கண்டி இராச்சியம்
இவ்விராச்சியத்தின் தலைநகர் கண்டியாகும். அது இயற்கையால் பாதுகாக்கப்பட்ட ஓரிடமாகும். கண்டி நகருக்கு மகாவலி கங்கை பாதுகாப்பு வழங்கியிருந்தது. பலனை. உன்னஸ் கிரிய, என்னும் கஷ்டமான பாதைகளால் இப்பிரதேசத் திற்குள் நுழைவது வெகு சிரமமாகும். என்றாலும் கண்டி இராச்சியம் இரம்மியமான காலநிலையையும் வளமான பூமியையும் கொண்டுள்ளது.
கண்டி இராச்சியம் ஆறாம் பராக்கிரமபாகு அரசரின் காலத்தில் கோட்டைக்கு அடிமைப்பட்ட பிராந்திய அரசொன்றாகச் செயற்பட்டது. கண்டி இராச்சியத்தை அண்டியுள்ள பிரதேசங்களை ஒன்றுபடுத்தி முதல் முறையாக அரசொன்றை உருவாக்கியவன் சேனா சம்மத விக்கிரமபாகு மன்னனாவான். இதனால் கண்டி இராச்சியத்தின் முதல் மன்னனாக இவன் கருதப்படுகின்றான்.
சேனா சம்மத விக்கிரமபாகுவின் மகனான ஜயவீர பண்டார அவனை அடுத்து அரசேற்றான். இவன் நீண்டகாலமாக கி.பி. 1511-1551 இவ் விராச்சியத்தை ஆட்சி செய்தான். அவன் சீதா வாக்கை மன்னனான நண்பனாவான். கோட்டை மாயாதுன்னையின் இராச்சியத்தில் விஜயபாகு கொள்ளை இடம்பெற்றபோது, ஜயவீர பண்டார அரசன் மாயாதுன்னைக்கு உதவி புரிந்துள்ளான்.
ஐயவீர பண்டாரனின் மரணத்தின் பின்னர் அவனது மகனான கரலியத்த பண்டார கண்டி இராச்சியத்திற்கு மன்னனானான். அவன் போர்த்துக்கேயருடன் உடன்பாடான கொள்கை யைக் கடைப்பிடித்தான். கரலியத்த பண்டாரனின் இக்கொள்கையையிட்டு கண்டிப்பிரதானிகள் அதிருப்தியுற்றிருந்தனர். ஆகையால் அவர்கள் சீதாவாக்கை மன்னன் இராஜசிங்கனுக்குத் தமது ஆதரவை வழங்கினர். அக்கால கண்டி இராச்சிய பிரதானியான பேராதனையின் வீரசுந்தர பண்டார, 1 ம் இராஜசிங்க மன்னனுக்கு சுண்டி இராச்சியத்தை ஆக்கிரமிப்பதற்கு உதவி புரிந்தான். இவ்வாக்கிரமிப்புக்கு முகங்கொடுக்க இயலாத கரலியத்த பண்டார மன்னன், தனது புதல்வியான குசுமாசனதேவியுடனும் மருமகனான யம் சிங்க பண்டாரவுடனும் போர்த்துக்கேயரிடம் குசுமாசனதேவி டோனா கத்தரினா என்றும் யமசிங்க பண்டார டொன் பிலிப் என்னும் பெயரிலும் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிக் கொண்டனர்.
கி.பி.1580 ஆம் ஆண்டளவில் கண்டியைக் கைப் பற்றிக் கொண்ட முதலாம் இராஜசிங்க மன்னன் சீதாவாக்கையில் இருந்து கண்டி இராச்சியத்தையும் ஆட்சிசெய்தான். என்றாலும் வீரசுந்தர பண் டாரனின் நடத்தையில் சந்தேகமுற்ற இராஜ சிங்க மன்னன் தந்திரமான முறையில் அவனைக் கொன்றான். இச்செயற்பாட்டின் பின்னர் வீரசுந்தர பண்டாரனின் மகனான கோணப்பு பண்டாரவும் போர்த்துக்கேயரிடம் தஞ்சமடைந்து டொன் ஜுவான் எனும் பெயரில் கிறிஸ்தவனானான்.
சீதாவாக்கையின் இராஜசிங்க மன்னன் கண்டி இராச்சியம் தொடர்பாகக் கையாண்ட சில நடவடிக்கைகளால் கண்டி இராச்சியப் பிரதானிகளில் ஒருசாராரிடையே அதிருப்தி நிலவியது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட போர்த்துக்கேயர், தமது பொறுப்பில் இருந்த யமசிங்க பண்டாரவைக் கண்டி இராச்சியத்திற்கு அனுப்பி, பிரதானிகள் சிலரின் ஆதரவுடன் தமக்குச் சார்பான அரசு ஒன்றை உருவாக்கிக் கொண்டனர். யமசிங்க பண்டார கண்டி இராச்சியத்திற்கு அனுப்பப் பட்டபோது, அவனது பாதுகாப்பிற்காக உடன் அனுப்பப்பட்ட குழுவில் கோணப்பு பண்டாரவும் இடம்பெற்றிருந்தான்.
