தமிழ் இலக்கணம் - பால் - TAMIL GRAMMAR - GENDER


பால்


தமிழ் இலக்கணம் - பால் - TAMIL GRAMMAR - GENDER

ஆண்பால் சொல்

ஆண் ஒருவனை மட்டும்  குறிக்கும் சொல் ஆண்பால் எனப்படும்.
இது உயர்திணையில் இடம்பெறும்.

வினைச் சொற்களில் அன், ஆன்  என முடியும் சொற்கள் ஆண் பாலை குறிக்கும்.

உதாரணம்
பெயர் சொல்  - அவன் , இவன் , ராமன் , கந்தன்
வினைச்சொல்  - வந்தவன் ,  வந்தான்

பெண்பால் சொல்

பெண் ஒருத்தியை மட்டும் குறிக்கும் சொல் பெண்பால் எனப்படும்.
இது உயர்திணையில் இடம்பெறும்.

வினைச் சொற்களில் அள் , ஆள்  என முடியும் சொற்கள் ஆண் பாலை குறிக்கும்.

உதாரணம்
பெயர் சொல்  - அவள் , இவள் , கமலா , மாலா
வினைச்சொல்  -  வந்தவள் ,  வந்தாள்

பலர்பால் சொல்

ஒன்றிற்கு மேற்பட்டோரை குறிக்கும் சொல் பலர்பால் எனப்படும்.
இது உயர்திணையில் இடம்பெறும்.

வினைச் சொற்களில் அர் , ஆர்  என முடியும் சொற்கள் ஆண் பாலை குறிக்கும்.

உதாரணம்
பெயர் சொல்  - அவர்  , இவர் , இவர்கள் , வந்தனர்
வினைச்சொல்  - வந்தவர் ,  வந்தார் 

ஒன்றன்பால் சொல்

அஃறிணையில்  ஒருமையை குறிக்கும் சொல் ஒன்றன்பால் சொல் எனப்படும்.

வினைச் சொற்களில் டு , து , று  என முடியும் சொற்கள் ஆண் பாலை குறிக்கும்.

உதாரணம்
பெயர் சொல்  - பூ , காகம் , கொக்கு 
வினைச்சொல்  - வந்தது , பறந்தது , ஓடியது
சுட்டுப்பெயர் -  அது ,  இது ,   உது
வினா பெயர் -  யாது

பலவின்பால் சொல்

அஃறிணையில் பன்மையை குறிக்கும் சொல்  பலவின்பால் சொல் எனப்படும்.

வினைச் சொற்களில் அ, ஆ  என முடியும் சொற்கள் ஆண் பாலை குறிக்கும்.

உதாரணம்
பெயர் சொல்  -  மாடுகள் ,  பூக்கள் ,  கிளிகள்
வினைச்சொல்  - வந்தன , ஓடின , வாரா
சுட்டுப்பெயர் -  அவை ,  இவை ,   உவை
வினா பெயர் -   யாவை

நன்றி 

Post a Comment

0 Comments