புராணங்கள்
வேதங்களில் உள்ள கருத்துக்களைத் தெளிவாகக் கூறுவதாகவே புராணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. புராணம் என்ற சொல்லிற்கு பழமை வாய்ந்தது என்றும் பொருள் உண்டு. காலங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த புராணங்களை வியாசர் நூலாகத் தொகுத்து வெளியிட்டார்.
புராணங்கள் வேதத்தில் கூறப்பட்டுள்ள வற்றை கதைகள் மூலம் கூறுவதாக அமைதுள்ளது.
அதாவது அண்டசராசரங்களின் தோற்றம் , அவற்றினால் ஏற்படும் பிரளயம் , சிவன் , விஷ்ணு , பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் தோற்றம் மற்றும் அவர்களின் அவதாரங்கள் , தேவர்கள் , அரக்கர்களின் போர்கள் என்பவற்றை கதைகள் மூலமாக கூறுவதாக அமைந்துள்ளது
புராணங்கள் இரண்டு வகைப்படும்
மகாபுராணங்கள்
உபபுராணங்கள்
மகாபுராணங்கள்
வேத வியாசரால் தொகுக்கப்பட்ட 18 புராணங்களும் மகாபுராணங்கள் எனப்படும்
முதன்முதலில் கடவுள்களாலும், தேவர்களாலும், முனிவர்களாலும் கூறப்பட்ட மகாபுராணங்கள் காலங்காலமாக செவிவழியாக கற்பிக்கப்பட்டு வந்து இறுதியாக வேதவியாசரை அடைந்து எழுத்துவடிவம் பெற்றது.
சிவ புராணம் - பிரம்மர் நாரதருக்கு கூறியது.
கூர்ம புராணம் - புலஸ்தியர் நாரதருக்கு கூறியது.
கருட புராணம் - கருடன் காசியபருக்கு கூறியது.
மார்க்கண்டேய புராணம் - மார்க்கண்டேயர் ஜைமினிக்கு கூறியது.
அக்கினி புராணம் - அக்கினி வசிஷ்டருக்கு கூறியது.
வராக புராணம் - வராகரே கூறியது.
கந்த புராணம் - கந்தனே கூறியது.
வாயு புராணம் - வாயுவே கூறியது .
விஷ்ணு புராணம் - மத்ஸ்யாவதார விஷ்ணு, மனுவுக்குக் கூறினார்.
வைசம்பாயனர், வேதவியாசரின் மகனான சுகரிடமிருந்து கற்ற புராணங்கள் மற்றும் இதிகாசங்களை அத்தினாபுரத்து மன்னன் பரிட்சித்திற்கு எடுத்துக் கூறும் போது அங்கிருந்த சூத முனிவரும் அவற்றை நன்கு கேட்டறிந்தார்.
பின்னர் கோமதி ஆற்றாங்கரையில் அமைந்திருந்த சூத முனிவர் தான் கேட்டறிந்த புராண இதிகாச கதைகளை , நைமிசாரண்யம் எனப்படும் இடத்தில் உள்ள குலபதி சௌகனர் முதலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார் என மகாபாரத்தில் குறிப்படப்பட்டுள்ளது.
புராணங்களின் கால அளவை துல்லியமாக கூற முடியாது என்பதால் வேதவியாசர் வாழ்ந்த காலத்தைக் கருத்திற் கொண்டு சமய நூல் விற்பன்னர்கள், புராணங்களின் கால அளவை கி.மு.6 அல்லது கி.மு. 7 ஆம் நூற்றாண்டு என்று தெரிவித்துள்ளனர்.
கடவுள்களின் அடிப்படையில் மகாபுராணங்கள் பின்வருமாறு பிரிக்கப்படுகின்றன.
சிவன் - 10 புராணங்கள்
லிங்க புராணம்
கந்த புராணம்
ஆக்கினேய புராணம்
பிரம்மாண்ட புராணம்
மச்ச புராணம்
மார்க்கண்டேய புராணம்
பவிசிய புராணம்
வராக புராணம்
வாமன புராணம்
வாயு புராணம் / சிவ புராணம்
விஷ்ணு - 04 புராணங்கள்
விஷ்ணு புராணம்
பாகவத புராணம்
நாரத புராணம்
கருட புராணம்
பிரம்மா - 02 புராணங்கள்
பிரம்ம புராணம்
பத்ம புராணம்
சூரியன் - 01 புராணம்
பிரம்ம வைவர்த்த புராணம்
அக்கினி - 01 புராணம்
மகா புராணங்கள் முக்குணத்தின் அடிப்படையில் சத்துவம், ராஜசம், தாமசம் என்று 3 வகைப்படும்.
சைவர்களும் , வைணவர்களும் தமது புராணங்களே சத்துவ புராணங்கள் என்று கூறு கொள்கின்றார்கள்.
உபபுராணங்கள்
வியாசரால் தொகுக்கப்படாத ஏனைய 18 புராணங்களும் உபபுராணங்கள் எனப்படும்.
சூரிய புராணம்
கணேச புராணம்
காளிகா புராணம்
கல்கி புராணம்
சனத்குமார புராணம்
நரசிங்க புராணம்
துர்வாச புராணம்
வசிட்ட புராணம்
பார்க்கவ புராணம்
கபில புராணம்
பராசர புராணம்
சாம்ப புராணம்
நந்தி புராணம்
பிருகத்தர்ம புராணம்
பரான புராணம்
பசுபதி புராணம்
மானவ புராணம்
முத்கலா புராணம்
0 Comments