போர்த்துக்கேயரின் பொம்மையாகச் செயற்பட்ட யமசிங்க பண்டார, சிறிது காலத்தில் மரண முற்றான். இதனால் இவனது இளம் புதல்வனை அரசுகட்டில் ஏற்றி, போர்த்துக்கேயர் ஆட்சியை முன்னெடுக்க முயன்றனர் என்றாலும் கோணப்பு பண்டாரவால் அம்முயற்சி வெற்றிபெறவில்லை மலைநாட்டவரின் ஆதரவைப் பெற்றுக் கொண்ட கோணப்பு பண்டார, போர்த்துக்கேயருக்கு எதிராகப் பதவியைப் பறித்துக் கொண்டு முதலாம் விமலதர்மசூரிய என்ற பெயருடன் மன்னனா னான். இவனது இத்துணிவான நடத்தையால் போர்த்துக்கேயரின் ஆட்சியில் இருந்து கண்டி இராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.
முதலாம் விமலதர்மசூரிய மன்னன் - 1592 - 1604
யமசிங்க பண்டாரவின் பின்னர் மலைநாட்டு மன்னனான இவன் கண்டி இராச்சியத்தில் புதிய தோர் அரச வம்சத்தை ஆரம்பித்து வைத்தான். இவன் மன்னனானபோது எதிர்கொண்ட சவால்கள் பலவாகும்.
அவையாவன -
1. சட்ட பூர்வ ஆட்சி உரிமை இல்லாமை.
2. கண்டி. இராச்சியத்தைப் போர்த்துக்கேயரின் ஆதிக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டி யிருந்தமை.
3. கண்டி இராச்சியத்தை சீதாவாக்கை ஆதிக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டியி ருந்தமை.
4. வீழ்ச்சியுற்றிருந்த பௌத்த சமயத்தை மீளவும் எழுச்சியுறச்செய்ய வேண்டியிருந்தமை.
5. கண்டி இராச்சியத்தின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டியிருந்தமை.
விமலதர்மசூரிய மன்னள் கண்டி இராச்சியத் தின் ஆட்சியின் சட்டபூர்வத் தன்மையை நிலைநாட்டிக் கொள்வதற்காகக் கீழ்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டான் :
1. கண்டி இராச்சியத்தின் அரசுரித்தாளியான குசுமாசன தேவியைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் தனது உரிமையை நிலைநாட்டிக் கொண்டமை. ஆட்சி
2. றோமன் கத்தோலிக்க சமயத்தைக் கை விட்டுப் பெளத்த சமயத்தைத் தழுவிக் கொண்டமை.
3. விமலதர்மசூரிய என்ற பௌத்த நாமத்தை சூடிக் கொண்டமை.
4. சீதாவாக்கையின் தெல்கமு விகாரையில் இருந்த புனித தந்தத்தை கண்டியில் பிரதிஷ்டை செய்தமை.
சீதாவாக்கை இராச்சியத்தின் ஆதிக்கத்தில் இருந்து கண்டி இராச்சியத்தை சுதந்திர மடையச் செய்வதற்காக மக்களின் ஒத்துழைப் புடன் இராஜசிங்கனைத் தோற்கடித்தான். இவ்வரசன் கண்டி இராச்சியத்தைப் போர்த்துக்கேய ஆதிக்கத்திலிருந்து மீட்பதற் குக் கையாண்ட நடவடிக்கைகள் வருமாறு :
1. கி.பி.1594 ஆம் ஆண்டில் தந்துரை போரில் போர்த்துக்கேயரைப் படுதோல்வி அடையச்செய்தமை.
2. போர்த்துக்கேயருக்கு எதிராகத் தாழ் நாட்டில் ஏற்படும் கலவரங்களுக்கு உதவியளித்தமை.
3. போர்த்துக்கேயரை வெளியேற்றுவதற்கு ஒல்லாந்தரின் உதவியைப் பெற்றுக்கொள்ள முற்பட்டமை.
பொலிவற்றிருந்த பௌத்த சமயத்தை எழுச்சியுறச் செய்வதற்கு விமலதர்ம சூரிய மன்னன் கையாண்ட நடவடிக்கைகள் வருமாறு :
1. பர்மாவிலிருந்து உபசம்பதாவைக் கொண்டு வந்தமை.
2. பழைய செய்தல். விகாரைகளைப் புனரமைப்புச் செய்தல்.
உதாரணமாக : லங்காதிலக, கடலாதெனிய, ரிதி விகாரை
இம்மன்னன் கண்டி இராச்சியத்தின் பொருளா தாரத்தைக் கட்டியெழுப்ப மேற்கொண்ட நடவடிக்கைகளாவன :
1.விவசாயத்தை விருத்தியடையச் செய்தல்.
2. பருத்திப் பயிர்ச்செய்கைக்கு உதவி புரிதல்.
3. கொத்மலையிலும் வலப்பனையிலும் இரும்பு ருக்குக் கைத்தொழிலை முன்னேற்ற நட வடிக்கை எடுத்தல்.
4. வெடிமருந்திற்குத் தேவையான உப்பு உற்பத்திக் கைத்தொழிலை வளர்த்தல்.
