வரலாற்றின் அறிமுகம்
வரலாற்றின் வரைவிலக்கணம்
History எனும் சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்ததாகும். அதன் பொருள் ஆராய்தல் என்பதாகும். வரலாறு என்பது மனிதனின் கடந்த காலத்தைப் பற்றிக் கற்பதாகும். என்று கிரிஸ்ஹேஸ்ட் குறிப்பிட்டுள்ளார்.
வரலாறு என்பது தேசங்களின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் மனிதர்களின் அரசியல் நிலையில் செல்வாக்குச் செலுத்திய ஏனைய முக்கியமான மாற்றங்களையும் உள்ளடக்கிய மனித வர்க்கத்திளரிடையே ஏற்பட்ட சம்பவங்களின் கதை. என்று ஜோன் ஜே குறிப்பிட்டுள்ளார்.
வரலாறு என்பது மனிதனைப் பற்றிய கற்கை என்று ஆர்.பி கொலின்வுட் குறிப்பிடுகிறார். இவ்வரைவிலக்கணங்களுக்கு அமைவாக வரலாற்றுப்பாடத்தின் மூலம் மனித இனத்தின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரையான தகவல்கள் விளக்கப்படுகின்றன. பல்வேறு காலகட்டங்களில் மனிதனின் சமய, அரசியல், சமூக, பொருளியல் பற்றிய தகவல்களை விவரித்தல் இப்பாடத்தினூடாக மேற்கொள்ளப்படுகின்றது.
கீழ்வரும் காலகட்ட வகுத்தலின் மூலம் இலங்கையின் வரலாற்றைக் கற்கலாம். வரலாற்றின் இயல்புக்கமைய அது பல்வேறுப்பட்ட பாடவிடயங்களைத் தன்னுள்கொண்ட ஒருபாடமாகும். காலகட்டம் என்பது எல்லா விடயங்களையும் அவை இடம்பெற்ற காலத்திற்கு ஏற்ப ஒழுங்குப்படுத்தித் தொகுப்பதாகும்.
உதாரணம்:
இலங்கையின் வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொடக்கம் இன்றைய காலம்வரை முறையாக வளர்ச்சி பெற்றதை இனங்காட்டுதல்.
01.வரலாற்றுக்கு முற்பட்ட காலம் (கி.மு.100,000 - கி.மு.1800)
02. முன் வரலாற்றுக் காலம் (கி.மு.1800 கி.மு.600)
03. வரலாற்றுக் காலம் (கி.மு.600- இன்றுவரை)
01. புராதன வரலாற்றுக் காலம் (கி.மு.600-கி.பி. 500)
02. மத்திய வரலாற்றுக் காலம் (கி.மு.500 - கி.பி.1500)
03. நவீன வரலாற்றுக் காலம் (கி.பி.1500 - இன்றுவரை)
ஜீ.எம். திரவலியன் எனும் வரலாற்று அறிஞனின் கருத்துப்படி, வரலாறு என்பது பல பாடங்களால் ஆனதாகும். இதற்கு அமைவாக அவர், வரலாறு என்பது அனைத்துப் பாடங்களையும் கொண்ட ஒரு நிர்மாணம் எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் சமயம், புவியியல், அரசியல், விஞ்ஞானம், தொழினுட்பம், கலை,சட்டம் ஆகிய சகல விடயங்களும், வரலாற்றுப் பாடத்தினுள் உள்ளடங்கும் என்பார்.
உதாரணம்:
அரசறிவியல்:
நிகழ்கால அரசியல் எதிர்கால வரலாறாகும்.
புவியியல்:
வரலாற்று நிகழ்வுகளில் செல்வாக்குச் செலுத்தும் புவியியல் காரணிகளை விளக்குதல்.
விஞ்ஞானமும் தொழினுட்பமும்:
பல்வேறு காலகட்டங்களில் பிரயோகிக்கப்பட்ட விஞ்ஞான, தொழினுட்பங்கள் மனித பண்பாட்டில் உருவாக்கிய மாற்றங்களுக்கான காரணிகளைப் பற்றிக் கலந்துரையாடல்.
