மன்னன் பண்டுவாசுதேவன்
வம்சம் --- விஜய வம்சம்
தாய் --- மத
தந்தை --- சுமித்தன்
முன்பிருந்த ஆட்சியாளர் --- உபதிஸ்ஸன்
பின்பு வந்த ஆட்சியாளர் --- அபயன்
ஆட்சி செய்த பிரதேசம் --- உபதிஸ்ஸகம
ஆட்சி செய்த காலப்பகுதி --- கிமு 504 - 474
ஆட்சி செய்த வருடங்களின் எண்ணிக்கை --- 30 வருடம்
விஜயனின் தம்பியான சுமித்தனக்கும் மத என்பவளுக்கும் பிறந்த இவன் இந்தியாவில் லாலா நாட்டிலிருந்து இருந்து இலங்கைக்கு வந்து உபதிஸ்ஸனுக்கு பிறகு உபதிஸ்ஸகமவை ஆட்சி செய்தான்.
இவன் தான் திருமணம் செய்வதற்கு இந்தியாவில் இருந்து ஒரு பெண்ணை வரவழைத்து அவளையே திருமணம் செய்து கொண்டான் . அவளது பெயர் பத்தகச்சனா ஆகும். இவர்களுக்கு அபயன் , திஸ்ஸன் , கிரிகண்டசிவன் உட்பட 10 ஆண்பிள்ளைகளும் , உன்மாதசித்திரா எனும் பெண் குழந்தையும் பிறந்தது.
ஒரு நாள் பண்டுவாசுதேவன் ஓர் ஜோசியரிடம் ஜோதிடம் கேட்டபொழுது தனது மகளான உன்மாத சித்ராவுக்கு திருமணம் நடந்து குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையால் தனது 10 ஆண் குழந்தைகளுக்கும் ஆபத்து என்று தெரிய வந்ததனால் பண்டுவாசுதேவன் உன்மாத சித்ராவை சோட சித்தன் , காலவேலன் , கும்பபேதை ஆகிய காவலாளிகளின் தலைமையில் துவார மண்டலத்தில் யாரும் காணாத விடத்து மறைத்து வைத்தான் . இவ்வாறு பாதுகாப்பாக இருந்த போதும் , பத்தகச்சனாவின் தம்பியான தீககாயுவின்
மகனான தீககாமினி மீது காதல் கொண்டு அவனை தனது தந்தை , சகோதரர்களுக்கு தெரியாமல் திருமணமும் செய்து கொண்டாள். இதனால் பல விபரீதங்களும் ஏற்பட்டது .
பண்டுவாசுதேவனுக்கு பின்னர் அவனுடைய மூத்த மகன் அபயன் ஆட்சி பீடம் ஏறினார்.
நன்றி
0 Comments