மூலாதாரங்கள் - SOURCES


இலங்கையின் வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்


மூலாதாரங்கள் - SOURCES



மூலாதாரங்களை வகைப்படுத்தல் 

இலக்கிய மூலாதாரங்கள்

தொல்பொருள் மூலாதாரங்கள்

ஆவணங்கள்

நாணயங்கள்


இலக்கிய மூலாதாரங்கள்


உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள்

வம்சக்கதைகள்

அட்டுவாக்கள்

சமய நூல்கள் 

காவியங்கள்

ஏனைய இலக்கியங்கள்


வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள்

நூல்கள்

தேச சஞ்சார அறிக்கைகள்

நாட்குறிப்பேடுகள்

வரைபடங்கள் 


உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள்


வம்சக் கதைகள்

ஒரு நாட்டின், நபர்களினதோ, பொருட்களினதோ, பரம்பரைக் கதைகளை விவரிக்கும் கிரந்தங்கள் வம்சக் கதைகள் எனப்படுகின்றன. 

வம்சக் கதைகள் இலங்கையின் பழைய இலக்கிய எழுத்து சம்பிரதாயத்தைச் சேர்ந்தவை.

தற்போது எஞ்சியிருக்கும் வம்சக் கதைகள், அவை எழுதப்பட்ட மொழிகளின் மரபுகள் என்பவற்றை அவதானிக்கையில் இருவகைப்படும்.

இலங்கையின் வரலாற்றுக் கதைகளை விரிவாக எழுதிச் செல்லும் மகாவம்சம், இலங்கையின் வரலாற்று மூலாதாரங்களுள் பிரதானமானதாகும். அவை பல்வேறு பகுதிகளைக் கொண்டதாகும்.

சிங்கள வம்சக் கதைகள்.

உதாரணம்: 

பூஜாவலிய

சிங்கள

தூபவம்சம்

சிங்கள போதிவம்சம்

தலதா சிரித

ராஜாவலிய


மகாவம்சத்தின் முதலாம் பாகம்

வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்து மகாசேன னின் ஆட்சி முடியும் வரை: 36 ஆம் அத்தியாயத்தில் 50 ஆவது கவிதைவரை.

திகசந்த செனவியா பிரிவெனாவில் வாழ்ந்த மகாநாம தேரர்.

சூளவம்சத்தின் முதலாம் பாகம்

கி.மு. 302 - 1186 வரை 37 ஆவது அத்தியாயத்தில் 51 ஆவது கவிதையிலிருந்து 79 ஆவது அத்தியாயம் வரை.

தம்பதெனியாவில் வாழ்ந்த தர்மகீர்த்தி தேரர் என்று கருதப்படுகின்றது.

சூளவம்சத்தின் இரண்டாம் பாகம் 

கி.பி. 1186 1357 வரை 80 ஆவது அத்தியாயத்தில் இருந்து 91 அத்தியாயம் வரை.

ஆசிரியர் பற்றி நிச்சய மில்லை

சூளவம்சத்தின் மூன்றாம் பாகம் 

கி.பி.1357 - 1815 வரை 92 ஆவது அத்தியாயத்தில் இருந்து 101 ஆவது அத்தியாயம் வரை.

திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த புத்த ரக்கித தேரர் எனக் கருதப்படுகிறது.

மகாவம்சத்தின் மூன்றாம் பாகம்

1815-1935 வரை 102 ஆவது அத்தியாயத்தில் இருந்து 114 ஆவது அத்தியாயம் வரை.

யகிரல பஞ்ஞானந்த தேரர்

மகாவம்சத்தின் நான்காம் பாகம்

1936 - 1956 வரை 115 ஆவது அத்தியாயத்தில் இருந்து 124 ஆவது அத்தியாயம் வரை.

பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர தலைமையிலான குழுவினரால்

மகாவம்சத்தின் ஐந்தாம் பாகம்

1956 - 1978 வரை 125 ஆவது அத்தியாயத்தில் இருந்து 129 ஆவது அத்தியாயம் வரை

பேல்லன ஸ்ரீ ஞான விமல தேரரின் தலைமையிலான குழுவினரால்.

