கோட்டை இராசதானி
6 ம் பராக்கிரமபாகு
கோட்டை இராசதானி 6ம் பராக்கிரமபாகுவின் ஆட்சியேற்புடன் ஆரம்பமாகின்றது.
கி.பி.1412ல் றைகமவில் அதிகாரம் பெற்ற இவன் கி.பி.1415ல் ஜயவர்தனபுரக் கோட்டையைத் தனது ஆட்சி மையத்தளமாக அமைத்துக்கொண்டான். இவர் பற்றி அறிய உதவும் மூலாதாரங்கள்:
இலக்கியம் :
ராஜாவலிய
அழகேஷ்வர யுத்தம்
பெரகும்பா சிரித
சந்தேஷ காவ்ய
காவிய ஷேகரய
கூட்டோவின் அறிக்கை.
தொல்பொருள்:
பெப்பிலியான கல்வெட்டு
சமன் தேவாலய கல்வெட்டு
தெனவக சாசனம்
கடலாதெனிய கல்வெட்டு
மடவள கல்வெட்டு.
மன்னனது சிறுபராயம், அரச பதவியேற்பு மற்றும் ஆட்சியுரிமை என்பன பற்றிய பல்வேறு பாரம்பரியக் கதைகள் பிற்கால எழுத்தாளர்களது நூல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பெரக்கும்பா சிரிதவில் உள்ளதன்படி, அவரது தந்தை கம்பளையை ஆட்சி செய்த ஓம் பராக்கிரமபாகுவின் பேரனொருவனான லமனி ஜயமஹலேன என்பவராவார். தாய் சுனேத்ரா தேவியாவார். 6ம் பராக்கிரமபாகு காலத்தில் இலங்கை வந்த வங்காள சமஸ்கிருத எழுத்தாளரான ஸ்ரீ ராமசந்திர பாரதியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ராஜாவலியவில் குறிப்படுவதன்படி கம்பளை யுகத்தில் இலங்கையை ஆக்கிரமிப்புச் செய்த தளபதி சென் ஹோவினால் வீர அழகேஷ்வர மற்றும் அவரது உறவினர்கள் சீனாவிற்குக் கொண்டு செல்லப்பட்ட போது அதில் ஜயமஹலேனவும் இருந்ததாகக் காணப்படுகின்றது. அதன் பின்னர் இளவரசன் பராக்கிரமபாகு தன் தாயுடன் பிரதேச ஆட்சியாளர் ஒருவரது பாதுகாப்பின் கீழ் வாழ்ந்துள்ளார்.
சீனத் தளபதியினால் இளவரசன் பராக்கிரமபாகுவும் சீனாவிற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பின்னர் பேரரசனால் இளவரசனுக்கு அபயமளிக்கப்பட்டதாகவும் அவனை இலங்கைக்கு அனுப்பி அரசனாக்கியதாகவும் போர்த்துககேய வரலாற்றாசிரியர் ஒருவரான தியொகு த குட்டோ குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பணிகள்
உள்நாடு
1ம் பராக்கிரமபாகுவின் பின்னர் இலங்கையை ஒன்றுபடுத்த முடிந்தமையும், அதனை நிலையாகப் பேணியமையும், அதற்காக அவர் கையாண்ட நடவடிக்கைகளும் பின்வருமாறு.
இக்காலப்பகுதியில் சமமாக தன் அதிகாரப் பலத்தை வளர்த்துக் கொண்டிருந்த தெதிகம பராக்கிரமபாகு மன்னனைக் கீழ்ப்படியச் செய்ய நடவடிக்கைகள் எடுத்தமை. பௌத்த சமயத்திற்குப் பெருமளவில் ஆதரவளித்து பிக்குமாரது உள்ளங்களை வென்றதுடன் பிரசித்தமான ஆட்சியாளனாக முயன்றமை. இதனால் தெதிகமவில் தங்கியிருந்த பிக்குக்கள் கோட்டை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வந்து வசிக்கத் தொடங்கியமை.
