப காலத்தில் ஒரு பரம்பரை யிலிருந்து அடுத்த பரம்பரைக்கு அறிவு பரிமாற்றப்பட்டது பயிற்சிகளின் மூலமும் கேள்வி ஞானத்தின் மூலமுமாகும். இற்றைக்கு 4400 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் களி மண் ஓடங்களாலான மயானங்களும் அவற்றினுள் அஸ்தி வைக்கப்பட்ட மட்பாண்டங்களும் அவை வைக்கப்பட்டிருந்த விதமும் அவை ஒரே மாதிரி உருவாக்கப்பட்டிருந்த தன்மையும் பற்றி அவதானிக்கையில் அவற்றை உருவாக்குவதற்கு வேண்டிய தொழினுட்பம் பற்றிய அறிவை முறையாகப் பெற்றிருந்தமையை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
எமது கல்வெட்டுக்களில் ஆசார்ய நாட்டுப் புராதன எனும் சொல்லால் குறிப்பிடப்பட்டிருப்போர் ஆசிரியர்களாவர். அவ்வாசிரியர்களால் கற்பிக்கப்பட்ட விட யங்களைக் கொண்டே அவர்கள் குறிப்பிடப் பட்டனர். சிலர் துணு ஆசார்ய என்றும் சிலர் ஹதி ஆசார்ய என்றும் சிலர் அச அசார்ய என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் அம்பு எய்தும் கலை, யானைகள் அடக்கியாளும் கலை என்பவற்றை கற்பித்த ஆசிரியர்களாவர்.
புத்த சமயம் இந்நாட்டில் வேரூன்றிய காலத்தில் இந்நாட்டின் கல்வியின் மத்திய நிலையங்களாக விகாரைகளே செயற்படத் தொடங்கின. பௌத்த குருமார்கள் சிங்களம், பாளி, சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளில் மட்டுமன்றி புத்த தர்மம் தொடர்பான ஆழ்ந்த அறிவையும் கொண்டிருந்தனர். புராதன காலத்தில் இருந்து இந்நாட்டின் முதற்றர ஆசிரியர்களாகச் செயற்பட்ட வர்கள் அவர்களேயாவர்.
புராதன காலத்தில் அநுராதபுரத்தில் காணப்பட்ட மஹா விகாரை, அபயகிரி விகாரை என்பன பௌத்த சமய மத்திய நிலையங்களாக மட்டுமன்றி கல்வி நிலையமாகவும் செயற்பட்டன. வெளி நாட்டு பௌத்த குருமார்களும் கல்வி கற்பதற்காக இங்கு வருகை தந்தனர். திரிபிடக நூலுக்கு மேலதிக விளக்கமாக அட்டுவாக் களை எழுதிய புத்தகோச தேரர் அவ்வாறு மகா விகாரையில் கல்விபெற வந்தவராவார்.
கல்வியை வழங்குதல் மூலமும் கல்வியைப் பெற்றுக் கொள்வதன் மூலமும் எங்கள் புராதன சமூகத்தினரிடம் மரியாதை உணர்வு பட்டது. காணப் லோகோபகார நூலில் காணப்படும் கவிதை இதற்கு உதாரணமாகும். அக்கவிதையில், ஒருவர் இளமையாக புத்திசாலியாக, குணத்தில், ஞானத்தில் மேம்பட்டவராயிருந்தாலும் அவன் அல்லது அவளிடம் கலை பற்றி அறிவு இல்லாவிட் டால் வாசமற்ற காட்டுப் பூவிற்கே ஒப்பாவார் என்று கூறப்பட்டுள்ளது.
இலக்கியம்
இராசரட்டை நாகரிகத்தைச் சேர்ந்த இலக்கிய நூல்களை நோக்குகையில் அவை பாளி, சமஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
தீப வம்சம், அபிதானா பிரதீப்பிக்கா, சாராபிரதீப் பதி ஆகிய நூல்கள் பாளி நூல்களுக்கான உதாரணங்களாகும்.
ஜானகிஹரணய, பாலவதபோதன, அனுருத்த, சத்தகய என்பன சமஸ்கிருத நூல்களுக்கான உதாரணங்களாகும்.
சியபஸ்லகர, சசாந்தாவத்த, முவதே உதாவத்த என்பன சிங்கள நூல்களுக்கான உதாரணங்களாகும்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கவிதை ஒன்று கிரிந்த பன்சலையில் உள்ள கற்பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது. அது தாளத்துடன் பாடக்கூடிய ஒரு கவிதையாகும். அது புத்த பெருமானின் குணவியல்புகளைப் பறைசாற்று வதுடன், அவ்வாறான சமயத்தை நாக இளவரசன் ஒருவன் இங்கு வைத்து ஏற்றுக் கொண்டதாகக் கூறுகின்றது.