மகாவம்சத்தின் ஆறாம் பாகம்

1978 - 2010 வரை 130  ஆவது அத்தியாயத்தில்  இருந்து 133 ஆவது அத்தியாயம் வரை.

தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.


அட்டுவாக்கள்

அட்டகதா அல்லது அட்டுவா என்பது திரிபிடக கிரந்தத்திற்கு எழுதப்பட்ட விரிவுரைகளைக் கொண்ட பல நூல்கள்.

அட்டகதாக்கள் முதலில் எழுதப்பட்டது சிங்கள மொழியிலாகும். (சீஹௗட்டகதா)

பின்னர் தேவைக்கேற்ப திருத்தங்களுடன் பாளிக்கு மொழிபெயர்க்கப்பட்டவை. 

கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த புத்த கோஸ தேரரினால் முதலில் சிஹௗட்டகதா, பாளியில் மொழிபெயர்க்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

உதாரணம்: 

சமந்தபாஸாதிகா

சம்மோஹவினோதனி

சாராந்த தீபனி

மனோரதபூரணி

தம்மபால தேரர், உபஸேன தேரர் என்போரும் அட்டுவாக்களை எழுதிய ஆசிரியர்களாவர்.


 சமய நூல்கள்

பனகதா வடிவில் விடயங்களை விளக்குவதற்காக எழுதப்பட்ட நூல்களின் தொகுதி 

உதாரணம்: 

சீஹலவத்து

ரசவாஹினீ

சத்தர்மாலங்காரய


ஏனைய இலக்கியங்கள்

உதாரணம்: 

சரிதைகள்

தூதுகாவியங்கள்

போர்க்காவியங்கள்


தீபவம்சம்

இன்று வரை எஞ்சியிருக்கும் இலங்கையின் புராதன வம்சக்கதை தீபவம்சமாகும். இது பாளி மொழியில் எழுதப்பட்டுள்ளது.

கி.பி. 4-5 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையில் எழுதப்பட்டதாக கருதப்படுகின்றது.

புத்தர் பெருமானின் வாழ்க்கையின் சில சம்பவங்களும் அவரது இலங்கை வருகையும் விவரிக்கப்பட்ட பின்னர் விஜயனிலிருந்து மகாசேன மன்னனின் ஆட்சியின் முடிவு வரை இலங்கையின் ஏகப்பட்ட வரலாற்று விடயங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. தீபவம்சம், மகாவம்சத்தைவிடச் சிறிய நூலாக இருந்தாலும் இதிலுள்ள சில விடயங்கள் மகாவம்சத்தில் காணக்கிடைக்கவில்லை.

தீபவம்சத்தின் உள்ளடக்கத்தின் சாராம்சமாவது:

ஏற்றுக்கொள்ளப்பட்ட அரச பரம்பரை

புத்தரின் சரித்திரத்தில் முக்கியமான சம்பவங்களும், அன்னாரது இலங்கை வருகை 

இலங்கையின் ஆரியர்களின் ஆரம்பக் குடியிருப்புகள் நிறுவப்படல்.

பண்டுகாபயனது கதை

இலங்கைக்கு பௌத்த சமயம் அறிமுகப்படுத்தப்படல். 

மகாசேன மன்னனின் காலம் வரையிலான அரசர்கள் பற்றிய தகவல்கள்.


மகாவம்சம்

மகாவம்சம் இன்றுவரைக்கும் விரிவாக எழுதப்படுகின்ற நூலாகும். அதில் இந்நாட்டின் முழுமையான வரலாறு எழுதப்பட்டுள்ளது. ஆகையால் அது விரிவானதொரு படைப்பாகும். மகாவம்சத்தில் முதலாவது தொகுதி 37 அதிகாரங்களைக் கொண்டுள்ளது. இதன் ஆசிரியர் மகாவிகாரையின் திக்சந்த செனவியா பிரிவொனாவைச் சேர்ந்த மகாநாம தேரர் எனக்கருதப்படுகின்றது.

இது கி.பி. 5 - 6 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. மகாசேனனின் ஆட்சியில் இறுதிக்காலம் வரையிலான இலங்கையின் வரலாற்றைக் கற்பதற்கு மகாவம்சத்தின் முக்கியத்துவம்.