இலங்கைக்கு வந்த சீயம் மற்றும் காம்போஜ பிக்குகளினது குழுவொன்றிற்கு சிங்கள உபசம்பதா விழாவை மன்னன் தனது ஆதரவில் நடாத்தியமை.
தெதிகம பராக்கிரமபாகு மன்னன், 6 ம் பராக்கிரமபாகு மன்னனது இளவரசனாகச் செயற்பட்டிருப்பதாக பரவி சந்தேஸயில் உள்ள தகவல்கள் அடிப்படையில் தெளிவு பெற முடிகின்றது இதனூடாகத் தெதிகம உட்பட நான்கு கோரளை மற்றும் மலைநாட்டுப் பிரதேசங்களில் தனது அதிகாரத்தைப் பரவச் செய்ய முடிந்தமை. உலர் வலயம் மற்றும் ருஹுனு ரட்டையில் காணப்பட்ட சுதந்திர ஆட்சி அலகுகள் மற்றும் வன்னியர்களைக் கீழப்படியச் செய்தமை, வன்னித் தலைவர்கள் 18 பேரைக் கீழ்ப்படியச் செய்ததாக சந்தேசயில் குறிப்பிடப்பட்டுள்ளமை.
சப்புமல் குமார உட்பட பெரும் படை ஒன்றை அனுப்பி வடக்கே ஆரியச் சக்கரவர்த்தியின் கீழ் இருந்த யாழ்ப்பாண இராசதானியைக் கைப்பற்றியமை. மலைநாட்டில் ஜோதிய இளவரசன் ஏற்படுத்திய கலகத்தை அம்புலுகல குமாரனை அனுப்பி முறியடித்தமை.
மலைநாட்டில் பலம் பெற்றிருந்த கிராமத் தலைவனான விக்ரமபாகுவின் கீழ்ப்படிதலைப் பெற்றுக்கொண்டமை.
வெளிநாடு
தென் இந்தியாவின் அதிவீரராம பட்டினத்தை ஆக்கிரமிப்பு செய்தமை. . விஜயநகரப் பேரரசின் துறைமுகங்களை ஆக்கிரமிப்புச் செய்தமை.
கலாச்சார பணிகள்
பழைய வழிபாட்டிடங்களை அபிவிருத்தியடையச் செய்ய நடவடிக்கை எடுத்தமை. சிவனொளிபாதமலை, அத்தனகல்ல விகாரை, கடலாதெனிய, லங்காதிலக, மஹியங்கண, களனி விகாரை போன்ற பெளத்த வணக்கஸ்தலங்களை வளர்ச்சியடையச் செய்தமை. .
தனது தாயின் பெயரில் பெப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவெனாவை அமைத்து அதன் நிர்வாக நடவடிக்கைகளுக்குக் கிராமங்களைப் பரிசாகப் பெற பூஜை செய்ததாக பெப்பிலியான சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருமளவிலான பிரிவெனாக்கள் வளர்ச்சியுற்றிருந்தமை மற்றும் கற்ற பண்டிதர் பலர் இருந்தமை.
அரசன் உடபட அமைச்சர்கள் பலர் நூலுருவாக்கத்தில் ஈடுபட்டமை.
ஸ்ரீராமச்சந்திர பண்டிதர் போன்ற கற்ற பணடிதர்கள் இலங்கை வந்தமை.
6 ம் பராக்கிரமபாகுவின் பின்
6ம் பராக்கிரமபாகுவின் மகள் உலகுடைய தேவிக்கும் நன்னூர்த்துணைவருக்கும் பிறந்த ஜயபாகு இளவரசன், வீர விக்ரமபாகு எனும் பெயரில் சிம்மாசனம் ஏறியமை.
யாழ்ப்பாண அரசனாக இருந்த சப்புமல் குமாரன், 6ம் புவனேகபாகு எனும் பெயரில் ஆட்சிக்கு வந்தமை. மன்னனது நான்காம் ஆட்சியாண்டில் சிங்கள பெரலிய (ராஜாவலிய) சிங்கள சங்கய (தெதிகம கல்வெட்டு) எனும் பெயரில் அறியப்பட்ட கலகத்திற்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டமை. அம்புலுகல குமாரன், 8ம் வீர பராக்கிரமபாகு எனும் பெயரில் ஆட்சிப்பீடமேறியமை.
