இத்தாலி ஐக்கியம் - UNITY OF ITALY

 

இத்தாலி ஐக்கியம் - 1870


இத்தாலி ஐக்கியம் - UNITY OF ITALY


இத்தாலி ஐக்கியம் என்பது ஆதியில் உரோம பேரரசை நிறுவி 300 ஆண்டு காலம் மத்திய தரைக்கடல் பிரதேசத்தின் மையமாக விளங்கி. இடைக்காலத்தில் ஒஸ்தீரியா பிரான்ஸ் என்ற பலம் பொருந்திய அரசுகளின் ஆதிக்கத்தால் சிறு சிறு அரசுகளாக துண்டாடப்பட்டு தாழ்வுற்றுக் கிடந்த இத்தாலி மீண்டும் ஒரு பலம் பொருந்திய தேசமாக உருவனமையே இத்தாலி ஐக்கியம் என சுருக்கமாக கூறலாம்.

இந்த சிறப்பான நாட்டை ஓரளவு ஒன்றுபடுத்தி ஆண்டு. அங்கு தேசிய இயக்கம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தவர் நெப்போலியன் ஆவார். இத்தாலியை நான்கு பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியை பிரான்சுடன் சேர்த்து தனது நெப்போலியன் நேரடி நிர்வாகத்தின் கீழ் வைத்துக் கொண்டு மற்றப் பகுதிகளை இத்தாலிய அரசு, நேப்பிள்ஸ் அரசு, சிசிலி அரசு என பெயரிட்டு தனது கையாட்களைக் கொண்டு ஆண்டு வந்தார். இவ்வாறு பழைய சர்வாதிகார அரசர்களை ஒழித்து புதிய நிர்வாக அமைப்புகளும், சட்டங்களும், சீர்திருத்தங்களும் இத்தாலியில் புகுத்தப்பட்டன. இத்தாலிய தேசிய உணர்வை இவை அனைத்தும் தூண்டிவிட்டன. ஆனால் வியன்னா மாநாடு இத்தாலியை மறுபடியும் துண்டாடி பழைய சர்வாதிகார அரசர்களிடமே ஒப்படைத்தது.


1815 ல் இத்தாலியின் நிலைமை


வியன்னா மாநாட்டு திட்டத்தின் படி இத்தாலியின் வடக்கேயிருந்த வெனிஷியாவும், லம்பார்டியும் ஆஸ்திரியாவுக்கு கொடுக்கப்பட்டன. அதற்கு தெற்கே இருந்த டஸ்கனி, பார்மா, மொடினா, லூகா என்ற நான்கு அரசுகளும் ஆஸ்திரிய ஹப்ஸ்பர்க் வம்சத்தை சேர்ந்தவர்களால் ஆளப்பட்டு வந்தன. இவ்வாறு வட இத்தாலி முழுவதும் மெட்டர்னிக்கின் இரும்பு பிடியில் சிக்கியிருந்தது. தெற்கே மத்திய இத்தாலியில் இருந்தது போப்பின் அரசு அதில் மார்ச்சஸ் அம்பிரியா ரோமக்னா ஆகிய மூன்று மாநிலங்கள் இருந்தன. இம்மூன்றையும் போப்பாண்டவர் ஆட்சி புரிந்து வந்தார். தெற்கு இத்தாலியில் நேப்பிள்கம், சிசிலியும் சேர்த்து பூர்போன் மன்னர் முதலாம் பெர்டினண்டு என்பவரால் ஆளப்பட்டு வந்தன. இது இரட்டை சிசிலி அரசு என்றும் அழைக்கப்பட்டது. சார்மனியா தீவும். ஜெனோவா, பீட்மண்ட், நீஸ், சவோய் ஆகியவையும் ஒன்று சேர்த்து சவோய் வம்சத்து முதலாம் விக்டர் இம்மானுவேல் என்ற மன்னரால் ஆளப்பட்டு வந்தன. இது சார்டீனியா அரசு எனப்பட்டது. இந்த அரசின் தலைநகரம் வடமேற்கே பீட்மண்டில் இருந்த நீரின் என்பதாகும். இந்த ஒரு அரச வம்சம் தான் இத்தாலியில் தோன்றி இத்தாலிய மொழியை பேசியது. எனவே இத்தாலிய ஐக்கியத்துக்கு பாடுபட்டு, பின்னர் ஐக்கிய இத்தாலியோடு இணைந்தது இது மட்டும் தான்.

