11ம் தர மாணவர்களுக்கான பயிற்சி வினாக்கள் - QUESTIONS AND ANSWERS FOR CLASS 11 STUDENTS


11ம் தர மாணவர்களுக்கான

பயிற்சி வினாக்கள்


11ம் தர மாணவர்களுக்கான பயிற்சி வினாக்கள் - QUESTIONS AND ANSWERS FOR CLASS 11 STUDENTS


1. சேர்ச் மிசெனரி இயக்கம் இலங்கை வந்த வருடம் எது? 
1818

2. வடக்கு, கிழக்கில் செயற்பட்ட மிசனறி அமைப்பு எது? 
வெஸ்லியன் மிசனறி இயக்கம்

3. யாழ்ப்பாண பகுதியில் கல்வி உயர்நிலையில் காணப்பட்டமைக்குக் காரணம் யாது? 
ஆமெரிக்க மிசனறியின் வருகை

4. கிறிஸ்தவ மிசனறிமாரால் வெளியிடப்பட்ட வெளியீடுகள் 03. தருக?
மாசிக்க தேக்க
லங்கா நிதானய
உரகல

5. இலங்கை வந்த மிசனறி அமைப்புக்கள் கிறிஸ்தவ மதத்தை பரப்ப கையாண்ட உத்திகள் 03 குறிப்பிடுக. 
எழுத்து ஊடகத்தைப் பயன்படுத்தல்
சொற்பொழிவு
கல்வி

6.கொழும்பில் செயற்பட்ட மிசனறி அமைப்பு எது? 
பெப்டிஸ்ட் மிசனறி இயக்கம்

7. மிசனறிமார் ஆரம்பத்தில் எதிர்நோக்கிய பிரச்சினை யாது? 
சுதேச மொழி தெரியாமை

8. மிசனறிகளால் உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ அச்சகங்கள் 03 தருக. 
சேர்ச் மிசனறி சங்கம்
சமய பூஸ்திகா சங்கம்
பெப்டிஸ்ட் மீசனறி அமைப்பு

9. தமிழ், சிங்கள மாணவர்கள் மிசனறிகளை நாடியமைக்குக் காரணம் யாது?
ஆங்கிலக் கல்வியைக் கற்று அரச வேலை வாய்ப்பைப் பெறல்

10. இலங்கை வந்த மிசனறி அமைப்புக்களை ஆண்டுகளுடன், அவை செயற்பட்ட இடத்தையும் குறிப்பிடுக?
லண்டன் மிசனறி சங்கம் - 1804 - கொழும்பு
பெப்டிஸ்ட் மிசனறி சங்கம் - 1812 - கொழும்பு
வெஸ்லியன் மிசனறி சங்கம் - 1814 1815 -வடக்கு, கிழக்கு 
அமெரிக்கன் மிசனறி சங்கம் - 1816 - யாழ்ப்பாணம்
சேர்ச் மிசனறி சங்கம் - 1818 - கொழும்ப, காலி, கற்பிட்டி, மன்னார், கண்டி

11. பௌத்த சமய மறுமலர்ச்சி என்பது யாது? 
இலங்கையின் சுதேச சமயங்களுக்கு எதிராக ஐரோப்பியரின் ஆதரவுடன் கிறிஸ்தவர்கள் செயற்பட்ட போது பௌத்த மத எழுச்சிக்காகப் பௌத்த தலைவர்கள் மேற்கொண்ட செயற்பாடுகள் பௌத்த மறுமலர்ச்சி எனப்படும்.

12. பௌத்த மறுமலர்ச்சிக்குப் பாடுபட்ட தலைவர்கள் யாவர்? 
வலானை சித்தார்த்த தேரர்
ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர்
இரத்மாலனை தம்மாலோகத் தேரர்
அநகாரிக தர்மபால

13.இரத்மலானை பரம தம்ம பிரிவேனாவை உருவாக்கியவர் யார்? 
வலானை சித்தார்த்த தேரர்

14. மாளிகாகந்த வித்தியோதய பிரிவெனாவை உருவாக்கியவர் யார்? 
ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர்

15. சர்வதேச பிரசித்தம் கிடைத்த விவாதம் எது? 
பாணந்துறை விவாதம்

16. பஞ்சமகா விவாதங்களை ஆண்டுகளுடன் குறிப்பிடுக. 
பத்தேகம - 
1865
வராகொடை - 1865
உதம்விட -1866
கம்பளை - 1871 
பாணந்துறை - 1873

17. பஞ்சமகா விவாதங்களுக்கு முன்னின்று செயற்பட்ட பிக்கு யார்? 
மீதெட்டுவத்த குணாணந்த தேரர்

18. இலங்கையில் நிறுவப்பட்ட பௌத்த மத அச்சகங்கள் எவை? 
லங்கா பிநவ விஷ்ரத அச்சகம்
கவடகதிக அச்சகம்
சுதர்ஷண அச்சகம்
சரசவி
சந்தரச அச்சகம்

19. பௌத்த மத அச்சகங்களால் வெளியிடப்பட்ட வெளியீடுகள் எவை? 
லக்மினி பஹன
லங்கா லோகய
சரசவி சந்தரச
சிங்கள ஜாதிய
சிங்கள பௌத்தயா 