இவ்வாறு பல்வேறு வழிமுறைகளின் மூலமும் கண்டி இராச்சியத்தைப் பாதுகாத்துக்கொள்ள முயன்ற இம்மன்னன் கடுமையான காய்ச்சல் ஒன்றினால் பீடிக்கப்பட்டு கி.பி.1604 ஆம் ஆண்டில் மரணமானான்.
செனரத் மன்னன் - 1604 - 1635
விமலதர்மசூரிய மன்னன் மரணிக்கையில் அவனது குழந்தைகள் இளம் பராயத்தவர்களாக இருந்தபடியால், அவனது ஒன்றுவிட்ட சகோதர னான செனரத் கி.பி. 1604ஆம் ஆண்டு ஈண்டி இராச்சியத்திற்கு மன்னனானான். இவன் முகங் கொடுக்க வேண்டியிருந்த சவால்களாவன :
1. கண்டி இராச்சியத்தின் ஆட்சி உரிமையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தமை.
2. போர்த்துக்கேயரால் கண்டி இராச்சியத்திற்கு இருந்த அச்சுறுத்தலைத் தவிர்த்துக் கொள்ள வேண்டியிருந்தமை.
செனரத் மன்னன் அரசனான சிறிது காலத்தினுள் குசுமாசனதேவியை மணந்து தனது அரசுரிமையை உறுதிப்படுத்திக் கொண்டான்.
குசுமாசனதேவிக்கு விமலதர்மசூரிய மன்னன் மூலம் இரு மகன்மாரும் செனரத் மன்னன் மூலம் ஒரு மகனும் பிறந்தனர். ஆட்சி தொடர்பாக பிள்ளைகளிடையே ஏற்படும் அதிகாரப் போராட்டத்தைத் தவிர்ப்பதற்காக செனரத் நடவடிக்கைகளை மேற்கொண்டான். கண்டி இராச்சியத்தினை முப்பிரிவாகப் பிரித்து அதனை இளவரசர்கள் மூவரிடையேயும் பகிர்ந்தளித்தான். உளவா பிரதேசம் குமாரசிங்க இளவரசனுக்கும் மாத்தளைப் பிரதேசம் விஜேபால இளவரசனுக்கும் கண்டிப் பிரதேசம் இராஜசிங்க இளவரசனுக்கும் வழங்கப்பட்டன.
அவர்களுள் மிகவும் பலம்வாய்ந்தவன் இளைய வனான மகா ஆஸ்தான குமாரன் எனப்பட்ட இரண்டாம். இராஜசிங்கனாவான். இவன் இளம் வயதிலிருந்தே கண்டி இராச்சியத்தை போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பிலிருந்து பாது காத்துக் கொள்வதற்கு தந்தைக்கு உதவி புரிந்து வந்தான். வீரத்தில் முன்னணியில் இருந்த அவன், கி.பி. 1630ஆம் ஆண்டில் ரந்தெனிவெலப்போரில் போர்த்துக்கேயரைப் படுதோல்வியடையச் செய் தான். அத்தோடு எல்லையில் இருந்த போர்த் துக்கேயப் பிரதேசங்களைத் தாக்கி, அவர்களை முடக்கி வைத்தான்.
2 ம் இராஜசிங்க மன்னன் - 1635 - 1687
கி.பி. 1635 ஆம் ஆண்டில் செனரத் மன்னன் மரணித்ததுடன் இரண்டாம் இராஜசிங்கன் கண்டி இராச்சியத்தின் மன்னனானான். இவன் தனது ஆட்சியின்போது எதிர்நோக்கிய சவால்களாவன:
1. கண்டி இராச்சியத்தின் மீதான போர்த்துக் கேயரின் தாக்குதல்களை அடக்குதல்.
2. போர்த்துக்கேயரை இந்நாட்டிலிருந்து வெளி யேற்றுதல்,
3. கண்டி இராச்சியப் பிரபுக்களிடமிருந்து ஏற்பட்ட எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்தல்.
4. ஒல்லாந்தரின் ஆக்கிரமிப்பில் இருந்து கண்டி இராச்சியத்தை காத்துக் கொள்ளல்.
போர்த்துக்கேயரிடமிருந்து கண்டி இராச்சியத் துக்கு ஏற்படும் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு தனது தந்தையின் காலத்தில் இருந்தே செயற் பட்டு வந்துள்ளான். 1630 இல் இடம்பெற்ற ஊவாவின் ரந்தெனிவெல யுத்தம், 1638 இல் இடம்பெற்ற கன்னொறுவ யுத்தம் ஆகியவற்றில் போர்த்துக்கேயரைப் படுதோல்வியடையச் செய்தான்.