இவ்வாறு இத்தாலியில் இருந்த எட்டு அரசுகளில் சார்டீனியா அரசு மட்டுமே ஆஸ்திரியாவுக்கு எவ்விதத்திலும் அடிமைப்படாமல் சுதந்திரமாக இருந்தது எனலாம். போப்பின் அரசு உட்பட மற்ற ஏழு அரசுகளுமே ஆஸ்திரியாவின் படைவலிமையை நம்பியும் அதன் ஆதிக்கத்துக்குப் பெரிதும் கட்டுப்பட்டும் இருந்தன. நெப்போலியன் காலத்தில் இத்தாலி ஓரளவு பெற்றிருந்த ஐக்கியமானது முற்றிலும் அளிக்கப்பட்டது மட்டுமின்றி அவரது காலத்தில் புகுத்தப்பட்ட திறமையான நிர்வாக அமைப்பு. முற்போக்கான சட்டத்திட்டங்கள் போன்றவை இத்தாலிய மக்கள் பெற்றிருந்த உரிமைகள் அனைத்தும் 1815-க்குப் பின் ஒழித்துக் கட்டப்பட்டன. எல்லா அரசுகளிலும் சர்வாதிகார ஆட்சியே நடைபெற்றது. பத்திரிகைத் தணிக்கையும், அடக்குமுறை சட்டங்களும் எங்கும் நிலவின. இந்நிலையில் ஆஸ்திரியாவின் ஆதிக்கத்தை இத்தாலியிலிருந்து அகற்றினால் தான் நாடு ஐக்கியம் அடையும் என்பதை தேசியவாதிகள் உணர ஆரம்பித்தனர். கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் என்ற முறையில் மிகுந்த செல்வாக்கோடும், பிற்போக்கு சக்திகளின் தூணாகவும் விளங்கிய போப்பாண்டவரும் இத்தாலிய ஐக்கியத்துக்கு ஒரு பெரும் பகை என்பதையும் அவர்கள் உணர்ந்தனர்.


இத்தாலிய ஐக்கியத்திற்கு முன்னர் காணப்பட்ட இத்தாலிய அரசுகள்


01. பீட்மன்ட் - சார்டீனியா அரசு - இத்தாலி ஐக்கியத்துக்கு தலைமை தாங்கிய அரசு

02. லெம்பார்டி வெனிஷியா

03. டஸ்கனி

04. பார்மா

05. மொடினா

06. லூகா

07. போப்பின் அரசு

08. நேப்பிள்ஸ், சிசிலி


இத்தாலிய ஐக்கியத்திற்கு காரணமானவர்கள்


நெப்போலியன்

ஜோசப் மாசினி

கரிபோல்டி

கவுன்ட்கவூர்

விக்டர் இமானுவல் 


இத்தாலி ஐக்கியம் ஏற்படுவதற்கு தடையாக அமைந்த விடயங்கள்


ஒஸ்தீரியா இத்தாலின் வடபகுதியில் செலுத்திய ஆதிக்கம் அல்லது மெட்டர்னிக்கின் ஆதிக்கம்.

இத்தாலி ஐக்கியத்திற்கு தடையாக இருந்த பிரதான காரணியாக நாம் இத்தாலியில் நிலவிய ஒஸ்தீரிய ஆதிக்கத்தை குறிப்பிடலாம் அதாவது வியன்னா மாநாட்டின் பின்னர் நெப்போலியனின் பிடியிலிருந்த இத்தாலியின் வெனிஷியாவும், லம்பார்டியும் ஆஸ்திரியாவுக்கு கொடுக்கப்பட்டன. அதற்கு தெற்கே இருந்த டஸ்கனி, பார்மா, மொடினா, லூகா என்ற நான்கு அரசுகளும் ஆஸ்திரிய ஹப்ஸ்பர்க் வம்சத்தை சேர்ந்தவர்களால் ஆளப்பட்டு வந்தன. இவ்வாறு வட இத்தாலி முழுவதும் ஒஸ்தீரியாவின் இரும்பு பிடியில் சிக்கியிருந்தமையினால் இத்தாலி என்ற பலமிக்க தேசம் உருவாக தடையாக இருந்தது.

இத்தாலி பல சிற்றரசுகளாக பிரிந்து காணப்பட்டமை. 

இத்தாலி 18ம் நூற்றாண்டு காலப்பகுதியில் பீட்மன்ட், சாடினியா, லெம்பார்டி, டஸ்கனி. வெனிஷியா, சிசிலி, போப்பின் பிரிந்திருந்தமையும், அவ்வாறான அரசுகளில் அரசு என பல சிற்றரசுகளாக வெவ்வேறு விதமான அரச வம்சங்களின் ஆட்சியும் காணப்பட்டமையினாலும் இத்தாலி என்ற ஒரு பரந்த தேசத்தை கட்டியெழுப்ப இந்த சிற்றரசுகள் தடையாக காணப்பட்டன.

பிரான்ஸின் செயற்பாடுகள்.