20. புலத்கம தம்மாலங்கார ஸ்ரீ சுமண தீஸ்ஸ தேரர் நிறுவிய இலங்கையின் முதல் அச்சகத்தையும், அது நிர்மாணிக்கப்பட்ட பிரதேசத்தையும் தருக. 
காலி லங்கோபகார அச்சகம்
காலி

21. பாணந்துறை விவாதத்தால் கவரப்பெற்று இலங்கை வந்த அமெரிக்க நாட்டவர் யார்? 
சேர் ஹென்றி ஸ்டில் ஒல்கொட்

22. பாணந்துறை விவாதத்தால் கவரப்பெற்று இலங்கை வந்த ரஸ்ய நாட்டவர் யார்? 
ஹெலனா பெலவெஸ்கி அம்மையார் 

23. இலங்கையில் வெசாக் போயா தினத்தை விடுமுறை ஆக்கியவர் யார்?
சேர் ஹென்றி ஸ்டில் ஒல்கொட்

24. பௌத்தக் கொடி உருவாக்கத்தில் பங்களிப்புச் செய்த வெளிநாட்டவர் யார்?
சேர் ஹென்றி ஸ்டில் ஒல்கொட்

25. ஹென்றி ஸ்டில் ஒல்கொட் அவர்களின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் 05 தருக.
கொழும்பு ஆனந்தாக் கல்லூரி
தர்மராஜ கல்லூரி
மகிந்த கல்லூரி 
மாத்தளை விஜய கல்லூரி
கம்பளை ஜினராஜ வித்தியாலயம்

26. ஹென்றி ஸ்டில் ஒல்கொட் பௌத்த மறுமலர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் 04 தருக.
இலங்கையில் பல பாடசாலைகள் உருவாக்கப்பட வழிகாட்டியமை
பௌத்த பிரம்ம ஞான சங்கத்தை உருவாக்கியமை
வெசாக் போயாதினத்தை விடுமுறையாக்கியமை 
பௌத்தக்கொடியை உருவாக்கியமை
அச்சகங்கள் ஊடாக பத்திரிகைகளை வெளியிட்டமை

27. ஹென்றி ஸ்டில் ஒல்கொட் அவர்களின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு எது? 
பௌத்த பிரம்ம ஞான சங்கம் 

28. ஹென்றி ஸ்டில் ஒல்கொட் அவர்களால் உருவாக்கப்பட்ட பத்திரிகை எது?
சரசவிசந்தரச

29. ஹென்றி ஸ்டில் ஒல்கொட் அவர்களின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட நிதியம் எது? 
பௌத்த பாடசாலைகளின் நிதியம்

30. ஹென்றி ஸ்டில் ஒல்கொட் அமெரிக்காவில் வகித்த பதவி யாது?
இராணுவத்தில் கேணல் பதவி

31. தேசப்பற்றை வளர்க்கும் இயக்கம் என்பது யாது? 
ஐரோப்பியர் ஆதிக்கத்தால் உருவாகியிருந்த மேலைத்தேய கலாசாரம் வேகமாகப் பரவியமையால் கீழைத்தேய கலாசாரத்தைப் பின்பற்றுவதற்குப் பதிலாக தேசிய கலாசாரத்தை மதிக்கத் தூண்டுவதன் மூலம் தேசப்பற்றை வளர்க்க உருவாக்கப்பட்ட அமைப்பு

32. தேசப்பற்றை வளர்க்கும் இயக்கத்தின் நோக்கம் யாது? 
ஐரோப்பியர் ஆதிக்கத்தால் உருவாகியிருந்த மேலைத்தேய கலாசாரம் வேகமாகப் பரவியமையால் கீழைத்தேய கலாசாரத்தைப் பின்பற்றுவதற்குப் பதிலாக தேசிய கலாசாரத்தை மதிக்கத் தூண்டுவதன் மூலம் தேசப்பற்றை வளர்த்தல்

33. அநகாரிக தர்மபால தேசப்பற்றை வளர்த்தெடுக்க பின்பற்றிய 02 செயற்பாடுகளைத் தருக. 
பகிரங்க சொற்பொழிவுகளை நடத்தல் 
சஞ்சிகைகளில் கட்டுரைகளை எழுதியமை

34. அநகாரிக தர்மபால கட்டுரைகளை எழுதிய சஞ்சிகைகள் 02 தருக. 
சிங்கள பௌத்தயா
மஹாபோதி

35. நாவல்கள் மூலம் தேசப்பற்றை வளர்க்கும் இயக்கத்தை முன்னெடுத்தவர் யார்? 
பியதாஸ சிறிசேன

36. பியதாஸ சிறிசேன எப்பத்திரிகை மூலம் கருத்துக்களை வெளியிட்டார?
சிங்கள ஜாதிய

37. இலங்கையில் புராதன தொல்பொருட்களை பற்றி ஆராய்ந்த ஐரோப்பிய கல்விமான்கள் யார்? 
ஜோர்ஜ் டர்னர்
ரிஸ் டேவிஸ்
எச்.பி.பெல் ஹென்றி பாக்கர்

38. அனுராதபுரத்தில் உள்ள முன்னெடுத்தவர் யார்? 
வலிசிங்க ஹரிச்சந்திர புனித இடங்களை பாதுகாக்கும் இயக்கத்தை