போர்த்துக்கேயரை இந்நாட்டிலிருந்து வெளி யேற்றுவதற்குக் கடற்படைப் பலமுள்ள அந்நியரின் உதவி தேவைப்பட்டது. அதற் காசு ஒவ்வாந்தரின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக ம ஆம் இராஜசிங்க மன்னன் செயற்பட்டான். கி.பி. 1638 1658 ஆண்டுகளுக்கிடையே ஒல்லாந்தரின் உதவியுடன் போர்த்துக்கேயரை இந்நாட்டின் கரையோரத்திலிருந்து முற்றாக வெளியேற்றினான். ஆனால் போர்த்துக்கேயரை இந்நாட்டில் இருந்து வெளியேற்றினாலும் அரசன் எதிர்பார்த்திராத விதமாக ஒவ்வாந்தர் அப்பிரதேசங்களில் தமது ஆட்சியை ஸ்தாபித்துக் கொண்டனர். 1658 ஆம் ஆண்டு தொடக்கம் தமது ஆட்சிப் பரப்பை விஸ்தரித்துக் கொள்வதில் ஒல்லாந்தர் கவனஞ் செலுத்தினர். கி.பி. 1665 - 1668 ஆம் ஆண்டுகளில் ஒல்லாந்தர் கண்டி இராச்சியத்தின் சில பிரதேசங் களைக் கைப்பற்றிக் கொண்டனர். அப்போது அமைதியாக இருந்த இராஜசிங்கன், கி.பி. 1670 -1675 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒல்லாந்தருக்கு எதிராகப் பல தாக்குதல்களை மேற்கொண்டு, அவர்கள் வசமிருந்த பவ பிரதேசங்களை மீட்டுக் கொண்டான். இதன் மூலம் கண்டி இராச்சியத்தின் பலத்தைப் புரிந்து கொண்ட ஒல்லாந்தர், அதிலிருந்து மன்னருடன் ஒற்றுமையாகச் செயற்பட ஆரம்பித்தனர்.
ஒல்லாந்தர் கரையோரப் பிரதேசங்களில் தமது ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்டமையால், முழுநாட்டிற்கும் மன்னனாகும் ஆசை கைகூடி வரவில்லை. என்றாலும் போர்த்துக்கேயரை இந்நாட்டில் இருந்து வெளியேற்றிய போது அவர்களிடமிருந்த கணிசமான பிரதேசங்களைத் தனது ஆட்சிக்கு உட்படுத்திக் கொள்ள மன்னனால் இயலுமாயிருந்தது. கற்பிட்டி, சிலாபம், திருகோணமலை, மட்டக்களப்பு முதலிய துறை முகங்கள் இக்காலத்தில் கண்டி இராச்சியத்திற்கு உரித்தாயின.
இவ்வாறாக கண்டி இராச்சியத்தின் ஆட்சிப் பரம்பலுக்கு வழிவகுத்த இம்மன்னன், ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆட்சிக்கால முடிவில் 1687 இல் காலமானான்.
2 ம் விமலதர்மசூரிய மன்னன் - 1687 - 1707
2 ம் இராஜசிங்கனின் மரணத்தின் பின்னர் அவனது மகனான 2 ம் விமலதர்மசூரியன் மன்னனானான். இவன் தந்தையைப்போல ஆற்றல் வாய்ந்தவனாக இருக்கவில்லை. இதனால் கண்டி இராச்சியப் பிரதானிகள் இக்காலத்தில் தமது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொண்டனர். இவன் மன்னனான பின்னர் ஒல்லாந்தருடன் சமாதானமாக நடந்துகொண்டான். திறமை வாய்ந்த அரசனாக இல்லாவிடினும் தனது தந்தையின் காலத்தில் விரிவடைந்திருந்த கண்டி இராச்சியப் பிரதேசங்களைப் பாதுகாத்துக் கொள்ள இவனால் இயலுமாயிருந்தது.
இம்மன்னன் ஆட்சிக்கு வரும்போது கண்டி இராச்சியத்தில் உபசம்பதா தளர்ச்சியுற்றிருந்தது. எனவே அதனைப் புத்தெழுச்சி அடையச் செய்வதற்காக பர்மாவில் இருந்து உபசம்பதாவைத் தருவித்து, உபசம்பதா சடங்கை நடத்துவித்தான். அதற்கு மன்னனுக்கு ஒல்லாந்தர் உதவியளித்தனர். அவன் தவதா மாளிகையை புனர்நிர்மாணம் செய்தான். 1707 ஆம் ஆண்டில் அவன் காலமானான்.
ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திரசிங்க மன்னன் - 1707 - 1739
இரண்டாம் விமலதர்மசூரிய மன்னனின் மகனான ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திரசிங்க, கி.பி. 1707 ஆம் ஆண்டில் கண்டி இராச்சியத்திற்கு மன்னனானான். இவனுக்கு ஆட்சித் துறையில் போதிய அனுபவம் இல்லாமல் இருந்தமை பெரும் பலவீனமாக அமைந்தது. இதனால் கண்டி இராச்சியத்தின் பிரதானிகள் தமது அதிகாரத்தை மேலும் வளர்த்துக் கொண்டனர்.
இவன் தனது தந்தையைப் போல தென்னிந்திய இளவரசி ஒருத்தியை மணந்து கொண்டான். இத்திருமண மூலம் மன்னனுக்கு குழந்தைப் பேறு கிட்டவில்லை. அதனால் தென்னிந்தியர்களின் வழக்கப்படி, அரசியின் சகோதரனுக்கு அரசு உரிமையானது.