அநுராதபுரத்தில் எழுதப்பட்ட அறுநூறுக்கு மேற் பட்ட கவிதைகளை இன்றும் சீகிரிய பளிங்குச் சுவரில் காணக்கூடியதாக உள்ளது. அக்கவிதை களின் இரசனை மிகவும் உயர்வானதாகும். அடுத்த கல்விச் சுற்றுலாவில் நீங்கள் சீகிரிக்குச் சென்று அவற்றைப் பார்ப்பது உங்களுக்குப் பயன் மிக்கதாக இருக்கும்.
புராதன காலத்தில் எங்கள் நாட்டில் வாழ்ந்த கவிஞர்கள் புத்த சமய போதனைகளால் பெற்ற உணர்வினாலும் இயற்கையோடு இணைந்து தொடராகச் செயற்படும் பண்பினாலும் ஏற்பட்ட அனுபவத்தையும் அடிப் படையாகக் கொண்டு கவி தைகளைப் படைப்பதில் ஈடுபட்டனர். ஆகையால் உலகின் நிலையாமை இக்கவி தைகளுக்கு பெருமளவிற்கு கருப்பொருளாகக் கையாளப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் அபயகிரி விகாரையின் சுற்றாடலில் கண்டறியப்பட்டுள்ள கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் அவ்வாறான உள்ளத்தைக் கவரும் கவிதை ஒன்று எழுதப்பட்டுள்ளது. அக்கவிதையில் கையாளப்பட்டுள்ள உவமானங்கள் மிகவும் எளி மையான உணர்வு பூர்வமான அழகியல் உணர்வை கேட்போருக்கு ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தவை ஆகும்.
நீண்டகால விவசாய நடவடிக்கைகள், மந்தை வளர்ப்பு என்பவற்றில் ஈடுபட்டிருந்ததன் மூலம் எமது முன்னோர்களுக்கு இயற்கையுடன் இணைத்து வாழ்வதற்கு சந்தர்ப்பம் கிட்டியது. ஆகையால் இயற்கையின் அழகு, நிலையாமை ஆகிய இரண்டையும் பற்றிச் சரளமான ஆழ்ந்த அறிவு அவர்களிடம் காணப்பட்டது. பௌத்த போதனைகளால் அவ்வறிவு மேலும் வளர்ச்சியடைந்ததன் மூலம் உதார குணத்துடனான இரசனை புராதன சமூகத்தில் வளர்ச்சியுற்றிருந்தது.
இனங்களுக்கிடையிலான ஒற்றுமை
முற்காலத்தில் இருந்தே எமது நகரங்களில் பல்வேறு கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்நாட்டில் வாழ்ந்து வந்தவர்களைத் தவிர வியாபாரத்தின் பொருட்டு வந்த ஏனைய சமய, சுலாசாரங்களைக் கொண்ட மக்களும் நகரங்களில் வாழ்ந்ததாகக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களுள் தென்னிந்தியாவில் இருந்து வந்த தமிழர்களும் கிரேக்கம், மெஸிடோனியா ஆகிய பிரதேசங்களிலிருந்து வந்த அயோனியன்களும் ஆப்கானிஸ்தான் பகுதியில் இருந்து வந்த காம்போஜர்களும் மலாக்கா குடா நாட்டிலிருந்து வந்த ஜாவகர்களும் காணப்பட்டனர்.
அங்கு இனங்களிடையே எவ்வாறான பன் முகத்தன்மை காணப்பட்ட போதிலும் எச் சந்தர்ப்பத்திலும் அவர்கள் தமக்கிடையே குழப்பங் களை ஏற்படுத்திக்கொள்ள முயன்றதில்லை. பௌத்த சமய குருவாக இருந்த தமிழர் ஒருவரைப் பற்றி அநுராபுர, அபயகிரி விகாரையிலிருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட கல்வெட்டு கூறப்பட்டுள்ளது. அக்கல்வெட்டு கி.மு. 250ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டதாகும்.
