ஐரோப்பிய ஒன்றியம் - EUROPEAN UNION


ஐரோப்பிய ஒன்றியம் 


ஐரோப்பிய ஒன்றியம் - EUROPEAN UNION

தற்போது 27 நாடுகளைக் கொண்ட நாடுதாண்டிய அரசிடை அமைப்பாகும். 1992 ஆம் ஆண்டு  ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை Maastricht treaty (மாசுடிரிச் ஒப்பந்தம்) என்றும் பரவலாக அறியப்படுகின்றது. அடுத்து 1993 இல் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருட்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நகர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றச் சந்தையை உருவாக்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையேயான இணக்கப்பாடு. அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறைகளைக் கைக்கொள்கின்றது.

2ம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிணைப்பு தொடர்பான நகர்வுகளை அக்கண்டத்தை பேரழிவுக்கு உள்ளாக்கிய தீவிர தேசியவாதப் போக்கிலிருந்து தப்பும் ஒரு வழியாகப் பலர் கருதினர்.

ஐரோப்பிய மகாநாடுகள் பின்வரும் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது

வாழ்வதற்கான உரிமை, சித்திரவதையிலிருந்து விடுபடும் உரிமை. அடிமைத்தனத்திலிருந்து விடுபடல், சுதந்திரம், பாதுகாப்பு சட்டத்தை அணுகுதல், தண்டனையைக் குறைக்க முறையீடு செய்தல், தனிப்பட்ட, குடும்ப வாழ்க்கைக்கான சுதந்திரம், சமய சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம், கருத்துப் பரிமாறும் சுதந்திரம் போன்றவற்றையும் பார பட்சத்திலிருந்து விடுபடல் உரிமைகளைச் சுதந்திரமாக அனுபவித்தல் போன்றன பற்றி குறிப்பிடப்படுகின்றது.

நன்றி

Post a Comment

0 Comments