மகாவம்சத்தின் ஆரம்பப் பகுதியை எழுதுகையில் வேறு நூல்களையும், நாட்டார் கதைகளையும் மூலாதாரமாகக் கொண்டுள்ளார்.

உதாரணம்: 

தீபவம்சம்

சிகலட்டகதா

வினய அட்டகதா

உத்தரவிஹார அட்டகதா


மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள  விடயங்கள

அரசியல்

மகாசேன மன்னன் வரையிலான அரசவம்சத்தின் ஆட்சி பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளமை.

அந்நிய ஆக்கிரமிப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்றிய அரசர்களின் விடயங்கள் கூறப்பட்டுள்ளமை.

விவசாய நடவடிக்கைகளுக்குப் பெருந்தொண்டாற்றிய மன்னர்களைப் பற்றிய விடயங்கள்.

புத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்காக மன்னர்கள் புரிந்த தொண்டுகள். 

பொதுமக்களுடைய நலன்களில் ஆட்சியாளர்களின் செயற்பாடுகள்.

சமயம் 

மகாவம்சம் சமயத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.

புத்தர் பெருமானின் இலங்கை வருகையிலிருந்து மகாசேன மன்னனின் இறுதிக்காலம் வரை மகாவிகாரையை மையாகக் கொண்டு சமய வரலாற்றையும் மகாவிகாரைக்கு உதவி புரிந்த ஆட்சியாளர்களையும் அவர்களால் புரியப்பட்ட சேவைகளையும் விவரித்துள்ளது.

மகாவிகாரையின் சாதனைகளைப் பற்றிய அதிக தகவல்கள் இடம் பெற்றுள்ளமையால் மகாவம்சம் மகாகவிகாரையின் வம்சக்கதை என்று ஒரு பகுதியினர் கூறுகின்றனர். 

அபயகிரி, ஜேதவன மற்றும் சமயப்பிரவினர் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

சமூக, கலாசாரம்

இலங்கையில் வாழ்ந்த பல்வேறு சமயப்பிரிவுகள், தொழிற்குழுவினர், வைபவங்கள் உட்பட பல்வேறு விடயங்களை உள்ளடக்கியுள்ளமை.

திருமணத் தொடர்புகள், உணவுபானங்கள். ஆடையணிகள் சம்பந்தப்பட்ட விடயங்களும், உள்ளடங்கும்.

தொழினுட்பம் 

நீர்ப்பாசனம், கட்டடம், சிலைகளை வடித்தல், தாதுகோபங்களைக் கட்டல், பாதை. பாலங்களை நிர்மாணித்தல் போன்ற பல்வேறு விடயங்களில் பயன்படுத்தப்பட்ட தொழினுட்பங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.


மகாவம்சம் குறிப்பிடும் விடயங்கள், ஏனைய மூலாதாரங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தன்மை.

சமயப் பின்னணியைக் கொண்டு மகாவம்சம் எழுதப்பட்டாலும் அதில் அரசியல், சமூக, பொருளாதார, கலாசார விடயங்கள் நிறையவே உள்ளடங்கியுள்ளன.

சமய, கலாசார விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டமை. மகிந்தருடைய வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை. இந்தியாவின் சாஞ்சி தூபியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம் பெறப்பட்ட எழுத்தாவணங்களில் சமயத் தூபியில் சம்பந்தப்பட்ட குருமார்களது பெயர்கள் பலவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை. அத்தோடு அசோக மன்னனின் 2ஆம், 13ஆம் தூண் கல்வெட்டுகளில் தர்மத்தை பிரசாரப்படுத்திய இடங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை.

அதே போன்று மிஹிந்தலையிலும் ரஜகலையிலும் உள்ள கல்வெட்டுகளில், மஹிந்த, இத்திய, உத்திய, வர்த்தசால எனும் குருமாரின் வரலாற்றை உறுதிப்படுத்தியுள்ளமை.

சங்கமித்தை பிக்குணியின் வருகையும் பிக்குணிசாசனம் உருவாக்கப்பட்டமையும், புனித வெள்ளரசு மரம் நடப்பட்டமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளமை. 

