கம்பளை இராசதானி - KINGDOM OF GAMPOLA


 கம்பளை இராசதானி


கம்பளை இராசதானி - KINGDOM OF GAMPOLA


4ம் புவனுேகபாகு மன்னன் (கி.பி. 1341 - 1351) கம்பளைக்குத் தனது இராசதானியை மாற்றியமைத்தான்.

1344ல் அரபு நாட்டு நாடுகாண் பயணியான இப்னுபதூதா இலங்கை வரல். இக்காலகட்டத்தில் வடக்கே ஆரியச் சக்கரவர்த்திகள் பலம் பெற்றிருந்ததாக இப்னுபதூதாவின் குறிப்புக்களிலிருந்து தெரிய வருகின்றமை.

4ம் புவனேகபாகு மன்னன் கம்பளையில் ஆட்சி செய்யும் காலத்தில் 5ம் பாராக்கிரமபாகு மன்னன் கேகாலை மாவட்டத்தில் தெதிகமவை மையமாகக் கொண்டு அரசாண்டு வந்தான். 4ம் புவனேகபாகு மற்றும் 5ம் பராக்கிரமபாகு எனுமிருவரும் 5ம் விஜயபாகுவின் அல்லது சவுலு விஜயபாகுவின் புத்திரர்கள் ஆவர்.


தெதிகம


தெதிகம பிரதேசம் ஆட்சி மையத்தளமாக முதன்முதலில் 12ம் நூற்றாண்டிலேயே முக்கியத்துவம் பெற்றது. 1ம் பராக்கிரமபாகுவின் தந்தையான மானாபரண தக்கிண தேசத்தில் ஆட்சி செய்யும் போது ஆட்சி மையத்தளமாக இருந்த புங்ககாமவே, தெதிகம என அறியப்பட்டுள்ளது.

5ம் பராக்கிரமபாகு தெதிகமவில் ஆட்சி பீடமேறி கி.பி 1351 ல் கம்பளையில் அரசனாகும் வரை சுமார் பத்து வருடங்கள் வரையில் தெதிகம சுதந்திர அரசாக இருந்ததாக நம்பப்படுகிறது.

4ம் புவனேகுபாகுவின் மரணத்தின் பின்னர் 5ம் பராக்கிரமபாகு மன்னன் கம்பளைக்கு வந்து ஆட்சியை ஏற்றான்.

முற்காலத்தில் அரச குடும்பங்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாத புதிய இருவர் இக்காலப்பகுதியில் அரசியல் துறையில் தோன்றினர். 

01. சேனாதிலங்கார தளபதியின் குடும்பம் 

02. அழகக்கோனார் குடும்பம் 


சேனாதிலங்கார தளபதியின் குடும்பம்


இப்பரம்பரையின் தலைவர் சேனாதிலங்கார ஆவார். இவர் வர்த்தகத்தினால் பெருமளவில் சொத்துடையவராகக் காணப்பட்டார். 4ம் புவனேகபாகு மற்றும் 5ம் பராக்கிரமபாகு மன்னர்களின் காலத்தில் அமைச்சராகவும் சேனாதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார்.

சேனாதிலங்கார செய்த முக்கிய பணியாக லங்காதிலக விகாரை அமைத்த மையைக் குறிப்பிடலாம்.

லங்காதிலகயில் அலவல குன்றுக் கல்வெட்டில் சேனாதிலங்காரவினால் லங்காதிலக விகாரை அமைத்தமை மற்றும் அதற்கு அவரும் ஏனையோரும் செய்த உபகாரங்கள் பற்றியும் காணப்படுகின்றது.


அழகக்கோனார் குடும்பம் 


வர்த்தகத்தினால் பெருமளவில் சொத்து உடையோராகக் காணப்பட்டனர்.

கித்சிரிமேவனது களனி கல்வெட்டுப்படி இந்தப் பரம்பரையின் முதலாமவர் இந்தியாவில் கேரளத்தில் உள்ள முக்கிய நகரொன்றான வங்சிபுரத்திலிருந்து வந்துள்ளார். றைகமவை மையத்தளமாகக் கொண்டு பெரும் பலமுடையவராகக் காணப்பட்ட நிஸ்ஸங்க அழகக்கோனார் சுல்தான் அல்லது அரசன் என இப்னு பதூதாவினால் குறிப்பிடப்பட்டுள்ளார். 

அத்தோடு அவரிடம் அரச அதிகாரத்தின் சின்னமாக வெள்ளை யானை ஒன்றும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இப்னு பதூதாவின் நூல் மூலமாகவும் ஏனைய மூலாதாரங்களை ஆராய்ந்ததன் விளைவாகவும், 1344ம் வருடமாகும் போது அழகக்கோனார் பரம்பரையில் பிரபு ஒருவர் றைகமவை மையமாகக் கொண்டு பெரும் பலத்தைக் கட்டியெழுப்பி யிருந்ததாக முடிவிற்கு வர இயலுமாகின்றது. எனினும் அவர் கம்பளை அல்லது தெதிகம ஆட்சியாளர்களுக்கு எதிராகச் செயற்படவில்லை.

5ம் பராக்கிரமபாகுவின் பின்னர் கம்பளை மன்னனான 3ம் விக்கிரமபாகு மிகவும் பலவீனமான அரசனாகக் காணப்பட்டான். இக்காலத்தில் சேனாதிலங்காரவின் பலம் குன்றியிருந்ததுடன் விக்கிரமபாகுவின் இறுதி ஆட்சிக் காலத்தில் அழகக்கோனார் அரச சபையில் பிரதம மந்திரியாக இருந்தார்.