வட இத்தாலி நாடானது எவ்வாறு ஒஸ்தீரியாவின் ஆதிக்கதில் சிக்கியிருந்ததோ அதேபோன்று மத்திய இத்தாலி பிரான்ஸின் ஆதிக்கத்தில் சிக்குண்டு காணப்பட்டது. அதனால் இத்தாலி ஐக்கியமானால் அது தமது நாட்டிற்கு ஆபத்தாகலாம் என்ற காரணத்தால் பிரான்ஸ் நாடு ஒஸ்தீரியாவின் செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்தமையும் இத்தாலி ஐக்கியத்திற்கு தடையான காரணிகளில் ஒன்றாக கருதலாம்.

பாப்பரசரின் செயற்பாடுகள்.

கத்தோலிக்கத்தின் தலைவரான பாப்பரசர் இத்தாலி ஐக்கியமடைந்தால் அது தனது அதிகாரத்தையும், புகழையும் பாதிக்கும் என்ற காரணத்தாலும் மேலும் கத்தோலிக்கத்தின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமையாலாம் என்ற காரணிகளால் இத்தாலியின் ஐக்கியத்திற்கு எதிரான அரசுகளுடன் இணைந்து செயற்பட்டமையும் இத்தாலி ஐக்கியத்திற்கு தடையாக அமைந்தது.

வியன்னா மாநாட்டின் மூலம் இத்தாலி தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள். 

பிரான்ஸின் ஆட்சியாளன் நெப்போலியன் இத்தாலியை கைப்பற்றி அதனை நான்கு அரசுகளாக கொண்டு ஆட்சி புரிந்தான் இது இத்தாலி ஐக்கியத்து முதற்படியாக அமைந்தது. ஆனால் அவனது வீழ்ச்சிக்கு பின் 1815ல் நடைபெற்ற வியன்னா மாநாட்டில் இத்தாலி மெட்டர்னிகால் பல அரசுகளாக பிரிக்கப்பட்டது. அதில் பல அரசுகள் ஓஸ்தீரியாவின் சர்வதிகார பிடியில் சிக்கியமை இத்தாலி ஐக்கியத்திற்கு தடையாக அமைந்தது.

இத்தாலி ஐக்கியம் தொடர்பாக இத்தாலி மக்களின் தேசிய உணர்வுகள் வெளிப்படாமை.

இத்தாலி ஐக்கியத்திற்கு தடையான மற்றுமொரு காரணி இத்தாலிய மக்கள் தேசிய உணர்வுகள் தோன்றாமையாகும். ஒரு நாடு பலமிக்க தேசம் உருவாக வேண்டும் என்ற அந்நாட்டு மக்களின் மனநிலை மற்றும் தேசிய உணர்வுகள் முக்கியமாகு ஆனால் இத்தாலியின் பல அரசுகள் சர்வதிகாரிகளால் ஆட்சி செய்யப்பட்டமையால் இத்தேசிய உணர்வானது எழுச்சியடையாமல் காணப்பட்டது.

இத்தாலிய அரசுகளில் நிலவிய சர்வதிகார ஆட்சிகள்.

இத்தாலியில் காணப்பட்ட அரசுகளான பர்மா, மொடினா, லூகா, போப்பின் அரசு நேப்பிள்ஸ் போன்ற அரசுகளில் சர்வதிகார தன்மையான ஆட்சிமுறை காணப்பட்டதால் அது இத்தாலியின் ஒற்றுமைக்கு எதிரானதாக காணப்பட்டது. இந்த சர்வதிகார அரசுகளை எதிர்த்து இத்தாலியை ஐக்கியமடையச் செய்வது சுவாலானதாக காணப்பட்டது.


இத்தாலி ஐக்கியத்துக்கு காரணமான விடயங்கள்


இத்தாலியில் ஏற்பட்ட நெப்போலியனின் ஆட்சி.

இத்தாலில் ஐக்கியம் உருவாக முதல் முதலில் அடித்தளமிட்டவர் நெப்போலியன் ஆவார். நெப்போலியன் இத்தாலியை நான்கு பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியை பிரான்சுடன் சேர்த்து தனது நேரடி நிர்வாகத்தின் கீழ் வைத்துக் கொண்டு மற்றப் பகுதிகளை இத்தாலிய அரசு, நேப்பிள்ஸ் அரசு, சிசிலி அரசு என பெயரிட்டு தனது கையாட்களைக் கொண்டு ஆண்டு வந்தார். இந்த செயற்பாடு பிற்காலத்தில் இத்தாலியர்கள் ஒற்றுமைப்பட காரணமாகியது,

இத்தாலிய மக்களிடம் உருவான தேசிய உணர்வின் எழுச்சி.

1789 பிரெஞ்சு புரட்சியின் விளைவாகவும், நெப்போலியன் ஆட்சியாலும் இத்தாலியில் உருவான தேசிய இயக்கங்கள் உதாரணம் கார்பெனரி இயக்கம் மற்றும் இத்தாலியில் உருவான தேசிய வீரர்களாலும் இத்தாலிய மக்களிடையே தேசிய உணர்வுகள் அதிகரித்து ஐக்கிய இத்தாலியை உருவாக்கவேண்டும் என்ற எண்ணங்களும் உருவானமையும் இத்தாலி ஐக்கியத்திற்கு ஒரு காரணியாகும்.