வம்சக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்றிடங்கள் தொல்பொருள் அகழ்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை.

உதாரணம்: 

ருவன்வெலிசாய

அபயகிரி

ஜேதவன

மிரிசவெட்டிய

மிஹிந்தலை

இசுறுமுனி

அரசியல், பொருளாதாரத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை.

ன்னர்கள், இளவரசர்கள், பிராந்திய அரசர்கள் பற்றி மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆவணங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை.

உதாரணம்:  

உத்திய மன்னன் - மிஹிந்தலைக் குகைக்கல்வெட்டு .

சத்தாதிஸ்ஸ, லஞ்சதிஸ்ஸ - ரஜகல கல்வெட்டு 

மகாசூலி, மகாநாம, குட்டகண்ணதீஸ்ஸ, மகாதாத்திக - மகாரத்மலே கல்வெட்டு

வசப மன்னரும் அவனுடைய புதல்வர்களும் வல்லிபுரம் பொற்சாசனம், பெரிமியன் குளம், ஹெபெஸ்ஸ. தம்மென்னாகந்த கல்வெட்டுகள்

புத்த பாரிந்த மன்னன் பௌத்தத்தைத் தழுவியது பற்றிய ருவன் வெலிசாய கல்வெட்டு

திரிதர மன்னன் - கதிர்காமக் கல்வெட்டு

குமாரதாச மன்னன் - நாகரிகந்த கல்வெட்டு

4 ம் மஹிந்த மன்னன் - மிஹிந்தலை சுவர்க்கல்வெட்டு 

அமைச்சர்கள் - பரமாகந்த கல்வெட்டு 

பொருளாளர் - மிஹிந்தலைக் கல்வெட்டு

கணக்காளர் - மஹஎலகமுவ கல்வெட்டு

பத்துமாமல்லர்கள் - மஹஎலகலமுவ, சிதுல்பவ்வ, கல்வெட்டுக்கள்

இளவரசர்கள் -ஹெபெஸ்ஸ கல்வெட்டு

பொருளியல் சார்ந்த நடவடிக்கைகள் உறுதிப்படல்.

உதாரணம்: 

வர்த்தகத் தரங்கள் - செஸ்சேறுவ கல்வெட்டு

வர்த்தகர்கள் - செஸ்சேறுவ கல்வெட்டு

வரி வகைகள் - கொடவாய கல்வெட்டு

சந்தைகள், வர்த்தக சட்டத்திட்டங்கள் - ஹோபிடிகம் கல்வெட்டு

மகாதித்த அகழ்வுகளின் போது வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் கிடைக்கப்பெற்றமை.

தொழினுட்ப விடயங்கள் உறுதிப்படுத்தப்படல்

உதாரணம்: 

ருவன்வெலிசாய, லோவாமகாபாய போன்றவை கட்டப்பட்ட விதம் பற்றிய விவரம்.

சமூக விடயங்கள் உறுதிப்படுத்தப்படல்.

சமூகத்தில் காணப்பட்ட பல்வேறு குலத்தவர், மக்கள் குழுவினர், பற்றிய விடயங்கள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளமை.

சமூகத்தில் பல்வேறுப்பட்ட தொழில் பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றமை.

உதாரணம்:  

செப்புக் கொல்லர்கள்

நெசவாளர்கள்

வைத்தியர்கள் 


மூலாதாரம் ஒன்றென்ற முறையில் மகாவம்சத்தின் குறைபாடுகள் 

சமய வரலாற்றிற்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளமையால், அரசியல் விடயங்கள் போதியளவில் இடம்பெறாமை. 

இந்தியாவின் பௌத்த விடயங்களுக்கான வரலாற்றிற்கு முதல் 5 அத்தியாயங்களும் ஒதுக்கப்பட்டுள்ளமை.

ஆசிரியரின் தனிப்பட்ட எண்ணங்கள், விருப்பு வெறுப்புகள் என்பவற்றிற்கமைய சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளமையால் சில இடங்களில் நடுநிலைமை பேணப்பட்டிராமை.

