தம்பதெனிய
இராசதானி
பொலன்னறுவை இராசதானியின் இறுதி ஆட்சியாளனான பராக்கிரம பாண்டியனுடைய ஆட்சிக்காலமானது 1215ல் இடம்பெற்ற கலிங்க மாகனின் ஆக்கிரமிப்புடன் முடிவுற்றது. கலிங்க மாகன் இலங்கையில் பொலன்னறுவையை அண்டிய பகுதிகளிலும் இராசரட்டை வடமேல் பகுதிகள் மற்றும் மன்னார் போன்ற பகுதிகளில் தனது நேரடி அதிகாரத்தை நிலைநாட்டி கொண்டான்.
இதன் பின்னரான மாகனது மிகக் கொடிய ஆட்சிக்காலப்பகுதியில் தமது பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்த மக்கள் குன்றுகளையும், மலைகளையும் அண்டிய பகுதிகளிலும் தமது குடியேற்றங்களை அமைத்துக் கொண்டனர். அவ்வாறு இடம்பெயர்ந்து வந்த மக்களுக்குத் தலைமை தாங்கிய நால்வர் பற்றி மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுப தளபதி - யாப்பகுவ
சங்க தளபதி - மினிப்பே
3 ம் விஜயபாகு - தம்பதெனிய
இவற்றுள் சில ஆட்சி நிலையங்கள் பிற்காலத்தில் இலங்கையின் இராசதானிகளாகவும் உருவாகின.
யாப்பகுவ
குருணாகலை
கம்பளை
கோட்டை
3 ம் விஜயபாகு கி.பி 1232 - 1236
தம்பதெனியாவை தலைநகராக்கியவன் 3 ம் விஜயபாகு ஆவார். இவர் பற்றி அறிய பின்வரும் மூலாதாரங்கள் உதவுகின்றது.
பூஜாவலிய
ராஜ ரத்னாகா
3ம் விஜயபாகு மன்னனுடைய பூர்விகம் பற்றிய தகவல்களின் தெளிவின்மை. நாட்டின் முக்கியமான அரச வம்சத்தின் தொடர்ச்சியாக வந்தவன் என வம்சக் கதை களில் குறிப்பிடப்பட்டுள்ளமை. ராஜ ரத்னாகாரயில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி இவரது தந்தை கலிங்க வம்சத்தவராவார்.
சில பாண்டிய கல்வெட்டு ஆதாரங்களின்படி அவர் பாண்டிய வம்சத்திற்கு உரியவராவார். சில மூலாதாரங்களின் படி அவர் சிரிசங்கபோ பரம்பரையில் இருந்து வந்தவராகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
அரசியல் பணிகள்
3 ம் விஜயபாகு தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தது வன்னி பிரதானி ஒருவனாக என்று மகாவம்சத் திலும், பூஜாவிலியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பல பகுதிகளிலும் இருந்த தலைவர்கள் மத்தியில் மாகனுக்கு எதிராக சிறப்புற ஒழுங்கமைத்து செயற்பட 3ஆம் விஜயபாகு மன்னனுக்கு மட்டுமே பலமிருந்தது. சமகால மூலாதாரங்களில் இவர் வன்னி நிரிந்து என அறியப்படுகின்றார்.
மாயாரட்டை அல்லது தக்கிண தேசத்தை ஒன்றுபடுத்தி அங்கு அரசியல் உறுதித் தன்மையை கட்டியெழுப்ப முடியுமானவை மற்றும் தம்பதெனியாவை னஜம்புதுரோனி தனது ஆட்சி மையமாக ஆக்கிக் கொண்டமை.
தம்பதெனியாவை மதில் மற்றும் அகழி என்பவற்றின் மூலம் பாதுகாப்பான ஆட்சித்தளமாக உருவாக்கி எதிரிகளது தாக்குதல்களை முறியடிக்கக கூடிய மையத்தளமாக மாற்றியமைத்தமை.