இத்தாலியல் ஐக்கியம் தொடர்பாக உருவான கிளர்ச்சிகள்.

இத்தாலியில் 1820ம், 1821ம் ஆண்டுகளில் இத்தாலியில் தோன்றியிருந்த கார்பெனரி தேசிய இயக்கத்தால் பல இத்தாலிய அரசுகளில் கிளர்ச்சிகள் தோன்றின. சான்றாக 1820ல் நேபிள்ஸிலும், 1821ல் பீட்மன்ட், லம்பார்டியிலும் இவ்வாறான கிளர்ச்சிகள் சர்வதிகார அரசுகளுக்கு எதிராக நடைபெற்றன இவ்வாறு அடிக்கடி உருவான கிளர்ச்சிகளும் இத்தாலிய ஐக்கியத்துக்கு ஒரு சாதகமானகாரணியாகும்.

1830 ல் இத்தாலியில் உருவான புரட்சி.

1820. 1821க்கு பின் மீண்டும் இத்தாலியில் ரொமக்னா, மார்ச்செஸ், மொடினா,பீட்மண்டு ஆகிய அரசுகளில் கொடுங்கோல் மன்னர்களுக்கு எதிராக பார்மா. இத்தாலிய மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இவ்வாறு இத்தாலில் உருவான புரட்சிகளை ஒஸ்தீரிய அரசு தனது படைகளைக் கொண்டு கொடூரமாக அடக்கியது. இதனால் இத்தாலிய மக்கள் தமது ஐக்கியத்தின் அவசியத்தை உணர்ந்து கொண்டனர். இது இத்தாலிய ஐக்கியத்திற்கு வித்திட்ட மற்றுமொரு காரணியாக கருதலாம்

கிரிமியாப் போர் ஏற்பட்டமை.

1854-ல் கிரிமியப் போர் ஏற்பட்ட போது ரஸ்யாவிற்கு எதிராக இங்கிலாந்தையும். பிரான்சையும், துருக்கியையும் ஆதரிக்கும்படி கவூர் மன்னன் இம்மானுவேலுக்கு அறிவுரை கூறினார். ஐரோப்பிய வல்லரசுகளிடையே மதிப்பு ஏற்பட் வேண்டும் என்பதற்கும், ஆஸ்திரிய ஆதிக்கத்தை ஒழிப்பதற்கும் இத்தாலி முயலும்போது இங்கிலாந்தும், பிரான்சும் தேவைப்படுகின்ற உதவியைத் தரும் அளவிற்கு அவர்களின் நல்லெண்ணத்தை பெற வேண்டும் என்ற இரு நோக்கங்களுடன் சார்டீனியா இப்போரில் கலந்து கொண்டது. இந்த போரில் ரஸ்யா தோல்வியுற்றது. இத்தாலிய ஒன்றிப்பு அமைவதற்கான வாய்ப்பினை இப்போர் ஏற்படுத்தியது.

இத்தாலியில் சர்வதிகார அரசுகளை எதிர்க்கும் தேசிய வீரர்கள் தோன்றியமை. 

இன்றை இத்தாலி தேசம் உருவாக பிரதான காரணம் அங்கு உருவான பல தேசிய வீரர்கள் ஆவர். இவர்கள் இத்தாலி ஐக்கியமடைய வேண்டும் என்ற உறுதியான எண்ணத்துடன் செயற்பட்டார்கள் வி அவ்வாறானவர்களுக்கு எடுத்துக்காட்டாக தத்துவஞானி ஜோசப்மாசினி, போர்வீரன் கரிபோல்டிக் மற்றும் இராஜதந்திரி கவுன்ட்கவூர் போன்றவர்களைக் குறிப்பிடலாம் இவ்வாறன வீரர்களின் தந்திரமான செயற்பாடுகள், போராட்டத்திறன் மற்றும் இத்தாலி ஐக்கியத்துக்கான படைப்புகள், மக்களின் தேசிய உணர்வுகளை தூண்டிய செய்பாடுகளாலும் இத்தாலி ஐக்கியமடைந்தது