ஆசிரியரின் ஒரு நோக்காக அமைந்தது மகாவம்சத்திற்கு மூலாதாரமான படைப்புகளில் காணப்பட்ட விவரமான விடயங்களை உள்வாங்குதலாகும். அதனால் சில முக்கியமான விடயங்கள் விடுபட்டு போயுள்ளமை.

அநுராதபுரத்திற்கு சமகாலத்தில் காணப்பட்ட பிராந்திய அரசுகள் பற்றிய விடயங்கள் போதியளவில் இடம்பெறாமை.

மஹாவிகாரைக்குச் சார்பாக நடந்துக்கொண்ட தேவனம்பியதிஸ்ஸ. துட்டகைமுனு, குட்டகண்ணதிஸ்ஸ போன்ற மன்னர்களைப் பெரும் விருப்புடன் வர்ணிக்கையில் மகா விகாரையுடன் முரண்பட்ட மகாசேனன் போன்ற மன்னர்களைப் புறக்கணிப்புடன் குறிப்பிட்டுள்ளமை.

துட்டகைமுனுவின் வாழ்வையும், சாதனைகளையும் வர்ணிப்பதற்கு 37 அதிகாரங்களுள் பதினொன்றை ஒதுக்கியிருப்பதோடு, துட்டகைமுனுவின் வரலாற்றை முற்படுத்துவதற்காக காவந்ததிஸ்ஸ போன்ற மன்னர்களின் முக்கியத்துவம் இருட்டடிப்புச் செய்யப் பட்டுள்ளமை

முக்கியத்துவமற்ற செய்திகளும், வர்ணனைகளும் இடம்பெற்றுள்ளன.


வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள்


இலங்கைக்கு வந்த வெளிநாட்டினராலும் இலங்கையைப் பற்றிக் கேட்டறிந்துகொண்ட வெளிநாட்டினராலும் எழுதப்பட்ட நூல்கள், அறிக்கைகள், நாட்குறிப்புகள், படங்கள் என்பவை வெளிநாட்டு மூலாதாரங்களாகும்.

கிரேக்க, உரோம மூலாதாரங்கள்

அரிஸ்டோட்டல் - டீமுண்டோ

மெகஸ்தனிஸ் - இன்டிகா

தொலமி - பூகோள சாஸ்திர பிரவேசம் 

கொஸ்மஸ் இன்டிகோப்லேவூஸ்டஸ் - டெபோ கிராபியா கிறிஸ்டியானா

பிளினி - நெச்சுரலிஸ் ஹிஸ்டோரியா.

அராபிய மூலாதாரங்கள்

சுலைமான்

அபூ செய்யீத் - சில் சிலாத் அல் தவாரிஹ் அல் 

புருனி, மசூதி. புர்தாத்பே ஆகிய எழுத்தாளர்களின் அறிக்கைகள்

சீன மூலாதாரங்கள்

பாஹியன் தேரரின் அறிக்கைகள் - கி.பி. 5ஆம் நூற்றாண்டு

இந்திய மூலாதாரங்கள்

இராமாயணத்தின் இலங்கை காண்படலம்

மகாபாரதம்

ராஜதரங்கணி

திவ்யபிரபந்தம்

சிலப்பதிகாரம்

மணிமேகலை

பத்துப்பாட்டு

பட்டினப்பாலை

ஐரோப்பிய மூலாதாரங்கள்

கிழக்கிந்திய நாடுகளைத் தெரிந்துக்கொள்வதில் ஈடுபட்ட புராதன ஐரோப்பிய பிரயாணிகள், கிறிஸ்தவ சமய குருமார் என்போர் இலங்கை பற்றிய தகவல்களை சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளனர். 

உதாரணம்: 

மார்க்கோ போலோ

ஜோன் டீ மாரி ஞோலி

போர்த்துக்கேய, ஒல்லாந்த, பிரித்தானியர்கள் இலங்கைக்கு வந்த பின்னர் அவர்களால் எழுதப்பட்ட நூல்கள்

உதாரணம் : 

ரிபெய்ரோ - இலங்கை வரலாறு 

குவேரோஸ் - இலங்கை அரசு

பேஸ்தியஸ் - இலங்கையின் பிரதான செய்திகள் 

தகுடோ, வெலன்டைன் போன்ற எழுத்தாளர்கள்

தோம்பு எனும் பதிவேடுகள். 