39. புத்தகயா போன்ற உயர் பௌத்த மத மேற்கொண்டவர் யார்? 
அநகாரிக தர்மபால இடங்களை பாதுகாக்க நடவடிக்கை

40. புத்தகயா எந்நாட்டில் உள்ள உயர்ந்த பௌத்த தலமாகும்? 
இந்தியா

41. மதுஒழிப்பு இயக்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?
பிரித்தானியர் ஆட்சியில் 1912இல் மதுவரிச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு நாடு முழுவதும் மதுபானசாலைகள் திறக்கப்பட்டு நாட்டில் சமூகப் பிரச்சினைகள் பல
உருவாகியமை

42. மதுஒழிப்பு இயக்கத்தின் நோக்கம் யாது?
மதுவினால் ஏற்படும் தீமைகளை மக்களிடம் எடுத்து விளக்கி, பிரித்தானியருக்கு எதிராக போராட்டங்களை நடாத்துதல்

43. மதுவின் தீமைகளை விழிப்புணர்வடையச் செய்ய பாடுபட்ட பௌத்ததலைவர்கள் யார்? 
பியதாஸ சிறிசேன
அநகாரிக தர்மபால
ஜோன் த சில்வா

44. மதுஒழிப்பு இயக்கத்தின் மூலம் அநகாரிக தர்மபால முன்னெடுத்த செயற்பாடுகள் எவை? 
ஊடகங்கள் மூலம் மதுவின் தீமைகளை எடுத்து விளக்குதல்

45. மதுஒழிப்பு இயக்கத்தின் மூலம் பியதாஸ சிறிசேன முன்னெடுத்த செயற்பாடு யாது? 
நாவல்கள் மூலம் மதுவின் தீமைகளை எடுத்து விளக்குதல்

46. மதுஒழிப்பு இயக்கத்தின் மூலம் ஜோன் த சில்வா முன்னெடுத்த செயற்பாடு யாது? 
நாடகங்கள் மூலம் மதுவின் தீமைகளை எடுத்து விளக்குதல்

47. ஜோன்த சில்வா உருவாக்கிய நாடகத்தின் பெயர் யாது? 
பராபவ

48. கி.பி 1883இல் எகிப்தில் இருந்து இலங்கை வந்த முஸ்லிம் தலைவர் யார்?
அறிஞர் ஓராபி பாஷா

49. அறிஞர் எம்.சி.எம் சித்திலெவ்வை உருவாக்கிய பாடசாலை எது? 
கொழும்பு மருதானை சாஹிராக் கல்லூரி
இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு

50. அறிஞர் எம்.சி.எம் சித்திலெவ்வை பங்களிப்புக்கள் 04 தருக.
பல பத்திரிகைகளை உருவாக்கியமை 
ஆங்கில மொழி, அரபி மொழிகளை கற்கத் தூண்டியமை 
பாடசாலைகளை உருவாக்கியமை
சமய நூல்களை உருவாக்கியமை

51. இந்துசமய மறுமலர்ச்சிக்குத் தலைமை தாங்கிச் செயற்பட்டவர் யார்?
ஆறுமுக நாவலர்

52. ஆறுமுக நாவலர் உருவாக்கிய அச்சகம் எது? 
வண்ணார் பண்ணை அச்சகம்

53.ஆறுமுக நாவலர் உருவாக்கிய பத்திரிகை எது? 
உதயபானு

54. ஆறுமுக நாவலர் கி.பி 1849இல் உருவாக்கிய பாடசாலை எது? 
வண்ணார் பண்ணை சைவப்பிரகாச வித்தியாலயம்

55. ஆறுமுக நாவலர் உருவாக்கிய ஆங்கிலப் பாடசாலை எது? 
1872இல் யாழ்ப்பாணத்தில் உருவாக்கிய பாடசாலை. இன்றைய யாழ்ப்பாண இந்துக் கல்லூரி

56. ஆறுமுக நாவலர் பிரசுரம் செய்த தமிழ் நூல்கள் 02 தருக. 
பெரிய புராணம்
கந்த புராணம்

57. தமிழ் மக்களிடமன்றி சிங்கள மக்களிடமும் பேரபிமானம் பெற்றிருந்த 02 தமிழ்த் தலைவர்கள் யார்?
சேர் பொன் இராமநாதன்
சேர் பொன் அருணாச்சலம்

58. 1915 ஆம் ஆண்டு பிரித்தானியரின் இராணுவச்சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த தமிழ்த் தலைவர் யார்? 
சேர் பொன் இராமநாதன்

59. இலங்கைத் தேசிய சங்கத்தின் முதல் தலைவர் யார்? 
சேர் பொன் அருணாச்சலம்

60. இலங்கையின் முதல் அமைச்சரவையில் இடம்பெற்ற முஸ்லிம் தலைவர் யார்?
டி.பி ஜாயா

61. W.H.G. கோல்புறூக் இலங்கை வந்த ஆண்டு எது? 
கி.பி 1829

62. W.H.G.கோல்புறூக் இலங்கை வந்தமைக்கான காரணம் யாது? 
பிரித்தானியர் ஆட்சியில் இலங்கையில் அதிக நிர்வாகச் செலவுகள் ஏற்பட்டமையால் அதற்கான காரணங்களை ஆய்வின் மூலம் கண்டறிந்து சரியான ஆலோசனைகளை வழங்குதல்

