யாப்பகூவ இராசதானி - KINGDOM OF YAPAHUWA


யாப்பகூவ இராசதானி


யாப்பகூவ இராசதானி - KINGDOM OF YAPAHUWA

1ம் புவனேகபாகு மன்னன் கி.பி. 1272-1284

கி.பி. 1272ல் தம்பதெனியாவில் ஆட்சியேற்று தனது சிறிது கால ஆட்சியின் பின் ஆட்சி மையத்தளமாக யாப்பகூவவை தெரிவு செய்தான்.

கதலிவாட, ஏபான, திப, ஹிமியாகை எனும் பெயர்களால் அறியப்பட்ட சிங்கள வன்னிப் பிரதானிகளினது அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டமை, காலிங்கராயர் மற்றும் சோடகங்கன் என்போர் தொடுத்த தென்னிந்திய ஆக்கிரமிப்பிற்கும் முகங்கொடுக்க நேரிட்டமை போன்றன இவன் எதிர்கொண்ட சவால்களாக காணப்படுகிறது.

வெளிநாட்டு தொடர்புகளும் இவனால் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

உதாரணம்: 

எகிப்திற்கு அனுப்பிய தூதுப்பயணம் ஒன்று பற்றி அராபிய அறிக்கை யொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


1ம் புவனேகபாகுவிற்கு பின்

1ம் புவனேகுபாகு மன்னனின் மரணத்திற்குப் பின்னர் இலங்கையில் அரசனற்ற காலம் ஒன்று உருவானதாக இலக்கிய மூலாதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பாண்டியரது ஆதரவைப் பெற்ற ஆரியச் சக்கரவர்த்தி எனப்படும் தமிழ் தளபதி யாப்பகுவவை ஆக்கிரமித்து தந்ததாதுவையும், பாத்திர தாதுவையும் கைப்பற்றிச் சென்று குலசேகரன் எனும் பாண்டிய மன்னரிடம் கொடுத்தான்.

இந்த அரசனற்ற காலப்பகுதியை தமக்குச்சார்பாக பயன்படுத்திக் கொண்ட 3ம் பராக்கிரமபாகு கி.பி 1281 - 1293 பாண்டியன் மன்னனின் பேச்சுவார்த்தை நடத்தி தந்ததாதுவை மீட்டெடுத்து யாப்பகுவவில் அரச அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டான். இதனை அறிந்த 2ம் புவனேகபாகு மன்னன் 3ம் பராக்கிரமபாகு ஆட்சி புரிந்த பொலன்னறுவை மீது ஆக்கிரமிப்பு நடாத்தி அவனைப் பதவி நீக்கம் செய்து யாப்பகூவையின் அரசனானான்.

கி.பி. 1292ல் மார்க்கோ போலோ எனும் இத்தாலி நாட்டு தேசப்பயணி இலங்கைக்கு வந்தமையும் இக்கால கட்டத்திலேயே ஆகும்.

யாப்பகூவ மன்னர்கள்
முதலாம் புவனேகபாகு  1272-1284

இடைக்காலம்  1287-1292

மூன்றாம் பராக்கிரமபாகு  1292-1299


நன்றி

Post a Comment

0 Comments