இத்தாலி ஐக்கியமடைந்த விதம்


மாசினியின் முதற்கட்ட நடவடிக்கைகள்

இத்தாலி ஐக்கியத்திற்கு முதல் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தவர் மாசினி ஆவார். இவர் தனது எழுத்துக்களின் ஊடாகவே இத்தாலி ஐக்கியத்தின் அவசியத்தை இத்தாலி மக்களுக்கு உணர்த்தினார். இத்தாலி ஐக்கியத்துக்காக உருவாக்கப்பட்ட காார்பெனாரி என்ற அமைப்பில் இணைந்த இவர் 1831 ல் இத்தாலி ஐக்கியத்துக்காக புரட்சியில் ஈடுபட்டதால் நாடுகடத்தப்பட்டார். ஆனாலும் மனம் தளராத இவர் 'இளம் இத்தாலியர்' என்ற இத்தாலி ஐக்கியத்துக்கான அமைப்பை உருவாக்கி 1831 தொடக்கம் வரையான காலப்பகுதியில் இத்தாலி ஐக்கியத்துக்காக பல 1848 போராட்டங்களையும் முன்னெடுத்தார். ஆனால் இவரது போராட்டங்கள் பலம் பொருந்திய ஒஸ்தீரிய பேரரசால் முறியடிக்கப்பட்டது. இருப்பினும் இத்தாலி ஐக்கியத்துக்கான ஆரம்பத்தை இவர் அமைத்துக் கொடுத்தார்.

ஆஸ்திரிய - சார்மனியப் போர் 1859 - 1860 

இத்தாலி ஐக்கியத்தை மாசினியை தொடர்ந்து முன்னெடுத்தவர் கவுன்ட்கவூர் ஆவார். இவர் 1852- 1861 காலப்பகுதியில் சார்டினியா அரசின் பிரதம மந்திரியாக காணப்பட்டார். இவர் சார்டினியா அரசின் தலைமையில் இத்தாலி ஐக்கியப்பட வேண்டும் என்ற சிந்தனையை கொண்டிருந்தார். வடஇத்தாலிய அரசுகளினை ஒஸ்தீரிய அரசின் பிடியிலிருந்து மீட்டு இத்தாலியை ஐக்கியமடையச் செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்தார். இதனால் ஒஸ்தீரியா ஆதிக்கத்தை ஒழிக்க பிரான்கடன் நட்புறவு கொண்டார். இவர் 1854ல் நடைபெற்ற கிரிமியப் போரில் பிரான்ஸை ஆதரித்தார். அந்தவகையில் கவூருக்கு பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் நட்பு கிடைத்தது. இவர் இவ்வாய்ப்பை பயன்படுத்தி மூன்றாம் நெப்போலியனோடு உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார். 

நெப்போலியனும் நைஸ். சவாய் ஆகிய இடங்களைத் தமக்கு தருவதாயிருந்தால் ஆஸ்திரியாவிற்கு எதிராக சார்டீனியாவுக்கு உதவுவதாக வாக்களித்தார். லம்பார்டியையும், வெனிஷியாவையும் சார்டீனியா கைப்பற்ற வேண்டும் என்று ஏற்பாடாயிற்று. பிரெஞ்சு உதவி கிடைக்கும் எனக் கருதி கவூர் ஆஸ்திரியாவை வலுச்சண்டைக்கு இழுத்தார்.

மேலும் கவூர் சார்மனியப் படையை பெருக்கினார். சார்மனியாவின் வலிமை ஓங்குவதைக் கண்டு ஆஸ்திரியா கலகமுற்றது. தனது படைவீரர்களின் எண்ணிக்கையை சார்டீனிய குறைக்காவிடில் அதன்மீது போர் தொடுக்கும் என ஆஸ்திரியா அச்சுறுத்தியது. கவூர் ஆஸ்திரியாவின் அறைகூவலை ஏற்றுக் கொள்ளாததின் விளைவாக ஆஸ்திரிய சார்டீனியா போர் 1859-ல் ஏற்பட்டது. சார்மனியாவின் உதவிக்கு பிரெஞ்சு படை ஒன்றை மூன்றாம் நெப்போலியன் நடத்தி சென்றார். ஆஸ்திரியப் படை மகென்டா, சால்பரீனோ ஆகிய போர்களில் தோற்கடிக்கப்பட்டது.

ஒன்றிணைந்த இத்தாலியின் வலிமை ஓங்குவதைக் கண்ட மூன்றாம் நெப்போலியன் தம் படைகளை திரும்ப பெற்றுக் கொண்டார். இவர் விலாபிரபாங்கா என்னும் இடத்தில் 1859 ல் ஆஸ்திரியாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தம் படி (1859) ஆஸ்திரியா வெனிஷியாவை தன்னிடம் வைத்துக் கொண்டு லெம்பார்டியின் பெரும் பகுதியை சார்டீனியாவுக்கு கொடுத்தது. மூன்றாம் நெப்போலியன் சார்டீனியாவுக்கு துரோகம் செய்த போதிலும் இவருக்கு நைகம், சேவாயும் கிடைத்தன.ஆனால் இப்போர் இத்தாலிக்கு நன்மையாகவே முடிந்தது. ஏனெனில் கவுன்கவூர் வடஇத்தாலியின் டஸ்கனே, பார்மா, மொடீனா, ரோமாக்னா ஆகிய பகுதிகள் தங்களது பழைய ஆட்சியாளர்களை துரத்தி விட்டு சார்டீனியாவுடன் இணைந்து கொண்டார்.