சமயம்:
எந்தவொரு நாட்டினதும் பண்பாட்டில் அந்நாட்டு மக்கள் பின்பற்றும் சமயம் அடிப்படையாக அமைவதாகவும் இயற்கையை வணக்க வழிபாடு செய்வதிலிருந்து பல்வேறு சமயத்தலைவர்களின். வெவ்வேறு தத்துவங்களைத் தம்முள் கொண்ட அறப்போதனைகளை மேற்கொண்டமையும் மக்கள் அவற்றை ஒப்புக்கொண்டு அதற்கியைய வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் பழகிக் கொண்ட மையின் மூலம் அவர்களது பண்பாட்டு விருத்திக்கு அவை செல்வாக்குச் செலுத்திய விதத்தைப் பற்றிக் கருத்துரைத்தல்.
இவ்வாறு பல்வேறுபட்ட பாடங்களின் தனித்தன்மையுடனான மூலாதாரங்களும் எண்ணக்கருக்களும் பற்றி ஆழமாகக் கலந்துரையாடப்படாவிட்டாலும் வரலாற்றுப் பாடத்திற்குரிய வெவ்வேறுப்பட்ட விடயங்களைக் கலந்துரையாடல்.
வரலாறு என்பது உங்களுடைய எண்ணங்களல்ல. உங்களுடைய ஞாபகங்களே என்று டபிள்யூ.சி.சேலரும். ஆர்.ஜே.யேட்மனும் குறிப்பிட்டுள்ளதற்கு அமைவாக, வரலாறு என்பது ஒரு பிரபந்தம் அல்ல அது உண்மையாக நடைபெற்றவற்றினைக் கொண்டு உருவாக்கிக்கொள்ளப்பட்ட ஒரு பாடமாகும் எனப் பொருள்கொள்ளப்படுகின்றது.
இதற்கமைய வரலாறு என்பது. ஆதி தொட்டு இன்றுவரை மனிதன் செய்த, சொன்னவற்றின் உள்ளடக்கத்தைத் தம்முள் கொண்ட மனித பண்பாடாகும். அவற்றைக் கற்பிப்பதற்கு வசதியாக சமயம், அரசியல், புவியியல், பொருளியல், சமூகம், கலாசாரம், விஞ்ஞானம், தொழினுட்பம் எனும் விடயப்பரப்புகள் ஒன்று சேர்க்கப்பட்டு, எல்லாத்துறைகளைக் கொண்ட பகுதிகளைக் கொண்டு இது உருவானதாகத் தெளிவாகின்றது.
வரலாற்றைக் கற்பதன் பயன்கள்.
தாம் வாழும் சமூகம். உலகம் பற்றிய தெளிவான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளல்.
ஒரு நாட்டின் சமூகம், இனம், கலாசாரம்.சட்டம், ஆகியவற்றின் நிகழ்கால நிலை பற்றி அறிந்திருக்க வேண்டும். வரலாறுப் பாடத்தின் மூலம் ஒன்றை ஆரம்பத்திலிருந்து கற்பதற்கான வழி பிறக்கின்றது.
அறிவு வேகமாக விருத்தி அடைவதனால். துரிதமாக மாற்றமுறும் விரிவான உலகம் பற்றி விளங்கிக் கொள்ள முடியுமாயிருத்தல்.
தாம் வாழும் சமூகம் பற்றியும் வெளி உலகம் பற்றியும் தெளிவின்மையால் தவறான தீர்மானங்களை மேற்கொள்ளத் தூண்டுவதிலிருந்து தவிரத்துக் கொள்ளலாம்.
வரலாற்றைச் சரியாகக் கையாள்வதன் மூலம் இன்று எமது சமூகம் எதிர்கொண்டுள்ள பிரிவினை, இளைஞர்களின் வீரக்தி போன்ற பிரச்சினைகளைக் குறைத்துக்கொள்வதற்கு முடியுமாயிருத்தல்.
நிகழ்காலத்தை நன்கு விளங்கிக் கொள்ள முடியுமாயிருத்தல் நிகழ்கால சமூகம், உலகம், வளர்ச்சியுற்று, முறையாக மாற்றமுற்றுக்கொண்டிருக்கும்.
செயற்பாடுகளின் பிரதிபலனாகும், அப்படியென்றால் நிகழ்காலத்தை விளங்கிக்கொண்டு. எதிர்காலத்தைக் காண்பதற்கான மாற்றங்களின் தொகுதி பற்றிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதாகும்.
இதனால் வரலாறு. மனித சமூக விருத்தியின் நடுநிலையமாகக் கருதப்படுகின்றது.
எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்வதற்காக இறந்த காலத்திலிருந்து படிப்பினை களைப் பெற்றுக்கொள்ளல்.
ஈ.எச்.கார் எனும் வரலாற்றியலாளர் "நிகழ்காலத்தை விளங்கிக் கொள்வதற்கான திறவுகோலாக இறந்த காலத்தைத் தெரிந்துக்கொள்ள வேண்டும்" என விளக்கியுள்ளார்.
