யாழ்ப்பாண இராசதானி - KINGDOM OF JAFFNA


யாழ்ப்பாண இராசதானி


யாழ்ப்பாண இராசதானி - KINGDOM OF JAFFNA

யாழ்ப்பாண இராசதானி தொடர்பான தகவல்கள் பெற்றுக் கொள்வதற்கான மூலாதாரங்கள்:

யாழ்ப்பாண வைபவமாலை

செகராச சேகரமாலை

கைலாச மாலை 

13ம் நூற்றாண்டின் அரைப்பாகத்தில் ஜாவா நாட்டுச் சந்திரபானு மன்னன் வடக்கே யாழ்ப்பாணக் குடா நாட்டிலும் சில வன்னிப் பிரதேசங்களிலும் தன் அதிகாரத்தைப் பரவச் செய்து ஆட்சி செய்ததாக மூலாதாரங்களிலுள்ள தகவல்களின் அடிப்படையில் அறிய முடிவதுடன்,

2ம் பராக்கிரமபாகு தம்பதெனியாவை ஆட்சி செய்த காலத்தில்  பாண்டியரது பூரணமான உதவியுடன் சந்திரபானுவைத் தோற்கடித்ததோடு அதன் பின்னர் பாண்டியர் வடபகுதியில் தம் பிரதிநிதியாக சந்திரபானுவின் மகன் ஒருவனையும் நியமித்தனர்.

பாண்டியரது ஆட்சி பலவீனமுற்ற நிலையில் 1310 - 1311 வரையான காலப்பகுதியில் ஆரியச்சக்கரவர்த்திகள் வடபகுதியில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர். 

அந்த வகையில் யாழ்ப்பாண வைபவ மாலை கூறும் ஆரியச்சக்கரவர்த்திகளாக,

விஜய கூழங்கை 

குலசேகர

விக்கிரம சிங்கன்

வரோதயன்

மார்த்தாண்டன்

குணபூசனன்

வரோதயன்

ஜயவீரன்

கனகசூரியன்

பரராஜசேகரன்

சங்கிலியன் 

போன்றவர்களை குறிப்பிடலாம்.

இவர்கள் பாண்டிய பேரரசின் தென் பகுதியொன்றான வெச்சருக்கை நாடு எனும் பிரதேச ஆட்சியாளர்களது குடும்பத்துடன் தொடர்புடையவர்களாவர் எனக் கருதப்படுகிறது. 

இப்பரம்பரைக்குரிய 12 ஆட்சியாளர்கள் பற்றிய தகவல்கள கிடைக்கப்பட்டுள்ளன. அவ்வனைவரதும் பெயர்களின் பின்னால் சிங்கை ஆரியன் எனும் பெயர் காணப்படுவது சிறப்புக்குரிய விடயமாகும்.

1344 ல் இலங்கை வந்த இப்னு பதுாதா ஆரியச்சக்கரவர்த்தியை இலங்கையின் சுல்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

3 ம் விக்கிரமபாகு காலத்தில் கம்பளை இராசதானியைத் தாக்கிய இவர்கள்  அங்கு சில பகுதிகளில் வரி அறவிட்டதாகவும் கூறப்படுகிறது .

கோட்டை இராசதானி மன்னனான 6 ம் பராக்கிரமபாகு சப்புமல் குமாரனை அனுப்பி ஆரியச்சக்கரவர்த்தியை தோற்கடித்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி நாட்டை ஒருமுகப்படுத்தினான்.

அதன் பின்னர் போர்த்துக்கேயரால் 1619 ல் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டதோடு இவ் இராசதானி வீழ்ச்சி அடைந்தது.


யாழ்ப்பாண மன்னர்கள்

கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி  1210 - 1246

குலசேகர சிங்கையாரியன்  1246 - 1256

குலோத்துங்க சிங்கையாரியன்  1256 - 1279

விக்கிரம சிங்கையாரியன்  1279 - 1302

வரோதய சிங்கையாரியன்  1302 - 1325

மார்த்தாண்ட சிங்கையாரியன்  1325 -1348

குணபூஷண சிங்கையாரியன்  1348 -1371

வீரோதய சிங்கையாரியன்  1371 - 1394

சயவீர சிங்கையாரியன்  1394 -1417

குணவீர சிங்கையாரியன்  1417 - 1440

கனகசூரிய சிங்கையாரியன்  1440 -1450

செண்பகப்பெருமாள்  1450 -1467

கனகசூரிய சிங்கையாரியன் (2ம் தடவை)  1467 -1478

பரராச சேகரன் சிங்கையாரியன்  1478–1519

சங்கிலியன்  1519 - 1560

புவிராஜ பண்டாரம்  1561 -1565

காசி நயினார்  1565 - 1570

பெரிய பிள்ளை  1570 - 1572

புவிராஜ பண்டாரம்  1572 -1591

எதிர்மன்னசிங்கம் 1591 -1615

அரசகேசரி  1615 - 1617

சங்கிலி குமாரன்  1617 - 1620


நன்றி 

Post a Comment

0 Comments