நகுலன் - NAKULAN


நகுலன்


நகுலன் - NAKULAN


நகுலன் எனும் கதாபாத்திரம் பாரத இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும் பாண்டு மற்றும் அவரது இரண்டாவது மனைவி மாதுரி ஆகிய தம்பதியின் மகன் ஆகும். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக மாதுரிக்கு பிறந்தவர். இவரும் சகாதேவனும் இரட்டையர்களாக பிறந்தனர். தன்னுடைய சகோதரனான சகாதேவனைப் போல இவனும் வாள் வீச்சில் சிறந்து விளங்கினான். இவன் குதிரை ஓட்டுவதில் வல்லவன்.

நகுலனுக்கு திரௌபதி மூலம் சதாநீகன் என்ற மகனும் இருந்தது.
பாண்டவர்களின் தலைமறைவு வாழ்க்கையின் போது நகுலன் கிரந்திகன் என்ற மாற்றுப் பெயர் கொண்டு விராட மன்னனின் போர்க்குதிரைகளை மேற்பார்வை செய்பவராக மாறுவேடம் பூண்டு ஓராண்டு காலம் வாழ்ந்தார். நகுலன் மிகவும் அழகானவராகவும் குதிரைகளின் மொழி அறிந்தவராகவும் கூறப்பட்டுள்ளார். குதிரைகளின் மொழியை பரிபாஷை என்றும் கூறுவர்.

நன்றி  

Post a Comment

0 Comments