சகாதேவன்
சகாதேவன் எனும் கதாபாத்திரம் பாரத இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும் பாண்டு மற்றும் அவரது இரண்டாவது மனைவி மாதுரி ஆகிய தம்பதியின் மகன் ஆகும். சகாதேவன் பஞ்ச பாண்டவர்களில் இளைவராக காணப்படுகின்றார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக மாதுரிக்கு பிறந்தவர்.இவரும் நகுலனும் இரட்டையர்களாக பிறந்தனர்.
மேலும் சகாதேவன் பாண்டவர்களுள் புத்திக்கூர்மை மிக்கவராகவும் காணப்பட்டார். தன்னுடைய சகோதரனான நகுலனை போல இவனும் வாள் வீச்சில் சிறந்து விளங்கினான். இவன் தனது தந்தையின் ஆசையின் படி அவரது உடலின் ஒரு பகுதியை உண்டதன் மூலம் முக்காலத்தையும் அறியும் திறன் மிக்கவனாகினான். பின் கிருஷ்ணனின் சொல்படி தான் அறியும் விஷயங்களை யாரிடமும் கூடாது மௌனம் காத்தான்.
இவன் மகத நாட்டு மன்னன் ஜராசந்தனின் மகளை திருமணம் செய்து கொண்டார். இவனுக்கு திரௌபதி என்ற மனைவியும் உண்டு. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். சகாதேவனுக்கு திரௌபதி மூலம் சுருதகர்மா என்ற மகனும் இருந்தது.
பாண்டவர்களின் தலைமறைவு வாழ்க்கையின் போது சகாதேவன் தந்திரிபாலன் என்ற மாற்றுப் பெயர் கொண்டு விராட மன்னனின் 100 000 பசுக்களை மேற்பார்வை செய்பவராக மாறுவேடம் பூண்டு ஓராண்டு காலம் வாழ்ந்தார். குருசேத்திர போரின் போது சகுனியை வதம் செய்தவரும் இவர்தான்.
நன்றி
0 Comments