நாயக்க அரச வம்ச ஆட்சி - 1739 - 1815
ஸ்ரீ விஜய இராஜசிங்க மன்னன் - 1739 - 1747
ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திரசிங்க மன்னன் வாரிசு இன்றி 1739 இல் இறந்தான். அப்போது தென்னிந்திய வழக்கப்படி மகாராணியின் சகோதரனான ஸ்ரீ விஜய இராஜசிங்க கண்டி இராச்சியத்திற்கு மன்னனானான். இவனில் இருந்தே நாயக்க வம்ச ஆட்சி ஆரம்பித்தது. ஸ்ரீ விஜய இராஜசிங்க மன்னன் எதிர்நோக்கிய பிரதான சவால் அரச சபை பிரதானிகளுக்கு இருந்த அதிக அதிகாரப் பவமாகும். இதனை சமநிலைப்படுத்துவதற்காக அவன் தனது உறவி னர்களான நாயக்கர்களுக்கு அரச சபையில் பதவிகளை வழங்கினான்.
புத்த சமயத்தைத் தழுவிக் கொண்டு நீண்ட காலமாக பிக்குகளுடனே வாழ்ந்த இவன், வெலி விட்ட சரணங்கர தேரரின் ஆலோசனைக்கு அமைய பர்மாவிலிருந்து குருமாரைத் தருவித்து, உபசம்பதாவை நடத்த முற்பட்டாலும் அது வெற்றிபெறவில்லை.
இம்மன்னன் தென்னிந்திய இளவரசியை திருமணம் செய்திருந்த போதிலும் வாரிசு இன்றி 1747 இல் இறந்தான்.
கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னன் - 1747 - 1781
ஸ்ரீ விஜய இராஜசிங்கன் மன்னனின் மரணத்தின் பின்னர் அவனுடைய மனைவியின் சகோதரனான கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க கி.பி. 1747 இல் கண்டி இராச்சியத்திற்கு மன்னனானான். பதவிக்கு வரும்போது பதினாறே வயதானபடியால் அவனு டைய தந்தையான நரேனப்பா நாயக்கன் ஆட்சியில் தலையிட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.
கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் மன்னனாகும்போது இந்நாட்டில் பௌத்த சமயம் பொலிவற்றுக் காணப்பட்டது. ஆகையால் வெலிவிட்ட சரணங்கர பிக்குவின் ஆவோசனைப்படி நாடெங்கும் பெளத்த சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இம் மன்னன் மேற்கொண்டான். அதன் பொருட்டு அவன் மேற்கொண்ட நடவடிக்கைகள் வருமாறு :
1. மன்னன் சீய நாட்டிற்கு தூதுக் குழுவொன்றை அனுப்பி உபாலி தேரர் உட்பட இன்னும் பல பிக்குகளை அழைத்து 1753 ஆம் ஆண்டில் உபசம்பதாவை நடத்தினான். அதன் மூலம் இன்றைய சியம் நிக்காய இங்கு ஆரம்பிக்கப்பட்டது.
2. கண்டி இராச்சியத்திலும் தாழ் நாட்டிலும் காணப்பட்ட விகாரைகளைப் புனரமைத் தமை.
3. வெலிவிட்ட ஸ்ரீ சரணங்கர பிக்குவிற்கு "சங்க ராஜா" பதவியை வழங்கி, பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்த அவருக்கு ஒத்துழைப்பை வழங்கியமை.
4. 1760 - 1765 காலகட்டத்தில் கண்டி இராச்சியத் திற்கும் ஒல்லாந்தருக்கும் இடையே நல்லுறவு முறிவடைந்தது. இதனால் இருசாராருக்கும் இடையே பல மோதல்கள் ஏற்பட்டன. 1766 இல் அரசனுக்கும் ஒல்லாந்தருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னரே அந்த மோதல்கள் முடிவடைந்தன. இம்மன்னன் 1781 ஆம் ஆண்டு வாரிசு உரிமையின்றி மரணமடைந்தான்.
இராஜாதி இராஜசிங்க மன்னன் - 1781 - 1798
கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனின் பின்னர் அவனுடைய சகோதரன் இராஜாதி இராஜசிங்கன் என்னும் பெயருடன் கண்டிக்கு மன்னனானான். இதுவரை கண்டி இராச்சியப் பிரதானிகளுக்கும் நாயக்க மன்னருக்கும் இடையிலான அபிப்பிராயபேதம் வளர்ந்து கொண்டிருந்தது.
இவனது ஆட்சியின்போது முக்கியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. கி.பி. 1796 இல் ஆங்கிலேயர் கரையோரத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டதே அதுவாகும். இம்மன்னனும் வாரிசின்றி கி.பி. 1798 இல் காலமானான்.
ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னன் - 1798 - 1815
இராஜசிங்க மன்னனின் மரணத்தின் பின்னர் அப்போது பிரதம பிரதானியாக இருந்த பிலிமத்தலாவையின் தேவைக்காக, கண்ண சாமி எனும் இளவரசன், ஸ்ரீ விக்கிரம இராஜ சிங்கன் எனும் பெயருடன் 1798 இல் சிம்மாச னம் ஏற்றப்பட்டான். இம்மன்னன் தனது நாயக்க உறவினரின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டவனாய் இருந்தபடியால், கண்டி இராச்சியப் பிரதானிகளுக்கும் மன்னருக்கும் இடையிலான உறவு சீர்க்கெடத் தொடங்கியது.
