இலங்கையின் புவியியல் அமைவிடம் - GEOGRAPHICAL LOCATION OF SRI LANKA

 

இலங்கையின் புவியியல் அமைவிடம்


இலங்கையின் புவியியல்  அமைவிடம்


இலங்கையின் புவியியல் காரணிகள்


01. வெளியக புவியியல் அமைப்பு:

01. இந்தியாவிற்கு அருகாமையில் அமைந்திருத்தல்.

02. இந்தியாவிலிருந்து விலகி. தீவொன்றாக அமைந்திருத்தல்.

03. இந்து சமூத்திரத்தின் மத்தியில் அமைந்திருத்தல்.


02. உள்ளக புவியியல் அமைப்பு

01. சமநிலம்

02. நதிகள்

03. வடிநிலங்கள்

04.மத்திய மலைநாடு

05. கடல்நீர் 

06. ஏரிகள்

07. துறைமுகங்கள்


வெளியக புவியியல் அமைப்பு


இந்தியாவிற்கு அருகாமையில் அமைந்துள்ளமையால் ஏற்பட்ட செல்வாக்குகள்.

இந்திய மக்கள் குழுக்களின் வருகையும் குடியிருப்புககளை அமைத்துக்கொள்ளலும், 

காலத்திற்கு காலம் ஏற்பட்ட குடியேற்றங்களும், ஆக்கிரமிப்புகளும், 

அரசியல், கலாசார செல்வாக்கு.

படையுதவிகளைப் பெற்றுக் கொள்ளுதல்.

இந்தியாவில் பிரித்தானியரின் ஆதிக்கத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக இலங்கையின் துறைமுகங்களைக் கைப்பற்றிக் கொள்ளும் தேவை.


இந்தியாவிலிருந்து விலகித் தனித் தீவாக அமைந்துள்ளமை

சுதந்திரமான அரசொன்றாக வளர்ச்சியுற்றமை.

இலங்கைக்கென்றே தனிப்பண்பாடு உருவாகி வளர்ச்சியுற்றமை.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புக்கள் அரசியல் ஆதிக்கங்கள் நேரடியாக இலங்கையைப் பாதித்தமை.

தேரவாத பௌத்த சமயம் அரச மதமானமையும் அது பாதுகாக்கப்பட்டமையும்.


இந்து சமூத்திரத்தின் மத்தியில் அமைந்திருந்தமை.

பல்வேறு மக்கள் கூட்டத்தினரும் வருகை தந்தமை

உதாரணம்: 

ஆரியர்கள்

திராவிடர்கள்

முஸ்லிம்கள்

வணிக மத்திய நிலையமாக வளர்ச்சி பெற்றதுடன் வர்த்தகம் விருத்தியுற்றமை.

வர்த்தகர்களுள் சிலர் இந்நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளல்.

உதாரணம்:

சேன, குத்திக

எல்லாளனின் ஆக்கிரமிப்புகள்

பல்வேறு நாட்டுப் பிரயாணிகளினதும் வருகை 

உதாரணம்: 

பாஹியன் தேரர்

இப்னு பதூதா

வர்த்தகப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் போர்த்துகேயரும் ஒல்லாந்தரும் வருகை தந்தமை.

பிரித்தானியரின் கவனம் இலங்கை மீது திரும்பியமை.


உள்ளக புவியியல் அமைப்பு


சமநிலங்கள்

குடியிருப்புகள் உருவாதலும் பரவுதலும்.

வடக்கு, கிழக்குச் சமநிலங்களை மையமாகக் கொண்ட அரசுகள்.

நீர்ப்பாசன நாகரீகத்திற்கான அடிப்படை உருவானமை.


நதிகளும்,வடிநிலங்களும்

இலங்கையின் நீரத்தொகுதி அருந்தன்மையைப் பெறல். 

குடியிருப்புகள் உருவானமையும் விருத்தியுற்றமையும்.

உதாரணம்: 

மல்வத்து ஓயா - அநுராதகாம்.

கலா ஓயா - உருவெலகாம்

கல் ஓயா - தீக்காம

அரசுகளின் எல்லைகளாக நதிகளைக் கொள்ளுதல்.

உதாரணம்: 

மகாவலி கங்கையும் கலா ஓயாவும் இராஜரட்டையின் தென் எல்லைகளாதல்.

போக்குவரத்து நதிகளினூடகவே மேற்கொள்ளப்படல் 

உதாரணம்: 

மகாவலி கங்கையிலிருந்து இராசரட்டை வரையான பாதை மகாவலியினூடாக இடம் பெற்றமை. 

நீர்பாசனக் கட்டமைப்பு உருவானமை.

உதாரணம்: 

மகாவலியில் - மினிப்பே கால்வாய்

கலா ஓயாவில் - கலாவாவி

அரசுகளின் தலைநகர்கள் நதிக்கரைகளில் அமைந்திருந்தமை.

உதாரணம்: 

அநுராதபுரம்

பொலன்னறுவை 

நதிகளின் கழிமுகத்தை அண்டித் துறைமுகங்களும் வணிக மத்திய நிலையங்களும் தோன்றியமை.


மத்திய மலைநாடு

பூகோளப் பிரிவிற்கு அடிப்படையாய் அமைந்த இடமாகும்.

மலை, வன, நீர் அரண்களால் பாதுகாக்கப்பட்டுள்ளமை.

மத்திய மலைநாட்டில் தோன்றிய இராச்சியங்கள்

உதாரணம்: 

கம்பளை

கண்டி

மத்திய மலைநாட்டினால் முழு நாட்டிலும் அரசியல் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவது சிரமமாய் இருந்தமை.

வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளும், உள்நாட்டுக் கலவரங்களும் ஏற்பட்ட போது பாதுகாப்பு இடமாய் இருந்தமை.

இலங்கையின் ஆற்றுத் தொகுதிகளின் போசணைப் பிரதேசமாய் இருந்தமை.

மலைநாட்டில் பிரித்தானியர் பெருந்தோட்ட செய்கையை ஆரம்பித்தமை. சமூக பொருளாதா கலாசார மாற்றத்திற்கு காரணமாய் இருந்தமை.

இடை வலயத்தில் இறப்பர் செய்கையும், கரையோரப்பிரதேசத்தில் தென்னையும் பயிரிடப்பட்டமை.

தலைநகரத்தில் இருந்து துாரத்தில் அமைந்திருந்தமையால் மத்திய மலைநாடு இலங்கையின் சுதந்திரப் போராட்டங்களின் மத்திய நிலையமாகத் திகழ்ந்தமை.

உதாரணம்: 

1818 ஊவாவெல்லஸ்ஸ சுதந்திர போராட்டம்

1848 மாத்தளை சுதந்திரப் போராட்டம்


துறைமுகங்கள்

தீவைச் சுற்றி அமைந்திருந்த துறைமுகங்கள். 

உதாரணம்:

புராதன காலத்தில்: 

மகாதித்த

கோகண்ண

கொடவாய

ஜம்புகோளப்பட்டினம்

ஊராதோட்டை

தேவநகரம்


நவீன காலத்தில்:

காலி

கொழும்பு

மட்டக்களப்பு

திருகோணமலை


முதலாவது ஆரியக் குடியேற்றங்கள்:

உதாரணம்:

பத்தகச்சாயனாவின் குழுவினர் கோகண்ண துறைமுகத்தை வந்தடைதல்.

தென்னிந்திய ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டமை.

உதாரணம்:

மகாதித்தையினுடாக பல்வேறு ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்பட்டமை. 

வர்த்தகத் தொடர்புகள் ஏற்பட்டமை.

உதாரணம்:

இந்தியா

பர்மா

சீனா

அரேபியா

எகிப்து

உரோம்

கிரேக்கம்

சிங்கள அரசர்கள் படையுதவிகள் பெற்றுக்கொண்டமை இந்தியாவுடனான கலாசாரத் தொடர்புகள் ஏற்பட்டமை .

உதாரணம்: 

கஜபாகு மன்னன் பத்தினி வழிபாட்டைக் கொண்டுவந்தமை.

மத்திய காலத்தில் வர்த்தகம் விருத்தியுற்ற முக்கிய துறைமுகங்கள்.

உதாரணம்: 

கொழும்பு

நீர்கொழும்பு

கற்பிட்டி

ஐரோப்பியரின் வருகையில் இலங்கையின் இயற்கைத் துறைமுகங்களின் செல்வாக்கு.

உதாரணம்: 

பிரித்தானியரின் வசமிருந்த பெரிய இயற்கைத் துறைமுகம் பாதுகாப்பான ஒன்றாகத் திகழ்ந்தமை.


காலநிலைக் காரணிகள்


இலங்கை ஆசியாக் கண்டத்திலுள்ள வெப்ப வலய நாடாகும்.

இலங்கைக்கு மழைவீழ்ச்சி கிடைப்பது பருவப்பெயர்ச்சிக் காற்றுக்களாலாகும் பருவக்காற்றுகள் இரண்டும் கிடைக்கும் காலம் பற்றிய விளக்கம்:

தென்மேல் பருவக்காற்று மே - செப்டெம்பர், வடகீழ் பருவக்காற்று டிசம்பர் - பெப்ரவரி

மேற்காவுகையும் சூறாவளியும் மழை தரும் இன்னும் இரு முறைகளாகும். 

பருவகாற்றை அடிப்படையாகக் கொண்டே இலங்கை இருகாலநிலை வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஈரவலயம்,உலர்வலயம் என்பனவே அவையாகும். 

காலநிலைக்காரணி வரலாற்றில் கொண்டுள்ள செல்வாக்கு

பருவக்காற்றை ஆதாரமாக்க கொண்ட பிரயாணங்களை மேற்கொள்ளல். ஆக்கிரமிப்பாளர்கள். வியாபாரிகள் பிரயாணிகளின் கடற்போக்குவரத்து இடம்பெறல்.

உலர்வலயத்திற்கு மழைவீழ்ச்சியைக் கொடுக்கும், வடகீழ் பருவபெயர்ச்சிக் காற்றை அடிப்படையாக வைத்தே நீர்பாசன நாகரீகமும் விவசாய வாழ்க்கை முறையும் கட்டியெழுப்பப்பட்டுள்ளமை. ஈரவலயக்காலநிலைக் காரணிகளை அடிப்படையாகக்கொண்டே விவசாய வாழ்க்கை முறை மாற்றமுற்றமை. 

உதாரணம்:  

இலங்கையர் மேலதிகமாக உணவுப்பொருட்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தமை.

வெப்ப வலயக் காலநிலையை அடிப்படையாகக்கொண்ட இலங்கையில் விளைந்த பயிர்களைத் தேடி ஐரோப்பியர் இந்நாட்டிற்கு வருகை தரல். 

உதாரணம்: 

கறுவா

ஐரோப்பியரால் இந்நாட்டிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பயிர்கள். 

உதாரணம்: 

ஒல்லாந்தரால் கோப்பி, ரம்புட்டான், தூரியன், மெங்குஸ், கடுகுடா போன்ற பெயர்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

பிரித்தானியரால் தேயிலை, இறப்பர், கொக்கோ, சிங்கோனாபோன்ற பெயர்கள் அறிமுகம் செய்யப்பட்டன.  


நன்றி 


Post a Comment

0 Comments