சமய பணிகள்
கொத்மலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தந்ததாது மற்றும் பாத்திர தாதுவை பெலிகலவிற்கு எடுத்து வந்து அங்கு தலதா மாளிகையொன்று அமைத்து அதில் பாதுகாத்தமை.
தம்பதெனியாவில் விஜயசுந்தரா ராமய மற்றும் வத்தளையில் விஜயபாகு விகாரை என்பவற்றைக் கட்டுவித்தமை.
களனி விகாரையின் சைத்திய மற்றும் அங்கு அழிவுற்ற நிலையில் இருந்த கட்டிடங்களைப் புனர்நிர்மாணம் செய்வித்தமை.
2 ம் பராக்கிரமபாகு கி.பி 1236 - 1270
இவர் பற்றி அறிய உதவும் மூலாதாரங்கள்
பூஜாவலிய
தம்பதெனிய அஸ்ன
கந்தவுறு சிரித
இவர் தொடர்பாக அரசியல். சமயம், கல்வி வளர்ச்சி மற்றும் கலைகளின் மறுமலர்ச்சி எனும் துறைசார் தலைப்புகளில் நோக்கலாம்.
அரசியல் பணிகள்
சந்திரபானுவைத் தோற்கடித்தான்.
சந்திரபானுவின் முதலாவது ஆக்கிரமிப்பு மாகனிடமிருந்து நாட்டை விடுவீக்க மன்னன் நடவடிக்கைகளை மேற்கொண்டி ருக்கும் போது தென் கிழக்காசியாவில் தாமிரலிங்க தேசத்திலிருந்து வந்த சந்திரபானு இலங்கையை ஆக்கிரமித்தான். மன்னனது 11ஆவது ஆட்சி ஆண்டான கி.பி.1247ல் இந்த ஆக்கிரமிப்பு இடம்பெற்றது. இந்த ஆக்கிரமிப்பின் போது 2ம் பராக்கிரமபாகு தனது மருமகனான இளவரசன் வீரபாகுவை அனுப்பி சந்திரபானுவைத் தோற்கடித்தான்.
சந்திரபானுவின் இந்த ஆக்கிரமிப்பு இலங்கையின் தென்மேல் கடற்கரையோரப்பகுதியினூடாக இடம்பெற்றிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. சிலரது கருத்துப்படி இந்த ஆக்கிரமிப்பானது இலங்கையின் வடக்குத் துறைமுகமொன்றின் ஊடாக இடம்பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது, வீரபாகுவால் சந்திரபானு தோற்கடிக்கப்பட்ட பின்னர் சந்திர பானு தனது நாட்டிற்குத் திரும்பிப் போனதாக அறிய முடியவில்லை.
மூலாதாரங்களில் உள்ள தகவல்களின்படி சந்திரபானு தோல்வியுற்ற தனது படையினருடன் யாழ்ப்பாணக்குடா நாட்டில் தனது அதிகாரத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டான். யாழ்ப்பாணக் குடா நாட்டில் காணப்படும் சாவகச்சேரி, சாவன்கோட்டை, மற்றும் யாழ்ப்பாணக் குடா நாட்டின் தெற்கே காணப்படும் ஜாவக் கோட்டை எனும் பெயர்கள் அக்காலம் முதலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக எண்ணலாம்.