63. சார்லஸ் H கமரன் இலங்கை வந்த ஆண்டு எது? 
கி.பி 1830

64. சார்லஸ் H கமரன் இலங்கை வந்தமைக்கான நோக்கம் யாது? 
நீதித்துறை தொடர்பாக ஆலோசனைகளை முன்வைத்தல்

65. கோல்புறூக் யாப்பின் முக்கிய அம்சங்கள் எவை? 
சட்டவாக்க, சட்டநிர்வாகக் கழகங்களை அமைத்தல்
கரையோரமும், மலையகமும் ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டமை 
நாடு ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டமை
கட்டாய அரச கரும முறை ஒழிக்கப்பட்டமை
அரசின் வர்த்தக ஏகபோக முறை அகற்றப்பட்டமை

66. கோல்புறூக் பிரித்தானிய ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்க மேற்கொண்ட நடவடிக்கை யாது?
சட்டநிர்வாகக் கழகத்தை அமைத்துவரவு செலவுத் திட்டம் தயாரிக்கும் போது
ஆளுநர் அக்கழகத்துடன் கலந்துரையாட வேண்டும் எனப் பணித்தமை

67.கோல்புறூக் யாப்பின் சட்டவாக்கக் கழக அமைப்பை வரைக. 
சட்டவாக்கக் கழகம் - 15 
உத்தியோகச் சார்புடையோர் - 09 
உத்தியோகச் சார்பற்றோர் - 06

68. கோல்புறூக் யாப்பின்படி இலங்கையில் காணப்பட்ட மாகாணங்கள் எவை? வடக்கு, கிழக்கு, மேல், தென், மத்திய மாகாணங்கள்

69. கோல்புறூக் யாப்பின் குறைபாடுகள் 02 தருக.
ஆளுநரின் அதிகாரம் அதிகரித்துக் காணப்பட்டமை 
இனவாரி பிரதிநிதித்துவமுறை காணப்பட்டமை

70. கோல்புறூக் யாப்பின் சட்டவாக்கக் கழகத்தில் பெரும்பான்மையாகக் காணப்பட்டோர் யார்? 
உத்தியோகச் சார்புடையோர்

71. கோல்புறூக் 
முன்வைத்த சிபாரிசுகளில் செலவைக் குறைக்க முன்வைத்த ஆலோசனைகள் 02 தருக. 
கரையோரமும், மலையகமும் ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டமை 
நாடு ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டமை

72. பிரித்தானிய ஆளுநரை விட அதிகாரம் படைத்த பதவி எது? 
குடியேற்ற நாடுகளின் செயலாளர் நாயகம்

73. கோல்புறூக் யாப்பின் சட்டவாக்கக் கழகத்தில் அங்கதத்துவம் பெற்ற இலங்கையர்களின் எண்ணிக்கை யாது? 
02

74. கோல்புறூக் யாப்பின் சட்டவாக்கக் கழகத்தின் எண்ணிக்கை 17 ஆக எப்போது 
அதிகரித்தது?
கி.பி. 1889

75. அதிகரித்த இரு உறுப்பினர்களும் யார்? 
முஸ்லிம் ஒருவர்
கண்டிச் சிங்களவர் ஒருவர்

76. இரு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் யாது?
ஐரோப்பியர் தலைமையில் இலங்கையர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் காரணமாக இரு உறுப்பினர்கள் தொகை அதிகரிக்கப்பட்டது.

77. இலங்கையர் சங்கம் எப்போது உருவானது? 
கி.பி.1865

78. இலங்கையர் சங்கத்தின் முதல் தலைவர் யார்? 
ஜோர்ஜ் வோல்

79. இலங்கையர் சங்கத்தின் நோக்கம் யாது? 
உத்தியோகச் சார்பற்றோர் தொகையை அதிகரித்தல்

80.கோல்புறூக் யாப்பின் சிபார்சுகளால் பாதிக்கப்பட்ட தரப்பினர் யார்?
ஐரோப்பிய முதலாளிமார்

81. ஐரோப்பிய முதலீட்டாளர்கள் பிரித்தானிய அரசுக்கு எதிராக மேற்கொண்ட போராட்ட நடவடிக்கைகள் எவை? 
சட்டவாக்கக் கழகத்தில் கேள்வி எழுப்புதல்
ஆலோசனைகள் சமர்ப்பித்தல்
பத்திரிகைகளில் எழுதுதல்
போராட்ட அமைப்புக்களை உருவாக்குதல்

82. 19ம் நூற்றாண்டில் இலங்கையின் சமூகப்பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய யாப்பு எது?
கோல்புறூக் யாப்பு

83. கி.பி 1908இல் புதிய அரசியல் யாப்பு கோரிக்கையை முன்வைத்தவர் யார்?
ஜேம்ஸ் பீரிஸ்

84. புதிய அரசியல் யாப்பு கோரிக்கையை முன்வைத்த சங்கங்கள் எவை?
கரைநாட்டு உற்பத்தியாளர் சங்கம்
சிலாபச் சங்கம். யாழ்ப்பாணச் சங்கம்

85.புதிய அரசியல் யாப்பு கோரிக்கையை முன்வைத்த சங்கங்களின் கோரிக்கைகள் எவை?