ரொபட்நொக்ஸ், மேஜர் டேவி, எமர்ஸன் டெனன்ட், ஜோன் டொயிலி.

தென் கிழக்காசிய மூலாதாரங்கள்

ஜின காலமாலி ரதன பஞ்ஞ தேரர், சியம் (தாய்லாலாந்து) யசவன்ஜோ எனும் பரமிய வம்சக்கதைகளில் இலங்கை, இந்திய பௌத்த சாசன வரலாறு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.


தொல்பொருள் மூலாதாரங்கள்


புராதான சமூகத்தின் நாகரிகத்திற்குச் சொந்தமான எஞ்சியிருக்கும் அடையாளங்கள் தொல்பொருள் மூலாதாரங்களுள் உள்ளடங்கும்.

சமய சார்பற்றவை

குளங்கள்

நீர்பாசன நிர்மாணங்கள்

அரண்மனைகள்

பூங்காவனங்கள்

தடாகங்கள்

அரசசபை மண்டபங்கள்

வைத்தியசாலைகள்

பாலங்கள்

அம்பலங்கள்

கோட்டைகள்


சமயசார்பானவை

வேறு கலை நிர்மாணங்கள்

செதுக்கல்

சித்திரம்

சிற்பம்

கட்டடங்கள்

போதி மனைகள்

ஆராமைகள்

தானசாலைகள்

தாதுகோபங்கள்

கட்டிட உப்பகுதிகள்

கொரவக்கல்

காவற்கல்

நுழைவாயில்

சந்திர வட்டக்கல்


ஆவணங்கள்

கல்வெட்டுகள், பொற்பத்திரங்கள், செப்பேடுகள், ஒலைச்சுவடிகள், களிமண் , தகடுகள், சுவர், மரம், பல்வேறு பாத்திரங்கள் என்பவற்றில் எழுதப்பட்டவை ஆவணங்கள் எனப்படும். 


நாணயங்கள்

உள்நாட்டு நாணயங்கள் அநுராதபுரத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே இலங்கையில் நாணயப் பாவனை இருந்து வந்துள்ளது. இந்நாட்டில் கிடைக்கப்பெற்ற புராதன நாணயம் கஹபண எனப்படுகின்றது 

உதாரணம்: 

யானை, சுவெஸ்திகா, இலட்சுமி, சிங்க உருவ நாணயங்களும்

தங்கத்தாலான கஹபண நாணயமும்.

இந்நாட்டிற்குத் தேவையான நாணயங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வார்ப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ளமை.

இங்கு கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு நாணயங்கள் 

உதாரணம்: 

உரோம, சீன, அராபிய, இந்திய நாணயங்கள்


நாட்டார் கதைகள்


நாட்டார் கதைகளும் பரம்பரைக் கதைகளும் சம்பிரதாயபூர்வமாக மக்களிடையே புழக்கத்திலுள்ள வரலாற்று ரீதியான விடயங்களும், அவை தொடர்பான கதைகளும் நாட்டார் கதைகள், பரம்பரைக் கதைகள் எனப்படுகின்றது.

நாட்டார் கதைகளும் பரம்பரைக் கதைகளும் வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையானவையாகும்.

நாட்டார் கதைகள் பரம்பரைக் கதைகளும் பயன்படுத்தப்படுவது:

வரலாற்றில் உறுதிப்படுத்தப்படாத ஒரு விடயத்தின்படி ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காகவாகும்.

கதை ஒன்றைப்பற்றியோ சம்பவம் ஒன்றைப்பற்றியோ விமர்சன ரீதியாக ஆராய்ந்து பார்த்தலுக்காகும்.

நபரொருவரைப்பற்றிய சம்பவம், இடம், பற்றிய மேலதிக அறிவைப் பெற்றுக் கொள்வதற்காகவாகும். 

ஆட்சியாளர்களின் ஆளுமை பற்றிய புரிந்துணர்வைப் பெற்றுக்கொள்வதற்காகவாகும்.


கல்வெட்டுக்கள்.