சமூகத்திலும், உலகத்திலும் அரசியல் நிகழ்வுகளையும் எழுச்சிகளையும் புரிந்து கொள்ளல்.
நாட்டின் எதிர்காலத் தலைவர்களுக்கு அது ஒரு முன்மாதிரியாக அமையும்.
வரலாற்றுப் பாடத்திற்கு எதிர்கால நிகழ்வுப்பற்றி முன்னுரைக்க முடியாது. அத்தோடு அது புனைந்துரைக்கப்படுவதும் இல்லை. என்றாலும் சமமான சந்தர்ப்பங்களும் சமமான பிரச்சினைகளும் சிக்கல்களும் எழும்பும்.
உதாரணம்:
இறந்த காலத்தைக் கற்கையில் பல்வேறு நாடுகளும் முகம்கொடுத்த யுத்தங்களும் அதற்கான பின்னணிகளும் அதன் வெற்றி தோல்விகளும் ஆக்கிரமிப்புகள், புரட்சிகள் பற்றியும் கற்கிறோம். திரும்பவும் பிரான்ஸியப் புரட்சியைப் போல் ஒன்று இடம் பெறாவிட்டாலும் வேற்று நாட்டு ஆட்சியாளர்களின் வஞ்சகம், ஊழல், அநீதிகளால் சுமத்தப்படும். வரிச்சுமை போன்ற காரணிகளால் ஆட்சியாளருக்கு எதிராகப் புரட்சி ஒன்று ஏற்படலாம். அதனால் அவ்வாறான பின்னணிகளைத் தெரிந்துகொள்வதற்கும் இதனால் ஏற்படும் அழிவைத் தடுத்துக் கொள்வதற்கும் வரலாற்றைக் கற்பதன் மூலம் முடிமாயிருக்கின்றது.
தேசியத் தனித்துவத்தைத் தெரிந்துக்கொள்வதற்கு இலகுவாயிருத்தல்.
தேசிய ஒற்றுமையை உருவாக்கிக் கொள்வதற்கும், அந்நிய கலாசாரங்களை மதிப்பதற்கும் பழகிக் கொள்ளல்.
மனிதத்தன்மையை விளங்கிக்கொள்வதற்கும், அதன்மூலம் தன்னைப்பற்றிய மிகவும் சரியான புரிந்துணர்வைப் பெற்றுக்கொள்வதற்கும் முடியுமாயிருத்தல்.
உதாரணம்:
ஆர்.ஜீ. கொலின் வூட் எனும் வரலாற்றியலாளர் தமது நூலான Idea of History இல் வரலாறு என்பது எதற்காக?" என்பதற்கு "மனிதனின் தனிப்பட்ட புரிந்துணர்வுக்காக” என்று குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றுப்பாடத்தின் மூலம் உயர்ந்த இராஜதந்திரிகளில் இருந்து சாதாரண குடிமகன்வரை அதாவது ஆட்சியாளர்கள், சமய நிறுவனங்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், வியாபாரிகள், பெண்கள், விவசாயிகள் சாதாரண மனிதர்கள் என்றவாறு சமூகத்தின் சகல தராதாரங்களிலும் உள்ளோரப்பற்றிக் கலந்துரையாடப்படுகின்றது.
இங்கு உன்னதமானவர்களும் தாழ்வானவர்களும் என்று நபர்களைக் கண்டறிய முடியும். அதனால் மனிதர்களின் உணர்வுகள், போக்குகள், நோக்குகள் பற்றி ஆய்வுகளுக்குட்படுத்தப்படுகின்றது. இதற்கமைய ஏனையவர்களைப் பற்றியும் புரிந்து கொள்ளக் கூடியதாயிருக்கும்.
வரலாறு மாற்றமுறும் தன்மையை விளங்கிக்கொள்ளுதல்
வரலாறு என்பது எந்நேரமும் மாற்றமுற்று வருகின்ற பரிணாமவாத செயற்பாடு ஒன்றைப்பற்றிய அறிக்கையாகும். அதனால் மாற்றமுறுதலும் மாற்றங்களுக்கு முகங்கொடுத்தலும் பற்றிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
காலமும் சுற்றாடலும் பற்றிய கருத்து வளர்ச்சியடைதல்.
வரலாறு, காலமும் சுற்றடாலும் சம்பந்தமாகத் தமக்குரிய இடத்தை அளவிட்டுப் பார்க்கும் இயற்கையான முறையொன்றாகும்.வரலாற்றின் அடிப்படையே அதுவாகும்.