கி.பி. 1803 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் கண்டி இராச்சியத்தை ஆக்கிரமித்தபோதும் மக்களின் ஒத்துழைப்புடன் மன்னன் அவர்களை வெற்றி கொண்டான். இறுதிக்கால என்றாலும் இம்மன்னனின் ஆட்சியின்போது அவன் கொடூர மானவனாக நடந்து கொண்டபடியால், மன்ன னுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவும் சீர்கெட்டுச் சென்றது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆங்கிவேயர் கி.பி. 1815 பெப்ரவரி மாதத்தில் கண்டி இராச்சியத்திற்குப் படையை மன்னனைக் கைதுசெய்தனர். கி.பி. 1815 மார்ச் 2 ஆம் திகதி கண்டி இராச்சியப் பிரதானிகளுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே இடம்பெற்ற கண்டிய ஒப்பந்தப்படி இவ்விராச் சியம் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டது. ஆங்கிலேயரிடம் கைதியாக இருந்த மன்னன், ஆங்கிலேயரால் வேலூருக்கு நாடு கடத்தப்பட்டான்.
கண்டி இராச்சியத்தின் நிர்வாகக் கட்டமைப்பு
கண்டி இராச்சியத்தின் நிர்வாக அமைப்பில் முதன்மை நபராக விளங்கியவன் மன்னனா வான். மன்னனுக்கு உதவுவதற்காகப் பிரதானி கள் இருவர் இருந்தனர். அவர்கள் இருவரும் மன்னனுக்கு அடுத்தபடி அரசில் அந்தஸ்துப் பெற்றிருந்தனர். அரசின் முக்கிய கலந்துரையாடுவதற்கு அரச யங்களைக் விட சபை ஒன்று இருந்தது. அரசரின் தலைமையில்கூடும் அச்ச பைக்கு பிரதானிகள், திசாவைகள், தலைமைச் பிரதேச செயலாளர்கள் என்போர் த்தனர். நிர்வாகம் பல்வேறு பிரிவுக ளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அரசனின் நேரடி நிபட்டிருந்தன. அரசனின் மேற்பார்வையில் அரச மாளிகைச் சேவைகள் ரட்டவசம எனும் பிரதேசங்கள் பிரதம பிரதானி மூலம் நிர்வகிக்கப்பட்டது. பெருவரி அல்லது அந்தந்தப் பிரதானிகளின் கீழ் இயங்கிய வரி வசூலிக்கும் பிரிவு விகாரை, தேவாலயங்களின் நிர்வாகம் என்பன பிரதான அங்கங்களாயிருந்தன.
மன்னன்
1. நாட்டின் உயர் அதிகாரம் இவனுக்கே உரியது.
2. நாட்டின் அமைதியைப் பேணுவதும் பாது காப்பை வழங்குவதும் அரசனின் பிரதான செயற்பாடுகளாகும்.
3. சம்பிரதாய பூர்வமான, முன்னைய நடை முறைகளுக்கமைய மன்னன் செயற்பட வேண்டி இருந்தது.
4. நாட்டின் உயர் நீதித்துறை அதிகாரம் மன்னனிடமே இருந்தது. குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கும் அதிகாரம் மன்னனுக்கு மட்டுமே இருந்தது
5. நாட்டின் அனைத்து அரசியல் கருமங்களும் பொருளாதார செயற்பாடுகளும் நிர்வாகப் பணிகளும் அரசனைத் தலைமையாகக் கொண்டே செயற்பட்டன.
பிரதானிகள்
பிரதம பிரதானி, இரண்டாவது பிரதம பிரதானி என இரு பதவிகள் இருந்துவந்தன. பிரதம பிரதானி பல்லேசும்பா பிரதானி என்றும் இராண்டாவது பிரதம பிரதானி உடகம்பா பிரத என்றும் அழைக்கப்பட்டனர்.
பிரதானிகளின் கட்டளைகளை, செய்திகளை பிராந்திய அதிகாரிகளுக்குக் கொண்டு சென்ற வர்கள் கடுபுள்ளே எனக் குறிப்பிடப்பட்டனர். வெள்ளி பூண் இடப்பட்ட, முனை வளைந்த பிரம்பு ஒன்று அவர்களது பதவியின் அடை யாளமாக இருந்தது.
மாளிகைக்குப் பொறுப்பான அதிகாரிகள்
அரச பதவியின் கம்பீரத்தைப் பேணிக் கொண்டு அரசமாளிகைச் செயற்பாடுகளை நடத்திச் செல் வதற்கு இவ்வதிகாரிகளிடம் பொறுப்பளிக்கப் பட்டிருந்தது. அரச மாளிகையினருக்கு உணவு, குடிபானம், ஆபரணம், பாவனைப் பொருள்கள் என்பவற்றை வழங்குவது இவர்களது பொறுப்பாகும் மன்னரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இவர்கள் இயங்கினர். மாளிகையின் அந்தந்தப் பொறுப்புக்களுக்கு நிலமே என்போர் மற்றும் முகாந்திரங்கள் இருந்து வந்தனர். யானைகளுக்குப் பொறுப்பான கஜநாயக்க நிலமே பிரதம செயலாளர், களஞ்சியப் பொறுப்பாளர் புனித தந்ததாதுவிற்குப் பொறுப்பான தியவடன நிலமே, ஆடையணிகளுக்குப் பொறுப்பான சலுவடன நிலமே, உணவு வழங்கலுக்குப் பொறுப்பான பத்வடன நிலமே, குதிரைலாய முகாந்திரம், கவியரங்கிற்குப் பொறுப்பான முகாந்திரம் போன்றவர்கள் மாளிகை நிர்வாகத்தினராவர்.