கல்வெட்டுகள் பல்வேறு வகைப்படும். கல்வெட்டுக்கள் பொறிக்கப் பட்டிருக்கும் கற்களின் வடிவிற் கேற்ப அவை: குகை. குன்று. சுவர், தூண், கல்வெட்டுக்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் பிராமிய (பிராகிருத) எழுத்துக்களால் ஆனது. குருமாருக்கு குகைகளைத் தானமளித்தல் தொடர்பாகவே அவற்றில் பெரும்பாலானவை எழுதப்பட்டிருந்தன.

கி.பி. 2ஆம் நூற்றாண்டின் பின்னரே விவரமான கல்வெட்டுகள் எழுதப்படத் தொடங்கின. விகாரைகள், ஆராமைகளுக்கு நிலபுலன்களை வழங்குதல் ஆராமைகளின் நிர்வாகம். அரச சட்டங்களை மக்களுக்கு அறியப்படுத்தல், வரிவசூலித்தல், வர்த்தகம், குற்றவாளிகளை மன்னித்தல். ஒருவருடைய சேவை நலனைப் பாராட்டுதல் போன்ற பல்வேறு விடயங்களைக் குறித்து வைப்பதற்குக் கல்வெட்டுக்கள் எழுதப்பட்டன. தற்போது கிடைக்கப்பெற்றுள்ள கல்வெட்டுகளில் புராதானமானதாக அறியப்பட்டுள்ளது உத்திய மன்னனுடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மிஹிந்தலை சுவர்க் கல்வெட்டாகும்.

கல்வெட்டுக்களில் உள்ளடங்கியுள்ள விடயங்களின் முக்கியத்துவம்

மஹாவம்சம் உட்பட ஏனைய இலக்கிய மூலாதாரங்களில் உள்ள விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்வதில் கல்வெட்டுக்கள் முக்கியமானதாகும். 

உதாரணம்:  

துட்டகைமுனு மன்னனது பத்து மாமல்லர்களை பற்றி கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கொரவக்கல கல்வெட்டிலும் சித்துல்பவ்வ (தளபதி மீத்ச, நந்திமித்த), வெல் எல்லுகொடகந்த கல்வெட்டு. சங்கபால விஹாரைக் கல்வெட்டு (தளபதி. பசதேவ. புஸ்ஸ தேவ) இதற்கு மேலாக பல்லேபெத்த, எகொடபத்துவ கல்வெட்டுகளிலும் இவர்களைப் பற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 

மஹிந்த தேரரின் வருகை கல்வெட்டுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை.

வம்சக்கதைகளில் கூறப்பட்டுள்ள அரசியல், நிர்வாகம், சம்பந்தப்பட்ட விடயங்கள், பொருளாதார, சமூக, கலாசார விடங்கள் பெருமளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை. 

வம்சக் கதைகளில் கூறப்படாத தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அவற்றைப் பிரதி செய்யும்போது ஏற்பட்ட தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கும் கல்வெட்டுக்கள் முக்கியத்துவமானவையாகும்.

உதாரணம்: 

இளவரசர்கள், பிராந்திய அரசர்கள் பற்றியவை (குசலானகந்த, ஹென்னன்னேகல, யம்பரகல. யட்டஹலென போன்ற கல்வெட்டுகள்) கதுறுவெல கல்வெட்டில் அமைச்சர் பரம்பரை ஐந்தைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளமை.

விஹாரைகளின் நிர்வாகம் பற்றிய விடயங்கள் (மிஹிந்தலை சுவர்க் கல்வெட்டு, களுதியபொக்குண கல்வெட்டு வசப மன்னனின் இரு புதல்வர்களான உதர (ஹெபஸ்ஸ கல்வெட்டு, துடக் (கம்மென்னாகந்த கல்வெட்டு என்போர் மகாராஜா பட்டத்துடன் ஆட்சிபுரிந்தமை. இலக்கிய மூலாதாரங்களில் வெளிப்படாத கி.பி. 2 ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் நிலவிய பிரதேச நிர்வாக அலகுகள் பல பற்றிய தகவல்கள் கல்வெட்டில் கிடைக்கப் பெற்றுள்ளமை.

