பணம்
வருட இறுதியில் நண்பர்கள் எல்லோரும் ஒன்று கூடிய தருணத்தில் நிமல் கூறுகிறான். A/L பரீட்சை முடிவடைந்தது இனி வேலை தேடி பணம் சம்பாதிக்க வேணும்.
அதற்கு கமல் கூறுகிறான் இப்பதான் படிச்சு முடிசிருக்கம் அதற்குல வேலையை பத்தி யோசிக்கிறியா ? இனி விளையாட்டும், ஆட்டம் பாட்டம் என்று கொஞ்ச வருஷத்த கழிக்கனும் என்டு திட்டம் வைச்சிருக்கன்.
அதற்கு நிமல் ஆட்டம் பாட்டம் என்டு விளையாடி திரிய உன்னட்ட பணம் இருக்கு ஆனா எனக்கு அப்பிடி இல்லையே. பணம் இருந்தா படிக்கனும் வேலை தேடனும் என்டு அவசியமில்லை. படிக்கனும் என்டு நினைக்கிறவன் மேலதிகமாக படிக்கயும், படிக்காம படிப்பை கைவிடுறதும். பணம்தான் முக்கியம் என்று கூறினான். இதல்லாம் பார்த்த சுரேஷ் பணம் முக்கியம்தான் ஆனா நான் இனி கிராமப்புறங்களில் தான் எனது மீதி நாட்களை கழிக்க போகிறேன் என்று கூறினான். அதற்கு கமல் கூறினான் இங்க இருக்கிற வசதியும், பணமும் உனக்கு கிராமத்தில் கிடைக்குமா இப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டுட்டு கிராமத்துக்கு ஏன் போகப்போறா ? இங்க இருக்கிற மரியாதை உனக்கு கிராமத்தில் கிடைக்குமா ? உண்ட சொந்த பந்தம் கூட அங்க போனா ஏளனமாகத்தான் பார்ப்பாங்க. பணம் இருந்தாதான் சொந்தம் கூட நம்மள மதிக்கும் நாலு இடத்துல நம்மள சொல்லி கதைப்பாங்க எல்லாமே இந்த பணத்தை வச்சுத்தான் மத்தவங்க நம்மள மதிக்கணுமா வேண்டாமா என்று யோசிப்பாங்க இவ்வளவு ஏன் ஒரு விசேஷம் என்டா கூட பணம், வசதி இல்லை என்றால் கூப்பிட மாட்டாங்க மச்சான் என்று கூறினான்.
அதற்கு நிமலும் நீ சொல்றதுதான் சரி அதுக்குதான் நான் படிச்சுமுடிச்ச கையோட வேலைய தேடனும் என்று நினைக்கிறேன். பணம் சம்பாதிச்சு வசதியா வாழனும் சொந்த பந்தம் முன்னால கெத்தா வாழனும் என்று கூறினான்.
இதற்கெல்லாம் பதில் கூறத் தொடங்குகிறான் சுரேஷ். நீங்க சொல்ற எல்லாமே பணம் பணம். பணத்தை தாண்டி நிறைய விஷயம் இருக்கு. நீங்க எல்லாரும் முதல் சொந்த பந்தங்கள குறைகூறுவத நிப்பாட்டுங்க. பணம் முக்கியம்தான் ஆனா பணம் மட்டும்தான் முக்கியம் என்று இல்லை. நீங்க எல்லாருமே பணத்தை சம்பாதிக்கணும் என்று நினைத்து சொந்த பந்தங்களை இழக்க பாக்கறீங்க. சொந்தங்கள் நம்மல பேசணும் என்டு நினைச்சா பணத்தை மட்டும் சேர்க்காதீங்க நாலு பேருக்கு உதவி செய்ங்க அவங்கட தேவைகளை இயலுமான அளவு போட்டி செய்ங்க.
எங்க இருந்தும் சம்பாதிக்கலாம் அதற்காக சொந்த பந்தங்களை பகைக்காம சேர்ந்து வாழுங்க. சேர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை. எவ்வளவு சம்பாதித்தாலும் பணத்தை நம்மலால சாப்பிட முடியாது. கிராமங்களில் செய்ற விவசாயம் மட்டும் இல்ல என்டா நாம சாப்பிடவே முடியாது. உங்கள போல விவசாயிகள் பணம் மட்டும்தான் வாழ்க்கை என்டு இருந்தா நாம எல்லாரும் வாழ முடியுமா யோசித்து பாருங்க. கிராமத்தில் கிடைக்கிற சந்தோஷம் நகரங்களில் வாழ்றவங்களுக்கு தெரியாது. கிராமத்தில வீசுற காற்றே தனி சுகம்தான். அது எல்லாம் நகரத்தில கிடைக்குமா ? நினைச்ச நேரம் சுகமான நித்திரை தேவையான அளவு உணவு மனசுக்கு பிடிச்ச வேலை சொந்த பந்தங்களோட சந்தோஷமான வாழ்க்கை. இதைவிட மனுஷனுக்கு என்ன வேணும்.
பணம் பணம் என்று நகரங்களில சனநெருக்கடி, ஒழுங்கற்ற உணவு, சுத்தமான காற்றைக்கூட சுவாசிக்க ஏலாம சிரமப்படுறத விட கிராம வாழ்க்கை எவ்வளவோ மேல் நண்பர்களே !
இங்க இருந்தாதான் மதிப்பு இல்ல … பணம் இருந்தாதான் மதிப்பாங்க என்டு மத்தவங்களுக்காக நாம வாழுற வாழ்க்கைய யாரோ ஒருவருக்காக வாழாம நமக்கு பிடிச்ச வாழ்க்கைய நமக்கு பிடிச்ச இடத்துல நமக்கு பிடிச்சவங்களோட இனியாவது முடிஞ்சா வாழபழகுங்க ..
ஆக்கம் - சசிக்குமார் விஷ்மிகா
நன்றி
0 Comments