பிரதேச நிர்வாகம்
கண்டி இராச்சியம் ரட்ட, திஸாவை என்று 21 பிரிவுகளால் ஆனதாகும். கண்டி நகருக்கு அருகாமையில் இருந்த உடுநுவர, யடிநுவர, தும்பனை, ஹரிஸ்பத்துவ, தும்பர, ஹேவாஹெட்ட, கொத்மல,உடபுலத்கம, பாத புலத்கம என்பவை ரட்ட என அழைக்கப்பட்ட பிரதேசங்களாகும். நான்கு கோறளை, மூன்று கோறளை, ஊவா, சப்ரகமுவை, மாத்தளை, வலப்பனை என்பவற்றுடன் 12 திஸாவைகள் இருந்தன. ரட்ட எனும் பிரதேசங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் ரட்டே ரால அல்லது ரட்டே மஹத்தயா எனப்பட்டனர். அவர்களுக்குக் கீழ் லியனரால் உண்டிய ராவ ஆகியோருடன் மற்றும் சிறு அதிகாரிகள் பவரும் இருந்துள்ளனர். திசாவைகளுக்குப் பொறுப்பானவர்கள் திஸாவைகள் எனப்பட்டனர்.
திசாவைகள் கோறளைகளாகவும், கோறளைகள் பற்று என்றும் பிரிக்கப்பட்டிருந்தன. கோற ளைக்குப் பொறுப்பான அதிகாரி கோறளை எனப்பட்டார். கோறளையில் ஒவ்வொரு குலத்தவருக்கும் முகாந்திரங்கள் இருந்ததோடு அவர்களுக்குக் கீழ் ஒவ்வொரு கிராமத்தின் ஒழுங்குக்குப் பொறுப்பாக விதானைகளும் இருந்தனர்.
வரி வசூலிப்பு
அரசியல் ரீதியாக அமைந்த பிராந்திய நிர்வாகங்களுக்கு மேலதிகமாக திசாவைகளில் வாழ்ந்துவந்த தொழில் அல்லது குலத்தின் அடிப்படையிலான தனியான அமைப்புகளும் காணப்பட்டன. ஆரம்ப காலத்தில் வரி அமைப்பு தனியாகச் செயற்பட்டாலும் கண்டி இராச்சியத்தின் இறுதிக் காலத்தில் அது திசாவைமாரின் கீழ் செயற்பட்டது. இவ்வமைப்பு கீழ்வரும் ஐந்து பிரிவுகளைக் கொண்டிருந்தது.
1. மடிகே பத்த - போக்குவரத்திற்கான வரி
2. குருவே பத்த - யானை பிடித்தலுக்கான வரி
3. படஹெல பத்த - வனைதலுக்கான வரி
4. ரதா பத்த - சலவைக்கான வரி
5. ஹெந்த பத்த - நெசவுக்கான வரி
விகாரைகள், தேவாலயங்களின் நிர்வாகம்
விகாரைகளின் நிர்வாகம் மஹாநாயக்க, அனு நாயக்க என்போரின் கீழ் செயற்பட்டது. தவதா மாளிகையின் நிர்வாகம் தியவடன நிலமேயின் கீழ் இருந்தது. விகாரைகள், தேவாலயங்கள் என்பவற்றைப் பரிபாலித்தல், பூஜைகள், பெரஹராக்கள் நடாத்துதல் என்பவற்றிற்கு கிராமத் தவர்கள் ராஜகாரிய முறையில் தமது சேவைகளை வழங்கினர்.
நீதிமன்றச் செயற்பாடுகள்
உயர் நீதி அதிகாரம் மன்னனுக்கே உரியது. ஒவ்வொரு உத்தியோகத்தருக்கும் அவரவர் உத்தியோகத்திற்கு அமைவாக நீதி அதிகாரம் இருந்தது. சில வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் மன்னனுக்கு மட்டுமே உரியது.
மன்னனால் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகள்
1. முக்கிய தலைவர் தொடர்பான வழக்குகள் கிளர்ச்சிகள், குழப்பங்கள் தொடர்பான வழக்குகள்.
2. சூழ்ச்சி தொடர்பான வழக்குகள்
3. இராச துரோகத்துடன் தொடர்புபட்ட வழக்குகள்.
4. விகாரைகள், பிக்குகள் தொடர்பான வழக்குகள்.
அக்காலத்தில் தவறு செய்தோருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் கன்னத்தில் அறைதல்.
1. விலங்கிடுதல்.
2. முழந்தாழிடச் செய்தல்.
3. முடியைக் கத்தரித்தல்.
4. தென்னை மட்டையால் அடித்தல்.
5. துர்நாற்றத்தின் மத்தியில் வைத்தல்.
6. கசையால் அடித்தல்.
7. கீழ் குலத்தவராக்குதல்.
8. நாடு கடத்துதல்.
9. நீரில் மூழ்கடித்துக் கொல்லுதல்.
10. யானையால் மிதித்துக் கொல்லுதல்.