வரலாற்றுக்குரிய காலநிர்ணயம் மனித வரலாற்றில் மிக முக்கிய நாட்களைத் தொடர்புபடுத்தியதாக உள்ளதைத் தெரிந்துக்கொள்ளல்.
உதாரணம்:
புத்தரின் பரிநிர்வாணத்துடன் பௌத்த வருடம் ஆரம்பமானவை.
இயேசுநாதரின் பிறப்புடன் கிறிஸ்தவ வருடம் ஆரம்பமானவை.
இந்தியாவில் சக சாதவாகன யுத்தத்தின் வெற்றியுடன் சக வருடம் ஆரம்பமானவை.
நபிகள் நாயகம் மக்காவைத் துறந்து மதீனாவுக்குப் பயணப்பட்டதைத் தொடர்ந்து ஹிஜ்ரி வருடம் ஆரம்பமானமை.
இக்கால முறைப்படி பல்வேறு வரலாற்று விடயங்களை விவரித்தல். புத்தர் பெருமானின் பரிநிர்வாணத்தின் 218 ஆண்டுகளுக்குப் பின்னர் அசோக மன்னனின் முடிசூடு விழா இடம்பெற்றமை.
இயேசுநாதரின் பிறப்பின் பின் 1815 ஆவது வருடத்தில் இலங்கை முழுவதும் பிரிதானியரின் ஆளுகைக்கு உட்பட்டமை.
சுற்றாடலை விளங்கிக் கொள்ளுதல்.
காலநிலை, மலை, நதி, நீர்நிலைகள், மழைவீழ்ச்சி, சமவெளிகள் போன்ற பௌதீக காரணிகள் சுற்றாடலைச் சேரும்.
நாட்டின் வரலாற்று நிகழ்வுகளை விவரிக்கையில் அவற்றுடன் சம்பந்தப்பட்ட புவியியல் காரணிகள் விவரிக்கப்படுகின்றன.
விமர்சனத்துடன் கூடிய சிந்தனை வளர்ச்சியடைதல்.
வரலாறு உருவாவது நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்ட மூலாதாரங்களின் அடிப்படையிலாகும்.
இங்கு மூலாதாரங்கள் பலவற்றுடன் இந்நிகழ்வு உறுதிப்படுத்தப்பட்டால் அது வரலாற்றுச் சம்பவமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
வரலாற்றைக் கற்பவர்கள் மேற்குறிப்பிட்ட தன்மைகளுக்குப் பழக்கப்படுவதினால் அவர்களிடம் விமர்சனப் பண்பு ஏற்படுகின்றது.
கற்கும் காலம்
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து 1978 ஆம் ஆண்டின் அரசியல் சீர்த்திருத்தம்வரை கற்க வேண்டியுள்ளமை.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்,
இது பிரதானமாக இரண்டு காலகட்டங்களாகும். அவை: புராதன கற்காலமும் ,மத்திய கற்காலமுமாகும்.
தொல்பொருள் மூலாதாரங்களைக் கொண்டே இது கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
முன்வராற்றுக் காலம்
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்கும் வரலாற்றுக்காலத்திற்கும் இடைப்பட்டகாலம், முன்வரலாற்றுக் காலமாகக் கொள்ளப்படல்.
கி.மு. 5000 ஆண்டுகளிலிருந்து இந்த யுகத்திற்குரிய பண்புகள் புலப்படத் தொடங்கின.
நிரந்தரக் குடியிருப்புகள், மட்பாண்டங்களை உற்பத்தி செய்தல். இரும்புத்தொழினுட்பம், மந்தைவளர்ப்பு என்பன இதன் விசேட பண்புகளாகும்.
பெரும்பாலும் தொல்பொருள் காரணிகளைக் கொண்டே இந்த யுகம் கட்டியெழுப்பப்படல்.
வரலாற்றுக்காலம்
கி.மு.600 லிருந்து இந்த யுகம் ஆரம்பமாகிறது.
தொல்பொருள், இலக்கிய மூலாதாரங்களிலிருந்து விவரிக்கப்படுகின்றது.
வரலாற்றுக் காலம் பிரதான கட்டங்கள் மூன்றைக் கொண்டுள்ளன.
தேசிய மன்னராட்சிக் காலம்
மேலைத்தேயத்தவரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலம்
சுதந்திரத்தின் பின்னரான காலம்
நன்றி
0 Comments