எவ்வாறாயினும் அவர் பிரபுராஜா எனும் பட்டப்பெயரால் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதுடன் பெரும் பலத்தை உடையவராகக் காணப்பட்டார். நிஸ்ஸங்க அழகக்கோனார் விக்கிரமபாகு மன்னனது சகோதரி ஒருவரைத் திருமணம் செய்து அரச குடும்பத்துடன் உறவுகளை ஏற்படுத்தித் தனது அதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொண்டார்.

இதன்போது வடக்கே ஆரியச் சக்கரவர்த்தி பலம் பெற்றிருந்ததுடன் அவரது அதிகாரிகள் நீர்கொழும்பு, சிலாபம், வத்தளை, கொழும்பு எனும் மேற்குத் தறைமுகப் பகுதிகளில் வரி அறவீட்டில் அடிக்கடி ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். இதனால் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில் கம்பளை மன்னனுக்குப் பெரும் நட்டம் ஏற்பட்டமை.

ஆரியச் சக்கரவர்த்தியின் இச்செய்கையை நிறுத்த நிஸ்ஸங்க அழகக்கோனாரால் பாதுகாப்புக் கோட்டையொன்று ஜயவர்தனபுரத்தில் கட்டியெழுப்பப்பட்டமை போதியளவினலான உணவை கோட்டையில் களஞ்சியப்படுத்திய பின்னர் அமைச்சர் நிஸ்ஸங்க அழகக்கோனார் ஆரியச் சக்கரவர்த்தியின் வரி அறவிடும் அதிகாரிகளை விரட்டியடித்ததாக ராஜாவலிய மற்றும் அழகேஷ்வர யுத்தய என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கோபமுற்ற ஆரியச் சக்கரவர்த்தி தன் படையை அனுப்பியதுடன் அது அழகக் கோனாரின் படையினரால் துரத்தியடிக்கப்பட்டது. அழகக்கோனாரின் இவ்வெற்றிகளின் பின் கம்பளை மன்னனாக 5ம் புவனேகபாகு பெயரளவில் ஆட்சிப்பீடம் ஏறினாலும் நிஸ்ஸங்க அழகக்கோனார் அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் முன்னுரிமை வகிப்பவராகக் காணப்பட்டார்.

எலு அத்தனகலு வங்க அழகக்கோனாரை ஸ்ரீ லங்காதீஸ்வர என அழைக்கின்றமை.

கி.பி. 1382ல் அழக்கோனார் இறந்தமை. அதன் பின் வந்த அழகக்கோனார் பரம்பரையினர் அந்தளவில் பலம் பெற்றிருக்காமை.

நிஸ்ஸங்க அழக்கோனாரின் பின்னர் குமார அழகேஷ்வர என்பவர் றைகம நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் அதன் பின்னர் வீர அழகேஷ்வர அப்பதவியைப் பெற்றுக் கொண்டமை.

கி.பி. 1405,1409 மற்றும் 1411 எனும் வருடங்களில் சீனாவின் யுங்லோ எனும் பேரரசன் அனுப்பிய சென் ஹோ எனும் தளபதி இலங்கைக்கு வந்துள்ளமை. 1409ல் அவன் இலங்கை வந்த போது றைகம் அழகேஷ்வர அவனை உரிய முறையில் வரவேற்கவில்லை. எனவே அவன் தான் கொண்டுவந்த காணிக்கைகளை தெவுந்தர தேவாலயத்திற்கு அளித்து காலியில் மும்மொழியிலான கல்வெட்டைப் பதித்தான்.(சீன,பாரசீக, தமிழ் மொழிகளில் எழுதப்பட்டுள்ளது). 

பின்னர் கி.பி. 1411ல் பெரும் படையுடன் இலங்கை வந்த அவன், வீர அழகேஷ்வர உட்பட அவரது உறவினர்களைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளான். இந்நிகழ்வினால் அழகேஷ்வரப் பரம்பரையினர் இலங்கை அரசியல் துறையிலிருந்து நீங்கினர்.


கம்பளை காலத்து இலக்கியம்


சிங்கள மொழியில் எழுதப்பட்ட நூல்கள்

சத்தர்மாலங்காரய

நிகாய சங்கிரஹய

பாலாவதார சன்னய

திசர சந்தேஷய 

மயுர சந்தேஷய

எலு அத்தனகலு வங்சய


பாளி மொழியில் எழுதப்பட்ட நூல்கள்

பாரமி மஹா ஷதகய

வுத்தமாலா சன்தேஷ ஷதக

விமுக்தி சங்கிரஹய


கம்பளை கால கலைகள்


தென்னிந்தியக் கலைஞர்கள் இங்கு வந்தமையும் அவர்கள் இந்நாட்டு கலை நடவடிக்கைகளில் ஈடுபட்டமையும்

உதாரணம்: 

தர்மகீர்த்தி எனும் பிக்குவுடன் வந்த கணேஷவராசாரி உட்பட்ட கலைஞர்கள் கடலாதெனிய, லங்காதிலக, விஜயோத்பாய, நியம்கம்பாய எனும் விகாரைகளை அமைத்தமை. 

விகாரைகள் மற்றும் தேவாலயங்களில் மரச்செதுக்கல் வேலைப்பாடு இக்காலத்தில் பிரசித்தம் பெறல் 

உதாரணம்:

எம்பக்க செதுக்கல் வேலைப்பாடுகள்


கம்பளை மன்னர்கள்


நான்காம் புவனேகபாகு   1341-1351

ஐந்தாம் பராக்கிரமபாகு   1344-1359

மூன்றாம் விக்கிரமபாகு   1357-1374

ஐந்தாம் புவனேகபாகு   1374-1405

வீரபாகு  1391-1396

வீரஅழகேஸ்வரன்  1397-1409  




Post a Comment

0 Comments