சட்டவாக்கக் கழகத்தில் உத்தியோகச் சார்பற்றோர் தொகையை அதிகரித்தல் 
இனவாரிப் பிரதிநிதித்துவ முறையை நீக்குதல்
பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்தல்
சட்டவாக்கக் கழகத்தின் அதிகாரத்தை அதிகரித்தல்

86. குறுமக்லம் யாப்பு எப்போது உருவாக்கப்பட்டது?

கி.பி.1912

87. குறுமக்லம் யாப்பு அப்பெயரைப் பெற்றமைக்கான காரணம் யாது?

குடியேற்ற நாடுகளின் செயலாளர் குறூ பிரபுவின் திட்டத்தின் படி ஆளுநர்
மக்கலத்தின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டமையால் இப்பெயர் பெற்றது.

88. குறுமக்லம் யாப்பின் சட்டவாக்கக் கழகத்தை வரைக. 
சட்டவாக்கக் கழகம் - 15
உத்தியோகச் சார்புடையோர் - 11 
உத்தியோகச் சார்பற்றோர் - 10

89. குறுமக்லம் யாப்பின் முக்கிய அம்சங்கள் எவை? 
வரையறுக்கப்பட்ட வாக்குரிமை அறிமுகம்
கல்வி கற்ற இலங்கையர் தெரிவு 
உத்தியோக சார்புடையோர் தொகை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்பட்டமை

90. வரையறுக்கப்பட்ட வாக்குரிமை எப்போது அறிமுகமானது? அதன் வாக்களிப்புத் தகுதி என்ன? அதன்படி தெரிவான முதல் பாராளுமன்ற உறுப்பினர் யார்? 
குருமக்லம் யாப்பில்
கல்வி கற்ற சொத்துடைய ஆணாக இருத்தல்
சேர் பொன் இராமநாதன்

91. மது ஒழிப்பு இயக்கத்தின் பண்புகள் 03 தருக.
அரசாங்கத்தின் மதுவரிக் கொள்கைக்கு எதிராக பொதுசன அபிப்பிராயத்தை 
ஏற்படுத்தல் 
மத்தியதர வர்க்கத்தினரும் தேசிய மறுமலர்ச்சி தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்படல் 
கொழும்பில் மதுஒழிப்பு இயக்கத்தின் தலைமையகத்தையும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கிளைகளையும் தோற்றுவித்தல்

92. மதுவரிச்சட்டம் பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது? 
கி. பி. 1912

93. மதுஒழிப்பு இயக்கத்தின் ஊடாக அரிசியலுக்கு வந்த தேசியத்தலைவர்கள் யார்?
டி.எஸ் சேனநாயக்கா
எப் ஆர். சேனநாயக்க
டி.பி ஜயதிலக 

94. பிரித்தானியருக்கு எதிராக போராட்டம் மேற்கொண்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் யார்?
மகாத்மா காந்தி
ஜவஹர்லால் நேரு
பால கங்காதர திலகர்
சுரேந்திரநாத் பானர்ஜி

95. இலங்கைக்கு வந்த இரு இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் யார்?
மகாத்மா காந்தி
ஜவஹர்லால் நேரு

96. இலங்கைக்கு கி.பி 1927இல் வருகைதந்த இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் யார்?
மகாத்மா காந்தி

97. பிரித்தானியருக்கு எதிராக ஆரம்பத்தில் இலங்கையர்கள் மேற்கொண்ட
நடவடிக்கைகள் எவை?
பிரித்தானிய அரசுக்கு முறைப்பாட்டு மனுக்களை அனுப்புதல் 
குடியேற்ற நாட்டுச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடாத்தல்

98. பிரித்தானியருக்கு எதிராக ஆரம்பத்தில் இலங்கையர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலனளிக்காமையால் இலங்கையர்கள் மேற்கொண்ட மாற்றுநடவடிக்கை யாது? 
இலங்கையின் தேசியத் தலைவர்கள் இணைந்த ஓர் அமைப்பை உருவாக்குதல்

99. பிரித்தானியருக்கு எதிராக ஆரம்பத்தில் இலங்கையர்கள் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படக் காரணம் யாது? 
இந்திய தேசிய சங்கத்தின் சுதந்திரப் போராட்டச் செயற்பாடுகள் இலங்கையரை கவர்ந்தமை

100. சிங்கள முஸ்லிம் கலவரம் எப்போது இடம்பெற்றது? 
கி.பி. 1915

101. இலங்கை தேசிய சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு யாது? 
கி.பி.1919 

102. இலங்கை தேசிய சங்கத்தின் முதல் தலைவர் யார்?
சேர் பொன் அருணாச்சலம்

103. இலங்கை வரலாற்றின் முக்கியமான ஒரு சந்தர்ப்பமாக குறிப்பிடப்படுவது யாது? 
இலங்கையின் பல்லின மக்களும் இலங்கைத் தேசிய சங்கம் எனும் அமைப்பில் ஒன்றுபட்டுச் செயற்பட்டமை 

104. மனிங் அரசியல் சீர்திருத்தம் எப்போது அறிமுகமானது? 
கி.பி. 1920

105. மனிங் யாப்பின் சட்டவாக்கக் கழக அமைப்பை வரைக.
சட்டவாக்கக் கழகம் - 37 பேர்
உத்தியோகச் சார்புடையோர் 
- 14
உத்தியோகச் சார்பற்றோர் - 23