9 ம் தர்ம பராக்கிரமபாகு
6ம் விஜயபாகு மன்னனது ஆட்சிக்காலம் மற்றும் விஜயபாகு கொள்ளை. தர்மபால இளவரசனது ஆட்சிக் காலமும் கோட்டை இராசதானியின் வீழ்ச்சியும்.
கோட்டை கால கல்வி
6ம் பராக்கிரமபாகு மன்னனது அமைதியான ஆட்சிக் காலத்தில் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சி ஏற்படல்.
வீதாகம ஸ்ரீ கனானந்த, தொட்டகமுவே விஜயபா, தேவேந்திர இறுகல்குல திலக, காரகல பத்மாவதி, பெப்பிலியான சுனேத்ரா தேவி, ரெபத்தொட தர்மராக போன்ற பல பிரிவெனாக்கள் வளர்ச்சியுற்று இருந்தமை. இக்கல்வி நிலையங்களில் இருந்த பெரும் எண்ணிக்கையான பிக்குக்கள் கலைப் பணியில் ஈடுபட்டமை.
இக்கல்வி நிலையங்களில் சிங்களம், பாளி, சமஷ்கிருதம், பிராகிருதம், தமிழ் எனும் மொழிகளும் காவியம், நடனம், ஜோதிட சாஸ்திரம் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டன.
இக்காலத்தில் இருந்த கல்வி நிலையங்கள் சர்வதேச ரீதியில் கீர்த்தியுடன் விளங்கியமையால் சமஸ்கிருத பண்டிதர் ஒருவரான ஸ்ரீ ராமச்சந்திர பாரதி எனும் பண்டிதர் இலங்கை வந்தமை.
கோட்டை கால இலக்கியம்
பல வகையிலான நூல்கள் எழுதப்பட்டமை.
தூது காவியம்
பக்தி காவியம்
யுத்த காவியங்கள்
அறநெறி நூல்கள்
போதனைக் காவியங்கள்
துறவிகள் மட்டுமன்றி துறவு வாழ்வு மேற்கொள்ளாதவர்களில் பண்டிதர்கள் பலரும் நூலாக்கத்தில் ஈடுபட்டமை.
வேத்தேவே தேரர் - குத்தில காவியம்
இறுகல் குலதிலக பிரிவெனா தேரர் - கோகில சந்தேஷய
விமலகீர்த்தி தேரர் - சத்தர்மரத்தகாரய
தொட்டகமுவே ஸ்ரீ ராஹூல தேரர் - காவியஷேகரய, பஞ்சிகா பிரதீபய,செலலிஹினி சந்தேஷய, பரவி சந்தேஷய
வீதாகாம மகா மைத்திரிய தேரர் - புதுகுண அலங்காராய, லொவெட சங்கராவ, ஹன்ச சந்தேசய
6ம் பராக்கிரமபாகு - ருவன்மல நிகண்டுவ
ஸ்ரீ ராமசந்திர பாரதி - பக்தி சதகம்
நன்ணருந்துணையார் - புராண நாமவாலிய, சரசோதி மாலை எனும் தமிழ் சோதிட நூல்,பெரகும்பா சிரித, கிரா சந்தேஷ, குவேனி அஸ்ன, எலுசிலோ சதகய
கோட்டை மன்னர்கள்
ஆறாம் பராக்கிரமபாகு 1412 - 1467
இரண்டாம் ஜயபாகு 1467 - 1472
ஆறாம் புவனேகபாகு 1472 - 1480
ஏழாம் பராக்கிரமபாகு 1480 - 1484
எட்டாம் வீரபராக்கிரமபாகு 1484 - 1508
ஆறாம் விஜயபாகு 1508 - 1521
ஏழாம் புவனேகபாகு 1521 - 1551
தர்மபாலன் 1551 - 1597
நன்றி
0 Comments