சிசிலி கைப்பற்றப்படுதல்

வடஇத்தாலியில் கவூர் இத்தாலி ஐக்கியத்துக்கு செயலாற்ற அதேகாலப்பகுதியில் தென்இத்தாலியின் ஐக்கியத்துக்கு கரிபால்டிக் செயலாற்றினார். இத்தாலியின் பீட்மன் நீஸ் என்ற இடத்தில் பிறந்த சிறந்த போர் வீரனே கரிபால்டி ஆரம்பகாலத்தில் இத்தாலி ஐக்கியத்தை முன்னெடுத்து புரட்சி நடவடிக்கையில் ஈடுபட்டதால் இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இதனால் நாட்டை விட்டு தப்பிச் சென்று பின்னர் மீண்டும் 1848ல் இத்தாலிக்கு வந்து செஞ்சட்டைப் படை என்ற படையை உருவாக்கி அப்படையின் உதவியுடன் தென் இத்தாலி அரசுகளை போரிட்டு ஐக்கியடையச் செய்தார்.

சிசிலி அரசை நேப்பிள்சிலிருந்து ஆண்டு வந்த பிரான்ஸின் அந்தவகையில் இரட்டை அரச வம்சமான பூர்ரபேன் வம்சத்து இரண்டாம் பிரான்சிஸ் மன்னரை எதிர்த்து சிசிலி தீவில் மக்கள் கிளர்ச்சி செய்தனர், அவர்கள் உதவிக்கு கரிபால்டியை அழைத்தனர். 1860-ம் ஆண்டு மே மாதத்தில் தனது ஆயிரம் செஞ்சட்டை வீரர்களுடன் கரிபால்டி ஜெனோவாலிருந்து புறப்பட்டு சிசிலியில் பைத்தியக்கார செயல் மார்சாலாவில் இறங்கினார். இது ஒரு என்றும் படுதோல்வியிலேயே இது முடியும் என்றும் அரசியல்வாதிகள் நம்பினர். ஆனால் சிசிலி இளைஞர்கள் 20,000 பேர்கள் கரிபால்டிக்காகவே காத்திருந்தனர். இப்பெரும் படையுடன் மூன்றே மாதத்தில் சிசிலி முழுவதையும் கரிபால்டி கைப்பற்றினார். தமது மன்னரை மக்கள் எவ்வளவு தூரம் வெறுத்தனர் என்பதை இது நன்கு புலப்படுத்திற்று.

நேப்பிள்ஸ் கைப்பற்றப்படுதல்

கரிபோல்டிக்கின் படை தென் இத்தாலியில் கரையிறங்கி நேப்பிள்ஸ் நகரை நோக்கி முன்னேறினர். பூர்போன் மன்னர் நாட்டை விட்டு ஓடவே, நேப்பிள்ஸ் மக்கள் ஆரவாரித்து வாழ்த்துக் கூற கரிபால்டியின் செஞ்சட்டை படை ஆற்றுக்கு அருகில் நுழைந்தது. அடுத்தபடியாக போப்பின் அரசையும் தாக்க எண்ணினார் கரிபால்டி ஆனால் ரோம் நகரில் பிரெஞ்சுபடை ஒன்றும், அன்னிய படைகளும் இருந்ததால் கவூர் ரகசிய திட்டம் தீட்டினார். இதனால் மூன்றாம் நெப்போலியனுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு ரோம் நகரில் தன்னுடைய படையுடன் நுழைந்தார். ரோம் நகரை விட்டு விட்டு மற்ற எல்லா பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டார்.

சிசிலி நேப்பிள்ஸ் போப் பகுதிகள் இணைத்தல் - 1860

சிசிலியை ஆண்டு வந்த இரண்டாம் பிரான்சிஸ் மன்னரை எதிர்த்து கரிபால்டி கைப்பற்றிய நேப்பிள்ஸ் பகுதிகளை இரண்டாம் இம்மானுவேலிடம் ஒப்படைத்தார். அதோடு போப்பின் படைகளை தோற்கடிக்க விக்டர் இம்மானுவேல் தாமே ஒரு படைக்கு தலைமை தாங்கி போப்பின் படைகளை காஸ்டல் பிடார்டோவில் தோற்கடிக்கப்பட்டன. இவரது வருகையில் போப்பாண்டவரது பகுதி வாழ் மக்களிடையே ஏற்பட்ட ஆரவராத்தால் சார்டீனியாவுடன் இணைய வேண்டும் என்று மக்கள் வாக்கெடுப்பின் மூலம் விருப்பம் தெரிவித்தனர். ரோமை தவிர ஏனைய போப்பின் பகுதிகளை இவர் தமது நாட்டுடன் இணைத்துக் கொண்டார். இவர் கரிபால்டியை தெற்கில் சந்தித்த போது கரிபால்டி தான் கைப்பற்றிக் கொண்ட எல்லா பகுதிகளையும் மன்னரிடம் ஒப்படைத்து விட்டு மன்னரின் தலைமையை ஏற்றுக் கொண்டார். மேலும் இணைக்கப்பட வேண்டிய பகுதி வெனிஷியாவும் ரோமுமே.