பொருளாதார அமைப்பு
1. கண்டி இராச்சிய காலத்தில் விவசாயப் பொருளா தாரமே நிலவியது.
2. அது நுகர்வை அடிப்படையாகக் கொண்ட தாகும்.
3. பொருளாதாரம் சுயதேவையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
4. பெருமளவிற்கு மலைப்பாங்கான நிலமான படியால் நெற்செய்கைக்கான பிரதேசம் வரை யறுக்கப்பட்டிருந்தது.
5. இராசரட்டை. உருகுணுரட்டையின் பிர தேசங்கள் கண்டி இராச்சியத்திற்கு உட் பட்டிருந்தாலும் அங்கு இருந்த நீர்ப்பாசன அமைப்புக்கள் தீர்க்குலைந்து போயிருந்த மையால் நெற்செய்கைக்தான வசதிகள் வரை யறுக்கப்பட்டிருந்தன.
6. மலைப்பிரதேசங்களின் பள்ளத்தாக்குகளில் படிமுறையிலும் சம நிலங்களில் வயல் வெளிகளிலும் நெற்பயிர்ச் செய்கை மேற் கொள்ளப்பட்டது.
7. கண்டி இராச்சியத்தில் அதிகளவான நிலம் சேனைச் செய்கைக்கே பயன்படுத்தப்பட்டது.
8. குரக்கன், சோளம், தினை, சாமை போன்ற தானிய வகைகளும் கிழங்கு வகைகளும் பயிரிடப்பட்டன.
9. வீட்டுத் தோட்டங்களில் பலாக்காய், ஈரப் பலாக்காய், மிளகு, சாதிக்காய், கராம்பு, பாக்கு, மரக்கறி, பழவகை என்பன செய்கை பண்ணப்பட்டன.
10. மேலதிக பயிர்கள் மூலமும் உணவுத் தேவைகள் பூர்த்திசெய்துகொள்ளப்பட்டன.
11. இரும்பு உலோகம், மரம், அரக்கு, பன்புல் கைத் தொழில்கள் முன்னேற்றமடைந்திருந்தன.
12. விவசாயத் தேவைகளுக்காகவும் பால் பெறுவதற்காகவும் மிருக வளர்ப்பு இடம் பெற்றது.
சமூக அமைப்பு
1. நாட்டின் நிலம் அனைத்தும் அரசனுக்கே உரியது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
2. உரிமையையும் அனுபவித்தலையும் அடிப் படையாகக் கொண்டு நிலம் பல்வேறு வகைப்படுத்தப்பட்டிருந்தது;
கபடாகம் - அரச மாளிகையின் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டவை.
நிந்தகம் - பிரதானிகளின் சேவைக்காக வழங்கப்பட்டவை.
தேவாலயம் - தேவாலயங்களுக்கு தானமளிக்கப்பட்டவை.
விகாரகம் - விகாரைகளுக்கு தானமளிக்கப்பட்டவை.
3. நாட்டு மக்கள் தாம் அனுபவிக்கும் நிலத்திற்காக ஏதாவது ஒரு சேவையை அல்லது குறிப்பிட்ட தொகைப் பொருள்களை மன்னருக்கு வழங்க வேண்டியிருந்தது.
5. கிராமிய சமூகமே காணப்பட்டது.
6. கிராமங்கள் சுயதேவைப் பூர்த்தி அடைந்திருந்தன.
7. சமூகம் குலத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஒவ்வொரு குலத்தவருக்கும் உரித்தான பொருளாதார நடவடிக்கைகள் காணப்பட்டன.
8. திருமணங்கள் தத்தமது குலத்தவரிடையே இடம்பெற்றன.தீக. பின்ன, ஒரே வீட்டில் சாப்பிடுதல் என்றவாறு மூன்று வகைத் திருமணங்கள் இடம்பெற்றன.
9. கிராமிய சமூகத்தில் அனைத்து நடவடிக்கை களும் உழைப்புப் பரிமாற்று முறையில் இடம்பெற்றன.
10. குடும்பம் பிரதான சமூக அவகாகும்.
11. நற்பண்புகளைக் கைக்கொள்ளல் சமூகத்தின் பிரதான இலட்சணமாயிருந்தது.
12. கிராமிய வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சமாக விகாரைகள் காணப்பட்டன.
கண்டி மன்னர்கள்
சேனாசம்பத விக்ரமபாகு 1473 - 1511
ஜயவீர பண்டார 1511 - 1551
கரலியத்தே பண்டார 1551 - 1581
குசுமாசனதேவி 1581 - 1581
யமசிங்க பண்டார 1581
முதலாம் இராஜசிங்கன் 1581 - 1591
கோணப்பு பண்டார வம்சம்
முதலாம் விமலதர்மசூரியன் 1591 - 1604
செனரத் மன்னன் 1605 - 1635
இரண்டாம் இராஜசிங்கன் 1635 - 1687
இரண்டாம் விமலதர்மசூரியன் 1687 - 1707
வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் 1707 - 1739
கண்டி நாயக்கர் வம்சம்
ஸ்ரீ விஜய ராஜசிங்கன் 1739 - 1747
கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் 1747 - 1782
ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் 1782 - 1798
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் 1798 - 1815
நன்றி
0 Comments