106. மனிங் யாப்பில் வரையறுக்கப்பட்ட வாக்குரிமை மூலம் தெரிவானோர் தொகை 
யாது?
16

107. மனிங் அரசியல் யாப்பின் முக்கிய அம்சங்கள் எவை?
சட்டவாக்கக் கழகத்தில் முதன்முறை உத்தியோகச் சார்பற்றோர் தொகை
அதிகரித்தமை 
பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறை அறிமுகம் 
இனவாரிப் பிரதிநிதித்துவம் தொடர்ந்து காணப்பட்டமை

108. மனிங் அரசியல் யாப்பில் அறிமுகம் செய்யப்பட்ட சீர்திருத்தம் எது?
பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறை

109. முதன்முறையாக உத்தியோக சார்பற்றோர் தொகை அதிகரித்த யாப்பு எது? 
மனிங் யாப்பு

110. மனிங் யாப்பின் குறைபாடுகள் 02 தருக. 
ஆளுநர் அதிகாரம் அதிகரித்துக் காணப்பட்டமை
இனவாரிப் பிரதிநிதித்துவம் தொடர்ந்து காணப்பட்டமை

111. குருமக்லம் யாப்பின் குறைபாடுகள் இரண்டு தருக. 
ஆளுநர் அதிகாரம் அதிகரித்துக் காணப்பட்டமை 
இனவாரிப் பிரதிநிதித்துவம் தொடர்ந்து காணப்பட்டமை

112. மனிங் டௌன்சயர் யாப்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது? 
கி.பி. 1924

113. மனிங் டெவன்சயரின் சட்டவாக்கக் கழக அமைப்பை வரைக.
சட்டவாக்கக் கழகம் - 49 பேர்
த்தியோகச் சார்புடையோர் - 12 
உத்தியோகச் சார்பற்றோர் - 37

114. அதிகாரமும். பொறுப்பும் வேறுபட்டுக் காணப்பட்ட அரசியல் யாப்பு எது?
மனிங் டெவன்சயர் யாப்பு

115. மனிங் டெவன்சயர் யாப்பின் முக்கிய அம்சங்கள் எவை? 
சட்டவாக்கக் கழகத்தில் உத்தியோகச் சார்பற்றோர் தொகை அதிகரித்துக் காணப்பட்டமை
வாக்குரிமை மூலம் 29 பேர் தெரிவு

116. மனிங் டெவன்சயரின் குறைபாடுகள் 02 தருக.
அதிகாரமும், பொறுப்பும் வேறுபட்டுக் காணப்பட்டமை
ஆளுநர் அதிகாரம் அதிகரித்துக் காணப்பட்டமை

117. மனிங் டெவன்சயர் யாப்பில் வாக்குரிமை மூலம் தெரிவானோர் தொகை யாது?
29 பேர்

118. சட்டவாக்கக் கழகம் எனும் பெயரில் பாராளுமன்றம் அழைக்கப்பட்ட அரசியல் யாப்புக்கள் 04 தருக. 
கோல்புறூக்
குறுமக்லம்
மனிங்
மனிங் டெவன்சயர்

119. வில்லியம் மனிங் காலத்தில் அறிமகமான இரு அரசியல் யாப்புக்களைத்
தருக.
மனிங்
மனிங் டெவன்சயர்

120. மனிங், மனிங் டெவன்சயர் யாப்புக்களின் சட்டவாக்கக் கழக உறுப்பினர்களின் மொத்த தொகைகளைக் குறிப்பிடுக.
37
49

121. டொனமூர் ஆணைக்குழு இலங்கை வந்த ஆண்டு யாது? 
கி.பி.1927

122. இலங்கை சுதந்திரத்தின் பயணப் பாதையில் திருப்பு முனையாக அமைந்த
யாப்பு எது?
டொனமூர் யாப்பு

123. டொனமூர் யாப்பின் முக்கிய சிபார்சுகள் எவை?
சர்வசன வாக்குரிமை 
நிருவாகக் குழு முறைமை
அரச செயலாளர்கள் நியமனம்
அமைச்சரவை
பிரதேசவாரி பிரதிநிதித்தவ முறை

124. டொனமூர் யாப்பின் அரசுக்கழகத்தை வரைக.
அரசுக் கழகம் - 61 பேர்
உத்தியோகச் சார்புடையோர் - 12 
உத்தியோகச் சார்பற்றோர் - 37

125. டொனமூர் யாப்பின் அனுகூலங்கள் 04 தருக.
சர்வசன வாக்குரிமை
நிருவாகக் குழு முறைமை
இலவசக் கல்விச் சட்டம் அறிமுகம் 
இலங்கையின் சுதந்திரத்திற்கு அத்திவாரமிட்ட யாப்பு

126. சர்வசன வாக்குரிமை என்பது யாது? 
இலங்கையின் 21 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும்
வாக்களிக்கத் தகுதி பெற்றமை. 