வெனிஷியா இணைப்பு - 1866

ஆஸ்திரிய - பிரஷியப் போரில் இரண்டாம் இம்மானுவேல் பிரஷியாவிற்கு துணைநின்றார். பிரஷ்யாவின் அமைச்சர் பிஸ்மார்க், வெனிஷியாவை இத்தாலிக்கு விட்டு தருவதாக ஆஸ்திரியாவை வற்புறுத்துவதாக வாக்களித்தார். ஆஸ்திரிய பிரஷ்யப் போரில் பிரஷ்யா வெற்றி பெற்றது. போர் முடிவில் தமக்கு உதவியமைக்கு பரிசாக பிஸ்மார்க் ஆஸ்திரியாவை வற்புறுத்தி வெனிசியாவை இத்தாலிக்கு வழங்குமாறு செய்தார். இதனால் வெனிஷியாவும் சார்டீனியாவுடன் இணைக்கப்பட்டது.

ரோம் இணைப்பு - 1870

பிரான்சை ஆண்ட மூன்றாம் நெப்போலியனின் ஆதரவைப் பெற்ற போப்பாண்டவரிடம் ரோம் இன்னமும் இருந்து வந்தது. மேலும் ரோமில் பிரெஞ்சு படை ஒன்று போப்பாண்டவருக்கு ஆதரவாக முகாமிட்டிருந்தது. ரோம் தமது அரசின் தலைநகரமாக இருக்க வேண்டும் என்றும் இம்மானுவேல் விரும்பிய போதிலும் பிரான்சுடன் போர் தொடுக்க இவர் விரும்பவில்லை. எனவே சில காலம் வரை டூரினும் பின்னர் புளோரன்சும் இவரது தலைநகரமாய் இருந்தன. பிரான்சுக்கும், பிரஷ்யாவுக்கும் இடையே 1870-ல் போர் மூண்டது. இதனால் ரோமிலிருந்து பிரான்ஸ் தனது படையைத் திரும்பப் பெற்றது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து "அழியா நகர்" (Eternal City) என்ற ரோமிற்குள் இம்மானுவேல் அணிவகுத்து சென்று ரோமை கைப்பற்றினார். பின்னர் ரோம் 1870-ல் இத்தாலியின் தலைநகர் என பேரறிக்கை வெளியிடப்பட்டதுடன் இத்தாலிய இணைவு இறுதிப் பொலிவு பெற்றது. இத்தாலிய இணைவிற்கு விக்டர் இம்மானுவேல் தலைமையில் மசினியின் தொண்டும். கபூரின் இராஜதந்திரமும், கரிபால்டியின் செயல் திறனும் சிறந்த முறையில் செயலாற்றியது என்றால் அது மிகையாகாது.


இத்தாலி ஐக்கியத்திற்கு மாசினி, கவுன்ட்கவூர். கரிபோல்டிக் ஆகியவர்களின் பங்களிப்புகள்


மாசினி 1805-1872 பங்களிப்புகள்


இத்தாலிய மக்கள் மத்தியில் தேசிய உணர்ச்சியை தட்டியெழுப்பிய மிகவும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் மாசினி. மாசினி உடற்கூறு பேராசியராக ஜெனோவாவில் பணியாற்றி வந்தார். இத்தாலிய புரட்சி இயக்கத்திற்கு தூண்டுதலாக இருந்தவர் இவரே. எழுத்தாளர் மட்டுமின்றி புரட்சியாளராகவும் இவர் திகழ்ந்தார். ஜெனோவாவில் ஒரு மருத்துவரின் மகனாகப் பிறந்த மாசினி கார்பொனாரி சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தார். 1830 ம் ஆண்டு புரட்சியில் பங்கெடுத்ததால். கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். 1831 ல் இளம் இத்தாலி என்ற ஒரு புது இயக்கத்தை மார்சேல்ஸ் நகரில் தோற்றுவித்தார். இரண்டே ஆண்டுகளில் இச்சங்கத்தில் 60,000 பேர்கள் ப்பினராக சேர்ந்தனர். இத்தாலியிலிருந்து அன்னிய ஆட்சியாளர்களை விரட்டிவிட்டு, அதை ஒன்றுபடுத்தி ஒரு குடியரசை நிறுவ வேண்டும் என்பது தான் அவரது குறிக்கோள். இளம்

