அரசியலின் வரைவிலக்கணம் - DEFINITION OF POLITICS

  

அரசியலின்

வரைவிலக்கணம்


அரசியலின் வரைவிலக்கணம் - DEFINITION OF POLITICS

சமூக விஞ்ஞான பாடங்களில் ஒன்றான அரசியலை வரைவிலக்கணம் ஒன்றில் உள்ளடக்குவது கடினமாகும். இதற்கு காரணம் இக்கற்கை நெறி பற்றிய கருத்துக்கள் காலத்திற்குக் காலம் மாற்றம் அடைந்து வருவதே ஆகும்.


அத்துடன் ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து பிறிதொரு காலத்தில் முக்கியத்துவம் இழப்பதும் புதிய விடயம் ஆய்வுப்  பொருளாவதுமான தன்மையை  கொண்டதாக இக்கற்கை நெறி  காணப்படுகிறது.


அரசியல் என்றால் என்ன என்பதற்கு பொதுவாக கிடைக்கும் இலகுவான பதில், தேசத்தை ஆட்சி புரிதல் என்பதாகும். இது அரசியல் என்ற எண்ணக்கரு தொடர்பில் காணப்படும் பயன்பாட்டில் உள்ள அர்த்தமாகும். அரசியல் தொடர்பில்  காணப்படும் முழுமையான வரைவிலக்கணமும் அல்ல.  இது வாய் மொழி ரீதியான வரைவிலக்கணமே ஆகும்.


அரசியலுக்கான வரைவிலக்கணத்தை கல்விசார் நோக்கில் ஆராயும் போதுதான் அதன் சரியான வரைவிலக்கணத்தை நாம் கூற முடியும்.


அதன்படி,


அரசு, அரச நிர்வாகம், ஆட்சி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதே அரசியல்.


அரசுக்கு வெளியில் பிரஜைகளின் அரசியலில் பங்குபற்றும் சமூக பிரயோகமே அரசியலாகும்.



அரசு, அரச நிர்வாகம், ஆட்சி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதே அரசியல்.


இந்த வரைவிலக்கணமானது புராதனமாக இருந்தாலும் நல்லதொரு  அர்த்தத்தினை கொண்டுள்ளது.  புராதன கிரேக்க,இந்திய,  சீன தத்துவஞானிகள்  இப்பொருளிலேயே அரசியலைப் பற்றி பேசினர்.


அரசுஆங்கில மொழியில் potitics  என்ற சொல் pilitikos  எனும்  சொல்லில் இருந்தே  தோன்றி  உள்ளது. police நகர அரசாகும்.  அதாவது சிறிய நகரத்தை மையப்படுத்திய அரசாகும்.


நகர அரசு என்ற பொருளைத் தரும் police  என்ற சொல்லின் பொருள் politikos என்ற கிரேக்கச் சொல்லில் இருந்தே உருவானது.


இதன் மூலம் கிரேக்க காலத்தில் அரசியல் என்பது நகர அரசு தொடர்பான விடயத்தை ஆராயும் ஒரு கலையாகவே காணப்பட்டது எனலாம். இந்த நகர அரசு தொடர்பான விடயத்தில் பின்வரும் கருத்துக்கள் காணப்படுகின்றது.


அரசின் தோற்றம் 

அரசின் நோக்கம் 

அரசாட்சி முறைகள்  

அரசு மற்றும் பிரஜைகளுக்கு இடையிலான தொடர்பு


மேலும் , புராதன  இந்தியா மற்றும்  சீனாவில்  அரசியல் இவ்வர்க்கத்திலேயே பார்க்கப்பட்டது. இதற்குச் சான்றாக கவுடிலியர் , கொன்புசியஸ் போன்ற சிந்தனையாளர்களின் நூல்களில் உள்ள விடயங்களை குறிப்பிடலாம்.



அரசுக்கு வெளியில் பிரஜைகளின் அரசியலில் பங்குபற்றும் சமூக பிரயோகமே அரசியலாகும்.


பிரஜைகள் அரசியலில் பங்குபற்றல் என்பதற்கு அரசியல் என்ற எண்ணக்கருவின் விசேட இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரஜைகளின் செயற்பாடுகள் மற்றும் பங்குபற்றல் இல்லாத அரசியல் ஒன்றை எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு பிரஜைகளின் பங்குபற்றல் என்பது அரசியலில் வேரூன்றி உள்ளது.


ஆட்சி நடவடிக்கைகளில் மக்களின் பங்குபற்றல் என்பது கிரேக்க காலம் வரை பழமை வாய்ந்ததாகும். அக்காலத்தில் மக்கள் நேரடியாக பங்குபற்றியதுடன் தற்காலத்தில் மறைமுகமாக பங்குபற்றி கொள்கை உருவாக்கம் , கொள்கை அமுலாக்கம் போன்ற செயல்களில் பிரஜைகள் நேரடியாக உள்வாங்கப் படுவதையும் காணலாம்.


உதாரணம்


தேர்தலில் வாக்களித்தல் 

ஆட்சியாளர்களுக்கு ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கல்

தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் 

அரசியல் கட்சி உறுப்பினர்களாக இருத்தல்



அரசியலைப் பற்றிய கருத்துக்களை முன்வைத்த தத்துவஞானிகள்


கார்னர்

அரசியலின் ஆரம்பமும் முடிவும் அரசின் உடனேயே இணைந்தது.


R.G கெட்டல்

அரசு  பற்றிய   விஞ்ஞானமே  அரசியல்.


சால்ஸ் கைமன்

அரசாங்கத்தின் அதிகார தாவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அரசின் செயற்பாடுகளை கற்கும் விஞ்ஞானமே அரசியல்.


சீலி

அரசின் பல கூறுகளை ஆராய்வதே அரசியல்


அல்பிரட் கிரேஸ்

அரசாங்க தீர்மானங்களை எடுக்கும் தாவனங்களை சுற்றி  இடம்பெறும் நிகழ்வுகளை கற்பதே அரசியல்


நன்றி


Post a Comment

0 Comments