127. சர்வசன வாக்குரிமை எப்போது அறிமுகமானது? 
கி.பி.1931

128. நிருவாகக் குழுமுறையில் இடம்பெற்ற குழுக்கள் எவை?
உள்நாட்டு அலுவல்கள் 
விவசாயமும்.காணியும்
உள்ளுராட்சி
சுகாதாரம் 
கல்வி
போக்குவரத்தும். பொது வேலைகளும் 
தொழில், கைத்தொழில், வர்த்தகம்

129. டொனமூர் யாப்பின்படி அதிகாரம் பெற்ற 03 செயலாளர்களும் யார்?
அரச செயலாளர்
நிதிச் செயலாளர்
சட்டச் செயலாளர்

130. டொனமூர் யாப்பின் குறைபாடுகள் 02 தருக. 
அரச உத்தியோகத்தர்களிடம் அதிகாரம் குவிந்திருந்தமை
ஆளுநர் அதிகாரம் காணப்பட்டமை

131. இலவசக் கல்விச்சட்டம் எப்போது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது?
கி.பி 1945

132. இலவசக் கல்விச்சட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
C.W.W கன்னங்கரா அவர்களால்

133. டொனமூர் அரசுக்கழகத்தில் அங்கத்துவம் பெற்ற இலங்கையர்கள் போராட்டம் நடத்தியமைக்கு 02 காரணங்கள் தருக. 
அரச உத்தியோகத்தர்களிடம் காணப்பட்ட அமைச்சுக்களை
இலங்கையரிடம் ஒப்படைத்தல்
ஆளுநர் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தல்

134. இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் கட்சி யாது?
லங்கா சமசமாஜக் கட்சி

135. அக்கட்சி எப்போது யாரால் உருவாக்கப்பட்டது?
இடதுசாரித் தலைவர்களால்

136. சூரியமல் இயக்கம் என்பது யாது?
பிரித்தானியரின் பொப்பிமல் இயக்கத்திற்கு எதிராக, இலங்கையின் சுதந்திரத்திற்கு போராட இடது சாரித் தலைவர்களால் ஆக்கப்பட்ட அமைப்பு

137. சூரியமல் இயக்கத்தின் நோக்கம் யாது? 
இலங்கையின் சுதந்திரத்திற்காக போராட்டம் நடாத்தல்

138. பொப்பி மலர் இயக்கம் என்பது யாது?
1ம் உலகப் போரில் அங்கவீனமுற்ற பிரித்தானிய இராணுவ வீரர்கள். அவர்களின் குடும்பங்களுக்கு உதவி புரிய உருவாக்கப்பட்ட அமைப்பு 

139. பொப்பி மலர் இயக்கத்தின் நோக்கம் யாது? 
1ம் உலகப் போரில் அங்கவீனமுற்ற பிரித்தானிய இராணுவ வீரர்கள். அவர்களின் குடும்பங்களுக்கு உதவி புரிதல் 

140. பொப்பி மலர் எப்போது விற்பனை செய்யப்பட்டது? 
1926 நவம்பர் 11

141. சூரியமல் இயக்கம் எவ்வியக்கத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது?
பொப்பி மலர் இயக்கத்திற்கு

142. சூரியமல் இயக்கம் யாரால் ஆரம்பிக்கப்பட்டது? 
இடதுசாரித் தலைவர்களால்

143. அடிமையின் சின்னம், சுதந்திரத்தின் சின்னம் என அடையாளப்படுத்தப்பட்டவை எவை?
அடிமையின் சின்னம் - பொப்பி மலர்
சுதந்திரத்தின் சின்னம் - சூரியகாந்தி மலர்

144. டொனமூர் யாப்பின்படி காணி விவசாய அமைச்சராக பதவி வகித்தவர் யார்?
D.S சேனாநாயக்க

145. 2ம் உலகப் போரின் போது பிரித்தானியா உருவாக்கிய விசேட பாதுகாப்பு சபையில் அங்கத்துவம் பெற்ற இலங்கையர் யார்? 
D.S சேனாநாயக்க

146. 1942இல் இலங்கை தேசிய சங்கம் போராட்டம் மேற்கொண்டமைக்குக் காரணம் யாது?
இலங்கை சுதந்திரத்தை பெறல்

147. சோல்பரி ஆணைக்குழு எப்போது இலங்கை வந்தது? 
கி.பி. 1944

148. லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்கள் யார்? 
ஏன்.என். பெரேரா
கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா

149. 2ம் உலகப்போர் எப்போது ஆரம்பமானது?
கி.பி.1939

150. சர்வசன வாக்குரிமையின் தகுதி யாது? அம்முறைப்படி தெரிவானோர் எண்ணிக்கை யாது?
21 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும்
50 பேர் 

151. இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கு அத்திவாரமிட்ட ஐரோப்பிய நாட்டவர் யார்? 
ஓல்லாந்தர்

152. இலங்கையில் புராதான காலத்தில் காணப்பட்ட பொருளாதார முறை எது?
சுயதேவைப்பூர்த்தி பொருளாதார முறை

153. மலையக இராச்சியத்தில் கிராமிய ரீதியாக நிதி வழங்கிய நிறுவனம் எது?
கம்சபா

154. அத்தம் முறை என்பது யாது? 
உழைப்பைப் பரிமாறிக் கொள்ளும் முறை

155. இராஜகாரிய சேவை முறை என்பது யாது? 
அரசனுக்கு மக்கள் நிறைவேற்றுகின்ற உழைப்பு மூலமான செயற்பாடுகள்