இத்தாலியர் 1832-ல் பீட்மண்டில் ஒரு புரட்சியை துவக்க திட்மிட்டனர். ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டு நசுக்கப்பட்டது. புரட்சி மூலம் தான் இத்தாலியை ஐக்கியப்படுத்த முடியும் என்று எழுதினார் மாசினி. அவரது நூல்களும், கட்டுரைகளும் இத்தாலிய இளைஞர்களின் உள்ளத்தில் பசுமரத்து ஆணிபோல் பதிந்தது. சிந்தனைத் துறையில் இத்தாலிய ஐக்கியத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் மகத்தானது. எனினும் தன்னாட்டு அரசுகளால் விரட்டப்பட்டு அயல்நாடுகளிலேயே வசித்த மாசினியால் மக்களை திரட்டி வெற்றி பெற இயலாமற் போய்விட்டது.


கவுன்ட் கவூரின் பங்களிப்புகள்


1849 - 1860 டூரின் பாராளுமன்றத்தில் உறுப்பினரான கவூர் அடுத்த ஆண்டிலேயே விவசாய,தொழில், வணிக அமைச்சரானார். 1852 நவம்பரில் முதலமைச்சராக மன்னரால் நியமிக்கப்பட்டார். தன் நாட்டில் விவசாய தொழில் புரட்சிகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தார் கவூர். பல் நாடகளோடு வியாபார ஒப்பந்தங்களை செய்துக் கொண்டார். திருச்சபையின் தலையீடுகளை குறைத்து சமயத்தின் பெயரால் அ னுபவித் து வந்த சலுகைகளை அகற்றி மடாலயங்களின் சொத்துக்களைப் பறித்து. ஜெசூட்டுக்களை விரட்டியடித்து அரச அதிகாரத்தை அவர் வலுப்படுத்தினார். 90,000 பேர்களை கொண்ட ஒரு படை திரட்டப்பட்டது, இத்தாலிய ஐக்கியத்தில் தனக்கு உதவுவதற்கு என ஆஸ்திரியர்களையும், போப்பையும் அகற்றி விடுதலையும் ஐக்கியமும் பெற வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்ட தேசிய சங்கம் ஒன்றை நிறுவினார் கவூர். பல இத்தாலியர்களை இது கவர்ந்தது.


கரிபால்டியின் பங்களிப்புகள் 1807 - 1882


பீட்மண்டின் பகுதியாக இருந்த நீஸில் என்ற இடத்தில் பிறந்த ஜோசப் கரிபால்டி மாசினியின் இளம் இத்தாலி இயக்கத்தில் சேர்ந்து அவரது சிறந்த தொண்டர்களில் ஒருவராக இறுதிவரை திகழ்ந்தார். இவரது புரட்சி நடவடிக்கைகளுக்காக 1834 -ல் மரண வழங்கப்பட்டது. தப்பி சென்றார். இவர் தண்டனை இவருக்கு தென் அமெரிக்காவிற்கு இத்தாலியில் 1848-ல் புரட்சி தோன்றிய போது இவர் இத்தாலிக்கு திரும்பி வந்தார். 3000 பேர்கள் கொண்ட செஞ்சட்டை படை ஒன்றை அமைத்து ஆஸ்திரியாவுக்கு எதிராக படையெடுத்த சார்லஸ் ஆல்பர்ட்டுக்கு உதவினார். பின்னர் பிரெஞ்சு படைகளின் முற்றுகைக்கு எதிராக மாசினியின் உரோமபுரி குடியரசை இரண்டு மாதம் காத்து தோல்வியை தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்து படைகளை வீரத்துடன் நடத்தி பின்வாங்கி அமெரிக்காவிற்கு தப்பி ஓடினார். இவர் மீண்டும் 1854-ல் தாயகம் திரும்பினார்.

இறுதியில் தான் பிறந்த நீஸை மூன்றாம் நெப்போலியன் எடுத்துக் கொண்டதால் மனமுடைந்திருந்த வேளையில் சிசிலியிலிருந்து சிசிலி அரசுக்கு எதிரான போரில் தலைமை தாங்க மக்களால் ஒரு அழைப்பு அவருக்கு வந்தது. அங்கு சென்று சிசிலி அரசை மூன்று மாதத்தில் போர் செய்து கைப்பற்றினார். பின்னர் நேபிள்ஸ், போப்பின் அரசு, வெளிஷியவையும் இறுதியில் கொடுத்து ரோமையும் இத்தாலி கைப்பற்றி மக்களுக்கு கொடுத்து இத்தாலி ஐக்கியத்தை ஏற்படுத்திக் பெரும் தலைவராக விளங்கினார்.


நன்றி 


Post a Comment

0 Comments