அந்நிய இனத்தவரை சந்தேகக்கண்கொண்டு பார்ப்பதற்கு புராதன கால மக்கள் பழக்கப்பட்டி ருக்கவில்லை. அதற்குப் பதிலாக அவர்களுடன் நல்லுறவுடன் செயற்பட்டனர். தமிழர் ஒருவ ருடன் திருமணமாகி இருந்த சிங்களப் பெண் ஒருவர் பற்றி அம்பாறையிலிருந்து கண்டுப் பிடிக்கப்பட்ட புராதன கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது. புராதன காலத்தில் தமிழ்க் குடும்பங்கள் சிவ வாழ்ந்து வந்த வீதி ஒன்று அநுராதபுரத்தில் தொல்பொருளியலாளர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தை அண்டிய பிரதேசங்களில் இருந்துவந்த பல்றுே நாட்டு வணிகர்களும் இலங்கையின் புராதன நகரங்களில் வாழ்ந் துள்ளனர். அவர்களுள் பெரும்பாலானோர் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்களாவர். கி.பி. 9 ஆம் நூற்றாண்டாகும்போது இந்நாட்டு அரச ஒன்றில் சபையில் தமிழ் அதிகாரி என்று குறிப்பிடப்பட்ட விசேட பதவி ஒன்று இருந்துள்ளது. அவருடைய பொறுப்பாக இருந்தது அநுராதபுரத்திலும் அதன் சுற்றுப் புறங்களிலும் வாழ்ந்த தமிழர்களின் சுக நலன்களைப் பேணுவதாகும். கொழும்பு அருங்காட்சியகத்தில் உள்ள 4 ஆம் காசியப்ப மன்னனின் கல்வெட்டில் தமிழ் அதிகாரி ஒருவர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. வணிகர்கள் அல்லாமல் இத்தமிழ் மக்களில் அதிகமானோர் படையினராகப் பணி புரிந்துள்ளனர். இவ்வாறான 43) தென்னிந்தியப் படையின் உதவியைப் அரசர்கள் இளநாக (கி.பி. 33 (கி.பி.231 240) என்போராவர். கேரளாவில் இருந்து வந்த அவர்களால் பெற்ற ளால் ஆனபடை அஹம்படிச் சேனைஎனப்பட்டது. முதலாம் விஜயபாகு மன்னன் தலதா மாளிகையின் பாதுகாப்பை வேளைக்காரப் படையிடம் ஒப்படைத்ததாக வம்சக் கதைகளில் கூறப்பட்டுள்ளன. இவர்கள் கேரளாவில் இருந்து வந்த அஹம்படிச் சேனையினராவர்.
கி.பி. 11,12 ஆம் நூற்றாண்டுகளில் இந்நாட்டின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வந்திருந்த பல் வேறு நாட்டு வியாபாரிகளுள் பெரும்பாலானோர் தென்னிந்தியராவர். அவர்களிடமிருந்த உலோக முத்திரை ஒன்று அம்பாந்தோட்டையில் கண்டறியப்பட்டுள்ளது. நானாதேசி சொந்தமான தீர்வை நிலையம் என்று குறிப்பிடப்பட்ட அவ்வர்த்தகர்களுக்குச் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று பற்றிக் எழுதப்பட்டுள்ள கல்வெட்டு அநுராதபுரத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அரசியின் ஒன்று சமாதானமான முறையில் தங்களது பணிகளைச் செய்து கொண்டு சென்றதாகவும் அவர்களுடைய பாதுகாப்புக்கும் நலன்புரி விடயங்களுக்கும் அக்கால ஆட்சியாளர்களின் பூரண ஒத்துழைப்பும் உதவியும் கிடைக்கப் பெற்றதாகவும் வரலாற்று அறிக்கைகள் மூலம் தெரிய வருகின்றது.
தமிழர்களுடன் மட்டுமல்லாது இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் அராபியர்களுடனும் அந்நியோன்னியமாக செயற்படுவதற்கு மக்கள் பழகியிருந்தனர்.அனைத்து மக்களும் ஒற்றுமையாக வழிபடும் இடமாக சிவனொளிபாதமலை விளங்குகின்றது. புத்த பெருமானின் காலடி பட்டதனால் பௌத்தர்கள் இதனை ஸ்ரீபாத என்றும் சிவபெருமானின் பாதம் பட்டதனால் இதனை சிவனொளிபாத மலை என்றும் அழைப்பர். இஸ்லாமியர்களாலும் இது ஆதாமின் மலை என அழைக்கப்படுகின்றது. கி.பி. 9 நூற்றாண்டில் இருந்தே சிவனொளிபாத மலை இஸ்லாமிய பக்தர்களினது புனித பயணத்திற்குரிய இடமானது ஆதாமின் மலை என்ற விசுவாசத் தினாலாகும். கி.பி.850 ஆம் ஆண்டில் நாடுகாண் பயணியும் வர்த்தகருமான சுலைமான் என்பவர் சிவனொளிபாத மலையைத் தரிசிக்க வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு வந்த எவருக்கா வது இந்நாட்டு மக்களால் அல்லது அரசர்களால் எந்தவொரு இடையூறும் ஏற்படவில்லை.
புராதன காலத்தில் வாழ்ந்த இந்நாட்டு ஆட்சியாளர்களும் பொதுமக்களும் எந்நேரமும் சிந்தித்தது நாட்டின் முன்னேற்றத்திற்காக சகலருடனும் சகவாழ்வை மேற்கொள்வது எவ்வாறு என்பதைப் பற்றியேயாகும். நாட்டின் ஐக்கியத்திற்கும் பௌத்த சமயத்தின் நிலைப்புக்கும் கும் சவால் ஏற்படாத எச்சந்தர்ப்பத்திலும் அவ்வா பாதுகாப்புக் றான சகவாழ்வு நன்கு பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்நிய இனத்தவர், மதத்தவர்களைப் பொறுத்துக் கொள்வதற்கு இந்நாட்டில் வாழ்ந்த சிங்கள பௌத்த மக்கள் எந்நேரமும் செயற்பட்ட விதம் எக்காலத்திற்கும் எடுத்துக்காட்டாக இருப்பதை நாம் எந்நேரமும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
நன்றி
0 Comments