156. இராஜகாரிய முறையின் வகைகள் எவை? 
நிலத்தை அடிப்படையாகக் கொண்டது 
கட்டாய சேவை இராஜகாரிய முறை

157. கோல்புறுக் ஆணைக்குழு இலங்கை வந்தமைக்கான காரணம் யாது?
பிரித்தானிய அரசின் இலங்கைக்கான நிர்வாகச் செலவைக் குறைக்க ஆலோசனை வழங்குதல்

158. கோல்புறுக் ஆணைக்குழு முன்னைத்த பொருளாதார சீர்திருத்தங்கள் எவை?
அரசு காணி விற்பனைக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்
கட்டாய சேவை இராஜகாரிய முறையை நீக்குதல்
தனியார் துறையை ஊக்கவித்தல் 
அரச ஏகபோக வர்த்தக உரிமையை நீக்குதல்
நேர் வரிகளை நேரில் வரிகளாக மாற்றுதல்

159. அரச காணி விற்பனைக் கொள்கையை ஏன் கோல்புறுக் ஆணைக்குழு
முன்வைத்தார்?
தனியார் துறை முன்னேற்றமடைவதுடன் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை
விருத்தியடையும் என எதிர்பார்த்தல்

160. கட்டாய சேவை இராஜகாரிய முறை கோல்புறுக் ஆணைக்குழு
நீக்கியமைக்கான காரணம் யாது?

161. கோல்புறுக் ஆணைக்கு எவ் வர்த்தகப் பொருட்களின் ஏகபோக வரத்தக்
உரிமையை நீக்கியது?
உழைப்புக்கு ஊதியம் கிடைத்தல்

162. கோல்புறுக் ஆணைக்குழு எவ்வரிகளை நேரில் வரிகளாக அறிமுகம் செய்தார்?
மீன் வரி
மது வரி
காணி வரி

163. நாட்டில் சேமிப்பு வங்கியை கோல்புறுக் உருவாக்கியதன் காரணம் யாது?
முதலாளிமாருக்கு கடன் வழங்குதல்

164. கோப்பியை இலங்கையில் முதல் அறிமுகம் செய்தவர்கள் யார்?
ஓல்லாந்தர்

165. கோப்பிச் செய்கையின் விருத்தியில் செல்வாக்குச் செலுத்திய காரணிகள் 02 தருக
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு காணப்பட்டமை
ஐரோப்பிய சந்தையில் கோப்பியின் விலை அதிகரிப்பு

166. கோப்பிக்கான வரியை குறைத்த பிரித்தானிய ஆளுநர் யார்?
எட்வேர்ட் பாண்ஸ்

167.கோப்பிச் செய்கை விருத்திக்கு வித்திட்ட 02 காரணிகள் எவை?
எட்வேர்ட் பாண்ஸ் கோப்பிக்கான வரியை குறைத்தமை
கோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் கட்டாய சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டமை

168. கோப்பி பயிரிடப்பட்ட பிரதேசங்கள் எவை? 
தும்பறை
கம்பளை
ஹரிஸ்பத்துவ
பேராதனை

169. கோப்பிச் செய்கை வீழ்ச்சிக்கான காரணங்கள் 02 தருக. 
பிரித்தானியாவின் சுதந்திர வர்த்தகக் கொள்கை கோப்பிக்கு போட்டியை
ஏற்படுத்தியமை
ஹெமிலியா வெஸ்டாக்ஸ் நோய் உருவானமை

170. கோப்பிச் செய்கை எந்நோயால் பாதிக்கப்பட்டது? 
ஹெமிலியா வெஸ்டாக்ஸ்

171. கோப்பிச்செய்கை முற்றாக அழிவடைந்தமைக்கான காரணம் யாது?
ஹெமிலியா வெஸ்டாக்ஸ் நோய் ஏற்பட்டமை

172. பல்பயிர் யுகம் என்பது யாது?
ஒரே நேரத்தில் பல பயிர்களை பயிரிட்டமை

173. சிங்கோனாவில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்து யாது? 
குவினைன்

174. பல்பயிர் யுகத்தில் பயிரிடப்பட்ட இரு பயிர்கள் எவை?
சிங்கோனா
கொக்கோ

175. கொக்கோ பயிருக்கு தேவைப்பட்ட விசேட தேவை யாது?
நிழல் தேவைப்பட்டதால் அதிக செலவு ஏற்பட்டமை 

176. கொக்கோ பயிருக்கு செலவு ஏன் அதிகரித்தது?
நிழல் வழங்க வேண்டியிருந்தமை

177. கொக்கோ பயிர் வெற்றியளித்த மாவட்டம் எது? 
மாத்தளை

178. மலையக காலநிலைக்குப் பொருத்தமான பயிர் எது?
தேயிலை

179. இலங்கையில் வர்த்தக ரீதியாக தேயிலையை அறிமுகம் செய்தவர் யார்?
ஜேம்ஸ் ரெயிலர்

180. தேயிலை பயிரிடப்பட்ட மாவட்டங்கள் 05 தருக.
நுவரெலியா
பதுளை
மாத்தளை 
கேகாலை
இரத்தினபுரி


ஆசிரியர் - திரு.கோ.தரணிதரன் BA (Hons)


நன்றி. 


Post a Comment

0 Comments