மன்னன் விஜயன் - KING VIJAYAN

 

மன்னன் விஜயன் 



வம்சம்  ---  விஜய வம்சம்

தாய்  ---  சிம்ம சீவிலி 

தந்தை  ---  சிம்மபாகு

முன்பிருந்த ஆட்சியாளர்  ---  குவேனி

பின்பு வந்த ஆட்சியாளர்  ---  உபதிஸ்ஸ

ஆட்சி செய்த பிரதேசம்  ---  தம்பபன்னி

ஆட்சி செய்த காலப்பகுதி  ---  கிமு 543 - 505

ஆட்சி செய்த வருடங்களின்  எண்ணிக்கை --- 33  வருடம்


இந்தியாவில்  சிங்கத்திற்கும் சுப்பாதேவி எனும் பெண்ணுக்கும் பிறந்த சிம்மபாகு , சிம்ம சீவிலி ஆகியோருக்கு பிறந்த விஜயன்  தனது  தந்தையான சிம்மபாகுவால் லாலா நாட்டிலிருந்து இலங்கைக்கு துரத்திவிடப்பட்டான்.

அதனால்  கரை ஒதுங்கி  இலங்கையின் தம்பபண்ணி எனும் இடத்திற்கு வந்து அங்கிருந்த இயக்கர் குல அரசி குவேனியை திருமணம் செய்து கொண்டான். அவர்களுக்கு திசால , ஜீவகர்த்த எனும் இரண்டு பிள்ளைகள் பிறந்தது.  பின்னர், சிறிது  காலம் கழிய  குவேனியை துரத்திவிட்டு இந்தியாவிலிருந்து வந்த மதுராபுரி இளவரசியை திருமணம் செய்து கொண்டான். 

விஜயனின் தாக்குதலினால் குவேனி தனது  குழந்தைகளான திசால , ஜீவகர்த்தாவை  வேடுவர்களிடம் ஒப்படைத்து விட்டு தானும் ஒளிந்து வாழ்ந்தாள்.

விஜயனுக்கும் மதுராபுரி இளவரசிக்கும் பிள்ளைகள் இல்லாததால் விஜயன் இந்தியாவில் இருந்த தனது தம்பியான சுமித்தனிடம் அழைப்பு விடுக்க சுமித்தனும் தனக்கு வயதாகி விட்ட காரணத்தினால் தனது மகன் பண்டவாசுதேவனை இலங்கைக்கு அனுப்பி வைத்தான்.

குறிப்பு

விஜயனுக்கு  முன்னர்  குவேனியே அரசியாக இருந்தாள் . அந்தவகையில்  இலங்கையின் முதல் அரசி குவேனி ஆகும்.

விஜயனின் இறப்பின் பின் பண்டுவாசுதேவன் இலங்கைக்கு வரும் வரையில் உபதிஸ்ஸ எனும் பிராமண வம்சத்தவனே அரசனாக இருந்தான்.

அக்காலத்தில்  இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு 14 நாட்கள்  எடுக்கும். 

விஜயனுடன் அவனது 700 தோழர்களும்  இலங்கைக்கு வந்தனர். 


நன்றி


Post a Comment

0 Comments