குருநாகல் இராசதானி
2ம் புவனேகபாகு கி.பி 1293 - 1302 மன்னன் தனது ஆட்சி நிலையமாக குருணாகலையை அமைத்துக்கொண்டான்.
4ம் பராக்கிரமபாகு மன்னன் கி.பி. 1302 - 1326 அமைதியான ஆட்சிக்காலமாததால் நாட்டில் சாசன மற்றும் கலைத் துறைகளில் உச்ச வளர்ச்சி ஏற்பட்டது.
சான்றாக:
குருணாகலை நகரில் விசித்திரமான தலதா மாளிகை ஒன்றை அமைத்து அங்கு புனித தந்ததாதுவை வைத்தமை.
தெவுந்தரையில் இருமாடி விகாரையை அமைத்தமை.
வெலிகம அக்கரபோதி விகாரை மற்றும் வீதாகம கனானந்த பிரிவெனாக்களைக் கட்டுவித்ததமை.
கண்டி நகரில் அஸ்கிரி விகாரையைக் கட்டியமை.
பல மூலாதாரங்களில் மற்றும் பாளி மொழியில் இருந்த ஜாதகக் கதைகளை ஒன்று திரட்டி அவற்றைச் சிங்கள மொழிக்கு மொழிப்பெயர்ப்பு செய்து பன்ஸிய பனஸ் ஜாதக கதை என்ற நூலை எழுதுவித்தமை.
போன்றவற்றை குறிப்பிடலாம்.
இவன் போதி மாபா எனும் பிரபுவால் ஏற்படுத்தப்பட்ட கலகத்தில் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. 3ம் விஜயபாகுவுடன் ஆரம்பித்த தம்பதெனிய அரச பரம்பரை இவனுடன் முடிவடைந்தது .
4ம் பராக்கிரமபாகுவின் பின்னர் 3ம் புவனேகுபாகு மற்றும் 5ம் விஜயபாகு குருணாகலையில் ஆட்சிபீடம் ஏறினார்கள் .
குருநாகல் கால இலக்கியங்கள்
சிங்கள ஜாதக கதை நூலுருப்பெறல்
வில்கம்முல ஸ்ரீ பராக்கிரமபாகு தேரரின் எலு போதி வம்சம்அனாகத வம்சம்
தெவ்தர தம்பசங்கினாவனின் தலதா சிறித
தாதுமஞ்ஜுசாவ
குருநாகல் மன்னர்கள்
இரண்டாம் புவனேகபாகு 1293-1302
நான்காம் பராக்கிரமபாகு 1302-1326
மூன்றாம் புவனேகபாகு 1326-1335
ஐந்தாம் விஜயபாகு 1335-1341
நன்றி
0 Comments