உதாரணம்:  

பம்பரகல

கோணவத்த

எம்புல் அம்பே

நெட்டுக்கந்த பெரியபுளியன்குளம்

குசலானகந்த 

சித்துல்பவ்வ 

இலங்கையின் அரசாட்சியின் ஆரம்பம், இலக்கிய மூலாதாரங்களுள் இந்தியாவுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. என்றாலும் கல்வெட்டுகளில் இருந்து பெறப்படும் தகவல்களின் மூலம் தெரியவருவது இலங்கையின் அரசாட்சி இலங்கையில் தோன்றி பரிணாமம் அடைந்தது என்பதாகும்.

உதாரணம்:  

காமினி பருமக, மபுறுமுகா, ரஜ, மகாரஜ எனும் பெயர்களினாலாகும். 

கல்வெட்டுகளின் பரவலுக்கு அமைவாக அரசின் பலம் பரவியிருந்த பிரதேசங்கள் பற்றித் தீர்மானிப்பது இலகுவாகும்.

உதாரணம்:  

வசப் மன்னனுடைய ஆவணங்கள் வல்லிபுரத்திலும் மட்டக்களப்பில் காசிமோட்டையிலும், தெற்கில் திஸ்ஸமகாராமையிலும், குருணாகலில் கலஉடையிலும், தம்மன்னாவையிலும், ஹெபஸ்ஸயிலும் கண்டறியப்பட்டதிலிருந்து அம்மன்னனுடைய ஆட்சி இலங்கை முழுவதும் பரவியிருந்தமை தெரிய வருகிறது. 

இந்நாட்டில் நிலவிய உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பாகவும் பொருளாதாரநிலை தொடர்பாகவும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்குக் கல்வெட்டுகள் முக்கியத்துவமானவையாகும்.

உதாரணம்: 

தோணிகல கல்வெட்டு - நெல், பயறு, உளுந்து போன்ற தானிய வகைகள், தற்கால வங்கிகள் போன்ற தாபனங்களில் வைப்புச் செய்யப்பட்டிருந்த தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லபு எட்டபெந்திகல கல்வெட்டு - வர்த்தக தரங்களும் அதன் செயற்பாடுகளும்.

ஹோபிடிகமுவ கல்வெட்டு - சந்தை ஒன்றின் பரிபாலனமும் அது தொடர்பான சட்டத்திட்டங்களும். 

விவசாய நடவடிக்கைகளும் கைத்தொழில்களும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளமை.

உதாரணம்: 

வெஸ்ஸகிரிய ஒவ்வொரு போகத்திற்கும் பயிரிடப்பட வேண்டிய தானிய வர்க்கங்கள் தொடர்பாக அரசனால் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது பற்றி ஆதாரங்கள் உள்ளமை. சிஹிநெட்டி (ஒருவகை நெல்) விதைப்பதல்லாத பயறு விதைக்கக் கூடாது. 

அநுராதபுரக்காலத்தில் குளங்கள், அணைக்கட்டுகளின் நிர்வாகம் தொடர்பான தாபனம் ஒன்று சம்பந்தமாக கல்வெட்டுகளில் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளமை. அதேபோன்றே நீர்பாசனம் தொடர்பாக அறவிடப்பட்ட போஜகபதி, தகபதி, வரிகள் தொடர்பாகக் கூறப்பட்டுள்ளமை.

இலங்கையில் காணப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பாகவும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.

உதாரணம்: 

கொங்கல கல்வெட்டு மணிகர (இரத்தினம் பட்டை தீட்டுவோர்) வேகிரிய -பஹதமுல்ல கல்வெட்டு -குமுபகர (குயவர்கள் துலாதர (பொற்கொல்லர், கபர (கொல்லர்).தடிக (தந்த செதுக்கல்). பெஹகர (நெசவாளர்) பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளமை.

நீதிமன்ற செயற்பாடுகள்.

சித்துல்பவ்வ கல்வெட்டு - நீதிமன்றத்தால் விதிக்கப்படும். தண்டப் பணத்தை சித்துல்பவ்வ விகாரைக்கு தானமளித்தல். 

வேவெல்கெட்டிய கல்வெட்டு கிராமத்தில் கடமையைப் புரிதல் தொடர்பான சட்டத்திட்டங்கள்.





Post a Comment

0 Comments