சந்திரபானுவின் 2 வது ஆக்கிரமிப்பு கி.பி. 1261 அல்லது 1262ம் ஆண்டுகளில் சந்திரபானு தென்னிந்தியாவில் இருந்து படை திரட்டி வந்து யாப்பகுவயைத் தாக்கியதாகக் குறிப்பிடப்படுகின்றது. இதன்போது யாப்பகுவவில் விஜயபாகுவும் அவனது சகோதர உறவான வீரபாகுவும் இருந்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பின் போது தம்பதெனிய ஆட்சியாளரிடம் புனித தந்ததாதுவையும் பாத்திர தாதுவையும் தருமாறு கேட்டனர். ஜடாவர்ம வீர எனும் பாண்டிய மன்னனால் அமைக்கப்பட்ட குச்சியாமலை கல்வெட்டில் குறிப்பிடப்படுவதன் படி இலங்கையில் இருந்த இரு மன்னர்களுள் ஒருவர் போர்க்களத்தில் உயிர் நீத்ததாக அறிய முடிகின்றது. இவ்விரு மன்னர்களுள் ஒருவரான 2ம் பராக்கிரமபாகுவால் சந்திரபானு தோற்கடிக்கப்பட பாண்டியரிடம் உதவி வேண்டப்பட்டுள்ளது. போர்க்களத்தில் சந்திரபானு இறந்தான். இதன் பின்னர் சந்திரபானுவின் மகன் ஒருவனுக்கு இலங்கையின் வட பகுதி ஆட்சியைப் பொறுப்பளித்து, பாண்டியருக்குக் கீழ்ப்பட்ட அரசாக வைத்திருந்துள்ளனர்.
2ம் பராக்கிரமபாகுவால் சந்திரபானு தோற்கடிக்கப்பட்ட பின்னர் பொலன்னறுவைக்குச் சென்று அங்கு மீண்டும் பட்டாபிஷேகம் நடாத்தப் பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொலன்னறுவையில் அதிக காலம் மன்னன் தங்கியிராததுடன் தனது மருமகனான வீரபாகுவிற்கு பொலன்னறுவையைப் பொறுப்பளித்து, மன்னன் தம்பதெனியாவிற்குத் திரும்பினான்.
கலிங்க மாகனைத் தோற்கடித்தல்.
கி.பி 1255ல் கலிங்க மாகன் 2ம் பராக்கிரமபாகுவினால் தோற்கடிக்கப்பட்டான். மாகனைத் தோற்கடிக்க பாண்டியப் பேரரசின் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனது உதவி 2ம் பராக்கிரமபாகுவிற்குக் கிடைத்ததாக தென்னிந்தியக் கல்வெட்டுகளில் அறியக்கிடைக்கின்றது. எனினும் இது பற்றிய ஆதாரங்கள் இலங்கை மூலாதாரங்களில் காணக்கிடைக்கவில்லை.
சமயப் பணிகள்
பெலிகலையிலிருந்து தம்பதெனியாவிற்கு புனித தந்ததாதுவை எடுத்து வந்தமை மற்றும் பூஜை செய்வித்தமை.
சாசனத்தை புனர்நிர்மாணம் செய்து பிக்குகள் சாசனத்தை ஒழுங்குபடுத்தி, திம்புலாகல மேதங்கர போன்ற மகா பிக்குகளது தலைமையில் சாசனத்தை புணர்நிர்மாணம் செய்து பிக்குகளது ஒழுக்ககரமான வாழ்விற்குத் தேவையான சட்டதிட்டங்களை உருவாக்கியமை. அதுவே தம்பதெனிய கதிகாவத எனப்படுகிறது.
தனது மகனான விஜயபாகு இளவரசனது மேற்பார்வையின் கீழ் ருவன்வெலிசாய உட்பட விகாரைகளை புனர்நிர்மாணம் செய்வித்தமை.
இந்தப் புணர்நிர்மாணங்களின் பின்னர் அநுராதபுர நகரின் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு என்பன வன்னிப் பிரதானிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பொலன்னறுவை நகரமும் புனர்நிர்மானம் செய்யப்பட்டது.
மகாவலி கங்கையின் தாஸ்தொட்டையில் உபசம்பதா வைபவம் நடத்தப்படல். தாமிரலிங்க தேசத்திலிருந்து தர்மகீர்த்தி தேரர் இந்நாட்டிற்கு வருகைத்தந்து, அவருடைய வழிகாட்டுதலுக்கமைய, வனவாசம் செய்யும் பிக்குகள் பரம்பரையை உருவாக்குதல்.
களனி விகாரை. பென்தொட விகாரை, கலப்பாத விகாரை, பெலிகல விகாரை, வாகிரிகல விகாரை மற்றும் தெவிநுவர உபுல்வன் தேவாலய என்பவற்றை புனர்நிர்மாணம் செய்தமை.
வெவ்வேறு பகுதிகளில் பிரிவெனாக்களை நிறுவியமையும் பிக்குகளின் கல்வி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுத்தமையும்.
இரத்தினபுரி மஹசமன் தேவாலயத்தை கடடுவித்தமை.
வருடாந்தம் கதீன எனப்படும் பௌத்த பூஜையை நடாத்தியமையும் பெரஹரா என்பவற்றை நடாத்த அனுசரணை வழங்கியமையும்.
மாகனால் கைப்பற்றப்பட்ட விகாரைச் சொத்துகளை மீளவும் அந்தந்த விகாரைகளுக்கு திருப்பி வழங்கியமை.
கல்வி மற்றும் கலை சார்ந்த பணிகள்
பிரிவெனாக்களை உருவாக்கியமையும் அவற்றை கலைகளின் மையத்தளங்களாக ஆக்கியமையும்.
குருநாகல மகேன்திர பிரிவெனா
பராக்கிரம பிரிவெனா
பலாபத்தல பிரிவெனா
தம்பதெனியா பிரிவெனா
விஜயசுந்தரா ரா பிரிவெனா
வெளிநாடுகளிலிருந்து திரிபீடகத்தில் புலமை பெற்ற பிக்குகளை அழைத்து வந்துபாளி இலக்கியங்களது வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுத்தமை.
மன்னன் படித்த பண்டிதனாக இருந்தமையும் நூலாசிரியனாகக் காணப்பட்டமையும்.
வனவினிச சன்னய
கவிசிலுமின
இவர் கலிகால சாஹித்திய சர்வக்ஞ பண்டித எனும் பட்டப்பெயர் உடையவராகக் காணப்பட்டார்.
நூல்களின் உருவாக்கத்திற்கு ஆதரவளித்தமை. இதனால் சிங்கள, பாளி, சமஸ்கிருத மொழிகளில் பல்வேறு துறைசார் நூல்கள் தோற்றம் பெற்றன.
தம்பதெனிய கால கல்வி
தம்பதெனிய யுகத்தில் கல்வி தொடர்பாக நோக்கும் போது 12ம் நூற்றாண்டில் காணப்பட்ட அஷ்டமூல பிரிவெனாக்களுக்கு ஒப்பாக இக்காலத்தில் பங்சமூல பிரிவெனா எனப்படும் கல்வி நிறுவனங்கள் பற்றி அறியக்கிடைக்கின்றது.
மயுரபாத பிரிவெனா மற்றும் தேவபதிராஜ பிரிவெனா என்பன இக்காலத்தில் காணப்பட்ட உன்னதமான இரு கல்வி மையத்தளங்களாகும்.
தம்பதெனிய கால இலக்கியம்
சிங்கள மொழியில் எழுதப்பட்ட நூல்கள்
2 ம் பராக்கிரமபாகு - சன்னய சிதத் சங்கராவ, வனவினிச சன்னய
வேதேக தேரர் - விசுத்தி மார்க்க சன்னய
தர்மசேன தேரர் - ரத்னாவலிய
பாளி மொழியில் எழுதப்பட்ட நூல்கள்
பங்சமூல பிரிவேனாதிபதி - பேசஜ்ஜமஞ்ஜுசா
அனேமதஸ்ஸி தேரர் - தைவக்ஞகாமதேனு
அனேமதஸ்ஸீ தேரரின் சீடன் - ஹத்தவனகல்ல விஹாரவங்சய
தம்பதெனிய மன்னர்கள்
இரண்டாம் பராக்கிரமபாகு 1236 - 1269
நான்காம் விஜயபாகு 1270 - 1273
முதலாம் புவனேகபாகு 1272 - 1272
நன்றி
0 Comments